Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

கொழும்பு-13, பாபர் வீதி(மஹாவித்தியாலய மாவத்த) ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா ??

முஸ்லிம்களின் கவனத்திற்கு.......

கொழும்பு-13, பாபர் வீதி(மஹாவித்தியாலய மாவத்த) ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா (09.10.15) ஆரம்பமாகியது. இத்தேர்த்திருவிழா நடத்துவதற்கு பாபர்வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் நிர்வாகம் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருவதாகவும்- ஆலய நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல்விடுத்துள்ளதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழான கருத்துக்கள் பரப்பபட்டு வருகின்றன. 
பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரின் பலவீனமான நடத்தை -வார்த்தைப் பிரயோகத்தினால் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் முஸ்லிம்களே. 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பேரினவாத அமைப்புக்கள் அடக்கப்பட்டுள்ளமைக்காக இனவாதக் கருத்துக்கள் இல்லாது போயுள்ளதாக தவறாக எண்ணியுள்ள முஸ்லிம்கள் தலை கால் புரியாது செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பாரதூரமானது. 
இதனால், புட்டும் -தேங்காய் பூவும் போல் இருக்கும் முஸ்லிம் - தமிழ் சகோதரர்களிடையே பெரும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுபல சேனா கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை தமிழ் சகோதரர்கள் தற்போது ஆமோதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிராக இந்து அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டு, பேரினவாத சிங்கள அமைப்புக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உறுதியாக உள்ளனர்.
சிங்கள- முஸ்லிம் உறவினை தகர்த்தவர்கள் கடந்த ஆட்சியாளர்கள். அதற்கான காரணங்களும் பல உள்ளன. அதேபோன்று, தமிழ்- முஸ்லிம் உறவினை பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் புதிய அரசு வகுத்துவருவதாகவும் கூறப்படுகின்றது. 
காரணம், புதிய ஆட்சி தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள அதேவேளை, தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குவதாக அரசு சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. எனினும், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு சிங்கள ஆட்சியலாளர்கள் ஒருபோதும் உடன்படப்போவதிலை. அதனாலேயே கடந்த 50 வருடத்துக்கு மேலாக இப்பிரச்சிளை இலுபறி நிலையில் உள்ளது. 
தமிழ் மக்களை  ஏமாற்றும் வகையில் ஏதேனும் செய்து விட்டு சர்வதேசத்தை திருப்த்திப்படுத்தும் நோக்கில் அரசு உள்ளது.  இனரீதியான முறுகல் நிலையினை வலுவூட்டுவதன் மூலமே தீர்வுத்திட்டத்தினை மறக்கடிக்க அரசு திட்டமிட்டு வருகின்றது. அரசின் முகவர்கள் மூலம் இவ்வாரான பிரச்சினைகளை பெரிதுபடுத்தும் நோக்கில் பல சதிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. 
நிலைமையினை இரு சமூகத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள திருவிழா பிரச்சினையானது முஸ்லிம் தரப்பின் மீதே தவறுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடந்தவற்றை மறந்து தவறினை சரி செய்வதற்கான முயற்சிகளில் முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டும் .
திருவிழாவுக்கு பூரண பாதுகாப்பு பொலிஸார் வழங்குவதான அறிவித்துள்ளனர். அதனை முஸ்லிம்கள் மேலும் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழ் சகோதர்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கப்படும் இனவாத வித்து கலையப்படும். 
இதிலுள்ள எதிர்கால விளைவுகள் தொடர்பில் கல்விகற்ற முஸ்லிம்கள், உலமாக்கள், அரசியல் தலைமைகள் உணர்ந்து தமிழ் - முஸ்லிம் உறவினைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். 

ஆர்.எஸ். மஹி

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்