Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

துருக்கி வான் பரப்பிற்குள் ரஷ்ய போர் விமானம் 2ஆவது முறை அத்துமீறியதற்கு கடும் எதிர்ப்பு

சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானம் இரண்டு நாட்களுக்குள் இரண்டா வது முறையாக துருக்கி வான் பரப்புக்குள் அத் துமீறி நுழைந்துள்ளது. இதனை அடுத்து அங்காரா வில் உள்ள ரஷ்ய தூதுவரை அழைத்து துருக்கி மீண்டும் ஒருமுறை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை துருக்கி வான் பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய விமானத்தை துருக் கியின் இரு எப்-16 ரக போர் விமானங்கள் இடை மறித்தன. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று ரஷ்ய போர் விமானம் இரண்டாவது முறையாக அத்து மீறி நுழைந்ததாக துருக்கி குறிப்பிட்;டுள்ளது.
மறுபுறம் சிரிய எதிர்த்தரப்பினர் மற்றும் சிவிலிய ன்கள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறு த்த வேண்டும் என்று நேட்டோ அழுத்தம் கொடு த்துள்ளது. சிரியாவில் இஸ்லாமிய தேசம் குழு (ஐ.எஸ்.) மற்றும் ஏனைய இஸ்லாமியவாதிகள் மீதே தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா குறிப்பிடு கிறது.
எனினும் மோசமான காலநிலை காரணமாக சனியன்று ஒருசில வினாடிகள் அத்துமீறி துருக்கி வான் பகுதிக்குள் நுழைந்ததாக ரஷ்யா குறிப்பிட் டுள்ளது. எனினும் ஞாயிறன்று இடம்பெற்றதாக கூறப்படும் அத்துமீறல் குறித்து ரஷ்யா எந்த உத் தியோபூர்வ அறிவிப்பும் வெளியிட்டிருக்கவி ல்லை.
தெற்கு ஹதயா பிராந்தியத்தின் யய்லகடி பகு தியிலேயே சனியன்று ரஷ்ய விமானம் தனது நாட்டு வான் பரப்பிற்குள் நுழைந்ததாக துருக்கி குறிப்பிட்டிருந்தது.
துருக்கி உட்பட 28 நேட்டோ உறுப்பு நாடுகள் வெளியிட்ட அறிவிப்பொன்றில், "இவ்வாறான பொறு ப்பற்ற நடத்தை மிக அபாயகரமானது" என்று எச் சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான செய ல்களை ரஷ்யா தவிர்க்க வேண்டும் என்றும் நிறு த்திக்கொள்ள வேண்டும் என்றும் நேட்டோ வலியு றுத்தியுள்ளது.
தனது வான் பரப்பிற்குள் வரும் nஜட்; விமானங் களை சுட்டு வீழ்த்தும் உரிமை துருக்கிக்கு இரு க்கிறது என்று அமெரிக்க இராஜhங்கச் செயலா ளர் ஜோன் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.
பறவை ஒன்று அத்துமீறி பறந்தாலும் அதனை இடைமறிக்குமாறு துருக்கி பிரதமர் அஹமட் டவு டொக்லு, அந்நாட்டு விமானப்படைக்கு தெளிவாக உத்தரவிட்டுள்ளார் என்று துருக்கி தொலைக்கா ட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் துருக்கி மற் றும் ரஷ்யாவுக்கு இடையில் இழுபறியை ஏற்படுத் தும் சூழலை தவிர்க்கும் வகையில் டவுடொக்லு கருத்து வெளியிட்டிருந்தார். இரு நாட்டுக்கும் இடை யிலான வாயில்கள் திறந்தே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந் தார்.
சிரியாவில் "பல்வேறுபட்ட கூட்டணிகள் பல் வேறு வகையில் வான் தாக்குதல்களை நடத்துவ தன் அபாயம்" பற்றி ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் கவலை வெளியிட்டுள்ளார். இது ஒரு ஆபத்து நிறைந்த சூழல் என்று விபரித்த அவர் மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என் றார்.
கடந்த வாரம் சிரியா மீதான வான் தாக்கு தலை ஆரம்பித்த ரஷ்யா, ஐ.எஸ். இலக்குகள் மற்றும் ஏனைய இஸ்லாமியவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த வான் தாக்குதல்கள் குறித்து பல மாதங்களாக திட்டமிட்டதாக சிரியா கடந்த திங்களன்று குறிப்பி ட்டது.
திங்கட்கிழமை 10 இலக்குகள் மீது 15 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள் ளது. இதில் சிரிய இராணுவத்திடம் இருந்து கைப் பற்றப்பட்ட 20 டாங்கிகள,; அலப்போ மற்றும் டம ஸ்கஸிற்கு அருகில் இருக்கும் ஐ.எஸ்ஸின் இரு கட்டளை மையங்கள், ஹோம்ஸ் மாகாணத்தில் இரு வெடிபொருள் கிடங்குகள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
கடந்த வார வான் தாக்குதல்களில் சிவிலியன் கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறுத்துள்ளார். எனினும் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளின் ஆதா ரங்கள் அதனை உறுதி செய்வதாக உள்ளது.
சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களே ரஷ்யாவின் பிரதான இலக்காக அமைந்திருப்பதாக துருக்கி மற்றும் அமெ ரிக்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடு கள் குற்றம்சாட்டுகின்றன. ரஷ்ய வான் தாக்குதல் கள் ஐ.எஸ். நிலைகளை இலக்குவைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நேட்டோ, அது தனது இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறி ப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்