ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அஸ்ரப் ஏ சமத் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு முதல் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள 1200 பாடசாலைகளுக்கு சுத்தமான குடி நீர் வசதி மற்றும் நவீன ஆண் பெண் மலசல கூடங்கள் நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு பாடசாலைக்கும் 02 மில்லியன் ருபா நிதி வழங்கப்பட உள்ளது. என கல்வியமைச்சா அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்த்தார். இன்று (28) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா மாநாட்டின்போதே மேற்கண்டவாறு கல்வியமைச்சா தெரிவித்தார். தொடாந்து கருத்து தெரிவித்த அமைச்சார் - இந்த நாட்டில் உள்ள 10119 பாடசாலைகளில் 525 பாடசாலைகள் மட்டுமே ஒழுங்கான குடிநீர், மற்றும் மலசல கூடங்கள் உள்ளன. ஏனைய பாடசாலைகளில் மலசல கூடம் பாராமரிப்பு மற்றும் உடைந்து காணப்படுகின்றது. அத்துடன் சுத்தப்படுத்தும் தொழிலாளாகள் இல்லாமலும் உள்ளன. ஆகவே இதற்காக கல்வியமைச்சு ஆண் மலசல கூடம் பெண் மலசல கூடம் என இரண்டு பிரிவாக கல்வியமைச்சின் நவீன முறையில் கட்டிடப் பிரிவு வடிவமைத்து நிர்மாணிக்க உள்ளன. இதில் முதற்கட்டமாக 1200 பாடாசலைகள் 2015ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் மிக அன்மையிலான சிறந்த பாடாசலை ” என்ற திட்டத்தின் கீழ் இத்திட்டம்