Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

நம்ம தலைவர் சாலிக்கு சேறு பூசுவது யார்?


unnamed (3)
ரணில்-மைத்திரிக்கு எச்சரிக்கை
சாலி+ உலமாக்கள் =இஸ்லாம்?
இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்துக்குத் தலைகுனிவைக் கொடுத்த ஒரு விவகாரமாக சாலி விகாரம் அமைந்திருக்கின்றது. ஊடகங்கள் முன் வந்து பேசுபவர்கள்-வாயடிப்பவர்கள் எல்லோரையும் முஸ்லிம் சமூகம் தலைவராக் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு இந்த மனிதன் – சாலி நல்ல உதாரணமாக அமைந்திருக்கின்றார்.
unnamed (2)
சாலி-ருஷ்னா (உவைஸ் மனைவி) விமானப் பயணத்தில்
இந்த சாலி மத்திய மாகாண சபைத் தேர்தலில் நின்ற போது இவரது பின்னணி பற்றி நாம் சமூகத்தை எச்சரித்திருந்தோம். அன்று இருந்த அரசியல் பின்னணியில் சமூகம் அதனைக் கண்டு கொள்ள வில்லை.
unnamed (5)
சாலி-ரினுஷா சட்டரீதியான மனைவி
எனவே எதிர்வரும் காலங்களில் இதே சாலி மற்றுமொரு முகமூடியை அணிந்து கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு முன் வந்து நிற்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஒரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பலதாரத் திருமணங்கள் போன்ற விடயத்தில் எமக்கு முரண்பாடு கிடையாது. ஆனால் தனது விபச்சாரத்தை இஸ்லாமாக பிர சமூகத்தின் முன் நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் உலமாக்கள் கண்களை மூடிக் கொண்டிருப்பது எமக்குப் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கின்றது. கேள்வி எழுப்பக்கூடிய நமது பல உலமாக்கள் பலதாரத் திருமணங்கள் செய்திருப்பதால், இது பற்றி சாலி திருப்பிக் கேள்வி எழுப்புவார் என்று அவர்கள் அச்சப்படுகின்றார்களோ என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் அறிந்தவரை அவர்கள் அதனை சட்டரீதியாக பண்ணி இருக்கும் போது இந்த சாலியின் விபச்சாரம் பற்றி கேள்வி கேட்பதற்கு ஏன் தயங்க வேண்டும்.
unnamed (6)
உவைஸ் – ருஷ்னா சட்ட ரீதியான மனைவி
சாலி ஒரு அடங்கப் பிடாரி எனவே அவரிடத்தில் கேள்ளி கேட்பது அர்த்தம் இல்லை என்று இந்த உலமாக்கள் காரணம் கூறவும் கூடும். எனவே இது போன்றவர்கள் விடயத்தில் உலமாக்கள் மௌனம் காக்கும்வரை சமூகத்தில் சாலிகளுக்குத் தலைவர்கள் என்ற அந்தஸ்துக் கிடைக்துக் கொண்டே இருக்கும் என்றவகையில், இதற்கு இந்த நாட்டு ஆலிம்களும் பொறுப்புதாரிகளே என்பது எமது குற்றச்சாட்டு.
சாலி – ஞான சாரர் உறவு
ஞனாசாரர் முதுகில் ஏறியே இந்த சாலி முஸ்லிம்களின் ஹீரேவாக தன்னை வளர்த்தக் கொண்டார். இந்த சாலியும் ஞானசாரருக்குமிடையே உறவுகள் இருக்கின்றது என்பது எமது வாதம். ஏன் நாம் இப்படிக் கூறுகின்றோம் என்றால் இதே சாலியின் சகோதரர்தான் முஸ்லிம்களிடத்தில் ஆயுதக் குழுக்கள் இருக்கின்றது என்று ஞானசாரரிடத்தில் போட்டுக் கொடுத்தவர்.
இதனை பல இடங்களில் இந்த ஞான சாரர் பகிரங்கமாக சொல்லியும் இருக்கின்றார். எனவே இவர்களின் உறவு முஸ்லிம்களுக்கு இப்போதாவது புரிய வேண்டும்.
எனவே முஸ்லிம்களுக்கு எதிரான ஞனாசாரரைத் தூண்டி விட்டு (பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு) அதன் மூலம் அரசியல் இலாபமீட்டுகின்ற வேலையை இவர்கள் செய்கின்றார்கள், என்றுதான் முஸ்லிம்கள் கருத வேண்டி இருக்கின்றது. இதுவரைக்கும் தான் யாரையும் கடத்தவில்லை என்று சொன்ன சாலி மாகாணசபை உறுப்பினர் உவைஸ் மனைவியை தற்கொலை பண்ணும் முயற்சியிலிருந்து காப்பாற்றுவதற்காகவே வைத்திருக்கின்றேன் என்று…! தன்னால் சொல்லக் கூடிய அனைத்து பொய்களையும் தற்போது சந்தைப்படுத்தி வருகின்றார்.
அத்துடன் சாலி, உவைஸ் மனைவி ருஸ்னா விவகரத்துக் கோரிய மனுவுக்கு இரண்டு விசாரணைகள் நடத்திருக்கின்றது என்று கூறுவதும், தீர்ப்பு முதலாம் திகதி என்பதும் அப்பட்டமான புலுகு என்று உவைஸ் தரப்பு உறுதிப்படுத்துகின்றது.
எந்த விதமான உறவுகளும் இல்லாத ஒரு அன்னிய ஆடவன் எப்படி அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்புக் கொடுக்க முடியும்.? அத்துடன் சட்ட ரீதியான கணவனும் பிள்ளைகளும் தற்போது ஊடகங்கள் முன்வந்து முறைப்பாட்டைப் பண்ணுவது கூட நமது உலமாக்களின் பலயீனம் என்றுதான் நாம் கருதுகின்றோம்.
உலமாக்களே இது விடயத்தில் நீங்கள் ஒரு போதும் வாய்திறக்க மாட்டீர்களா?
இவ்வாறான அரசியல் கயவர்கள் விடயத்தில் கிழக்கில் விளிப்புணர்வொன்று ஏற்பட்டிருக்கின்றது என்று தெரிக்கின்றது. எனவே இது சாலிக்கு மட்டும் உரிய நடவடிக்கையாக அமைந்து விடக்கூடாது. இன்னும் பல சாலிகள் நமது சமூகத்தில் இருக்கின்றார்கள்?
அவர்களுக்கும் எச்சரிகையாக இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது போரட்ட அழைப்பாளிகளுக்கு நாம் விடுக்கும் கோரிக்கை.
சாலி-ருஷ்னா சமூக அவலத்தை இன்னும் நம்பாதவர்களுக்கு நாம் இத்துடன் அந்த உறவுகளை அம்பலப்படுத்துகின்ற ஆதரங்களைத் தந்திருக்கின்றோம். இவை போலியானது என்றால் இரசாயணப் பகுப்பாய்வுக்கு உற்படுத்தி உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
தனது சுய நலனுக்காக ஊடகங்கள் இணையதளங்கள் மற்றும் அதனை நடாத்துகின்றவர்களுக்கு எதிராக சாலி கர்ச்சிப்பதும் எங்களுக்குத் தெரின்றது. இந்த சாலிகளைப் போன்ற எத்தனை ஆயிரம் பேரை இந்த ஊடக உலகம் சந்தித்திருக்கும் என்பது சாலிக்குத் தெரியாது! அவர் அறிவு பூர்வமான ஆள் அல்ல என்பதும் எமக்குத் தெரிந்த விடயம்தான்..! ஆனால் இது உலகத்தாருக்குப் நன்கு புரியும்.!
ரணில்-மைத்திரிக்கு எச்சரிக்கை
இந்த விவகாரம் நீங்கள் எதிர்பார்க்கின்ற நல்லாட்சி தொடர்பான மிகப் பெரிய முரண்பாடு என்பது உங்களுக்குப் புரியும் என்று நாம் கருதுகின்றோம். அத்துடன் விபச்சாரத்தை இஸ்லாமாக்கி ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரான ஒருவன் புரிகின்ற அட்டகாசம் இது. எனவே பொறுப்பு வாய்ந்த ஆட்சியாளர்கள் என்றவகையில் நீங்கள் இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம் – எதிர்பாக்கின்றோம்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்