Posts

Showing posts from August, 2015

மஹிந்த பிரமதர் என்ற அச்சத்தினாலேயே மஹிந்தவுக்கு எதிராக கடிதம் வெளிட்டேன் , ஜனாதிபதி

புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கமைய முன்னணிக்கு 110, 115 ஆசனங்கள் பெற்று கொள்வதற்கான வாய்புகள் காணப்படுவதாக தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த பிரமதர் ஆனால் தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்ற அச்சத்தினாலேயே மஹிந்தவுக்கு எதிராக கடிதம் ஒன்றை வெளிட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எங்கள் புலனாய்வுப் பிரிவு ஊடாக முன்னணிக்கு 110, 115 ஆசனங்கள் கிடைக்கும் என நான் அறிந்து கொண்டேன். இதன் போது தான் முன்னணியின் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் எனது பெயரைக் கூறி அரசியல் மேடைகளில் கூச்சலிட ஆரம்பித்தார்கள். சிலர் மஹிந்தவை வெற்றிபெற செய்து பிரதமராக்கியதன் பின்னர் எனக்கு எதிராக செய்யப்போவதனையும் பகிரங்கமாக கூற ஆரம்பித்து விட்டார்கள். எனக்கும் அச்சம் ஏற்பட்டு விட்டது. இதன் போது தான் அவ்வாறான கடிதம் ஒன்றை வெளியிட்டேன். முன்னணி மற்றும் சுதந்திர கட்சி செயலாளர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், ம

எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி. யின் சந்தேசய சிங்கள ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய செவ்வியில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி ஆசனம் உரித்தானது. ஆனால் அதனை ஜனாதிபதியோ கட்சியின் தலைவரோ தீர்மானிக்க முடியாது. அதனை பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இன்றோ நடப்பது அனைத்தும் தலைகீழாக இருக்கின்றன. நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதிதான் தேர்ந்தெடுக்கின்றார். அமைச்சரவையையும் அவர்தான் முடிவு செய்கின்றார். அதுவும் போதாதற்கு எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்தான் தீர்மானிக்க முயல்கின்றார். இது ஒரு அரசியல் கோமாளித்தனம். அத்துடன் இதன் மூலம் இலங்கையின் பல்கட்சி ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு நசுக்கப்பட்டுவிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்கக் கோருபவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலர

செத்துப்போனா முஸ்லிம் தேசிய‌வாதிக‌ளுக்கு மீண்டும் ஒக்சிஜ‌ன்

Image
முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும். மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் ஊருக்கு ஒரு எம்.பி. என்ற கோஷங்களே முன்வைக்கப்பட்டன. அதிக சனத்தொகை, பண பலம், கல்வி, குடும்ப ஆதிக்கம் நிறைந்த ஊர்கள் எம்.பியைப் பெற முயன்று ஒவ்வொரு தேர்தல்களிலும் எம்.பி.யைப் பெற்றன. கிழக்கில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரசேதங்கள் இவ்வாறு நீண்ட காலம் ஊரின் எம்.பி.யை தக்கவைத்துக் கொண்டன. முன்னாள் அமைச்சர்களான ஏ. ஆர். எம். மன்சூர், பி. ஏ. மஜீத், முஸ்தபா ஆகியோர் இவ்வூர்களின் மன்னர்களாகவும், கதாநாயகர்களாகவும் தி

தனக்கும் தனது சார்பு வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மற்றும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி

Image
முகம்மட் நாளீர் தனக்கும் தனது சார்பு வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மற்றும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தேசிய காங்கிரஸின் நன்றிக் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நடை பெற்றது தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இந்நிகழ்வில் விசேட உரையாற்றினார். கட்சியின் சார்பில் மாகாணசபையில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் உதுமா லெப்பை,கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் உதுமா லெப்பை அடங்கலாக கட்சியின்  முக்கியஸ்த்தர்கள் பலரும் மற்றும் போராளிகள் பலரும் பெருந்திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியில் அமைக்கப்பட்ட திறந்த மேடையில் இந்நிகழ்வு இடம் பெற்றது குறிப்பிற தக்கதாகும். 

வை.எம்.எம். ஏ மகளிா் அணி செயலாளரா ஓய்வு

Image
அஸ்ரப் ஏ சமத் வை.எம்.எம். ஏ  மகளிா் அணியில் 10வருடங்களாக செயலாளராகவும் ஓய்வு பெற்ற அல் இக்பால் மகளிா் கல்லுாியின் அதிபருமாக சேவையாற்றிய மா்லியா சித்தீக் கௌரவிக்கப்பட்டாா். இவா் கடந்த , 40 வருடகாலமாக  கல்வியல்துறையில் மற்றும் சமுக சேவையில் கொழும்பில் சேவையாற்றினாா். பல இயங்கங்கள் அரச விருதுகள்   பல பட்டஙகளை  பெற்ற  மர்லியா சித்தீக்குக்கு  வை.எம்.எம். ஏ மகளிா் அணி போசன விருது கொடுத்து கௌரவிப்பு நிகழ்வை ஒன்றை வை.எம்.ஏ நடாத்தினாா்கள். . இந் நிகழ்வு தெமட்டக்கொட வை.எம்.எம். ஏ யில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மகளிா் அணித் தலைவி  மர்க்கியா முசம்மில்,  செயலாளா் பவாசா தாகா மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா் ரசீத் எம். ஹபீல் வை.எம்.எம்.ஏ தலைவா் மற்றும் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்

உல‌மா க‌ட்சியின் செய‌லாள‌ர் ப‌த்ருத்தீன் க‌ஃபூரி இன்று வ‌ஃபாத்தானார்

உல‌மா க‌ட்சியின் செய‌லாள‌ரும் ம‌ஹ‌ர‌க‌ம‌ க‌ஃபூரிய்யா ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌பை உறுப்பின‌ரும், அ.இ. ஜ‌மிய்ய‌த்துல் உல‌மா முன்னாள் செய‌லாள‌ர் ரியாழ் மௌல‌வியின் ச‌கோத‌ர‌ருமான‌ மௌல‌வி எம். ஜே எம். ப‌த்ருத்தீன் க‌ஃபூரி இன்று வ‌ஃபாத்தானார். நல்ல‌ட‌க்க‌ம் இன்று இர‌வு ந‌டைபெறும். அள்ளாஹு ய‌ர்ஹ‌ம்ஹு. 

இஸ்லாம் பாட‌ நூல் பொதுப‌ல‌ சேனாவினால் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தாம்.

Image
-நஜீப் பின் கபூர்- தற்போது முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைகளில் பாவிக்கின்ற இஸ்லாம் பாடத்துக்கான கைநூல் பொதுபல சேன அமைப்பினரின் நெறிப்படுத்தலின் கீழ் தயாரிக்கப்பட்டது என்பதனை இந்தக் குறிப்பை  jaffna muslim இணையம் மூலம் பொறுப்புடன் அறியத் தருகின்றறேன். நேற்று 24.08.205 இரவு ஒரு தனியார் தொலைக் காட்சி நிறுவனத்தின் கலந்துறையாடலொன்றில் கலந்து கொண்ட போது பொதுபல சேன அமைப்பின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார். அவர் கருத்துப்படி,  இலங்கையில் அரசாங்கத்தால் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்ககுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடத்துக்கான கைநூலில் நிறைத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.  அவற்றை நீக்கிக் கொள்ளுமாறு பல வருடங்களாக முயற்ச்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதும் அது கைகூட வில்லை. கடந்த வருடம் நாம் மேற் கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் அந்தத் தவறுகள் நீக்கப்பட்டு இந்த வருடம் தவறு சரி செய்யப்பட்டு, புதிய இஸ்லாம் பாட நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது எமக்குக் கிடைத்து பெரு வெற்றி என்று அந்தப் பாடநூலை தொலைக் காட்சியில் தூக்கிப் பிடித்துக் காட்டினார் ஞானசாரத்தேரர். அப்படியானல் நாங்கள்

SLMC வாக்குகள் அதிகரிப்பு, வெற்றிக்கு எமது உழைப்பு, முபாரக் மௌலவியின் பிரார்த்தனை காரணம் - ஹரீஸ்

Image
Thursday, August 20, 2015   Jaffna Muslim   3 (ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின்  வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக  அம்மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  ஹரீஸ் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுடைய அரசியல் சாணாக்கியத்தினாலும், எமது கடும் உழைப்பினாலும் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சியின் வாக்கு வங்கியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டோம்.  இருந்தபோதும் வன்னி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எம்மால் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறமுடியாமல் போய்விட்டது. எனினும் கட்சியின் தலைவர் ஹக்கீம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார். மயில் கட்சிக்கு எமது கட்சியின் வாக்குகளை உடைக்க முடியவில்லை. அக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள்  அதாவுல்லாவின் வாக்குகளாகும். எதிர்காலத்தில் றிசாத் பதியுதீனோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசோ எமக்கு சவாலாக அமையுமா என்பது குறித்து தற்போதைக்

நவம்பர் மாதத்தில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்..?

Image
  எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு இவ்வாறு தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய முறைமையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த தேவையான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையொப்பமிட்டுள்ளார்.இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று  பெரும்பாலும் வெளியிடப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. தடாலகே தெரிவித்துள்ளார். 335 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.விகிதாசார மற்றும் தொகுதிவாரி அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பகுதி பகுதியாக தேர்தலை நடாத்தாது ஒரே தடவையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

"ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரிப்பேன்" முஜீபுர் ரஹ்மான்

Image
   Jaffna Muslim      ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக தனது தேசியப் பட்டியல் மூலமாக எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரையும் நியமிக்காமை குறித்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரிப்பேன் என கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தார்.  இதுகுறித்து  அவர் மேலும் தெரிவித்ததாவது, நாளை செவ்வாய்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு ரணில் விக்கிரமசிங்க வருகிறார். 11 மணிக்கு இதகுறித்த நிகழ்வுகள் பள்ளவாசலில் நடைபெறும் இதில் பங்கேற்குமாறு எனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக ஏன் முஸ்லிம் ஒருவருக்கோ அல்லது அதிகமானவர்களுக்கோ தேசியப் பட்டியல் வழங்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகள் குறித்தும் நான் அறியமாட்டேன். எனவே தேசியப் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் நேர்ந்த முஸ்லிம்களுக்கு இடம் வழங்காமை குறித்து நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரிப்பேன். இம்தியாமுஸ்லிம் பாக்கீர் மார்க்கார் விவகாரம் பற்றியும் நான் அறியவில்லை. அவர் ஐக்கிய தேசியக்

முஹம்மது நபி (ஸல்) என்ற, உலகின் மிகச்சிறந்த இராணுவ தளபதி

 அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார். இவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர்அமெரிக்க உளவு நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணியாற்றியவர்40 க்கும் அதிகமான நுல்களை எழுதியவர்இவர் இராணுவ தளபதிகள் பற்றி மேர் கொண்ட ஆய்வில் உலகின் மிகசிறந்த இராணுவ தளபதியாக நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை அறிவித்தள்ளார். முஹம்மது நபி அவர்களை உலகம் ஒரு ஆண்மிக தலைவராக தான் பார்க்கிறதுஅவர் ஆண்மிக தலைவர் மட்டும் அல்ல உலகின் மிக சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராகவும் ஜொலிக்கிறார். இராணுவ தளபதி என்றால் திட்டங்களை வகுத்து கொடுத்து விட்டு களத்தில் இருந்து ஒதிங்கி நிர்க்கும் தளபதியாக அவர் இருக்கவில்லை தனது படைகளோடு களத்தில் இறங்கி போராடும் துணிவும் உறுதியும் மிக்க தளபதியாக அவர் திகழ்ந்தார்.  என்று கூறும் ஆய்வாளர் ரிச்சர்ஸ் மேலும் கூறும் போது அவர் மிக பெரிய எட்டு போர்களுக்கு தலைமை வகித்து வழி நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளர்18 சிறிய இராணுவ மேதால்களுக்கும் அவர் முன்னின்று தனது படைகளுக்கு வழிகாட

அமைச்சை பெற உள்ள சுதந்திர கட்சி எம்.பிக்களின் பட்டியல்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முன்னாள் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்  செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, முன்னணியின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜோன் செனவிரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க, உப தலைவர் மஹிந்த அமரவீர, பேராசிரியர் சரத் அமுனுகம, ஏ.எச்.எம்.பவுசி, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களினுள் நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, டப்ல்யூ.டீ.ஜே.செனவிரத்ன மற்றும் பேராசிரியர் சரத் அமுனுகம ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியு

தேசிய அரசு அமைக்கும் சு.கவின் சகல கோரிக்கைகளும் நிபந்தனையின்றி ஏற்பு

Image
கண்டியில் பிரதமர் அறிவிப்பு * ரணிலின் மூன்றாவது புரட்சியாக விவசாய சீர்திருத்தம் அமைய வேண்டும் * மகாநாயக்க தேரர்கள் வாழ்த்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கண்டிக்கு நேற்று விஜயம் செய்திருந்த பிரதமர், மல்வத்துபீட மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். மல்வத்துபீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே மஹாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன் வைத்த கோரிக்கையை நிபந்தனைகள் எதனையும் முன்வைக்காமல் அவற்றை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். அதேநேரம், சர்வதேச ரீதியில் அங் கீகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பிரத மராகப் பதவியேற்றிருப்பது மகிழ்ச்சி யளிப்பதாக அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்ததன்சி தேரர் கூறினார். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பிரதமருக்கு வலிமை, தைரியம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் ஆசீர்வத

கட்சிகளுக்கிடையிலான பேச்சு மற்றும் இழுபறி

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான இறுதி முடிவு எடுப்பதில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளுக்கிடையே நேற்றும் இழுபறி நிலை தொடர்ந்தது. கண்டி சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமர விக்ரமவின் கண்டியிலுள்ள இல்லத்தில் வைத்து பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து கண்டியிலிருந்து கொழும்புக்கு விரைந்த ஜனாதிபதி நேற்று மாலை 04 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடனான அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கண்டியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீல. சு. க மத்திய குழுவின் அனுமதியை பெறும் வகையில் நேற்று மாலை இந்த அவசரக் கூட்டம் நடந்ததெனத் தெரிய வருகிறது. செய்தி அச்சுக்குப் போகும் வரை இது தொடர்பான எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஐ.

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமை பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று - உலமா கட்சித்தலைவர்

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமை பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதுடன் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன பெரிதும்  பாராட்டுக்குரியவர் என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார். கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற உயர்சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, நடந்து முடிந்த தேர்தலில் எந்தக்கட்சியினாலும் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நிலையில் ஜனாதிபதி தலையிட்டிருக்காவிட்டால் ஐ தே கவினால் ஆட்சியமைக்க முடியாது போயிருக்கும். நாட்டின் எதிர் காலத்தை கருதி சகல கட்சிகளையும் உள்வாங்கி நல்லதொரு அரசாங்கம் அமைய வேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்த ஜனாதிபதி மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு பிரதான இரண்டு கட்சிகளையும் இணைத்து அரசமைத்துள்ளமை மாபெரும் வரலாற்று நிகழ்வு என்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின கொள்கைக்கு கிடைத்த பெரு வெற்றியாகும். கடந்த பொதுத்தேர்தலில் எ

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழு அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக

Image
உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம், சுமார் 6000 உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் நடைபெறவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார். வர்த்தமானி பிரகடனத்தின் பின்னர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அதுகுறித்த விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

தேசியப் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்

Image
தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லையென தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் பெண்களுக்கு போதுமான சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை எனவும் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உத்தேச 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேசிய பட்டியல் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து முக்கிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். தேசியப் பட்டியலின் ஊடாக மூன்றில் ஒரு பங்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஏற்கனவே இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். ஆயினும், அந்த இணக்கத்தின் அடிப்படையில் இரண்டு பிரதான கட்சிகளும் நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சிகளின் நியமனங்களில் ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகி

ஐ.ம.சு. முன்னணியின் தேசியப் பட்டியலும் செல்லுபடி-தே.ஆ.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள மூன்று பெயர் பட்டியல்களும் சட்ட ரீதியானவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதற்கேற்ப, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தனக்கு நேற்றுக் கிடைக்கப் பெற்றுள்ள பெயர்ப் பட்டியலையும் ஏற்றுக் கொண்டோம். இந்தப் பெயர்ப் பட்டியலுக்கு செயலாளராக சுசில் பிரேம்ஜயந்த ஒப்பமிட்டுள்ளார் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் நியமிப்பது சட்ட ரீதியானது. இதற்கு முன்னரும் இதுபோன்று தோல்வியடைந்தவர்கள் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை 4 கட்சிகளில், ஏற்கனவே தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கு உறுப்புரிமை கிடைக்காமல் போயுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய அரசு: ஐ.தே.க - சு.க ஒப்பந்தம்

Image
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்து இரு வருடங்க ளாக ஒன்றாக செயற் படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஐ. தே. க. சார்பில் கட்சி செயலாளர் கபீர் ஹாசிமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கட்சி பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் கைச்சாத்திட்டனர். பொருளாதார முன்னேற்றம், சுதந்திரத்தை உறுதிசெய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், மோசடியை ஒழித்தல், கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, வெளிநாட்டு உறவு, பெண்கள்மற்றும் சிறுவர் உரிமை, கலை, கலாசாரத்தை மேம்படுத்தல் அடங்கலான 10 அம்சங்கள் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பை திருத்துவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தவும் இரு கட்சிகளும் இணங்கியுள்ளன. இரண்டு வருட காலத்துக்கு அமுலா கும் வகையிலான இரு தரப்பு புரிந்து ணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு க

சம்பந்தனுக்கு எதிர்க் கட்சித் தலைமை வழங்க மாட்டோம்-விமல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக அல்லவெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தனை எதிர்க் கட்சித் தலைவராக மாற்றுவதற்கே எனவும் மஹிந்த சார்பு குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். தேசிய அரசாங்கத்துக்கு நாம் எதிர்ப்பு. இதற்கு எதிராகவுள்ளவர்களுடன் சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிர்க் கட்சியின் கடமையினை முறையாக முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார். எப்.சீ. ஐ.டி. யில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  (மு)

ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல்

ஐக்கிய தேசிய கட்சி 13 பேர் கொண்ட தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.  இந்த பட்டியல் இன்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.  கட்சியின் சிரேஷ்ட்ட பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இதன்படி மலிக்  சமரவிக்ரம, கருஜெயசூரிய, டீ.எம்.சுவாமிநாதன், அத்துரலியே ரத்தன தேரர், ஜெயம்பதி விக்ரமரத்ன, திலக்க மாரப்பனே, சீ.ஏ.மாரசிங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, எம்.எச்.எம்.நவாவி, எம்.எஸ்.சல்மான், ஏ.ஆர்.ஏ. ஹபீஷ், அனோமா கமகே மற்றும் சிறிநால் டி மெல் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.  புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் பிரதி சபாநாயகராக சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவரையும், குழுக்களின் பிரதித் தலைவராக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் சிறுபான்மை கட்சி ஒன்றின் உறுப்பினரையும் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ACMC யில் இருந்து நீக்கப்பட்டார் அமைச்சர் றிஷாத் பதியுதீன்

Image
அ கில இலங்கை மக்கள் காங்கிரசுக்காக ஆரம்பத்தில் இருந்து கட்சியை வளர்த்து இதுவரை பெரும் கட்சியாக மாற்றியமைத்திருக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் YLS ஹமீதுக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் புத்தளம் நபவிக்கு வழங்கியிருப்பது அக்கட்சியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கும் தேசியப் பட்டியல் வழங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருந்த வேளை அம்பாரையில் 33,000 வாக்குகள் பெற்றிருந்தும் ஆசனம் எதுவும் பெறாமல் இருப்பதனால் அம்பாரைக்கு வழங்கியிருக்க வேண்டிய தேசியப்பட்டியல் வேரிடத்திற்கு வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது என்று செயலாளர் ஹமீட் கூறியிருப்பதுடன் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கல்முனை தொகுதியில் ஜெமில் சிராஸ் ஹமீட் நதீர் கலில் இந்த கூட்டனி வெற்ற வாக்குகள்

Safan Siraj கல்முனை தொகுதியில் ஜெமில் சிராஸ் ஹமீட் நதீர் கலில் இந்த கூட்டனி வெற்ற வாக்குகள் எத்தனை ??? கல்முனை தொகுதியில் மக்கள் காங்கிரஸ் பலமான அணி என்று சில ஊடங்கள் கூறி  வந்தன. ஜெமில் சிறாஸ் ஹமிட் நதீர் என்று பல பிரபல்லியமான முகங்கள் இருந்தன. இந்த முகங்கள் எத்தனை வாக்கு பெறும் என்று ஆவலோடு காத்திருந்தோம். அதற்கான விடை கடந்த ஜனாதிபதி தேர்தலின் கல்முனை தொகுதி முடிவுகள் அன்னம் 45000 வாக்குகளும் வெற்றிலை 5000 வாக்குகளையும் பெற்றார். அப்போ வெற்றிலைக்கு உறுதியான 5000 வாக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பான வாக்கும் கல்முனை தொகுதியில் உள்ளன. கல்முனை தொகுதியி மக்கள் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 8500 வாக்குகளாகும். இந்த 8500 வாக்கில்தான் வெற்றிலையின் 5000 வாக்குகளும் உள்ளது. கல்முனை தொகுதியில் வெற்றிலை சார்பாக வேட்பாளர்கள் களம் இறக்காததால் வெற்றிலைக்குறிய வாக்கை முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக மயிலுக்கு அழிக்கப்பட்டது. கல்முனை தொகுதியில் ஒரு வெற்றிலை வேட்பாளர் இறங்கி இருக்கும் பட்சத்தில் இந்த 5000 வாக்கும் வெற்றிலைக்கே சொன்ரிருக்கும். மக்கள் காங்கிரஸ் பெற்ற 8500 வாக்கு

பாராளுமன்றத்திற்கு 12 பெண் உறுப்பினர்கள் தெரிவு

Image
நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் மூலம் பாராளு­மன்­றத்­துக்கு 12 பெண் உறுப்­பி­னர்கள் மட்­டுமே தெரி­வா­கி­யுள்­ளனர். இம்­முறை பாராளு­மன்றத் தேர்­தலில் பல்­வேறு கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்பில், 556 பெண் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யி­ருந்­தனர். ஐ.தே.க மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்­ட­வர்­களில், 12 பேர் மட்­டுமே பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வா­கி­யுள்­ளனர். மாவட்ட ரீதி­யாக 14 ஆச­னங்­களை வென்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து இம்­முறை ஒரு பெண் உறுப்­பி­ன­ரேனும் தெரி­வா­க­வில்லை. இதே­வேளை, இம்­முறை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்ட பெண் வேட்­பா­ளர்­களில், ஐக்­கிய தேசியக் கட்­சியின் இரத்­தி­ன­புரி மாவட்ட வேட்­பாளர் தலதா அத்­து­கோ­ரள 145,828 விருப்பு வாக்­கு­களை பெற்று முத­லி­டத்தில் உள்ளார். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஒரு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட விருப்பு வாக்­கு­களை பெற்ற 48 வேட்­பா­ளர்­களில் தலதா அத்­து­கோ­ர­ளவும் இடம்­பெற்­றுள்ளார்.இரத்­தி­ன­புரி மாவட்ட வர­லாற்றில் பெண் ஒருவர் பெற்றுக்

நவவி, மன்சூர், டாக்டர் ஹபீஸ் ஆகியோர் தேசியப் பட்டியல் எம்.பி.

நவவி, மன்சூர், டாக்டர் ஹபீஸ் ஆகியோர் தேசியப் பட்டியல் எம்.பி.களாகின்றனர் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் வழங்கிய தேசியப் பட்டியல் மூலம் 3 முஸ்லிம்கள் பாராளுமன்றம் செல்லவுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் டாக்டர் ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி மன்சூர் ஆகிய இருவரும் நியமிக்கபட்டுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவர்கள் இருவருடைய பெயர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் சமர்ப்பித்துள்ளார். அதுபோன்று றிசாத் பதியுதீன் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு, சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்த நவவியை தேசியப்ட்டியல் எம்.பி.யாக்க ஐக்கிய தேசியக் கட்சியிடம் பிரேரித்துள்ளார்.

ரிசாதை நீக்கும் அதிகாரம் ஹமீதுக்கு உண்டா?

Image
தேசிய பட்டியல் விடயத்தில் அ. இ. மக்கள் காங்கிரஸ் செயலாளருக்கும் அதன் தலைவர் ரிசாத் பதியுதீனுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ர்pசாதை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஹமீத் நீக்கியதாகவும் தெரிகிறது. தேசிய பட்டியல் பதவி கல்முனை சாய்ந்தமருதுக்கு தருவதாகவே இவ்விருவரும் அங்கு அப்பாவி மக்களை வழி கெடுத்தனர். தற்போது அந்த பதவியையை நவவிக்கு ரிசாத் வழங்கியுள்ளதன் காரணமாகவே பிரச்சினை எழுந்துள்ளது. கட்சியின் தலைவரான ரிசாதை அந்த பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் செயலாளர் ஹமீதிடம் உண்டு. காரணம் கட்சி செயலாளர் சொல்வதையே தேர்தல் ஆணையாளர் முதலில் கேட்பார். பின்னர் மற்றவர்கள் நீதி மன்றம் சென்று அங்கு தீர்ப்பு வழங்கப்பட்டால் அதனை தேர்தல் ஆணையாளர் ஏற்பார். ஆக ரிசாத் தனது தலைவர் பதவியை காக்க நீதி மன்றம் செல்ல வேண்டும் அல்லது ஹமீதுக்கு பாரிய கொடுப்பணவு கொடுக்க வேண்டும். 8 மாதங்களுக்கு முன் எனக்கு அ. இ. ம. காங்கிரசை சேர்ந்த முக்கியஸ்தர் அக்கட்சியில் சேரும்படியும், வை எல்எஸ்ஸை தலைவர் கூடிய சீக்கிரம் ஒதுக்கி விடுவார் எனவும் சொன்னார். நான் சொன்னேன், வை எல்எஸ்சை நீக்கும் அதிகாரம் ர

ஐ தே க வால் ஆட்சியமைக்க முடியவில்லை: சுதந்திர கட்சி உதவுகிறது.

Image
சந்திரிகா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு நியமனம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணக்கம் தெரிவித்துள்ளது. சு. க. தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மத்திய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட ஆறு பேர் கொண்ட குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவார். ஸ்ரீல. சு. க.வின் பதில் பொதுச் செயலாளரான துமிந்த திசாநாயக்க, சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, எஸ். பி. திஸாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாயின் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட வேண்டியது நடை முறையிலுள்ள வழக்கமென சுட்டிக் காட்டிய முன்னாள் எம்.பி. ஏக்கநாயக்க, உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் க