Posts

Showing posts from July, 2015

ருபாவாகினிக் கூட்டுத்தபாணத்தின் தலைவா் இராஜினமா

Image
அஸ்ரப் ஏ சமத் இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தபாணத்தின் தலைவா் காலாநிதி சோமரத்தின திசாநாயக்க அப் பதிவியில் இருந்து இராஜினமாச் செய்துள்ளாா். அவா் எஞ்சிய உள்ள நாட்களில் குருநாகலில் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவும் குருநாகால் அகில விராஜ் காரியவாசமுடன் ்இணைத்து ஜ.தே.கட்சி பிரச்சாரததில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தாா். அதற்காக இப் பதிவியில் இருந்து கொண்டு என்னால் இதனைச் செய்ய முடியாது என  திசாநாயக்க தெரிவித்தாா். இன்று நாரேகேன் பிட்டிய ஜனாகி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநட்டிலேயே மேற்கண்ட தகவல்கலைளத் தெரிவித்தாா். அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில்  கடந்த ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டில் நல்லதொரு நல்லாட்சியை ஏற்படுத்த நாம் அணைவரும் பாடுபட்டோம்.  ஆனால் ஹம்பந்தோட்டையில் இருந்து குருநாகலுக்கு மீண்டும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்கள்  பாராளுமன்றத் தோ்தலில் குதித்துள்ளாா்.  எனது ஊா் குருநாகல் தம்பெதெனியாலயவாகும்  மக்களால் நிரகாரித்த முன்னளா்ள் ஜனாதிபதி  மீண்டும் இந்த நாட்டில் கொலை,களவு., குடும்ப ஆட்சி, அரச சொத்துக்கள் அபகரிப்பு போன்ற துறைகளில் சம்பந்தப்பட்

ஹரீசை ஆதரிப்பதற்காக உலமா கட்சிக்கு பணம்?

Image
கல்முனையில் நாம் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹரீசை ஆதரிப்பதற்காக அவரிடமிருந்து ஒரு சதமாவது பெற்றதாக யாரும் நிரூபித்தால் உலமா கட்சியை கலைப்போம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்தார். கட்சி ஆதரவாளர்களை தெளிவு படுத்துமுகமாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் உலமா கட்சி ஆரம்பமானது முதல் அதன் ஒவ்வொரு நகர்வும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை எம் மீதமான அதிக விமர்சனங்கள் மூலம் தெரியலாம். எல்லோரும் ஓடும் பக்கம் வயிற்றுமாடும் வாலை கிளப்பிக்கொண்டு ஓடுமாப்போல் ஓடும் கட்சியல்ல உலமா கட்சி. உண்மை எந்தப்பக்கம் உள்ளதோ அந்தப்பக்கம், எவர் எதிர்த்தாலும் அப்பக்கம் நி;ற்கும் மிகப்பெரிய துணிச்சலை இறைவன் எமக்கு கொடுத்துள்ளான். பணம் வாங்கி அரசியல் செய்வதையே பிழைப்பாக கொண்டோர் எம்மையும் அவர்கள் போன்று சிந்திக்கின்றனர். ஆனால் சீரான, நேர்மையான அரசியல் கொள்கை கொண்டு நாம் செயற்படுகிறோம். எமது முழு இலக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு  தேவையான, யதார்த்தமான அரசியலை புரிய வைப்பதுதான்.  இதன் காரணமாகவே கல்முனை முஸ

முல்லா ஒமர் ~மரணம்'

Image
 தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹ மது ஒமர் மரணமடைந்திருப்பதாக ஆப்கான் அரசு மற்றும் உளவுப்பிரிவு வட்டாரங்கள் அறிவித்துள் ளன. எனினும் தலிபான் தரப்பினர் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. வெளியுலகுக்கு வராத முல்லா ஒமர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மர ணித்துவிட்டதாக ஆப்கான் அரச வட்டாரம் நேற்று குறிப்பிட்டது. எனினும் இந்த அறிவிப்பு குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்பட்டிருக்க வில்லை. எனினும் பாகிஸ்தான் அரசு முல்லா ஒமர் இர ண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்ததை உறுதி செய்ததாக ஆப்கான் அரச வட்டாரம் குறிப்பிட் டுள்ளது. இந்த தகவல் குறித்து கூடிய விரையில் பதில ளிப்பதாக தலிபான் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலங்களிலும் பல முறை முல்லா ஒமர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி இருந் தன. எனினும் ஆப்கானின் நம்பகமான அரச தர ப்பு முல்லா ஒமரின் மரணத்தை உறுதி செய்திருப்பது இது முதல் முறையாகும். ஆப்கானிஸ்தானி லிருந்து சோவியட் படைகள் விலகிக்கொண்ட பின்னர் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், தாலிபானுக்கு எதி ரான இயக்கங்களைத் தோற்கடித்தவர் முல்லா ஒமர் ஆவார். முல்லா ஒமருக்கு அல் கொய
Image
அஸ்ரப் ஏ  சமத் இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக  சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது. இலங்கையில்  நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும்  15  பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது,  லத்தீப் பாருக்,  முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதன் வழங்கப்பட்டது. மற்றும்  சிறந்த வா்த்தக செய்தி ஊடகவியலாளா். விளையாட்டு, காட்டுனிஸ்ட், சிறந்த பந்தி எழுத்து, மேர்வின் சில்வா விருது., பேராசிரியா் கைலாசபதி விருது, சுப்ரமணிய செட்டியாா் விருது,  உபாலி  விஜயவா்தன விருது,  சூழலியல் விருது, புலநாய்வு ஊடகவியல் விருது, போன்ற பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வின்னணப்பங்களில் நடுவா்கள் உரிய ஆக்கத்துக்கு புள்ளி வழங்கி தெரிவு செய்து இவ் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இம்முறை வீரகேசரி, தினக்குரல், தமிழ் மிரா் ஆகிய பத்திரிகைகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளா்கள் சிலா் விருதுகளை பெற்றுக் கொண்டனா். 

எம் எச் முஹம்மத் மகனின் தேர்தல் காரியாலயம் கிறேன்ட்பாசில்

Image
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஒரேயொரு முஸ்லம் வேட்பாளரான ஷாஹ{ல் ஹமீத் முஹம்மதின் தேர்தல் காரியாலயம் இன்று மாலை கிரேன்ட்பாசில் திறந்து வைக்கப்படும். இதில் ஐ ம சு முன்னயின் கூட்டு கட்சிகளில் ஒன்றான உலமா கட்சியின் தலைவர் முபாறக் மௌலவியும் விசேட அதிதியாக கலந்து கொள்கிறார். வேட்பாளர் ஷாஹ{ல் ஹமீத் அவர்கள் முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான அல்ஹாஜ் எம். எச் முஹம்மத் அவர்களின் மகனாவார். நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும், குறிப்பாக கொழும்பின் அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்து சகல இன மக்களினதும் அன்பைப்பெற்ற எம் எச் முஹம்மத் அவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கும் பாரிய பல சேவைகளை செய்துள்ளார். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்திலேயே தற்போதைய மட்டக்களப்பு புகையிரத நிலையம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் முதலாவது அமைச்சரான எம். எச் முஹம்மத் அவர்கள் அதன் மூலம் சமூகத்துக்கு பல சேவைகள் செய்துள்ளார். அத்தகைய நல்ல பண்புகளையும் திறமையும் கொண்ட அமைச்சர் எம் எச் முஹம்மதின் மகன் ஷாஹ{ல் ஹமீத

கடாபியின் மகனுக்கு மரண தண்டனை

Image
 கொல்லப்பட்ட லிபிய தலைவர் முஅம்மர் கடா பியின் முக்கிய மகன்களில் ஒருவரான சைப் அல் இஸ்லாமுக்கு துப்பாக்கி குழுவைக் கொண்டு மரண தண்டனை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு அளித்துள்ளது. 2011 மக்கள் கிளர்ச்சி மூலம் அகற்றப்பட்ட கடாபி அரசின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எட்டுப் பேருடன் சைப் அல் இஸ்லாமுக்கு எதிரான வழ க்கு விசாரணை நேற்று திரிபோலி நீதிமன்றத்தில் இடம்பெற்றது. எனினும் அவர் இந்த வழக்கில் நேர டியாக ஆஜராகவில்லை. வீடியோ தொடர்பு மூலம் சாட்சியம் அளித்தார். யுத்த குற்றத்தில் ஈடுபட்டது மற்றும் மக்கள் கிளர்ச்சியின்போது அமைதியான ஆர்ப்பாட்டக்காரர் கள் மீது ஒடுக்குமுறையை கையாண்டதாக இவர் கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. லிபியாவில் இரு போட்டி அரசுகளுக்கு இடையி லான மோதல் இடம்பெறுவதற்கு முன்னர் கடந்த 2014 ஏப்ரலிலேயே இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது. தற்போது லிபியாவில் தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு ஓர் அரசு இயங்குவதோடு மற்றொரு அரசு தப்ரூக் நகரில் இருந்து செயற்பட்டு வருகிறது. சைப் அல் இஸ் லாம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து சின்தா னில் இருக்கும் முன்னாள் கிளர்ச்சிக் கு

அமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டால்

Image
அமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டால் அது இந்த‌ நாட்டின் மிக‌ப்பெரும் வ‌ர‌லாற்று நிக‌ழ்வாக‌வும், ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணி இன‌வாத‌க்க‌ட்சிய‌ல்ல‌ என்ப‌தை நிரூபித்த‌தாக‌ முடியும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். இது ப‌ற்றிய‌ ஊட‌க‌வியாளரின் கேள்விக்கு ப‌தில‌ளிக்கையில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,  இன்றைய‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளில் அமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ளே சிரேஷ்ட‌மான‌வ‌ர் என்ப‌துட‌ன் ஆளுமை மிக்க‌ ஒருவ‌ராவார். அந்த‌ வ‌கையில் அவ‌ர் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட‌ முழு த‌குதியும் உடைய‌வ‌ராவார்.  இந்த‌ நாட்டை பொறுத்த வ‌ரை ச‌க‌ல‌ ம‌த‌தின‌ரும் ச‌மான‌ம் என்றே அர‌சிய‌ல் சாச‌ன‌ம் சொல்கிற‌து. ந‌டை முறையில் அத‌ற்கு மாற்ற‌மான‌ செய‌ற்பாடுக‌ளே அதிக‌ம் காண‌ப்ப‌டுவ‌தால் இன‌ங்க‌ள் ம‌த்தியில் ச‌ந்தேக‌மும் அச்ச‌மும் காண‌ப்ப‌டுகிற‌து. இவ‌ற்றை தீர்க்கும் வ‌கையில் பிர‌தான‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ச‌க‌ல‌ துறைக‌ளிலும் இன‌ ரீதியாக‌ இல்லாம‌ல் அரசிய‌ல் நிய‌ம‌ன‌ங்க‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும். அந்த‌ வ‌கையில் எதிர் வ‌ரும் தேசிய‌ அர‌சாங்க‌த்

தனித்து ஆட்சியமைப்போம் என்ற ஐ தே கட்சி சிவில் அமைப்புக்களுடன் சங்கமம்.

Image
  நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் மேலும் 110 சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டன. இவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிவில் அமைப்புக்கள் சார்பில் நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்நின்று செயற்பட்ட அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க ங்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர்கள் உள்ளிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய குழுவினர் இதில் இணைந்து கொண் டனர். இந்த நிலையில் நேற்றையதினம் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என 110 பேர் இதில் இணைந்துகொண்டனர். நாட்டில் மேலும் ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்து, சுதந்திரம் மற்றும் மனித உ

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டம் -ரிஷாத்

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னர் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் என்று கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் கூறினார்.அவர் ­வ­ழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது. கேள்வி: திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­ட்ட­தில்லை. இந்த நிலையில் இப்­பொதுத் தேர்­தலில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் இம்­முறை உங்­க­ளது கட்சி போட்­டி­யி­டு­வதால் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் போகும் நிலை ஏற்­ப­டாதா? பதில்: -அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் போட்­டி­யிடும் அனை­வரும் முஸ்­லிம்கள். எனவே எங்­க­ளது கட்­சிக்கு விழும் ஒவ்­வொரு வாக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமையும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிடும் போது அது முஸ்லிம் பிரதி நித

றஹ்மான் இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

Image
சுதந்திர கட்சி உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு கல்முனை மாநகர சபையின் சுதந்திர கட்சி உறுப்பினர் Z.றஹ்மான் இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார். இன் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜெமில் மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

தோ்தல் காலத்தில் மட்டும் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரபின் உருவப் படங்கள்

Image
அஸ்ரப் ஏ சமத் தோ்தல் காலத்தில் மட்டும் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரபின் உருவப் படங்கள் மதில்களிலும், தந்திக் கம்பங்களிலும் காணப்படும். இதனை சகல  கட்சிகளில் உள்ள  முஸ்லீம் வேட்பாளா்களளது படத்துடன்  காட்சிப்படுத்துவாா்கள் ஆனால் அவரது பெயா் நீடிக்க வேண்டுமானால் இனி மறைந்த தலைவாின் ஒரே ஒரு  வாரிசு அமான் அஸ்ரப் அரசியலுக்குள் வரவேண்டும். மறைந்த தலைவா்  எம்.எச். எம் அஸ்ரப்  தோ்தல் காலத்தில் மட்டும் அவரது படங்கள், சுவா்களிலும் தந்திக் கம்பிகளிலும் ஒட்டப்பட்டிருக்கும்  தொங்கும், போஸ்டா்கள், பெனா்கள், விளம்பரங்களுக்கு மட்டும் அவா் தற்காலத்தில்  பாவிக்கப்படுகின்றாா்.  அத்தோடு அவரோடு ஒட்டி உறவாடியவாறு வேட்பாளா்களது படங்கள் காட்சிப்படுத்தப்படும். அவரது உரைகள், கவிதைகள், பாராளுமன்ற உரைகள் தோ்தல் கூட்டங்களில் பொது மக்களுக்கு மீள ஞாபகப்படுத்தப்படும்.   மேடைகளில் அவரோடு இருந்து நான் இதைச்செய்தேன், பல்கலைக்கழகத்தை கட்டினேன். அபிவிருத்தி செய்தேன் என மேடைகளில்  முழங்குவாா்கள்.  வீதிகளில் கூட்டங்களில் மறைந்த தலைவா் மீள உயிா்ப்பிக்கப்படுவாா். இதனை எல்லாக் முஸ்லீம் கட்சிக்ககாரா்க

ஹரீசை ஆதரிப்பதற்காக உலமா கட்சியால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

Image
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்முனை வேட்பாளர் எச் எம் எம் ஹரீஸ் அவர்களை உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆதரவளிக்க இருவரும் ஏற்படுத்திக்கொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு. 1. ஹரீஸ் அவர்களை ஆதரித்து பிரசுரங்கள்; உலமா கட்சியினால் வெளியிடப்படும். ஊடகங்களுக்கு விளம்பரங்களும் கூட்டாக தரப்படும்.  2. தேர்தல் நடவடிக்கைகளுக்கான வாகன வசதி, ஏனைய அனைத்து வசதிகளும் ஹரீஸ் அவர்களால் செய்து தரப்படும் பட்சத்தில் பிரச்சாரங்களிலும் ஈடுபாடு செலுத்தப்படும். 3. இறைவன் உதவியால் ஹரீஸ் அவர்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் பொது மக்களின் பிரச்சினைகளை தினமும் அறியக்கூடிய வகையில் அரசியல் காரியாலயம் ஒன்று கல்முனையில் திறக்கப்பட வேண்டும். இது வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் 10 மணி நேரம் திறந்திருப்பதுடன் அதில் நிரந்தர ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். 4. ஹரீஸ் அவர்கள் ஊரில் இருக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணி நேரமாவது இந்த காரியாலயத்தில் இருந்து மக்கள் பிரச்சினைகளை ஆராய வேண்டும

ஜ‌ன‌க‌ ப‌ன்டார‌ ஐ தே க‌ அமைச்ச‌ர‌வையிலிருந்து ராஜினாமா.

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாகாணசபைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தமாக 11 கவிதைகள் உள்ளடங்களாக இந்த இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாரே நான் இதனைச் சொல்கின்றேன் மக்கள் மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் பயணம் இல்லாததனால் நிற்கின்றேன் இவ்வாறுஏற்றுக் கொள்ளுங்கள் என் இராஜினமாவை நீங்கள் என எழுதியுள்ளார்.

மைத்திரி - ரணில் ஒர் அச்சாரு அரசாங்கமாகும். -

அஷ்ரப் ஏ சமத்) மைத்திரி - ரணில் ஒர் அச்சாரு  அரசாங்கமாகும். நான் பிரதம நீதியரசராக இருக்கும் போது 2 ஜனாதிபதிகள் என் முன் சத்தியப்பிரமானம் எடுத்தாா்கள். அது ஒரு கம்பீரமான முறையில் நடந்தது. உலக நாடுகளிலும் இதுவே ஒரு சம்பிரதாய முறையாகும்  ஆனால் ்இந்த மைத்திரி ஜனாதிபதி பதவிப்பெருமானம்  எடுத்த காட்சிகள் ஒரு நாட்டியம்போன்று எனக்கு தென்பட்டது.  என முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா். நேற்று கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவான சிங்கள கலைஞா்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா. ஜனாதிபதியாக முன்பே அவா் பிரதம நீதியரசா் ஒருவரைக் கொண்டு வந்து சத்தியப் பிரமானம் செய்தாா். அவ்விடத்திலேயே 45 பாரளுமன்ற உறுப்பிணா்களைக் கொண்ட ரணிலுக்கு பிரதமா் பதவியை வழங்கினாா். ஆனால் 125க்கும் மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினா் இருக்கும்போது  ரணிலும் வலுக்கட்டாயத்தின் பேரில் அவா் பிரதமர் ஆணாா். இந்த அரசாங்கம்  இப்படியே விட்டுவிட்டால் நாட்டுக்கு பாரிய இழப்பாகும்.  என்று தான் நான் உடன் மஹிந்த ராஜபக்சவை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம்

Image
அ கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் இன்று காலை ( 25 ) திறந்து வைக்கப்பட்டது.  கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வை கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் ஒழுங்கு செய்திருந்தார். இதன் போது பெரும் திரளான ஆதரவாளர்களால் வரவேற்பளிக்க்பட்டு பொல்லடியுடன் வருகை தந்த அமைச்சருடன் வேட்பாளர்களான சிராஸ் மீராசாஹிப் , எம்.எஸ்.அமீர் அலி , எஸ்.எஸ்.பி.மஜீட் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் , கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் ஆகியோரும் ஏனைய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

ரிசாதை நோக்கி ஹ‌ரீசின் காட்ட‌மான‌ கேள்விக‌ள்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் இதுவரை எங்காவது பேசியிருக்கின்ராரா? அல்லது இனிவரும் காலங்களிலாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் என்று சொல்வாரா? நான் நினைக்கவில்லை, ஏனென்றால் சாய்ந்தமருதுக்கு அத்தனை துரோகங்களை இளைத்த வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களது பலமான பிடியில் அமைச்சர் ரிசாட் இருந்துகொண்டிருக்கிறார். சாய்ந்தமருது மக்கள் மயில் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகளால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லப்போவது இதே வை.எல்.எஸ்.ஹமீட் என்பதே உண்மை. முடியுமானால் ஒரு தேசியப் பட்டியல்தான் கிடைத்தாலும் அதை மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்குவேன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனால் கூறமுடியுமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் கேள்விஎழுப்பினார்.  (24) இரவு சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகத்தில் தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை உ

117 ஆசனங்களை வெல்லும்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசனங்களை வெல்லும் என தெரிவித்துள்ளார் ஸ்ரீலசுகட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27ம் திகதி வெளியிடப்படும் என உறுதி செய்துள்ள அவர் இம்முறை தமது கூட்டணி 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர் என்று புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'நான் அறிந்தளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஆர்.சம்பந்தன், நேர்மையான அரசியல்வாதியாவார். யதார்த்தவாதியாகச் செயற்படக்கூடியவர். அதேபோலவே, தமிழ் மக்களுக்கான எதையேனும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் சுமந்திரன். இருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து அரசியலுக்

சுசில் பிரேமஜெயந்த துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள்

பொதுத் தேர்தலின் பிறகு தேசிய அரசாங்கமொன்றே அமைக்கப்படும் வாய்ப்புள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலில் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் பட்சத்தில் சுசில் பிரேமஜெயந்தவை பிரதமராக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது. இதேநேரம், ஐ.தே.க. வெற்றி பெறும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, சுசிலை துணைப் பிரதமராக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணிக்கே பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதால், சுசில் பிரேமஜெயந்த எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்பு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.(ரி)

யாழ்ப்பாணம் அறைகளை அமைப்பதற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள்.

(ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் காமால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பள்ளிவாசலின் எதிர்கால நிரந்திர வருமானத்திற்காக புதிதாக வாங்கிய காணியில் 10 அறைகளை அமைப்பதற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய நிர்வாகத்தினர் 11-2 பரப்பு காணி ஒன்றினை பல சகோதரர்களின் உதவியுடன் கொள்வனவு செய்துள்ளனர். அத்துடன் இக்காணியில் பள்ளியின் வருமானத்திற்காக 10 அறைகளை அமைப்பதற்காக திட்டமிட்டு உதவும் பரோபகாரர்களின் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர். எனவே யுத்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ள இப்பள்ளிவாசலின் நலனில் பங்கெடுத்தவர்களிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்வரும் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர். எம்.எஸ்.ஐ ஆரிபின் (செயலாளர்-0715604213, 0773689856) எம்.ஆர் சாகுல் ஹமீது(கணக்காளர்-0776171263)

சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு பிரச்சினைக்கு தீர்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரிய தர்சன யாப்பா உட்பட மூத்த அமைச்சர்கள் நாளை புதன்கிழமை ஜனாதிபதியை சந்திக்க தீர்மானித்துள்ளனர். கட்சி தலைவரின் அனுமதியின்றி கட்சியின் மத்திய குழு கூட்டத்தை கூட்ட முடியாது என கொழும்பு நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவை பிறப்பித்திருந்தது.

அனைத்தையும் 18 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் நாம் ஆரம்பிப்போம் - மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. யாப்பஹூவ – எகொடகம பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் போது அடிமைகள் போன்று இருந்த நாம் சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் எனவும் நாட்டை பிளவுபடுத்த மீண்டும் முயற்சித்தபோது அதனை ஐக்கியப்படுத்தினோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ கருத்துத்தெரிவித்தார். மேலும் இந்த 100 நாட்களுக்குள் இல்லாமல்போன விடயங்கள் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் நிறுத்தப்பட்ட அனைத்தையும் 18 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் நாம் ஆரம்பிப்போம் எனவும் மஹிந்த தெருவித்தார்.

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தாயக ஒலி ஆசிரியர் திரு தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலண்டன் இலக்கிய நிறுவகத்தின் தலைவர் வவுனியூர் இரா உதயணன் அவர்களும் சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் எம்.எம். சப்ரி, டாக்டர் அல்ஹாஜ் ஏ.பி. அப்துல் கையூம் (ஜே.பி), கே. அரசரத்தினம், ந. கருனை ஆனந்தன், உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், மு. கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.  வரவேற்புரையை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெளியீட்டுரையை கவிஞர் நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, கவி வாழ்த்தை தாஜுல் உலூம் கலைவாதி கலீல் பாடுவார். நயவுரையை திருமதி வசந்தி தயாபரன் வழங்க ஏற்புரையை நூலாசிரியரும், நன்றியுரையை ஊடகவி