நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்


-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி –

- பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும்.
வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு.
இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும்.
ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும்.
அந்த வகையில் பிறை பற்றிய சர்ச்சைகளை முதலில் பின்வருமாறு வகுக்கலாம்.
01. ஒரு பகுதியில்; வாழும் மக்கள் தமது பகுதியில்; கண்களால் காணப்படும் பிறையை வைத்தே தமது நோன்பு, ஹஜ் பிறைகளை தீர்மானிக்க வேண்டும்.
02. பிறையை கண்களால் காணத்தான் வேண்டும் என்றில்லை. மாறாக நட்சத்திரங்களின் (நுஜும்) கணக்கின்படி கணக்கிட்டு மாதத்தை தீர்மாணித்துக்கொள்ளலாம்.
03. பிறையை கண்களால் காண முடியாது போனாலும் அறிவியல் மூலம் கண்டாலும் போதுமானது.
04. உலகில் எந்த மூலையில் பிறை தென்பட்டாலும் போதுமானது (சர்வதேச பிறை).  அதனை வைத்து மாதத்தை, நோன்பு, ஹஜ்ஜை தீர்மாணிக்கலாம்.
05. மக்கா. மதீனா பிறையை வைத்தே உலகளாவிய முஸ்லிம்கள் தமது மாதங்கள், நோன்பு, ஹஜ் என்பனவற்றை தீர்மாணிக்க வேண்டும்.
இவையே பிறை பற்றிய சர்ச்சைகளில் பிரதானமானவைகளாகும். இனி பிறை பற்றிய குர்ஆன், ஹதீத் ஆதாரங்களைப் பார்ப்போம்.
பிறை குறித்த அல்குர்ஆன் வசனங்கள்
“இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாக கூறும். பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்” திருக்குர்ஆன்: 2:185
“அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் ஏற்பாடு.” திருக்குர்ஆன்: 3:96
“ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.” திருக்குர்ஆன்: 10:5
“தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.” திருக்குர்ஆன்: 14:33
“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.” திருக்குர்ஆன்: 21:33
“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.” திருக்குர்ஆன்: 36:38, 39, 40
“சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.” திருக்குர்ஆன்: 55:5
பிறைகளைப் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், ஹஜ்ஜூக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக!
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள்; அடிப்படையிலேயே நாமும் பிறை பற்றிய சர்ச்சைகளை ஆய்வு செய்து தீர்வு காண முனைவோம்.
முதலாவது கருத்து: அந்தந்த பகுதியல்; பிறையை கண்ணால் கண்டே நோன்பு நோற்க வேண்டும். இக்கருத்து நபியவர்களின் “(பிறையை) காண்பதன் மூலம் நோன்பு பிடியுங்கள். அதனைக் காண்பதன் மூலமே நோன்பை துறங்கள். மேகம் சூழ்ந்திருந்தால் ஷஃபான் மாதத்தை முப்பதாக +ரணமாக்குங்கள்” நூல் புகாரி 1906.  இந்த ஹதீதின்படி நபிகளார் காலத்து மக்கள் தமது கண்களால் பிறை பார்த்தே நோன்பு பிடித்தார்கள் என்பதால் அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் தமது கண்களால் பிறை கண்டே பிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இவர்களுடைய வாதப்படியே நவீன காலம் வரை அமுலில் இருந்து வந்ததை காண்கிறோம்.
இங்கு சில கேள்விகள் எழுகின்றன. ஆந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் என்றால் அந்தப்பகுதிக்கான எல்லை எது? குpராமமா, ஊரா? நுகரமா? நூடா? எது இதற்கு எல்லை? ஒரு நாட என்றால் பல நாடுகள் ஒன்றிணைந்து ஒரு நாடாக மாறினால் இதே சட்டம் அமுல்படுத்தப்படுமா? ஊதாரணமாக அரேபயா பல தேசங்களைக் கொண்டிருந்து பின்னர் சஊதி அரேபியா எனும் ஒரே தேசமாக மாறியது. அதே வேளை ஒரு நாடு இரு நாடுகளாக அல்லது பல நாடுகளாக மாறினால் என்ன செய்வது? ஊதாரணமாக ஒரே நாடாக இருந்த இந்தியா பின்னர் பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் என பிரிந்தது. இத்தகைய கேள்விகளை மனதில் வைத்துக்கொண்டு ஏனைய கருத்துக்களை பார்ப்போம்.
இரண்டாவது கருத்து: பிறையை நட்சத்திர (நுஜும்) கணக்கின்படி கணித்தல்.
மூன்றாவது கருத்து: அறிவியல் மூலம் பிறையை கண்டால் போதுமானது. இக்கருத்தின்படி உலகில் பிறை கண்களுக்கு புலப்படாவிடினும் பிறை வானில் தோண்றியிருக்கும் என்பதை வானியல் சாஸ்திரப்படியும், அறிவியல் நுணுக்கங்களின் படியும் அறிந்து ஏற்றுக்கொள்ளுதல். அநேகமாக இக்கருத்தும் இரண்டாவது கருத்தைப் போன்றதாகவே உள்ளது.
பொதுவாக பிறை என்ற ஒன்று இல்லை என்பதே உண்மை. சூரியனின் ஒளி சந்திரனில் விழும் போது உலகத்தின் நிழல் அதில் படுகின்றதற்கமைய பிறையாக நமது கண்களுக்கு தெரிகிறது. ஆக அறிவியலின் மூலம் சந்திரனின் தோற்றம் பிறை வடிவில் இந்த நாளில் தோன்றும் என்பதை அறிவியல் மூலம் அறிகிறோம். ஆனாலும் நோன்பு . ஹஜ் போன்றவற்றை பிறையை காண்பதன் மூலம் நடை முறைப்படுத்தும்படி நபியவர்கள் ஏவியுள்ளதால் ஒரேயடியாக நாம் அறிவியலை மட்டும் வைத்து பிறையை கணிப்பது என்பது ஹதீதுகளுக்கு முரண்பட்டதாக அமையும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். இந்நிலையில் ஹதீதையும் அறிவியலையும் எவ்வாறு இணைத்து இது விடயத்தில் தீர்வு காண்பது?
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள், அதன் நாட்காட்டிகள் என்பன அறபு நாடுகளில் வாணியல் கணிப்பின் மூலமே ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதை ஏற்கும் போது நபியவர்கள் நோன்புக்கும் ஹஜ்ஜுக்கும் பிறை பற்றி விசேடமாக குறிப்பிடுவதால் இக்கருத்து ஹதீதோடு முரண்படுகிறது. ஆகவே அறிவியல், மற்றும் நட்சத்திர கணக்கின்படி இஸ்லாமிய மாதங்களின் நோன்பு, ஹஜ் தவிர்ந்த ஏனைய மாதங்களை கணிக்க முடியுமே தவிர நோன்பு, ஹஜ், அரபா போன்றவற்றை தீர்மாணிக்க முடியாது.
நான்காவது கருத்து: உலகில் பிறை எங்கு காணப்பட்டாலும் போதுமானது. அதாவது சர்வதேச பிறை.
இக்கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது. காரணம் உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில், கொள்கையில் உள்ளன. சில நாடுகளை சில நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தோனேசியாவில் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அறபு நாடுகளோ, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு முஸ்லிம்களோ இந்தோனேசியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதே போல் அமெரிக்காவில் பிறை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அதனை ஏனைய நாட்டு முஸ்லிம்கள் சந்தேகக்கண் கொண்டே பார்ப்பர். அத்துடன் பூமியின் ஒரு கோடியில் உள்ள நாட்டில் பிறை காணப்பட்டால் அது பத்து மணி நேரத்துக்கும் மேலான வித்தியாசத்தை இன்னொரு கோடியில் காட்டும். இது பல நடைமுறைச் சாத்தியமற்றவற்றை தோற்றுவிக்கும் என்பதால் இக்கருத்தை ஏற்பது கடினமாக உள்ளது.
ஐந்தாவது கருத்து: உலக முஸ்லிம்களின் தலையகமான மக்கா, மதீனா பிறையை ஏற்றுக்கொள்ளல்.
நவீன காலத்தின் பிறை பற்றிய சர்ச்சைகளுக்கு ஏற்புடைய தீர்வாக இக்கருத்தே உள்ளது. பிறை பற்றிய சர்ச்சையில் முதலாவது கருத்தும் இந்த ஐந்தாவது கருத்துமே விவாதத்துக்குரிய கருவாக அமைகின்றது. இது பற்றியே நாமும் இங்கு ஆராய்கிறோம்.
பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள். கண்டுவிடுங்கள் என்பது நபிமொழியாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பிறையை காணும் பகுதியின் எல்லை என்ன? ஊருக்கு ஊர் பிறையை காண வேண்டுமா? நாட்டுக்கு நாடு காண வேண்டுமா? நாடுகளுக்குரிய எல்லையை வகுத்தது இறைவனா, மனிதனா போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலை நாம் ஆராயப்புகுமிடத்து பல விடயங்களை காணக்கூடியதாக உள்ளது. பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள் என்ற நபியவர்களின் கருத்து பொதுவாக முஸ்லிம் மக்களுக்கு சொல்லப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.  இக்கருத்து ஒவ்வொரு பகுதிக்கும் ஊருக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாட்டுக்கும் தேசத்துக்கும் பொருந்தும். ஏன் முழு உலகுக்கும் கூட பொருந்தும். இக்கருத்தை அன்றைய சூழலில் வாழ்ந்த முஸ்லிம்கள் விளங்குகையில் தத்தமது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் காணப்படும் பிறையை வைத்தே நோன்பு பிடிக்க வேண்டும் என்றே விளங்கினார்கள். இது அன்றைய சூழலுக்கு பொருத்தமான விளக்கமாகவே அவர்களுக்கு இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அவர்களின் இந்த விளக்கத்தில்  நாம் தவறு காண முடியாது.
அதனை விடுத்து நபிகளார் ஆட்சி செய்யும் மதீனாவின் பிறையை வைத்தே உலகின் தேசங்களில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்க வேண்டும் என அன்றைய மக்கள் விளங்கியிருந்தால் இது பாரிய நடைமுறைச் சிக்கலை தோற்றுவித்திருக்கும். உதாரணமாக அன்று மதீனாவிலிருந்து ஒருவர் மக்காவை சென்றடைவதாயின் குறைந்தது ஐந்து நாட்கள் தேவை. மதீனாவிலிருந்து ஷாம் தேசத்தை அடைவதாயின் ஏழு நாட்களுக்கு மேல் தேவை. இந்நிலையில் மதீனாவில் நோன்புக்கான பிறை காணப்பட்டுவிட்டது என்பதை மக்காவுக்கு அல்லது ஷாமுக்கு அறிவிப்பதாயின் பல நாட்கள் செல்லும். இதன் காரணமாக அந்தந்த பகுதி மக்கள் அந்தந்த பகுதியில்; காணப்படும் பிறையை வைத்தே நோன்பு பிடிக்க வேண்டும் என அந்த மக்கள் விளங்கிக் கொண்டதில் நியாயங்கள் உள்ளன. அதுவே அன்று நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருந்தது. அதனால் மக்களும் இதனையே நடைமுறைப்படுத்தினார்கள். இங்கு ஒரு பகுதி எனக்குறிப்படப்படுவதற்கும் கூட எல்லைகள் இல்லை. ஆனாலும் ஒரு நாளுக்கிடையிலான பயண தூரம் கொண்டதை ஒரு பகுதி என நாம் கருத வேண்டியுள்ளது. காரணம்; இஸ்லாம் நாடுகளுக்கு எல்லைகளை வகுக்கவில்லை. இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் முழு உலகமுமே ஒரே நாடுதான். இந்த ஒரே நாட்டுக்கும் ஒரே சட்டம்தான். உலகின் பெரும்பாலான நாடுகளை இணைத்து ஒரே சாம்ராஜ்யமாக முஸ்லிம்கள் ஆட்சி செய்ததையும் வரலாற்றில் காண்கிறோம்.

ஒரு நாட்டின் பிறை அந்த நாட்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று கூட அன்றைய மக்கள் விளங்காமல் விட்டது நியாயமானதே. அவ்வாறு விளங்கியிருந்தால் மதீனாவில் காணப்பட்ட பிறையே இந்தியாவின் எல்லை வரையான முழு இஸ்லாமிய நாட்டுக்கும் சட்டமாக்கப்பட்டிருக்கும். இது மிகப்பெரிய நடைமுறை சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். காரணம் இந்த ஒரே நாட்டுக்குள் எங்காவது பிறை கண்டு அதனை மற்ற பகுதிக்கு அறிவிப்பதாயின் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் எடுக்கலாம்.
எனவேதான் பிறை கண்டால் அது பற்றிய அறிவிப்பை எவ்வளவு தூரத்துக்கு உடனடியாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு தூரத்தையே தமது பகுதியாக மக்கள் கணித்து அந்த தமது பகுதியில் காணும் பிறையை வைத்து அப்பகுதி முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ், பெருநாள் போன்றவற்றை தீர்மாணித்துக்கொண்டார்கள். அந்தப்பகுதி என்பது ஒருவர் பிறையைக்கண்டால் விடிவதற்குள் அதனை எங்கெல்லாம் நடந்து அல்லது ஒட்டகம் போன்றவற்றின் மூலம் சென்று எத்தி வைக்க முடியுமோ அவற்றையே தமது பகுதிகளாக கொண்டிருந்தார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்க‌ள் பிறை க‌ண்டு நோன்பை பிடியுங்க‌ள், பிறை க‌ண்டு விடுங்க‌ள் என்ற‌ ஹ‌தீதில் உள்ள‌ நீங்க‌ள் என்ப‌து யாரை குறிக்கும்.  ?

இந்த‌ ஹ‌தீதை விள‌ங்குவ‌தாயின் இது போன்ற‌ இன்னொரு ஹ‌தீதை வைத்து விள‌ங்க‌லாம்.
" என்னை எவ்வாறு தொழ‌ நீங்க‌ள் க‌ண்டீர்க‌ளோ அவ்வாறே தொழுங்க‌ள்." என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.
இதில் வ‌ரும் நீங்க‌ள் என்ப‌து யார். ம‌தீனா முஸ்லிம்க‌ளா அல்ல‌து ம‌தீனா உட்ப‌ட‌ முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளா?

உண்மையில் ந‌பி தொழுவ‌தை க‌ண்ட‌வ‌ர்க‌ள் ச‌ஹாபாக்க‌ள் ம‌ட்டும்தான். வேறு எவ‌ரும் இன்று வ‌ரை க‌ண்ட‌தில்லை. அத‌னால் நாம் ந‌பி தொழுத‌து போன்று தொழ‌ தேவையில்லை என‌ யாரும் கூற‌ முடியாது. கார‌ண‌ம் இங்கு ந‌பி தொழுத‌தை காணுத‌ல் என்ப‌து க‌ண்க‌ளால் காணுத‌ல் ம‌ட்டும‌ல்ல‌, அன்னாருக்குப்பின் அறிவால் காணுத‌லையும் குறிக்கும்.

அது போல் நீங்க‌ள் பிறை க‌ண்டு நோன்பை பிடியுங்க‌ள், விடுங்க‌ள் என்ப‌தில் உள்ள‌ நீங்க‌ள் என்ப‌து ம‌தினாவாசிக‌ளையும் குறிக்கும் முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளையும் குறிக்கும். அந்த‌ வ‌கையில் முழு முஸ்லிம்க‌ளில் ந‌ம்பிக்கைக்குரிய‌ ஒருவ‌ர் பிறை க‌ண்டு அது உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுமாயின் முழு முஸ்லிம்க‌ளுக்கும் அந்த‌ செய்தி கிடைக்குமாயின் அத‌னை ஏற்ப‌து முழு உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின‌தும் க‌ட‌மையான‌தாகும்.
இவ்வாறு உறுதிப்ப‌டுத்த‌லுக்காக‌வே ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையை உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் ஏற்க‌ வேண்டும் என‌ கூறி வ‌ருகிறேன்.

உங்க‌ளில் யார் அம்மாத‌த்தை காண்கிறாரோ அவ‌ர் நோன்பு நோற்க‌ட்டும் என‌ குர்ஆன் கூறுகிற‌து.
இந்த‌ வ‌ச‌ன‌த்தில் யார் என்ற‌ சொல் வ‌ருவ‌தால் எல்லோராலும் மாதத்தை காண‌ முடியாத‌ல்ல‌வா அத‌னால் சில‌ர் மாத‌த்தை அடைவ‌ர் சில‌ர் அடைய‌ மாட்டார்க‌ள் அல்ல‌வா என‌ சில‌ர் கூறி நாட்டுக்கு நாடு பிறை பார்க்க‌ வேண்டும் என‌ சொல்கின்ற‌ன‌ர்.

இதை ம‌ட்டும் வைத்துக்கொண்டு பிறை விட‌ய‌த்தை பார்ப்ப‌து த‌வ‌று. இதை ம‌ட்டும் வைத்து பார்த்தால் இதில் பிறை க‌ண்டு நோன்பு பிடிக்க‌கூட‌ ஆதார‌மில்லை. யாருக்கு ர‌ம‌ழான் மாத‌ம் என‌ தெரிய‌ வ‌ருகிற‌தோ அவ‌ர் நோன்பு பிடிக்க‌லாம். உதார‌ண‌மாக‌ க‌ல‌ண்ட‌ர் ப‌டி நாளை ர‌ம‌ழான் மாத‌ம் என‌ க‌ண்டால் அவ‌ர் நோன்பு பிடிக்க‌லாம் என்றே சொல்ல‌ வேண்டி வ‌ரும். உண்மையில் அப்ப‌டிய‌ல்ல‌.

இங்கு வ‌ரும் "யார்" என்ப‌தை புரிந்து கொள்ள‌  இன்னொரு ஹ‌தீதை பார்த்தால் புரியும்.
உங்க‌ளில் யார் முர‌ண்பாடான‌ ஒன்றை காண்கிறாரோ அவ‌ர் அத‌னை த‌ன் கையால் த‌டுக்க‌ட்டும் என‌ ந‌பி (ச‌ல்) சொன்னார்க‌ள்.
இங்கு யார் என்ப‌து ஒரு சில‌ருக்கு ம‌ட்டுமா அல்ல‌து முழு முஸ்லிம்க‌ளுக்குமா?
முழு முஸ்லிம்க‌ளுக்கும்தான் இந்த‌ ச‌ட்ட‌ம்.
அதாவ‌து முர‌ண்பாடான‌ விச‌ய‌ம் ஒன்றை சில‌ர் க‌ண்டால் அவ‌ர்க‌ள் அத‌னை த‌டுக்க‌ வேண்டும். மொத்த‌ ச‌மூக‌மும் அப்ப‌டி ஒன்றை க‌ண்டால் மொத்த‌ ச‌மூக‌மும் த‌டுக்க‌ முணைய‌ வேண்டும் என்ப‌தையே இந்த‌ ஹ‌தீத் விள‌க்குகிற‌து.

இத‌ன் ப‌டி நோன்பு மாத‌த்தை அடைவ‌து அல்ல‌து காண்ப‌து தொழில் நுட்ப‌ கால‌த்துக்கு முன் எல்லோராலும் முடிய‌வில்லை. அத‌னால் யாரெல்லாம் அம்மாத‌த்தை க‌ண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நோன்பு பிடிக்க‌லாம் என்ப‌தையும் இன்றைய‌ கால‌த்தில் ஒரே நாளில் பிறை க‌ண்ட‌தான‌ அறிவித்த‌ல் மூல‌ம் முழு உல‌கும் ர‌ம‌ழான் மாத‌த்தை அடைந்து விடும் என்ப‌தால் முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளும் ஒரே நாளில் நோன்பு பிடிக்க‌ வேண்டும் என்ப‌தை இந்த‌ வ‌ச‌ன‌ம் காட்டுகிற‌து.

ர‌ம‌ழானை அடைத‌ல் என்ப‌தும் சில‌ர் முந்தியும் சில‌ர் பிந்தியும் அடைவ‌ர். உதார‌ண‌மாக‌ ம‌க்கா அறிவிப்பின் பிர‌கார‌ம் இன்று நோன்பு என்றால் ம‌க்காவின் அறிவிப்பு ம‌க்கா நேர‌த்தின் ப‌டி மாலை 6.30க்கு பின் வெளியாகும். அந்த‌ நேர‌த்தில் அவுஸ்திரேலியாவில் இர‌வு சுமார் 12 ம‌ணி இருக்கும். அத‌ன் ப‌டி ம‌க்காவுக்கு 6 ம‌ணி நேர‌த்துக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் ர‌ம‌ழானை அடைந்து விடுகிறார்க‌ள்.
அங்கு நோன்பு நோற்று விடிந்த‌ பின்ன‌ரே இல‌ங்கையில் நோன்பை அடைவ‌ர். ம‌க்காவில் இல‌ங்கையை விட‌ 3 ம‌ணி நேர‌ம் பிந்தி ர‌ம‌ழான் நோன்பை அடைவ‌ர்.
பிறை மாலையில் தென்ப‌ட்டாலும் நாள் ஆர‌ம்பிப்ப‌து ப‌ஜ்ருக்கு பின்ன‌ராகும்.


தொழுகை, பிறை போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் இஸ்லாம் பார‌ம்ப‌ரிய‌ முறை, அறிவிய‌ல் என்ற‌ இரு வ‌கையையும் இணைத்தே ந‌டைமுறைப்ப‌டுத்த‌ அனும‌தித்துள்ள‌து.

தொழுகைக்கான‌ நேர‌த்தை எப்ப‌டி க‌ணிக்கிறோம்?
தொழுகைக்கான‌ நேர‌த்தை சூரிய‌னை வைத்து ந‌பிய‌வ‌ர்கள் சொல்லித்த‌ந்தார்கள். ப‌ஜ்ர் (சுப‌ஹ்)நேர‌த்தொழுகை என்ப‌து கிழ‌க்கு வானில் அதிகாலையின் வெண்மை தோன்றினால் ப‌ஜ்ருடைய‌ நேர‌மாகும். இதையே பார‌ம்ப‌ரிய‌மாக‌ முஸ்லிம்க‌ள் செய்து வ‌ந்தார்க‌ள்.

அந்நாளில் க‌டிகார‌ம் இல்லை என்ப‌தால் வான‌த்தை பார்த்தே நேர‌த்தை க‌ணித்தார்க‌ள்.  பின்ன‌ர் க‌டிகார‌ம் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌தும் வான‌விய‌ல் அறிவை ப‌ய‌ன்ப‌டுத்தி இந்த‌ நேர‌த்துக்கு ப‌ஜ்ருடைய‌ நேர‌ம் என‌ எழுதி வைத்து அத‌ன் பின் க‌டிகார‌த்தை பார்த்து பாங்கு சொல்கின்ற‌ன‌ர்.
இப்போது யாரும் ந‌பிய‌வ‌ர்க‌ள் வான‌த்தை, சூரிய‌னை  பார்த்தே தொழுகையின் நேர‌த்தை பார்க்க‌ வேண்டும் என‌ சொல்கிறார்க‌ளா ? இல்லை. இப்போது அப்ப‌டி சொல்ப‌வ‌னை கிறுக்க‌ன் என்ப‌ர். அந்த‌ள‌வுக்கு அறிவிய‌ல் ம‌ட்டும் ந‌ம்பிக்கையாக‌ மாறியுள்ள‌து.

இன்றைய‌, நாளைய‌ தொழுகையின் நேர‌ங்க‌ளையும் ந‌ம் முன்னோர் சுமார் 100 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே எழுதி வைத்து விட்ட‌ன‌ர்.

இவ்வாறு தொழுகை நேர‌ விட‌ய‌த்தில் முழுக்க‌ முழுக்க‌ அறிவிய‌லுக்கு இட‌ம் த‌ரும் நாம், அதே சூரிய‌னை அது உதித்து அரை ம‌ணி நேர‌த்தின் பின்பு பின் தொட‌ரும் ச‌ந்திர‌னை வைத்த‌ அறிவிய‌லை முற்றாக‌ ம‌றுக்கிறோம். இது ம‌ட‌மை த‌விர‌ வேறு இல்லை.
உண்மையில் இன்னும் 10 வ‌ருட‌ங்க‌ளின் பின் எந்த‌ நாளில் பௌர்ண‌மி வ‌ரும் என‌ இப்போதே எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தோ அதே போல் எந்த‌ நாளில் எப்போது பிறை உதிக்கும் என்ப‌தும் இப்போதே எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆனாலும் இது விட‌ய‌த்தில் அறிவிய‌லை ம‌ட்டும் பின்ப‌ற்றும் அள‌வு முஸ்லிம் உல‌க‌ம் இன்ன‌மும் தெளிவ‌டைய‌வில்லை என்ப‌தாலும் இந்த‌ தெளிவை நோக்கிய‌ ப‌ய‌ண‌த்துக்காக‌வும் உல‌க‌ம் முழுவ‌த‌ற்கும் பிறை ஒன்றுதான் என்ப‌தை புரிய‌ வைத்து உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் பிறை விட‌ய‌த்தில் ஒரே நாளில் நோன்பு, பெருநாள், ஹ‌ஜ் போன்ற‌வ‌ற்றை எடுக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ முஸ்லிம்க‌ளின் த‌லைந‌க‌ராக‌ இறைவ‌னால் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட ம‌க்காவின் பிறையை நாம் பின்ப‌ற்றுகிறோம்.
- முபாற‌க் மௌல‌வி.

அது ம‌ட்டும‌ல்ல‌ யார் அம்மாத‌த்தை காண்கிறாரோ அதாவ‌து யார் பிறையை காண்கிறாரோ அவ‌ர் ம‌ட்டும்தான் நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் சொல்கிற‌து.
உதார‌ண‌மாக‌ இல‌ங்கையில் கிண்ணியாவில் இருவ‌ர் பிறை க‌ண்டால் அந்த‌ இருவ‌ர் ம‌ட்டுமே நோன்பு பிடிக்க‌ வேண்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பிடிக்க‌ முடியாது. கார‌ண‌ம்  மற்ற‌வ‌ர்க‌ள் அம்மாத‌த்தை அதாவ‌து பிறையை காண‌வில்லை என்ப‌தும் இந்த‌ வ‌ச‌ன‌த்தில் தெரிவ‌தால் அவ்வாறுதான் அத‌ன் பொருள் என‌  ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டுமா ? இல்லை. அப்போது சொல்வீர்க‌ள் ஓரிருவ‌ர் பிறை க‌ண்டாலும் முழு நாட்டுக்கும்தான் என்று. அது போல் உல‌கில் ஓரிருவ‌ர் பிறை க‌ண்டாலும் முழு முஸ்லிம்க‌ளுக்கும்தான் என்ப‌தை இந்த‌ வ‌ச‌ன‌ம் சொல்கிற‌து.

ஒவ்வொரு ஊரில் உள்ளோரும், ஒவ்வொரு நாட்டில் உள்ளோரும் பிறை க‌ண்டுதான் நோன்பு பிடிக்க‌ வேண்டும் என‌ குர்ஆனிலோ ஹ‌தீதிலோ சொல்ல‌ப்ப‌ட‌வில்லை.

ஒரு வ‌ச‌ன‌த்தை அல்ல‌து ஹ‌தீதை ம‌ட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ கூடாது. அது ச‌ம்ப‌ந்த‌மான‌ ஏனைய‌ ஹ‌தீதையும் பார்க்க‌ வேண்டும்.
ந‌பிய‌வ‌ர்க‌ள் ம‌தீனாவுக்கு வெளியே உள்ள‌ குப்ர் நாட்டில் க‌ண்ட‌ பிறையை அதுவும் ஒரு இர‌வு ஒரு ப‌க‌ல் தூர‌ம் கொண்ட‌ இட‌த்தில் இருந்து பிறை க‌ண்ட‌ த‌க‌வ‌லை ஏற்று நோன்பை விட‌ செய்துள்ளார்க‌ள்.

ஒரு விச‌ய‌த்தை நாம் ம‌ன‌தில் ஆழ‌மாக‌ ப‌திய‌ வைக்க‌ வேண்டும். ர‌சூலுள்ளாஹ் (ச‌ல்) சாதார‌ண‌ ம‌னித‌ர் அல்ல‌; இறைவ‌னின் வ‌ஹி மூல‌ம் பேசுப‌வ‌ர். அத‌னால் ந‌பியின் ஒவ்வொரு வார்த்தையும் அன்றைய‌ கால‌த்துக்கும் பொருந்தும் இன்றைய‌ கால‌த்துக்கும் பொருந்தும். இது இந்த‌ கால‌த்துக்கு பொருந்தாது என‌ சொல்ப‌வ‌ன் உண்மையான‌ முஸ்லிமாக‌ இருக்க‌ மாட்டான்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

பிறை விடயத்தில் பீஜேயின் கருத்து உண்மைக்கு மாற்றமானது.
பிறையை கண்ணால் காண முடியாது என வானியல் கூறுவதை ஏற்று பிறை கண்ட சாட்சிகளை மறுக்க  முடியுமாயின் பிறையை கண்ணால் காண முடியும் என வானியல் கூறினால் அதனை மட்டும் மறுத்து பிறையை கண்ணால் காண வேண்டும் என கூறுவது முரண்பட்ட கருத்தாகும். இந்த கருத்து பீஜேயின் சொந்த கருத்தே தவிர குர்ஆன் ஹதீத் ஆதாரம் இல்லை.

வானியல் கூறுவது நூறு வீதம் உண்மையாயின் அதை அப்படியே ஏற்கலாமே. பிறையை கண்ணால் கண்டுதான் நோன்பை தீர்மாணிக்க வேண்டும் என நபிகளார் கூறவில்லை. மாறாக பிறையை கண்டு பிடியுங்கள் என்றுதான் கூறியுள்ளார்கள். கண்ணால் என்பது தமிழில் வரும் இடைச்சொருகல். அறபியில் பிலஅய்ன். கண்ணால் என வரவில்லை. பி ருஃயத்திஹி என்றுதான் வந்துள்ளது. அதாவது காண்பது கொண்டு என்பதாகும். காணுதல் என்பது கண்களால் காணுவதை மட்டுமல்ல கருவியினால் காண்பதையும் குறிக்கும். அலம் தர கய்ப பஅல ரப்புக்க என இறைவன் கேட்கிறான். அதாவது யானைப்படைளை உமதிறைவன் என்ன செய்தான் என்பதை நீர் காணவில்லையா? என கேட்கிறான். இங்கு நபியவர்கள் யானைப்படைக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்ணால் கண்டார்களா? இல்லை. குர்ஆன் மூலம் காண்கிறார்கள். ஆக பிறை தென்படும் என்பதை வானியல் கருவி மூலம் சொல்லப்படடால் அதனை ஏற்க முடியும். அதே போல் பிறை உலகம் முழுவதும் ஒரே நாளில்தான் உதிக்கும். அப்பொழுது சில  நாடுகளில்; பகலாகவோ, இரவாகவோ இருக்கலாம் ஆனாலும் நாள் ஒன்றுதான்.
இன்னும் 200 வருடத்தில் வரும் சந்திர கிரகணம் பற்றி வானியல் கூறியுள்ளது போல் இன்னும் 200 வருடங்களில் வரும் நோன்பு எப்போது ஆரம்பிக்கிறது என்பதை மக்காவில் உள்ள உம்முல்குறா கலண்டர் கூறுகிறது. இதை ஏன் முஸ்லிம்களால் ஏற்க முடியாதுள்ளது? இந்தக்கலண்டர் நபியவர்கள் காலத்தில் உருவாக்கப்படவில்லை. மாறாக அவர்களுக்குப்பின் வானியல் அறிவு வளர்ந்த பின் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் படி மக்கா பிறையை ஏற்போமானால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
அந்த ஹதீதில் தகவலை சொன்னவர்களை நோன்பை விட சொல்லவில்லை. பஅமரன்னாச என்றுள்ளது. இங்கு மக்களுக்கு ஏவினார்கள் என்றுள்ளது. இதற்கு சிலர் பிரயாண குழுவுக்கு என்கிறார்கள் சிலர் மதீனாவாசிகளை என்கிறார்கள். ஆக இன்னாரை என நேரடியாக சொல்லவில்லை. இரண்டுக்கும் இடம்பாடுள்ளது. எனினும் இந்த நிலையில் பிறை காணப்பட்டதாக சொன்னவர்களை நோக்கி நோன்பை விடுங்கள் எனக்கூறிய நபியவர்கள் பிறை காணப்பட்டதை ஏற்றுக் கொண்ட நபியவர்கள் மதீனா மக்களை மட்டும் நோன்பில் வைத்திருப்பார்களா? இல்லை. ஆக அனைவரையுமே நோன்பை விடச்சொல்லியிருக்க வேண்டும். அத்துடன் வந்த பிரயாணக்குழு முஸ்லிம்கள். ஆகவே அவர்கள் பிறையை கண்ட பின்னும் நோன்பு பிடித்திருப்பார்கள் என எண்ணுவது அவர்களது இஸ்லாமிய அறிவை தாழ்த்துவதாகும். பிறை கண்ட பின் நோன்பு பிடிக்கக்கூடாது என்பதை தெரியாதவர்களா அவர்கள்? ஏன் சஹாபாக்களை இத்தனை மட்டமாக நாம் நினைக்கிறோம்.


சுருக்கமாக சொல்லப்போனால் முஸ்லிம் உலகம் பிறை விடயத்தில் முற்காலங்கள் போல் ஒன்றில் வானியலை முற்றாக நிராகரித்து பிறையை காண்பதற்கு வரவேண்டும், அல்லது பிறையை கண்ணால் காண்பது என்பதை மறுத்து வானியலை ஏற்க வேண்டும். பிறை தெரியாது என்பதில் வானியலை நம்புவதும், பிறை தெரியும் என்பதில் வானியலை மறுப்பதும்; முரண்பட்ட நிலையாகும்.

ஹஜ்ஜுடைய பிறையை எவ்வாறு தீர்மானித்தார்கள்?
ஹஜ்ஜூடைய கிரியைகளை மக்கா அல்லது மதீனா பிறையை வைத்தே அன்றைய முஸ்லிம்கள் தீர்மானித்தனர். அதாவது ஷாம் தேச ஹாஜிகள் துல்ஹஜ் 1ம் திகதிக்குரிய பிறையை தமது பகுதியில் காணும் பிறையை வைத்து ஹஜ்ஜுக்கு சென்றாலும் மக்காவை அடைந்த பின் அங்கு எந்த நாளில் அரபா தினம் அறிவிக்கப்பட்டுள்ளதோ அந்த தினத்தையே தமது அரபா தினமாக கொண்டிருப்பார்கள் என்பதை இலகுவாக ஊகிக்கலாம். அதாவது எத்தினம் அரபா தினம் என அவர்கள் நினைத்துக்கொண்டு பயணம் வைத்தார்களோ அத்தினம் அல்லது அதற்கு முந்தைய அல்லது பிந்திய தினத்தில் அவர்கள் அரபா நாளாக ஏற்றிருக்கிறார்கள்.
உதாரணமாக ஷாம் தேசத்தில் துல்ஹஜ் பிறையைக் கண்டதற்கமைய அரபா தினமான துல்ஹஜ் 9ம் திகதி என்பது திங்கட்கிழமை என நினைத்து ஷாம் பகுதி ஹாஜிகள் மக்கா சென்றடைந்த போது, மக்காவில் காணப்பட்ட பிறையின் பிரகாரம் அங்கு ஞாயிற்றுக் கிழமையே அரபா தினமாக தீர்மானிக்கப்பட்டிருந்தால் எமது நாட்டில் தென்பட்ட பிறையின் படியே நாங்கள் திங்கள் கிழமைதான் அரபாவுக்கு செல்வோம் என பிடிவாதம் பிடித்திருக்க முடியாது. அதேநேரம் ஷாம் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், மக்காவில் ஞாயிற்றுக்கிழமை அரபாவாக இருந்தும் திங்கட்கிழமையே அரபா நோன்பை நோற்றிருப்பர். காரணம் எப்போது அரபா நாள் இருந்தது என்பதை ஷாம் தேசத்து ஹாஜிகள் திரும்பி தமது நாட்டுக்கு வந்து சொன்ன பின்னரே அம்மக்கள் தெரியக்கூடிய சூழலே அன்றிருந்தது. இதற்காக அம்மக்கள் மீது எவரும் குறை காண முடியாது. அன்றைய சூழலில் நபிகளாரின் மேற்படி ஹதீஸ் அம்மக்களுக்கும் ஏற்ற வகையில் பொருந்தக் கூடியதாகவே இருந்தது என்பதுதான் இங்கு மிகக்கவனமாக உணரப்பட வேண்டிய விடயம். இதே நிலைதான் மதீனத்து ஹாஜிகள், எகிப்து மற்றும் இலங்கை என அனைத்து ஹாஜிகளின் நடைமுறையும் இருந்தது.
எனவே மக்காவில் அறபா நாள் எப்போது என்பதை ஒருவர் தமது நாட்டுக்கு அறிவிப்பதாயின் அச்செய்தி பல நாட்கள் தாண்டிய பின்னரே, சில வேளை அரபா தினம் முடிந்த பின்னரே ஏனைய நாடுகளை அடையும் என்பதால் அந்தந்த தேசத்து மக்கள் தமது நாடுகளில் காணப்படும் பிறையை வைத்து அரபா, மற்றும் ஹஜ் பெருநாளை தீர்மானித்துள்ளார்கள். இதில் எத்தகைய தவறையும் நாம் காண முடியாது. ஆகவே நபிகளாரின் பிறை பற்றிய கருத்து அந்தக் காலத்து மக்களின் சூழலுக்கேற்ப அவர்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பதே சரியானது. அதே கருத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதே நமது கருத்தாகும். அதாவது பிறையை கண்டு பிடியங்கள் என்பது இன்றைய சூழலில் ஒரு சிறிய பகுதி மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக கருதாமல் முழு உலக முஸ்லிம்களுக்கும் உலகில் காணும் ஒரு பிறையை வைத்து நோன்பு பிடியுங்கள் என்றே நாம் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது பிறை காணப்பட்ட செய்தியை ஒரு இரவுக்குள் எவ்வளவு தூரம் இந்நாளில் அறிவிக்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் ஒரே பிறையை வைத்து நோன்பு பிடிக்கலாம், விடலாம், அரபா நாளை எடுக்கலாம், ஹஜ் கொண்டாடலாம்.
இவ்வாறு கூறும்போது சூழலுக்கேற்ப இஸ்லாத்தின் சட்டங்கள் மாறுபடுமா என சிலர் கேட்கலாம். நிச்சயம் மாறுபடத்தான் செய்யும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தொழுகை நேரங்களைக் குறிப்பிடலாம். தொழுகையின் நேரங்களை சூரியனை வைத்தே கணிக்கும்படி நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அவ்வாறுதான் சஹாபாக்களும், பின் வந்தோரும் நடைமுறைப்படுத்தினர். அவர்கள் எழுதப்படிக்காத சமூகம் என்பதால் அவர்களுக்க விளங்கம் வகையில் நபியவர்கள் இதனை கற்றுத்தந்தார்கள். இன்றைய காலத்தில் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு தொழுகைக்கு நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடிகாரத்தை பார்த்து நேரத்தை கணிக்கும்படி, தொழும்படி ஹதீதில் இல்லை எனக் கூறி ஒருவர் நான் சூரியனைத்தான் பார்க்கப் போகிறேன் எனக் கூறிக்கொண்டிருக்க முடியுமா? இல்லை. மாறாக நேரமாகிவிட்டது என்பதை மனிதனின் நவீன கண்டு பிடிப்பான கடிகார கருவியின் மூலம் அறிந்து தொழுகிறோம். இது இன்றைய நவீன சூழலுக்கேற்ப மாற்றம் பெற்றுள்ளதையே நமக்குக்காட்டுகிறது. இவ்வாறு கடிகாரத்தை பார்த்து தொழுகையின் நேரத்தை கணிப்பது நபிவழிக்கு முரண் என எவரும் கூற முடியாது. ஆக இன்றைய சூழலுக்கேற்ப இச்சட்டம் மாறி சூரியன் கண்களுக்கு தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி கடிகாரத்தைப் பார்த்து நாம் தொழுகையின் நேரத்தை கணிக்கின்றோம்.
அதேபோல ஹஜ்ஜூக்கு செல்பவர்கள் உதாரணமாக இந்திய இலங்கை ஹாஜிகள் யலம்லம் என்ற இடத்திற்கு வந்தே இஹ்ராமுக்குரிய நிய்யத்தை வைக்க வேண்டும். இதனை அன்றைய மக்கள் அனைவரும் அவ்வாறே நடைமுறைப்படுத்தினார்கள். பின்னர் விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்த விமானம் யலம்லம் எனும் இடத்தில் தரையிறக்கப்படுவதில்லை. மாறாக அப்பிரதேசத்தால் வானில் பறக்கும் போதே கீழே இறங்காமல் நிய்யத் வைத்துக் கொள்கிறார்கள். இங்கு சூழலுக்கேற்ப சட்டமும் மாறுபடுகின்றது.  இல்லையில்லை யலம்லம்மில் இறங்கத்தான் வேண்டும் எவரும் விவாதிப்பதில்லை. இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம். ஆக, சில சட்டங்கள் சில சூழலுக்கேற்ப மாறுகின்றன என்பது உண்மையானதாகும். அத்துடன் நபியவர்கள் பிறை காணும் விடயத்தில் அது  எந்த எல்லைக்குரியது என கூறாமல் பொதுவாக சொல்லியிருப்பதையும் நாம் அவதாணிக்க வேண்டும். இதன்படி பிறையை உலகில் எங்கு காணப்பட்டாலும்  அது பற்றிய தகவல்கள் உடனடியாக உறுதிப்படுத்தப்படுமாயின் அதனை வைத்து நாம் மாதங்களை கணிக்க முடியும். ஆனாலும் உலகளாவிய முஸ்லிம்களின் தலைமையகமாக மக்கா மதீனா உள்ளதால் ஒரு தலைiமையின் கீழ் முஸ்லிம்கள் இயங்க வேண்டும் என்பதால் மக்கா மதீனா பிறையை வைத்து  மாதங்கள் மற்றும் நோன்பு, ஹஜ், அரபா, பெருநாள் போன்றவற்றை நாம் தீர்மாணித்துக்கொள்வதற்கு நபியவர்களின் ஹதீதில் நமக்கு தெளிவு கிடைக்கிறது.
பிறையைக் கண்ணால்தான் காண வேண்டுமா?
பிறையைக் கண்டு பிடியுங்கள் என நபியவர்கள் கூறியிருந்தாலும் கண்களால்தான் காண வேண்டும் என நேரடியாக சொன்னதாக ஹதீதுகள் இல்லை. காணுதல் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ருஃயத்திஹி’ என்ற சொல்லை பாவித்துள்ளார்கள். ருஃயா என்பதற்கு காணுதல் என்று பொருளாகும். இது கண்களால் காணுதல் என்ற பொருளுடன் கண்கள் அல்லாமல் மனதால் காணுதல், அறிவால் காணுதல் போன்ற பொருள்களையும் தரும்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடத்தில் கூறும் போது ‘இன்னீ அரா பில் மனாமி’ அதாவது உம்மை அறுப்பதாக நான் கனவில் காண்கிறேன்…’ எனக் கூறினார்கள். இங்கும் ருஃயா என்ற சொற்பதத்தின் வினையே பாவிக்கப்பட்டுள்ளது. கனவில் யாரும் கண்களால் காண்பதில்லை. மனதாலேயே காண்கிறார். இதனையும் காணுதல் என்றே கூறுகிறோம்.
இதேபோல் அறிவால் காண்பது, உணர்வால் காண்பதற்கும் ருஃயா - காணுதல் என்ற சொல் குர்ஆனிலும், ஹதீதிலும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்குதான் இது விடயத்தில் இஸ்லாத்தின் நுட்பமான அற்புதத்தை நாம் காண்கிறோம். அதாவது கண்களால் பிறையைப் பார்க்கும் படி நபியவர்கள் சொல்லாமல் கண்களால் காண்பதையும் குறிக்கக் கூடிய பொதுச் சொல் ஒன்றை பயன்படுத்தியுள்ளதன் மூலமாக பிறையை கண்களால் கண்டும் நோன்பு, ஹஜ் என்பவற்றை தீர்மானிக்க முடியும் என்பதையும் எங்காவது மனிதர்களால் பிறை காணப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை காண்பதை வைத்தும் தீர்மானிக்க முடியும் என்ற கருத்தையும் பொதிந்து நிற்பதை காண்கிறோம். இத்தகைய காணுதல் என்பது தொலைக்காட்சி செய்திகள் மூலம்  காணுதல் அல்லது செல்பேசிகளில் காணுதல் அல்லது இணையத்தளம் மூலமாக காணுதல் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
எனவே, நபியவர்கள் பிறையை கண்களால் காணுங்கள் என கூறவில்லை. அதாவது கண்களால் என்ற வார்த்தையை பிரயோகிக்கவில்லை. மாறாக பல பொருள் கொண்ட காணுதல் என்ற வாரத்தையையே பாவித்துள்ளார்கள் என்பதால் மக்கா பிறையை நாமும் இங்கு தொழில்நுட்ப கருவிகள் மூலம் உறுதிப்படுத்தி காண முடியுமாயின் அதனை நாமும் ஏற்கலாம் என்பதை புரிகின்றோம்.
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? பிறையை கண்டுபிடியுங்கள், விடுங்கள் என்பது நவீன சாதனங்கள் காணப்படாத காலத்தில் பகுதிக்கு பகுதி, தேசத்துக்கு தேசம் வாழும் மக்கள் அந்தந்த தேசங்களில் காணப்படும் பிறையை கண்டு தீர்மானிக்க வேண்டும் என்பதையும் நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் ஒரு கிராமமாக உள்ள இன்றைய சூழ்நிலையில் ஓர் இடத்து பிறை சகல தேசங்களுக்கும் பொருந்தும் என்பதையும் அதிலும் மக்கா பிறையை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது உலகளாவிய முஸ்லிம்களின் அரசியல் சாசனத்துக்கு ஏற்றதாக அமையும் என்பதையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்கிறோம்.


ஒரு பிறை தான் எதார்த்தம்👍🏼
சவூதியில் அதே பிறை சீனாவிலும் அதே பிறை
இலங்கையிலும் அதே பிறை.. நியாயம் தான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 1907.)
இந்த ஆதாரப்பூர்மான ஹதீஸை பற்றிய உங்கள் கருது கோள் யாது?
நீங்கள் உங்கள் என வரும் இந்த மேற்கோள் ஹதீஸ் பிறையை கண்டு பிடிக்கவும் பிறையை கண்டு விடவும் எத்தனிக்கிறது.
அதே போல் மார்க்கம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படவல்லவா சொல்கிறது?
நாம் இருப்பது சவுதி அரேபியாவின் தலைமைத்துவத்தின் கீழோ இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு கீழோ அல்லவே..
நாம் இருப்பது இலங்கை நாட்டின் முஸ்லீம் கலாசார தலைமைத்துவத்தின் கீழ்..
அண்டை வீட்டாரின் தலைவர் எங்களுக்கு ஓர் வேலையை செய்ய எத்தனித்தால் எம் வீட்டு தலைவர்(தந்தை)அதை செய்ய வேண்டாமென்றால் நாம் எதற்கு கட்டுப்படுவோம்..
தந்தைக்கா?
அல்லது அண்டை வீட்டருக்கா?
எதார்தத்தையும் நிதர்சனத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்..

என‌ ஒருவ‌ர் கூறியுள்ளார். உல‌குக்கு ஒரு பிறைதான் என்ப‌தை இவ‌ர் ஏற்றுக்கொண்ட‌மை ந‌ல்ல‌ விட‌ய‌ம். ஆனால் த‌லைமைத்துவ‌த்துக்கு க‌ட்டுப்ப‌ட‌ வேண்டும் என‌வும் முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌த்துக்கு க‌ட்டுப்ப‌ட‌ வேண்டும் என‌வும் சொல்வ‌த‌ன் மூல‌ம் இவ‌ருக்கு இஸ்லாம் த‌லைமைத்துவ‌ம் ப‌ற்றி சொல்லியுள்ள‌வை புரிய‌வில்லை.

எந்த‌த்த‌லைமைத்துவ‌மாக‌ இருந்தாலும் ச‌ரி, சொந்த‌ த‌ந்தையாக‌ இருந்தாலும் ச‌ரி இஸ்லாத்துக்கு மாற்ற‌மாக‌ க‌ட்ட‌ளையிட்டால் அத‌ற்கு நாம் ப‌ணிய‌ முடியாது என்ப‌தை ந‌பிய‌வ‌ர்க‌ள் மிக‌ தெளிவாக‌ சொல்லிவிட்டார்க‌ள்.
لا طاعة للمخلوق في معصية الخالق
 ப‌டைத்த‌வ‌னுக்கு பாவ‌ம் செய்வ‌தில் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌வ‌னுக்கு ப‌ணிய‌ முடியாது என்ப‌த‌ன் மூல‌ம் மிக‌ தெளிவாக‌ இத‌னை புரிகிறோம்.

மார்க்க‌ விட‌ய‌ விட‌ய‌ங்க‌ளில் ந‌ம‌க்கான‌ த‌லைமைத்துவ‌ம் யார்?
முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌ம் என்ப‌து அர‌சாங்க‌த்தின் ஒரு ப‌குதியே த‌விர‌ சுய‌மாக‌ இய‌ங்கும் ஒன்ற‌ல்ல‌. இந்நிறுவ‌ன‌ம் அர‌சின்  நிக‌ழ்ச்சிநிர‌லுக்கு மாற்ற‌மாக‌ செயற்ப‌டாது.

முஸ்லிம்க‌ளுக்கான‌ த‌லைமைத்துவ‌ம் என்ப‌து அர‌சிய‌ல் அதிகார‌மும் மார்க்க‌ அறிவும் உள்ள‌ த‌லைமைத்துவ‌மாகும்.  அத்த‌கைய‌ த‌லைமைத்துவ‌ம் ஒன்றை முஸ்லிம்க‌ள் உருவாக்க‌வில்லை.

அதே போல் ச‌வூதியை, ஈரானை முஸ்லிம்க‌ளின் த‌லைமைத்துவ‌ம் என‌ நாம் சொல்ல‌வில்லை. ஆனாலும் உண்மையான‌, ந‌ம‌க்கான‌ த‌லைமைத்துவ‌ம் முஹ‌ம்ம‌து நபி (ச‌ல்) அவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள் ஆட்சி செய்த‌ ம‌க்கா, ம‌தீனாவுமாகும்.

ம‌க்காவை உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமை என்ப‌தை இறைவ‌ன் குர்ஆனில் ந‌ம‌க்கு சொல்கிறான்.

அத்துட‌ன் பிறை பிர‌ச்சினைக்கும் ம‌க்காவுக்கும் நேர‌டி தொட‌ர்பு உள்ள‌து. பிறையை வைத்தே ஹ‌ஜ் கிரியைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

அது ம‌ட்டும‌ல்லாது உல‌கின் ப‌ல‌ முஸ்லிம் நாடுக‌ளால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌துதான் ம‌க்காவின் உம்முல் குரா க‌ல‌ண்ட‌ராகும்.
இல‌ங்கைக்கு ஒரு பிறைத்திக‌தி, இந்தியாவுக்கு ஒரு திக‌தி, ச‌வூதிக்கு ஒரு திக‌தி என்ப‌தெல்லாம் கேலிக்கூத்தாகும்.

என‌வேதான் சொல்கிறோம் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமைத்துவ‌மான‌ ம‌க்காவில் என்ன‌ பிறை திக‌தி அமுல்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தோ அத‌னை உல‌க‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் ஏற்போம்.

நீங்க‌ள் பிறையை காண்ப‌த‌ன் மூல‌ம் நோன்பை பிடியுங்க‌ள் என‌ ந‌பி (ச‌ல்) சொன்னார்க‌ள்.
இங்கு "நீங்க‌ள்" என்ப‌து ம‌தீனாவாசிக‌ளை ம‌ட்டும் குறிக்கிற‌து என்றால் ஊருக்கு ஒரு பிறை பார்க்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ சொல்ல‌ முடியும்.
ஆனால் வ‌ஹி கொண்டு பேசும் ந‌பிய‌வ‌ர்க‌ள் ம‌தீனாவாசிக‌ளே. என‌ அழைக்காம‌ல் பொதுவாக‌ நீங்க‌ள் என‌ சொன்ன‌து உல‌க‌ளாவிய‌ முழு முஸ்லிம்க‌ளையும் விழித்துத்தான். அந்த‌ வ‌கையில் பிறை க‌ண்ட‌தாக‌ உல‌கில் முஸ்லிம்க‌ளால் உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல் கிடைத்தால் அத‌னை ஏற்று உல‌க‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தையே ந‌பிய‌வ‌ர்க‌ளின் இந்த‌ ஹ‌தீத் ந‌ம‌க்கு சொல்கிற‌து. வெளிநாட்டு த‌க‌வ‌ல்க‌ளில் இஸ்லாமிய‌ எதிர்ப்பு ச‌க்திக‌ளில் குழ‌ப்ப‌டுத்தை ஏற்ப‌டுத்தும் என்ப‌தாலும் ம‌க்காவை உல‌க‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமையாக‌ இறைவ‌ன் அறிவித்திருப்ப‌தாலும் ம‌க்கா பிறை ந‌டைமுறையை ஏற்ப‌தே ந‌பிய‌வ‌ர்க‌ளின் ஹ‌தீதை ந‌டைமுறைப்ப‌டுத்துவ‌தாக‌ அமையும்.
-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
1984. அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் ”பனூ நக்லா” எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், ”அது மூன்றாவது பிறை” என்று கூறினர். வேறுசிலர், ” அது இரண்டாவது பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, ”நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் ”அது மூன்றாவது பிறை” என்றனர். வேறுசிலர் ”அது இரண்டாவது பிறை” என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ”எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, ”இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்” என்று பதிலளித்தோம். அப்போது, ”பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்
இந்த‌ ஹ‌தீத் மூல‌ம் தெரிவ‌தாவ‌து ஒரேயொரு குழு ஒரு பிறையை க‌ண்டால் அது அந்த‌ இர‌வைக்குரிய‌துதான். ஆனால் ஒரு குழு ஒரு நாளும் அடுத்த‌ குழு ம‌றுநாளும் க‌ண்டால் இர‌ண்டும் ஒரு நாள் பிறை அல்ல‌.
அத்துட‌ன் இந்த‌ ஹ‌தீத் மூல‌ம் தெரிவ‌து என்ன‌வென்றால் ச‌ஹாபாக்க‌ள் த‌ம‌து நாடான‌ ம‌தீனாவுக்கு அப்பால் உள்ள‌ குப்ர் நாட்டில் க‌ண்ட‌ பிறையை ஏற்றுக்கொண்டார்க‌ள்.  அது அனைவ‌ர்க்குமான‌ பிறைதான் என்ப‌தையும் இப்னு அப்பாஸ் உறுதிப்ப‌டுத்தினார்க‌ள்.

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஊட‌க‌ங்க‌ளில் என்னை நோக்கி சொல்ல‌ப்ப‌ட்ட‌வைக‌ளை த‌ந்து அத‌ற்குரிய‌ ப‌தில்க‌ளையும் கீழே த‌ருகிறேன்.

ஒரு தேசத்தின் பிறையை இன்னொரு தேசத்துக்கு திணிப்பதற்கு ஹதீதில் ஆதாரமுண்டா?
ஒரு பகுதி பிறையை இன்னொரு பகுதிக்கு நடைமுறை படுத்த முடியாத என சிலர் கூறுகின்றனர். ஒரு பகுதியின்; பிறையை இன்னொரு தூரமான தேசத்துக்கும் திணிக்க முடியும் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை நாம் நபி (ஸல்) வாழ்வில் காண்கிறோம்.
அன்றைய காலத்தில் மதீனா என்பது தனியொரு ஆட்சியைக் கொண்ட தனி நாடாக, தனித் தேசமாக இருந்தது. அங்கு இஸ்லாமிய ஆட்சி நிலவியது. அதேபோல் மதீனாவிலிருந்து சுமார்  நான்கு, ஐந்து நாட்கள் சென்றடையும் தூரமுள்ள மக்கா தனித்தேசமாகவும், தனிநாடாகவும் இருந்தது. அங்கு குப்ரிய்யத்தான ஆட்சி நிலவியது. அத்தகைய ஒரு தேசத்தில் ஹஜ் மாதத்தில் முஸ்லிம்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றினார்கள். மதீனாவிலிருந்து நபியவர்கள் சஹாபாக்களை ஹஜ் செய்வதற்காக மக்கா தேசத்துக்கு அனுப்பினார்கள்.
இங்குதான் பலமான கேள்வி எழுகிறது. அதாவது நபியவர்கள் மக்காவில் எப்போது துல்ஹஜ் பிறை காணப்பட்டது என்ற செய்தியை அறிந்து அதற்கேற்ப ஹாஜிகளை மதீனாவிலிருந்து மக்காவுக்கு அனுப்பினார்களா? அல்லது மதீனாவில் காணப்பட்ட துல்ஹஜ் பிறையை வைத்து சஹாபாக்களை மக்காவுக்கு ஹஜ்ஜூக்கு அனுப்பினார்களா?
மக்கா பிறையை அறிந்து அதனை வைத்தே மதீனத்து ஹாஜிகளை அனுப்பி வைத்தார்கள் என்றால் மக்கா பிறையையே மதீனாவிலும் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் மக்காவில் உள்ள அரபாவில் ஹாஜிகள் ஒன்றுகூடும் தினத்தையே மதீனாவிலும் அரபா தினமாக நபியவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்பதையும் விளங்கிக்கொள்கிறோம்.
அவ்வாறல்ல, மக்காவில் பிறை காணப்பட்ட செய்தியை நபியவர்கள் அறிந்து வரச்சொன்னதாக ஹதீதில் இல்லை என சிலர் சொல்வதை வைத்துப்பார்த்தால்; கூட நபியவர்கள் மதீனா பிறையை வைத்தே மக்காவுக்கான ஹஜ்ஜையும் தீர்மாணித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அவ்வாறாயின் மதீனத்துப்பிறையை நபியவர்கள் இன்னொரு தேசமான மக்காவுக்கும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம். அதாவது மதீனாவில் தென்பட்ட ஹஜ் பிறையை வைத்து அவர்கள் மக்காவுக்கு ஹாஜிகளை அனுப்பி வைத்துள்ளார்களே தவிர மக்காவில், அதன் வெற்றிக்கு முன்பாக அங்கு அரபா நாளை தீர்மானிக்கும் வகையில் ஹஜ் குழு இருக்கவுமில்லை, அக்குழு பிறை தென்பட்டதாக நபியவர்களுக்கு அறிவித்ததாக செய்தியும் இல்லை. எனவே மதீனாவின் ஹஜ் பிறையே மக்காவாசிகளுக்கும் எரிய பிறையாக கணிக்கப்பட்டதை காண்கிறேம். இதனை நாம் நோன்பு பிறையோடு சம்பந்தப்படுத்தாமல் பார்க்க வேண்டும். நோன்பு பிறையானது மாலை கண்டதும் விடியு முன் நோன்பிருக்க வேண்டும். ஹஜ் பிறை என்பது அது காணப்பட்டு எட்டுநாட்களின் பின்பே அரபா நாள் வருவதாகும். இதற்கு போதுமான கால எல்லை இருப்பதாலேயே நபியவர்கள் மதீனா பிறையை மக்காவுக்கும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். நுபிகளார் காலத்தில் மதீனா முஸ்லிம்களின் ஆட்சித்தலைமையகமாக இருந்தது. இன்று மக்கா முஸ்லிம்களின் ஆத்மீக தலைநகரமாக உள்ளது.
நபியவர்கள் முஸ்லிம்களின் ஆட்சித் தலைவர் என்பதால் மக்காவில் உள்ள முஸ்லிம்கள் நபிகளாரின் தோழர்கள்; மக்காவை அடைந்து அவர்கள் கூறும் நாளிலேயே அரபாவுக்கு சென்றிருப்பார்கள் என்பதை மிக நுண்ணியமாக நாம் உணர முடியும். அதே போல் நபியவர்கள் ஹஜ்ஜூக்காக மக்கா நோக்கி புறப்படும் போதும் மதீனா பிறையை வைத்தே ஹஜ் மாதத்தை கணித்தே அப்பிறையை மக்காவில் ஹஜ்ஜூடைய கிரியைகளுக்கும் பாவித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் மக்காவில் எப்போது ஹஜ் பிறை காணப்பட்டது என்ற செய்தியை அறிந்து வரும்படி எவரையும் நபியவர்கள் அனுப்பியதாக ஹதீதில் இல்லை.
ஆக, மதீனா தேசத்தின் பிறையையே நபி (ஸல்) அவர்கள் மக்கா தேசத்துக்குமுரிய பிறையாக செயற்படுத்தியுள்ளார்கள் என்பதைக் காண்கிறோம். அன்று மதீனாவுக்கும், மக்காவுக்கும் இடையிலான சென்றடைதல் தூரம் என்பது இன்றைய இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலுள்ள இன்றைய சென்றடைதல் தூரத்தை விட அதிகமானதாகும். இந்நாளில் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் ஒரே நாளில் சென்றடைய முடியும். இவ்வாறு மதீனாவிலிருந்து மக்காவுக்கு அந்நாளில் ஒரே நாளில் சென்றடைய முடியாது.
இவ்வாறு ஒரு தேசத்தின் பிறையை இன்னொரு தூர தேசத்துக்கும் நபியவர்கள் தீரமானித்துள்ளதால் ஒரு தேசத்தின் பிறையை உலகிலுள்ள அனைத்து தேசங்களிலும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் அது இக்காலத்தில் மிகமிக இலகுவான ஒன்று என்பதையும் எவரும் புரிந்து கொள்ள முடியும். அன்று மக்காவில் பிறை காணப்பட்டதா என்ற தகவல் மதீனாவுக்கு வருவதற்கு அந்நாளில் மிக வேகமாயின் மூன்று நாட்கள் தேவை. இந்நாளில் மூன்று நிமிடங்கள் கூட தேவையில்லை பிறை காணப்பட்ட தகவல் வந்து சேர.
ஒரு தேசத்தின் பிறையை இன்னொரு தேசத்திலும் அமுல்படுத்த முடியும் என்றால் ஏன் சர்வதேச பிறையை ஏற்க முயாது?
இதற்கான பதிலை ஏற்கனவே தந்திருக்கிறேன். இருப்பினும் உலகளாவிய முஸ்லிம்களைப் பொருத்தவரை மக்கா, மதீனா என்பனவே தலைமையகமாக கொள்ளப்படுகிறது. அத்துடன் மக்கா உலகின் மத்தியில் இருப்பது இறைவனின் பேரருளாகும். மக்காவிலிருந்து அனைத்து திசையிலும் உள்ள ஆகக் கடைசி நாடும் மத்திய தூரத்தையே கொண்டுள்ளது. மக்காவின் கடிகார நேரத்துக்கும் உலக நாடுகளின் நேரத்துக்கும் சுமார் எட்டு மணித்தியாலங்களுக்குள்ளேயே வித்தியாசம் உள்ளது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது மக்காவில் காணப்படும் பிறையை வைத்து உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ், பெருநாள் போன்றவற்றை மிக இலகுவாக தீரமானித்துக் கொள்ள முடியும். அதுவே முஸ்லிம்களை ஒரு தலைமைத்துவ பண்பின் கீழ் செயற்படக் கூடியதான ஒற்றுமையை நோக்கிய பயணத்துக்கதான செயலாக இது அமையும். அத்தோடு ஹஜ் கிரியைகள் என்பன மக்கா தவிர வேறு எந்த நாட்டிலும் செயற்படுத்தப்படுவதில்லை. எனவே ஹஜ்ஜின் முக்கியமான அம்சமான அரபா மைதானமும் மக்காவில் உள்ளதால் மக்கா பிறையை உலகின் அனைத்து தேசங்களிலும் நடைமுறைப்படுத்தவும் முடியும், திணிக்கவும் முடியும் என்பதை நபிகளாரின் சொற்கள்  நமக்கு கற்றுத் தருகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே நாளில் அரபா தினமுமு;, ஹஜ் பெருநாளும் கொண்டாடப்படும் உன்னத நிலையை அடைய முடியும்.
அரபா நாளன்றே அரபா நோன்பை நோற்க வேண்டுமா?
“அரபா நோன்பு என்பது அதற்கு முந்திய வருடத்துக்கும், பிந்திய வருடத்துக்கும் பரிகாரமாக உள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம் (1977)
இந்த ஹதீதில் துல்ஹஜ் 9ம் திகதி நோன்பு பிடிப்பது பரிகாரம் என்று நபியவர்கள் கூறவில்லை. மாறாக அரபா நோன்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் துல்ஹஜ் 9ம் திகதிதான் அரபா நாளகும். 9ம் திகதி நோன்பு பிடிப்பது என நபியவர்கள் குறிப்பிட்டிருந்தால் உலகத்தில் எங்கெல்லாம் துல்ஹஜ் 9ம் திகதி என்று அந்தந்த நாட்டவர்கள் தீர்மானிக்கின்றார்களோ அந்தந்த நாட்டில் அத்தினத்தில் நோன்பு பிடிக்கலாம் என்ற கரத்தை முன் வைக்க இடமுண்டு. ஆனால் இங்கு நபியவர்கள் அரபா நோன்பு என்ற சொல்லை பாவித்திருப்பதன் மூலம் இன்றைய நவீன காலத்துக்கும் அச்சொல் பொருந்துவதாக அமைந்துள்ளது.
அரபாவில் ஹாஜிகள் எப்போது ஒன்று சேர்வர் என்பது எட்டு நாட்களுக்கு முன்பதாகவே முழு உலக முஸ்லிம்களும் இன்று தெரிந்து கொள்கிறார்கள். அன்று வாழ்ந்த மக்களால் அது முடியவில்லை. அரபாவில் ஹாஜிகள் கூடும் தினத்தை அரபா தினம் எனப்படும். அத்தினத்தில் ஹாஜிகள் அரபாவில் இருப்பதை உலகின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களெல்லாம் நேரடியாக காணும் வசதிகளும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இன்று எமக்கு அரபா தினம் அல்ல, அதாவது எம்மைப் பொறுத்தவரை ஹாஜிகள் அரபாவுக்கு வரும் தினம் இன்றல்ல, நாளைதான் என்றோ, அல்லது நேற்றுத்தான் என்றோ கூறுவது இஸ்லாத்தையும், அறிவையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.
ஆகவே, அரபாவில் ஹாஜிகள் கூடும் தினம் சரியாகத் தெரிந்திருப்பின் அரபா தினமான அத்தினத்தன்றே உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பதே சரியானதாகும். இதனை நபியவர்களின் ஹதீதை நடைமுறைச்சாத்தியத்தோடு வைத்துப் பார்க்கும் போது மிகத் தெளிவாக நமக்குப் புரிகிறது.
ஓவ்வொரு மாதமும் பிறை பார்த்து மாதங்களை கணிக்க வேண்டுமா?
நுபிகளார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் கிறை பார்த்து அது இந்த மாதம் என அறிவித்ததாக ஹதீதுகளில் இல்லை. ஆகவே இது ஒரு பித்அத்தான செயல். ஆன்னார் மாதங்களை அன்றைய மக்களின் வழக்கத்தில் இருந்த கணிப்பீட்டின்படியே கணித்தார்கள். ஆனால் நோன்பு, ஹஜ்ஜை மட்டுமே பிறை பார்த்து கணித்தார்கள்.  இன்றும் கூட அரேபியாவில் இந்நடைமுறை உள்ளதை காணலாம். அதாவது உம்முல் குரா எனப்படும் நாட்காட்டிகளின் பிரகாரமே அரேபியாவில் நாட்கள் கணிக்கப்பட்டு அரச அலுவல்கள் நடக்கின்றன. நோன்பு வரும் போது பறையை கண்டு அறிப்பார்கள். நோன்பு மாதம் முடிந்ததும் உம்முல் குரா கலண்டர்படி நாட்களை நடைமுறைப்படுத்துகிறார்கள். ஊதாரணமாக நோன்பு முடிவுக்கான பிறை உம்முல் குரா கலண்டருக்கு மாற்றமாக ஒரு நாள் முன்பாக வந்தாலும் அதற்கு அடுத்த நாள் ஷவ்வால் மாதம் இரண்டாந்திகதியாக கணிக்கப்படாமல் ஏற்கனவே உள்ள கலண்டர் படி ஷவ்வால் 1ந்திகதியாக கணிக்கப்படும்.
இந்த நடைமறைக்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் பிறை பார்த்து அறிவித்தால் அது நடைமுறைச்சிக்கலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இஸ்லாம் நாடாளும் மதம் என்ற இலக்கணத்தை இழந்து விடும்.  ஊதாரணமாக ஷஃபான் மாதம் பத்தாம் திகதி திங்கட்கிழமை ஒருவரை ஒரு பதவிக்கு நியமிக்க வேண்டும் என அரச கட்டளை இடப்பட்டிருந்தால் ஒவ்வொரு மாதமும் பிறை பார்த்து வரும் போது நாட்கள் முந்தி பிந்தி வந்தால் ஷஃபான் மாதம் பத்தாம் திதி என்பது சனிக்கிழமையாக அல்லது செவ்வாய்க்கிழமையாகவும் ஆகிவிடலாம். அத்துடன் அரசாங்க விடுமுறைகளை கணித்தல், பாடசாலை ஆரம்பம், விடுமுறை, விசாக்களுக்கான திகதிகளை அறிவித்தல் என்ற பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். இதன் மூலம் இஸ்லாத்தின் பிறைக்கொள்கை கொச்சைப்படுத்தப்படும்.
இதையெல்லாம் சர்வ வல்லமை படைத்த இறைவன் தனது நபிகளார் மூலம் இந்த விடயங்களை பொதுவான அறிவிப்பாக செய்ததன் மூலம் எல்லாக்காலத்துக்கும் ஏற்றதாக இது சம்பந்தமான ஹதீதுகள் அமைந்துள்ளதை காணலாம்.
நமது நாட்டின் உலமா சபை ஒவ்வொரு மாதமும் பிறை பார்த்து அறிவிக்கும் பித்அத்திலிருந்து நீங்கி மக்காவில் உள்ள உம்முல் குறா பிறை திகதிகளையே நமது நாட்டிலும் அறிவிப்பதே சரியான முறையாகும். இதுவே குர்ஆன் ஹதீதுக்கும் பொருந்துவதோடு சமகாலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்றதாக ஆகும். ஆத்துடன் நோன்பு, ஹஜ் என வரும்போது மக்காவில் அறிவிக்கப்படும் பிறையை நமது நாட்டிலும் அறிவிப்பதன் மூலம் இப்பிரச்சினைகளிலிருந்து நாம் வெளியே வருவதோடு .து சம்பந்தமான ஹதீதுகளுக்கும் ஏற்ப இதுவே செயற்படுத்தத்தக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர், அகில இலங்கை உலமா கட்சி
பிரதம ஆசிரியர்: அல்ஜஸீறா      
      (முஹம்மது வஸீம் ஹுஸைன்)
அலிஷ; நியூஸ் இணையத்தளத்தில் பிறை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும்இ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் போன்றன நபிவழிக்கு முரணாக செயற்படுவதாக
________________________________________
முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையானது(  நபிவழிக்கு முரணாக எழுதப்பட்டிருக்கின்றமை கவலையளிக்கின்றது. சர்வதேச பிறையை சரி எனக் காட்டி அக் கட்டுரை வரையப் பட்டிருக்கின்றமை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.  மேலும் அக் கட்டுரையில் ஹஜ் பெருநாள் ஹஜ் கிரிகையுடன் தொடர்பு பட்டது என்றாலும் அதில் அரபா பற்றி அப்துல் மஜீத் அவர்களது வாதம் தவறானது என்பது குறிப்பிடபட வேண்டிய ஒன்றே.

இங்கு அரபா தின நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் தொடர்பான ஓர் விளக்கதை அல்குர்ஆன் சுன்னா நிழலில் மட்டும் நின்று தெளிவு படுத்துகின்றேன். நபியவர்கள் எப்படிக் கூறினார்களே அப்படியே பின்பற்றினால் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பது உண்மை.

இக்கட்டுரை இவ்வாறு நபியவர்களின் சுன்னாவை புறக்கணித்து அவர்கள் மீது குறைகாண்பவர்களுக்கு நல்ல மனப்பாங்கை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

முதலில் அரபா நோன்பு தொடர்பாக வந்துள்ள செய்திகளை பார்ப்போம்.

அரஃபாவில் தங்கும் ஹாஜிகள் அரஃபா நாளன்று நோன்பு நோற்பது கூடாது என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

2084 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَوْشَبُ بْنُ عُقَيْلٍ عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ حَدَّثَنَا عِكْرِمَةُ قَالَ كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ رواه أبو داودஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அபூதாவூத் (2084) இதில் இடம்பெறும் மஹ்தீ பின் ஹரிப் என்ற அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தி. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரஃபா நாளில் நோன்பு நோற்கவில்லை. எனவே ஹஜ் செய்பவர்கள் அன்று நோன்பு நோற்பது கூடாது என்று இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து கூறப்படுகின்றது.

 1989حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள். புகாரி (1989) அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்பது நபிவழி அல்ல என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தியே ஆதாரமாக அமைந்துள்ளது.

1976 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)இ நூல் : முஸ்லிம் 1976 மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே கூறப்படுகின்றது. ஹாஜிகள் என்று மக்காவில் கூடுகின்றார்களோ அதே நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது போல் எந்த ஹதீஸிலும் வாசகம் இடம் பெறவில்லை.

துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே சரியான கருத்தாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் அரஃபாவுடைய நாளை நிச்சயம் அவர்கள் அடைந்திருப்பார்கள். மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று சட்டம் இருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.

ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை. எனவே மதீனாவில் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்களுக்கு பிறை ஒன்பது எப்போது வந்ததோ அந்த நாளில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாள் நோன்பை நோற்றார்கள் என்பது தெளிவாகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று சிலர் கூறுவது ஏற்க முடியாததாகும். அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்தால் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள். மேலும் மதீனாவில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மதீனாவுக்கு வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஹாஜிகள் அரஃபாவில் கூடும் தினம் தெரிய வழி இல்லை. அந்த ஊர்வாசிகள் தமது ஊர்களில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா தினத்தை முடிவு செய்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்து மக்கள் தங்கள் பகுதியில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா நாளை முடிவு செய்திருப்பார்களே தவிர மக்காவில் கூடுவதை அறிந்து முடிவு செய்திருக்கவே முடியாது. ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தால் உலகம் முழுமைக்கும் அரபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று பழி சுமத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

'அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறஇ அதற்கு நபித்தோழர்கள்இ 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?' என்று வினவஇ 'ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிடவும் தான்; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர்இ உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)இ        நூல்: புகாரி.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி)இ நூல்: முஸ்லிம்இ திர்மிதிஇ அபூதாவூத்.

நாளைத் தீர்மானிப்பது எப்படி?
சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள். சுபுஹ் தொழுத பின் முஜ்தலிபாவிலிருந்து புறப்பட்டு அரபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மஃரிப் வரை தங்கிவிட்டு மஃரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள். இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது.  ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

 தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்களை நாம் இது வரை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிக்கும் வழிமுறையைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்?

எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள் சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். நோன்பையும்இ நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள்  அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத்இ இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.  ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள். அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.

அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மஃரிப் நேரமாகும். மஃரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

பெருநாள் தினத்தில் ஹராமான நாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா?
ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.

அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில்  ஹாஜிகள் கூடிய செய்தியை தொலைபேசியில் கேட்டோ அல்லது தொலைக்காட்சியில் பார்த்தோ  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை.  தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில்  தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. மக்காவிலும்இ மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் தென்படாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

தொலைத் தொடர்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும்இ அரஃôபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286)  இந்த மார்க்கத்தில அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்:று சிலர் கூறுகின்றனர்.. மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட செய்தி அமைந்துள்ளது.

)وأخبرنا) أبو عبد الله الحافظ ثنا أبو محمد عبد الله بن جعفر بن درستويه النحوي ببغداد ثنا محمد بن الحسين بن أبي الحنين ثنا عارم أبو النعمان ثنا حماد بن زيد قال سمعت ابا حنيفة يحدث عمرو بن دينار قال حدثني علي بن الاقمر عن مسروق قال دخلت على عائشة يوم عرفة فقالت اسقوا مسروقا سويقا وأكثروا حلواه قال فقلت اني لم يمنعني ان اصوم اليوم إلا اني خفت ان يكون يوم النحر فقالت عائشة النحر يوم ينحر الناس والفطر يوم يفطر الناس - السنن الكبرى للبيهقي - (ج 4 ஃ ص 252
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள் என்று விளக்கமளித்தார்கள்.
           அறிவிப்பவர் :  மஸ்ரூக்             நூல் :  பைஹகீ

 மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள்  கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது. அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.

தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது. நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மஃரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மஃரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.

சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மஃரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் மறையும் போது மஃரிப் தொழ முடியாது. எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு  எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும். இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்.

பதில்
முஹம்மது வஸீம் ஹ{சைன் என்பவர் பிறை சம்பந்தமான எமது கருத்துக்கு பதில் தந்துள்ளார். இந்த தனி நபர் இணையத்தில் விடுத்துள்ள பதிலுக்கு நாம் இங்கு பதில் தருகிறோம். அதில் இவர்  ஹாஜிகள் அறபா நாளன்று நோன்பு பிடிக்கத்தேவையில்லை என்பதற்குரிய ஆதாரத்தை  விளக்கியிருந்தார். இது விடயம் பற்றி எந்த கருத்து வேறுபாடும் எம்மிடம் இல்லை என்பதுடன் நாம் இது பற்றி எழுதவுமில்லை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர் ஹாஜிகள் என்று மக்காவில் கூடுகின்றார்களோ அதே நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது போல் எந்த ஹதீதிலும் வாசகம் இடம் பெறவில்லை என கூறுவதன் மூலம் இவர் எமது அறிக்கையை சரியாக வாசிக்கவில்லை என்பதும் நாம் சொல்லாத விடயத்தை சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். எமது வாக்கியம் இதோ: ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் தினமான - அரபா நாளில் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
அதாவது அறபா நாளில் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்படி நபியவர்கள் கட்டளையிட்டிருப்பதாகவே நாம் கூறினோமே தவிர மக்காவில் கூடும் நாளில் என்று கூறவில்லை. அறபா நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடும் நாள் என்பது சகலருக்கும் தெரியும்.
நபியவர்கள் மதீனாவில் வாழ்ந்த காலத்தில் மக்காவுக்கு ஒருவரை அனுப்பி அங்கு பிறை கண்ட  தகவலை எடுத்து வர சொன்னதாக ஹதீத் இல்லை என்கிறார். இதற்கு ஹதீத் இருப்பதாக நாமும் கூறவில்லை. மதீனாவிலிருந்து ஒருவரை  மக்காவுக்கு அனுப்பி பிறை கண்ட செய்தியை எடுத்து வர குறைந்தது ஆறு நாட்கள் செல்லும். மதீனாவிலிருந்து மக்கா போய்வர சுமார் 800 கிலோ மீட்டர். இன்றைய வாகனத்தில் செய்வதாயின் சென்று வர சுமார் 8 மணி நேரம் எடுக்கும். ஒட்டகத்தில் சென்று வர எத்தனை மணி நேரம் எடுக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
இங்கு ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபியவர்கள் ஒரு விடயத்தை செய்தால், ஏவினால் அது உலகம் அழியும் வரை மார்க்கமாகிவிடும். நபியவர்கள் அவ்வாறு மக்காவுக்கு ஒருவரை அனுப்பி பிறை பார்த்து வரும்படி கூறியிருந்தால் அவ்வாறு செய்தல் மார்க்கமாகியிருக்கும். இந்த நிலையில் ஷாம் தேசத்திலும் இந்தியாவிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்களும் தமது நாடுகளிலிருந்து ஒருவரை அனுப்பி மக்கா பிறை பார்ப்பதே மார்க்கமாக சுன்னத்தாக கருதியிருப்பர். இந்த நிலையில் ஷாம் தேசத்திலிருந்து மக்கா சென்று வருவதாயின் இருபது நாட்களுக்கு மேல் செல்லும். இந்தியாவாக இருப்பின் மாதக்கணக்கில் செல்லும். இஸ்லாம் எக்காலத்திற்கும் எல்லா தேசத்திற்குமுரிய மார்க்கம் என்பதனால் இது மக்களுக்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனாலேயே நபியவர்கள் இவ்வாறு வழி காட்டவில்லை. அதன் காரணமாக பின்னால் தொலை பேசி அறிமுகமாகும் காலத்தில் வாழும் மக்களுக்கும் ஏற்றாற்போல் “அறபா நாளில் நோன்பு பிடியுங்கள்” என அழகிய வசனத்தை பாவித்துள்ளார்கள். அறபா நாள் என்றால் துல்ஹஜ் பிறை 9 என்பதற்கும் அப்பால் ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேரும் நாள் என்பது வலுவானது.
நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த ஏனைய தேசத்து மக்கள் மக்கா பிறையை வைத்து அறபா நாளை எடுக்கவில்லை, மாறாக தமது தேசத்து பிறையை வைத்து இதுதான் அறபா நாளாக இருக்கலாம் என்றே அவற்றை எடுத்துக்கொண்டார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதனை எமது அறிக்கையிலும் சொல்லியுள்ளொம். இதற்கு காரணம் அறபா நாள் எப்போது என்பதை மக்கா பிறையை வைத்து அறியக்கூடிய வசதிகள் அவர்களுக்கிருக்கவில்லை. இங்கு நான் தேசங்கள் என்பது மதினாவையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் மட்டுமல்ல. மாறாக ஷாம், சிந்து, இந்தியா போன்ற தேசங்களையும் உள்ளடக்கியதாகவே சொல்கிறேன்.
இதனை ஆயிஷா (ரழி) யின் பின்வரும் கூற்று தெளிவு படுத்துகிறது. நான் அரஃபா நாளில் ஆயிஷா ரலி) அவர்களிடம் சென்றேன். இருவருக்கும் கோதுமைக் கஞ்சியை கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள். என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று மக்காவில் ஹஜ் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே என்று கூறினேன். அதற்கு ஆயிஷா ரலி அவர்கள் “ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள், நோன்பு பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்பு பெருநாள் “என  விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர். மஸ்ரூக்    நூல் பைஹகீ
இதில் நமக்கு பல தெளிவுகள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட சஹாபி இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதனை சொல்கிறார். இதற்கு உதாரணமாக ஒன்றை சொல்ல முடியும். அதாவது ஒருவருக்கு தொழுகைக்கான கிப்லாவின் திசை சரியாக தெரியவில்லை. ஒரு பக்;கமாக திரும்பி இதுதான் கிப்லாவாக இருக்குமோ என சந்தேகிக்கிறார். இவருக்கு நாம் என்ன சொல்வோம். எந்தப்பக்கம் கிப்லா என நீ உறுதியாக நினைக்கிறாயோ அதனை கிப்லாவாக ஆக்கிக்கொள் என்று தான் கூறுவோம். அதுதான் இஸ்லாத்தின் சட்டமுமாகும். அNது நேரம் கிப்லாவின் திசை சரிவர தெரிந்தால் அவருக்கு இந்த பதில் பொருந்தாது. இது போன்றே ஆயிஷா ரழி அவர்கள் இங்கு தெளிவு படுத்துகிறார்கள்.
நவீன காலம் வரை கிப்லாவைக்கூட நாம் ஒரு ஊகத்தினாலான திசையின் படியே எமது பள்ளிகளை கட்டி வந்துள்ளோம். அண்மைக்காலத்தில் கிப்லாவின் சரியான திசை காட்டிகள் வந்த பின் பல பள்ளிவாயல்களின் திசைகள் மாற்றப்பட்டுள்ளதை காண்கிறோம். இவ்வாறு நாம் ஏன் பிறை விடயத்தில் மட்டும் எம்மை திருத்திக்கொள்ள மறுக்கிறோம்?

அத்துடன் முஸ்லிம்கள் தீர்மானிப்பதுதான் ஹஜ் என ஆயிசா (அந்த உத்தமியை இறைவன் பொருந்திக்கொள்வானாக) எவ்வளவு அழகாக சொன்னார்கள். மதீனத்து முஸ்லிம்கள் என அவர்கள் வரையறுக்கவில்லை. மக்கா முஸ்லிம்கள் ஹஜ் பிறையை தீர்மானித்ததை ஏன் நாம் ‘முஸ்லிம்கள் தீர்மானித்த ஹஜ் பெருநாளாக’ ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?  ஆயிசாவின் கருத்தில் பிழை காண்கிறோமா? அல்லது மடமையில் இருக்கிறோமா?
மக்கா முஸ்லிம்கள் தமது நாட்டில் நடக்கும் ஹஜ்ஜுக்காக ஹஜ் பெருநாளை தீர்மானித்ததை ஏனைய முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டால் முஸ்லிம்களும் தீர்மானித்த ஹஜ் பெருநாளாக ஆகிவிடும் அல்லவா?

ஆக மிக தெளிவாக அறபா நாள் என்பது அறபாவில் ஹாஜிகள் கூடும் தினம் என்பதும் அந்த நாள் நமக்கு சரிவர தெரிந்தால் அந்த நாளிலேயே நோன்பு பிடிக்க வேண்டும் என்பதையும், மக்காவில் அறபா எப்போது என தெரியாவிட்டால் மட்டுமே நமது நாட்டு பிறையை வைத்து அறபா நோன்பை பிடிக்கலாம் என்பதையும் மிகத்தெளிவாக விளங்குகிறோம். இந்தக்காலத்தில் அறபா நாள் எப்போது என ஒருவருக்கு அறியக்கிடைக்கவில்லை என்றால் அவருக்கு அறபாவின் நோன்பு கூட கடமையாகாது. ஏனென்றால் அவர் புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார்.
முஹம்மது வசீம் ஹ{சைன் அவர்கள் நபியவர்களின் வார்த்தையை அப்படியே பின் பற்றினால் பிரச்சினையே வராது என கூறி விட்டு அமெரிக்காவையும், தொழுகை நேரங்களையும் ஆதாரமாக காட்டுகிறார். இவை அனைத்தையும் விட அறபா நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்ற முஹம்மது (ஸல்) அவர்களின் வார்த்தை ஈமான் உள்ள முஸ்லிமுக்கு போதுமானதாகும்.
இலங்கையை சேர்ந்தவர் மக்காவுக்கு போனால் இலங்கை நேரத்தை வைத்தா அங்கு தொழ முடியும் என கேட்கிறார். தொழுகை நேரம் குறிப்பிடப்பட்ட ஒன்று. அறபா என்பது நாள் குறிப்பிடப்பட்ட ஒன்று என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லை.

இவர் காட்டும் அமெரிக்க நாள் கணக்கு, தொழுகை நேரம் என்பதெல்லாம் எமது கருத்துக்குத்தான் சாதகமாக உள்ளன. அவற்றை நாம் நபியின் ஹதீதை விட உயர்த்த விரும்பவில்லை. எனினும் இவருக்கு புரிய வைப்பதற்காக சொல்கிறோம். இவர் கூறுகிறார்@ அரபாவில் சுபஹ{க்குப்பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மஃரிப் நேரமாகும். மஃரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப்பின் வரும் சுபஹ் நேரத்திலிருந்துதான் அவர்கள் நோன்பை பிடிக்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். … ஆக பெருநாள் தினத்தில் ராமான் நோன்பு நோற்க சொல்லப் போகிறீர்களா? என்று கேட்கிறார். இவருக்கு ஹதீதின் பொருள்தான் விளங்காவிட்டாலும் உலக அறிவும் இல்லை என்பது வெளிச்சமாகிறது.
இவர் நினைத்துக்கொண்டிருக்கிறார், ஹாஜிகள் அரபாவில் தங்குகின்ற போதுதான் ஏனைய முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என நபியவர்கள் கூறியதாக. அவ்வாறு சொல்லப்படவில்லை. மாறாக அறபா நாளில் - யவ்ம அரபா- என மிக தெளிவாக சொல்லியுள்ளார்கள். நாள் என்பது பகல் மட்டுமல்ல 24 மணி நேரம் கொண்டதாகும். அத்துடன் நமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்குமிடையில்தான் சுமார் 11 மணி நேர வித்தியாசம். மக்காவுக்கும் நமக்கும் சுமார் மூன்றரை மணி நேர வித்தியாசம். மக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் சுமார் எட்டு மணி நேர வித்தியாசம். இப்போது இவர் சொல்லியுள்ளது போன்று பார்ப்போம்.
ஹாஜிகள் மினாவிலிருந்து காலை எட்டு மணியளவில் புறப்பட்டு 12 மணிக்கு முன்னதாக அறபாவை அடைவர். அந்த 12 மணிக்கு அமெரிக்காவில் அதிகாலை 4 மணி. இந்த நேரத்தில் அமெரிக்க மக்கள் நோன்பு வைக்க முடியாதா? இவர் சொல்கின்றபடி 12 மணி நேர வித்தியாசப்படி பார்த்தால் கூட மக்காவில் சுபஹ் என்றால் அமெரிக்காவில் மஃரிப் என்றால் 12 மணி நேர வித்தியாசம். அவ்வாறாயின் நோன்பு பிடிப்பது காலை 6 மணிக்கு அல்ல. சஹருடைய நேரம் சுபஹ{க்கு முன்னதாகும். சுமாராக அதிகாலை 4 மணி என கொள்ளலாம். அமெரிக்காவில் அதிகாலை 4 மணி என்றால் அறபாவில் 12 மணி நேரம் கழித்து பார்த்தால் அறபாவில் மாலை 4 மணியாகும். அந்த வேளை அரபாவில் ஹாஜிகளின் பிரார்த்தனைகள் சூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அமெரிக்க முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்கிறார்கள் என்றால்… சுப்ஹானள்ளா. எத்தனை அருமை. இறைவன் எத்தனை அருமையான பாக்கியத்தை உலகளாவிய முஸ்லிம்களுக்கு தந்துள்ளான். சஹருடைய நேர பிரார்த்தனையும் அரபா ஹாஜிகளுடைய பிரார்த்தனையும் ஒரே நேரத்தில் வானை பிளக்குமல்லவா!
மக்கா என்பது முழு உலகின் மத்தியில் இறைவன் வைத்துள்ளான். இதன் காரணமாக மக்கா பிறை முழு உலகுக்கும் அந்த நாளின் ஒரு பகுதியையாவது கொடுக்கும். கணக்கில் எடுக்க முடியாத சூரியன் உதிக்காத நாட்டைத்தவிர. இவ்வாறு மக்காவை உலக மத்தியில் வைத்த அந்த வல்ல நாயன் மகத்துவமிக்கவன், பேரறிவாளன். ஒரு காலத்தில் மக்காவின் பிறையை முழு உலகும் ஒரே நாளில் அறிந்து கொள்ளும் வாய்பப்பு வரும் என்பதை  அவன் தெரியாதவனா? அதனால்த்தான் மக்காவை மத்தியில் வைத்து ஹாஜிகள் அறபாவில் கூடும் ஒரே நாளில் முழு உலக முஸ்லிம்களும் நோன்பு பிடிக்க வைத்துள்ளான். அதனை உணராதவார்கள் நிச்சயம் இன்னும் சில வருடங்களில் உணர்வார்கள்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர், அகில இலங்கை உலமா கவுன்சில்

மௌலவி முபாறக் அப்துல் மஜீத் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிறை விடயத்தில் நபி வழிக்கு மாற்றமாக செயல்படுகிறது என்று ஒரு ஆக்கத்தை வெளியிட்டு இருந்தார். அந்த ஆக்கத்தை படிக்கும் பொழுது அவர் மீண்டும் மத்ரஸாவிற்கு சென்று ஆரம்பத்தில் இருந்து மார்க்கத்தை படித்தால் அது அவருக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.
அந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகத்தான் அந்த ஆக்கம் அமைந்திருந்ததே தவிர மார்க்க அறிவு உள்ளவரின் ஆக்கம் போன்று தெரியவில்லை. அவ்வளவு அபத்தமான வாதங்களை அதிலே வெளியிட்டிருந்தார்.
அவருடைய அடிப்படையான வாதம் என்வென்றால்இ மக்காவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தில் தான் அரபா நோன்பு வைக்கவேண்டும். தமது பகுதிகளில் பிறை பார்த்து 9 வது பிறை அன்று அரபா நோன்பு பிடிப்பது நபி வழிக்கு மாற்றமாகும். தொழிநுட்ப வசதிகள் தற்காலத்தில் முன்னேறியுள்ள காரணத்தால் மக்காவில் இருந்து தகவலை அறிந்து நோன்பு பிடிக்கவேண்டும் என்பதாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். அரபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடுவார்கள். சுபஹ் தொழுத பின்னர் முஸ்தலிபாவில் இருந்து அரபாவிற்கு வந்து மஃரிப் வரை தங்கிவிட்டு மஃரிப் தொழாமல் புறப்படுவர்கள். அந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோக்கக்கூடாது. ஹஜ்ஜிக்குச் சொல்லாமல் இருப்பவர்கள் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நபி அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தலை பிறையை தீர்மானித்து அரபா தினத்தை முடிவெடுக்காமல்இ முபாரக் அப்துல் மஜீத்தைப் போன்ற சில அரைகுறைகள் அரபா தினத்தில் இருந்து தலைப்பிறையை தீர்மானிக்கும் ஒரு புது வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அரபா தினத்தில் ஹாஜிகள் நோன்பு பிடிக்கக் கூடாது ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரபா நோன்பாகும் இவர்களின் வாதப்படி பார்த்தால் உலகில் அதிகமாக மக்களுக்கு அரபா நோன்பு பிடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அல்லாஹ்வின் துாதர் அவர்கள் ஒரு சட்டம் சொன்னால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் தான் அமைந்து இருக்கும். காலத்திற்குக் காலம் ஒரு நாளும் முரண்படாது என்பதை முபாரக் அப்துல் மஜித்தைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஹாஜிகள் சுபஹ் நேரத்தில் இருந்து அரபாவில் ஒன்று கூடிவிட்டு மஃரிபிற்கு சொன்றுவிடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரபா நாள். இந்த தினத்தில் தான் உலகில் உள்ள அனைவரும் நோன்பு வைக்கவேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் எப்போது நோன்பு வைப்பது? ஹாஜிகள் சுபஹ் நேரத்தில் அரபாவில் ஒன்று கூடுவார்கள். அப்போது அமெரிக்காவில் மஃரிப் நேரமாக இருக்கும் ஹாஜிகள் மஃரிபிற்கு சென்றுவிடுவார்கள். அப்போது அமெரிக்காவிற்கு சுபஹ் நேரமாக இருக்கும். இவர்களின் வாதப்படி அமெரிக்காவில் உள்ளவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக மஃரிபில் இருந்து சுபஹ் வரைக்கும் நோன்பு வைக்கும் நிலை ஏற்படும். ஒரே நாளில் உலகம் முழுவதும் அரபா நோன்பு பிடிக்கவேண்டும் என்பதும்இ ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதும் மார்க்க அடிப்படையிலும் தவறான நிலைப்பாடு. அறிவியல் ரீதியாவும் சாத்தியம் அற்ற ஒரு விடயமாகும்.
இஸ்லாம் கூறும் சட்டம் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் விதத்தில் தான் இருக்கும் சில நாடுகளில் வாழும் மக்களுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்காது. இவர்களின் இந்த குழப்பமான நிலைக்கு காரணம் இஸ்லாத்தை சரியாக விளங்காததுதான்.
அல்லாஹ் தன் திருமறையில்
உங்களில் அம்மாதத்தை யார் அடைகிறாரே அவர் நோன்பு நோக்கட்டும்
(அல்குர்ஆன் 2 : 185)
என்று கூறுகிறான் இந்த வசனத்தில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால்இ  மாதத்தை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. அது ஒவ்வொறுவருக்கும் வேறுபடும் என்பதை உணர்த்துகிறான். அதனால் தான் “உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ” என்று குறிப்பிடுகிறான் அதில் இருந்தே ஒருவர் அடையும் நேரத்தில் இன்னும் சிலர் அம்மாதத்தை அடையாமலும் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இல்லை என்றால் “அந்த மாதத்தில் நோன்பு வையுங்கள்” என்று அல்லாஹ் குறிப்பிட்டு இருப்பான். அல்லாஹ் ஒரு வார்தையையும் வீணாக பயன்படுத்தமாட்டான் என்பதை இப்படிபட்ட அபத்தமான கருத்தில் இருப்பவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஆகவேஇ அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் நாளில் தான் நாம் இங்கு நோன்பு நோற்க வேண்டும் என்றால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ குர்ஆன் சுன்னாவில் இருந்து முபாரக் அப்துல் மஜீத் ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் காரணத்தினால் தகவல் உடனடியாக கிடைக்கும் வசதி உள்ளது. எனவே மக்காவில் அரபா தினம் எப்போது என்ற தகவலை எமக்கு எட்டு நாட்களுக்கு முன்னரே தெரிந்து கொள்ளலாம். எனவே எமது பகுதிகளில் பிறை பார்க்காமல் சவுதியின் அரபா தினத்தில் நோன்பு வைக்கவேண்டும் என்பது தான் முபாரக் அப்துல் மஜீத் வைக்கும் அடுத்த அபத்தமான வாதமாகும்.
மார்க்கம் சம்பந்தமான போதிய அறிவு இன்மையே இப்படிப்பட்ட அபத்தமான வாதங்களுக்கு காரணமாகும்.
இன்று நபி அவர்களின் காலத்தை விட விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்பது உண்மை தான். ஆனால் நபி அவர்களின் காலத்தில் இருந்த புறச்சாதன வளர்ச்சிகளை வைத்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அரபா தினத்தை அறிவதற்கு முயற்சிகள் எதுவும் செய்தார்களா? என்பது தான் எமது கேள்வியாகும்.
ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தில் தான் அரபா நேன்பு வைக்கவேண்டும் என்பது மார்க்கமாக இருந்திருந்தால் நபி அவர்கள் துல்ஹஜ் தலை பிறை பார்த்த உடனேயே ஒருவரை மக்காவிற்கு அனுப்பி மக்காவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினம் எப்போது என்று அறிந்து வர சொல்லி இருப்பார்கள். ஏன் என்றால் நோன்பு பெருநாள் போன்று தலைப் பிறை பார்த்து அடுத்த நாள் பெருநாள் கொண்டாடப்போவது இல்லை. பிறை பார்த்து எட்டு நாட்களுக்குப் பிறகு தான் அரபா தினம் வரும். மதினாவில் பிறை பார்த்தவுடன் மக்காவிற்கு ஒருவரை அனுப்பி இருந்தால் கூட சுமார் நான்கு நாட்களுக்குள் அல்லது ஐந்து நாட்களுக்குள் மக்காவிற்கு சென்று வரமுடியும்.
அது சிரமமான ஒரு வேலையும் இல்லை. நபி அவர்கள் நபித்தோழர்களை உளவு பார்ப்பதற்காக பல தடவைகள் வெளியூருக்கு அனுப்பியிருக்கிறார்கள் ஆனால் அது போன்று எவ்வித ஏற்பாடுகளையும் துல்ஹஜ் பிறை விஷயத்தில் நபியவர்கள் மேற்கொள்ளவில்லை.
காரணம் மக்காவில் ஹாஜிகள் கூடும் போது நோன்பு பிடிக்கவேண்டும் என்பது மார்க்கச் சட்டம் அல்ல. எமக்கு எப்போது பிறை 9 ஆக உள்ளதோ அப்போது தான் நாம் அரபா நோன்பு பிடிக்கவேண்டும்.
இப்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அதற்காக மாற்றிக் கொள்வோம் என்று முபாரக் அவர்கள் வாதம் வைக்கின்றார். இப்படி பிற்காலத்தில் விஞ்ஞானம் வளரும் என்று அல்லாஹ்விற்கு தெரியாதா? அல்லாஹ்வுக்கே மார்கம் சொல்லிக் கொடுக்கப் போகின்றாரா? முபாரக் அப்துல் மஜீத்.
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்று அல்லது அந்த நாட்டிற்கு மட்டும் தான் பொருந்தும் இந்த நாட்டிற்கு பொருந்தாது அல்லது அந்த காலத்திற்கு மட்டும் தான் பொருந்தும் இந்த காலத்திற்கு பொருந்தாது என்று நபி வழியைப் புறக்கணிப்பது மிகவும் அபத்தமான செயலாகும். அல்லாஹ்வின் தூதர் நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழத்தினால் திறக்கச் சொன்னார்கள். அது சவுதிக்கு மட்டும் உள்ள சட்டம். சவுதியில் தான் பேரிச்சம் பழம் மலிவாக கிடைக்கும். இலங்கையில் வாழைப்பழம் தான் மலிவாக கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அந்த காலத்திற்கு ஏற்ப சட்டம் சொன்னார்கள். எனவே வாழைப்பழத்தினால் நோன்பு திறப்பது தான் எமக்கு பொருத்தம் என்று இவர்கள் கூறுவார்களா? (கூறினாலும் கூறலாம்) மார்க்க சட்டம் ஒவ்வொன்றும்  அல்லாஹ் வழங்கியது. அனைத்துக் காலத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன் என்பதை மனதில் பதியவைத்துக் கொண்டால் இப்படியான அபத்தமான வாதங்களை யாரும் முன் வைக்கமாட்டார்கள்.
அதே போன்று சில சந்தர்ப்பங்களில் சவுதியிற்கு முன்னர் சில நாடுகளில் பிறை தென்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக 10வது மாதம் முதலாம் திகதி தலை பிறை பார்க்கும் நாள் என்று வைத்துக் கொண்டால்இ சவுதி பிறை பார்த்து பிறை தென்படாமல் இருக்கிறது. ஆனால் வேறு நாடுகளில் பிறை பார்த்தால் என்ன செய்வது? சவுதிக்கு முன்னர் அந்த நாட்டு மக்கள் 9வது அதாவது அரபா நாளை அடைவார்கள். சவுதி அரபா தினத்தை அடைந்து இருக்கும் போது சவுதிக்கு முன்னர் பிறை பார்த்த மக்கள் 10வது பிறையை அதாவது பெருநாள் தினத்தை அடைந்து இருப்பார்கள். முபாரக் அவர்களின் வாதப்படி பெருநாள் தினத்தில் அரபா நோன்பு வைக்கும் நிலை அந்த மக்களுக்கு ஏற்படும். இது மார்க்த்திற்கு மாற்றமான சட்டம் இல்லையா? இந்த இடத்தில் முபாரக் அவர்கள் என்ன மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்?
சூரியனையும் சந்திரனையும் அல்லாஹ் காலம் காட்டுகிறது என்று கூறுகிறான். எனவே தொழுகை நேரத்தை எப்படி கடிகாரத்தைப் பார்த்து முடிவு செய்கிறார்களோ அதே போன்று மக்காவில் பார்க்கும் பிறையை நவீன கருவிகளைப் பயன்படுத்தி அறித்து கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று தனது அடுத்த அபத்தமான வாதத்தை முன்வைக்கிறார்.
உண்மையில் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகிறது என்ற திருமறை வசனம் முபாரக் அப்துல் மஜீத் அவர்களுக்கு எதிரான வசனமாகும். அதையே தனக்கு ஆதாரமாக காட்டியுள்ளார் என்பதும் அவரின் மார்க்க அறிவும்இ விஞ்ஞான அறிவும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துவான். இரவை அமைதி களமாகவும்இ சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் ஏற்பாடு.
(அல்குர்ஆன் 6.96)
சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அது எப்போது காலம் காட்டுகிறது என்பது தான் நாம் விளங்கவேண்டிய விடயம்.
சூரியன் எமது ஊரில் எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலம் காட்டுமே தவிர சூரியனே காலம் காட்டாது.
எமது தலைக்கு நேராக 0 டிகிரியில் இருந்தால் நண்பகல் என்கிறோம். எமது தலைக்கு கிழக்காக 90 டிகிரியில் இருந்தால் அதை அதி காலை என்கிறோம். எமது தலைக்கு மேற்கே 90 டிகிரியில் இருந்தால் இரவின் ஆரம்பம் என்கிறோம். அதாவது சூரியனும் அது அமைந்து உள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
நமக்கு தலைக்கு நேராக 0 டிகிரியல் இருக்கும் போது அதாவது நண்பகலில் இருக்கும் போது  நமக்கு கிழக்கே 90 டிகிரியில் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்து கொண்டு இருப்பதைப் போல காட்சி அளிக்கும். ஒரே சூரியன் நமக்கு ஒரு காலத்தையும் வேறு திசையில் உள்ளவர்களுக்கு ஒரு காலத்தையும் காட்டுகிறது.
அமெரிக்காவில் சுபஹாக இருக்கும் போது முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் எமக்கும் சுபஹாகி விட்டது. நான் சுபஹ் தொழப் போகிறேன் என்று சொல்வாரா? இங்கு அந்நேரம் இரவாக இருக்கும்.
சவுதியில் நோன்பு திறக்கும் போது தான் நாமும் நோன்பு திறக்கவேண்டும் என்று கூறுவரா? சவுதியில் நோன்பு திறக்கும் போது நாம் இஷா நேரத்தையும் அடைந்து இருப்போம்.
அதே போன்று சந்திரன் சவுதியை அடையும் போது அவர்களுக்கு காலம் காட்டும் இலங்கையை அடையும் போது எமக்கு காலம் காட்டும். எப்படி சவுதியில் சுபஹ் தொழும் போது நாம் இங்கு தொழமாட்டோமோ அதே போன்று சவுதியில் பிறை பார்க்கும் அவர்களுக்கு தான் பொருந்துமே தவிர நாம் இங்கு பிறை பார்க்கும் போது தான் எமக்கு பொருந்தும். திருமறை வசனங்களை தலை கீழாக விளங்கினால் இவர்களைப் போன்று தவறான முடிவுகளைத் தான் எடுக்வேண்டிவரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே உலகில் எங்கு பிறை பார்தாலும் அது எம்மை கட்டுப்படுத்தும் என்று நிலைப்பாடு குர்ஆன் சுன்னாவிற்கு எதிரான நிலைப்பாடு. தத்தமது பகுதியில் பிறை பார்த்துப் பின்பற்றுவது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
மறுப்பின் சுருக்கமும் சில கேள்விகளும்.
முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் பிறை விடயமாக முன்வைத்த வாதங்களுக்குறிய பதிலை மேலே நாம் தந்துவிட்டோம்.
இப்போது சில கேள்விகளை அவரிடத்தில் நாம் முன்வைக்கின்றோம். அந்த கேள்விகளுக்கு அவர் ஆதாரத்துடன் பதில் தர வேண்டும். அப்படி ஆதாரத்துடன் பதில் தராத பட்சத்தில் தனது கொள்கையில் அவர் தெளிவுடன் இல்லை என்பதையும்இ வேலை இல்லாவிட்டால் அறிக்கை விடுபவர் என்பதையும் மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
1. மக்காவில் ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஓன்று கூடும் நாளில் தான் நாம் இங்கு நோன்பு வைக்க வேண்டும் என்றால் குர்ஆனில் இருந்தோ அல்லது ஆதாரப் பூர்வமான ஹதிஸில் இருந்தோ அதற்குறிய ஆதாரத்தை முபாரக் அப்துல் மஜீத் காட்ட வேண்டும்.
2. மதீனாவில் துல்ஹஜ் தலைப் பிறை தென்பட்ட பின்னர் நபியவர்கள் யாரையாவது மக்காவுக்கு அனுப்பி வைத்து மக்காவில் எப்போது தலைப் பிறை என்பதையோ அல்லது அரபாவில் என்றைக்கு ஹாஜிகள் ஒன்று கூடுகின்றார்கள் என்பதையோ பார்ப்பதற்கு முயற்சி எடுத்தார்களா?
முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் மேலுள்ள கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில் தர வேண்டும் என்று வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
(ஹிஷாம் ஆ.ஐ.ளுஉ அழைப்பாளர் –  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்)


அறபா பிறை விடயத்தில் அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் நபிமொழிக்கு முரணாக செயற்பட்டுள்ளன என்ற எமது உலமா கவுன்சிலின் அறிக்கைக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர் ஹிஷாம் என்ற ஒருவரால் பதில் தரப்பட்டுள்ளது. அது மேற்படி தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வமான பதிலாக கருதப்பட முடியாது. அந்த ஜமாஅத்தின் உத்தியோகபூர்வமான பதிலாக இருப்பின் அதன் தலைவர் அல்லது செயலாளரால் பதில் தரப்பட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் நியதியாகும்.
எமது கருத்துக்கு பதில் தந்தவர் கூட என்னை அரைகுறை என்றும், மீண்டும் மதுரசாவுக்கு சென்று படிக்க வேண்டும், வேலை இல்லாததால் அறிக்கை விடுவார் என்றும் வீதியில் நிற்கும் நாகரிகமற்ற சராசரி மனிதன் போல் சின்னத்தனமாக பதில் தந்துள்ளார். இத்தகையவர்கள்தான் குர்ஆன் ஹதீதை பின்பற்றுபவர்கள் என சொல்வது நபிகளாரை அவமதிப்பதாகும்.
நபியவர்களிடம் எவர் என்ன கேள்வி கேட்டாலும் அவரை தனிப்பட்ட வகையில் தாக்காது புன்முறுவலுடன் அவர் கேள்விக்குத்தான் பதில் தருவார்களே தவிர நீ ஒரு காட்டான், உனக்கு வேலை இல்லை, போய் படித்து விட்டு வா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். மாறாக பதிலை அழகாக தருவார்கள்.
பிறை சம்பந்தமான எனது அறிக்கையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை தனிப்பட்ட வகையில் நான் விமர்சிக்கவில்லை. அவர்கள் அவசர குடுக்கைகள் என்றோ, சில பொடியன்மாரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் என்றோ, கண்மூடித்தனமாக பீ ஜேயை பின்பற்றுபவர்கள் என்றோ நான் சொல்லவேயில்லை. மாறாக பிறை விடயத்தில் அவர்கள் கருத்து நபிமொழிக்கு முரண் என சொல்லி விட்டு எனது கருத்துக்களை முன் வைத்தேன்.
என்னைப்பொறுத்த வரை வேலை இல்லாவிட்டால் அறிக்கை விடுவார் என்பது சந்தோசமான ஒன்றுதான். எத்தனையோ மனிதர்கள் வேலை இல்லாவிட்டால் சந்தியில் நின்று வம்பளப்பார்கள், அல்லது ஏதாவது பொழுது போக்கில் இருப்பார்கள். அல்லது நாலு பணம் சம்பாதிக்க அலைவார்கள். நான் வேலை இல்லாவிட்டாலும் இருந்தாலும் கூட சமூகம் பற்றி சிந்திப்பவன், அது பற்றிய எனது கருத்துக்களை அறிக்கையாக்குபவன் என்று என்னை ஆக்கிய வல்லவனுக்கு நன்றிகள்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் அடிக்கடி அறிக்கை விடுகிறது. இவர்களும் வேலை இல்லாததால்த்தான் அறிக்கை விடுவார்கள் என்பதால்தான் என்னையும் அவர்கள் போல் இவர் நினைத்துக்கொண்டார் போலும்.
பிறை சம்பந்தமான எனது தலைமையிலான அகில இலங்கை உலமா கவுன்சிலின் கருத்துக்கு அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் இது வரை உத்தியோகபூர்வமான பதிலை தரவில்லை என்பதன் மூலம் அவர்களால் உண்மைக்கு மாறாக பதில் தர முடியாதுள்ளது என்பதே வெளிச்சமாகியுள்ளது. சில வேளை எம்மை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை என அவர்களை தக்லீத் செய்பவர்கள் கூறலாம். அப்படிப்பார்த்தால் அவர்கள் தாங்கள்தான் மார்க்கம் பற்றி அறிந்தவர்கள் என்ற இறுமாப்பில் இருக்கிறார்கள் என்று பொருள். அது கூட இஸ்லாத்துக்கு முரண்பட்ட பண்பாகும். இத்தகைய இஸ்லாத்துக்கு முரணானவர்களிடமிருந்து குர்ஆன் ஹதீத் அடிப்படையில் பதில் கிடைக்காது.

ஹிஷாம் என்பவர் எழுதியிருந்த விடயங்கள் ஏற்கனவே முஹம்மது வஸீம் என்பவர் எழுதிய விடயங்கள்தான். இவர்களுக்கு அமெரிக்காவை விட்டால் ஆதாரமே இல்லை போலும். அதற்கு நான் ஏற்கனவே பதில் தந்து விட்டேன். அதுதான் இதற்கும் பதிலாகும்.
இறுதியாக இவர் சில கேள்விகளை என்னிடம் முன்வைத்துள்ளார். அவை:
மக்காவில் ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளில் தான் நாம் இங்கு நோன்பு வைக்க வேண்டும் என்றால் குர்ஆனில் இருந்தோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீதில் இருந்தோ அதற்குரிய ஆதாரத்தை தரவேண்டும். அடுத்தது மதீனாவில் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்ட பின்னர் நபியவர்கள் யாரையாவது மக்காவுக்கு அனுப்பி வைத்து மக்காவில் எப்போது தலைப்பிறை தென்பட்டது என்பதை பார்ப்பதற்கு முயற்சி எடுத்தார்களா? இந்தக்கேள்விகளுக்கு நான் தெளிவாகவே பதில் சொல்லி விட்டேன். இருந்தும் மீண்டும் இதோ.

அள்ளாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அரபா நாள் நோன்பு நோற்பது அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப்பிந்திய ஆண்டு பாவங்களுக்கு பரிகாரமாகும். ஆதாரம்: முஸ்லிம் 1976.

இந்த ஹதீதில் அறபா நாள் அன்றே நோன்பு வைக்கும்படி நபியவர்கள் நேரடியாகவே சொல்லியுள்ளார்கள். இதன் பொருள் இவர்களுக்கு விளங்கவில்லையாயின் இன்னும் சில விளக்கங்களை தரலாம் என நினைக்கிறேன். அதாவது, நோன்பு காலத்தில் நீங்கள் நோன்பு பிடியுங்கள் என கூறியிருப்பதன் மூலம் நாம் எதனை புரிந்து கொள்கிறோம். நோன்பு மாதத்தில்த்தான் நோன்பு வைக்க வேண்டுமே தவிர வேறு மாத்தில் அது கடமையல்ல என்பதை புரிகிறோம். அதே போல் அறபா நாளில் நோன்பு வையுங்கள் என்றால் அறபா நாளில்தான் நோன்பு வைக்க வேண்டும். வேறு நாட்களில் அல்ல என்பது தெளிவு. ஜும்ஆ நாளில் தொழுங்கள் என்றால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளில்தான் தொழ வேண்டும் என்பதை குழந்தையும் புரியும்.
அறபா நாள் என்றால் என்ன? இந்தக்கேள்விக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ன பதில் சொல்லும்? ஆனால் உலக முஸ்லிம்களிடம் இக்கேள்வியை கேட்டால் அறபா நாள் என்பது அறபாவில் ஹாஜிகள் கூடுகின்ற ஒரேயொரு நாளையே குறிக்கும் என்பார்கள். அப்படியே அந்த அறபா நாளில் நாம் இங்கு நோன்பு வைப்பதைத்தான் நபியவர்கள் நமக்கு  கட்டளையிட்டுள்ளார்கள். இதைவிட தெளிவான ஆதாரம் ஒரு முஃமினுக்கு தேவைப்படாது.
அடுத்தது நபியவர்கள் யாரையாவது மக்காவுக்கு அனுப்பி பிறை பார்க்க வைத்தார்களா?
மதீனாவிலிருந்து ஒருவரை  மக்காவுக்கு அனுப்பி பிறை கண்ட செய்தியை எடுத்து வர குறைந்தது ஆறு நாட்கள் செல்லும். மதீனாவிலிருந்து மக்கா போய்வர சுமார் 800 கிலோ மீட்டர். இன்றைய வாகனத்தில் செய்வதாயின் சென்று வர சுமார் 8 மணி நேரம் எடுக்கும். ஒட்டகத்தில் சென்று வர எத்தனை நாள்; எடுக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
இங்கு ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபியவர்கள் ஒரு விடயத்தை செய்தால், ஏவினால் அது உலகம் அழியும் வரை மார்க்கமாகிவிடும். நபியவர்கள் அவ்வாறு மக்காவுக்கு ஒருவரை அனுப்பி பிறை பார்த்து வரும்படி கூறியிருந்தால் அவ்வாறு செய்தல் மார்க்கமாகியிருக்கும். இந்த நிலையில் ஷாம் தேசத்திலும் இந்தியாவிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்களும் தமது நாடுகளிலிருந்து மக்காவுக்கு ஒருவரை அனுப்பி மக்கா பிறை பார்ப்பதே மார்க்கமாக சுன்னத்தாக கருதியிருப்பர். இந்த நிலையில் ஷாம் தேசத்திலிருந்து மக்கா சென்று வருவதாயின் இருபது நாட்களுக்கு மேல் செல்லும். இந்தியாவாக இருப்பின் மாதக்கணக்கில் செல்லும். மக்காவுக்கு பிறை பார்க்க சென்றவர் அடுத்த மாதம்தான் இந்தியா வந்து சேர்வார்.
இஸ்லாம் எக்காலத்திற்கும் எல்லா தேசத்திற்குமுரிய மார்க்கம் என்பதனால் இது மக்களுக்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனாலேயே நபியவர்கள் இவ்வாறு வழி காட்டவில்லை. அதன் காரணமாக பின்னால் தொலை பேசி அறிமுகமாகும் காலத்தில் வாழும் மக்களுக்கும் ஏற்றாற்போல் அவர்கள் விளங்கும் வகையில் “அறபா நாளில் நோன்பு பிடியுங்கள்” என்ற அழகிய இன்று தெளிவாகும் வசனத்தை இறைவன் பாவிக்க வைத்துள்ளான். அறபா நாள் என்றால் துல்ஹஜ் பிறை 9 என்பதற்கும் அப்பால் ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேரும் நாள் என்பது வலுவானது.
இறைவனுடையதும் அவன் தூதரினதும் சில வசனங்கள் அன்றைய காலத்தில் அன்றைய காலத்துக்கேற்ப விளங்கும். அதே போல் இன்றைய காலத்துக்கேற்பவும் இன்று விளங்கும். தற்கு உதாரணமாக ஒரு சக்தியை கொண்டல்லாது உங்களால் வான் பிரதேசத்தை ஊடறுக்க முடியாது என்ற இறைவனின் வசனத்தை அன்றைய மக்கள் விமானம் மூலம்தான் இது சாத்தியம் என விளங்கவில்லை. மாறாக ஏதோ ஒரு சக்தி என விளங்கிக்கொண்டார்கள். அதே போல் இன்று அந்த சக்தி என்பது றொக்கட் என நாம் புரிந்து கொள்கிறோம். இதே போன்றதுதான் அறபா நாள் என்ற வார்த்தையாகும்.
நபியவர்கள் காலத்து மதீனத்து மக்களும் ஏனைய தொலைதூர முஸ்லிம்களும் தொலை பேசி கண்டு பிடிக்கப்பட்ட 18ம் நூற்றாண்டு வரை அறபா நாள் எப்போது என்பதை உடனடியாக அறிய முடியாத நிலையில் குத்து மதிப்பாக தமது பிரதேசத்தில் காணும் துல்ஹஜ் பிறையை வைத்து அறபா நாளாக இருக்கலாம் என்றெண்ணி நோன்பு நோற்றார்கள். தற்போது அறபா நாள் எதுவென அந்நாளுக்கு எட்டு நாட்களுக்கு முன்னரே நூறு வீதம் சரியாக தெரிந்து விடுவதால் நபிகளாரின் கட்டளைப்படி அறபா நாள் அன்றே நோன்பு நோற்க வேண்டும்.
ஒரு விடயத்தை நாம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நாள் என்பது 24 மணித்தியாலயங்களை கொண்டதாகும். உதாரணமாக இன்று திங்கட்கிழமை ஜனவரி முதலாம் திகதி என்றால் அமெரிக்கா முதல் இலங்கை வரை ஜனவரி முதலாம் திகதிதான். இன்றுதான் உலக முழுவதுமுள்ள முஸ்லிமல்லாத மக்கள் புது வருட தினம் கொண்டாடுகிறார்கள். அதனை நாமும் தொலைக்காட்சியில் காண்கிறோம். அதே வேளை இரவு பணிரெண்டு மணி என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். ஆனால் நாள் வித்தியாசப்படுவதில்லை. இன்று இலங்கையில் ஜனவரி புது வருடம் என்றும் நாளை அமெரிக்காவில் புது வருடம் என்றும் சொல்வதை யாரும் கேட்டிருக்கிறோமா? இல்லை. இன்று ஜனவரி முதலாம் திகதி என்றால் நேற்றிரவு 12 மணிக்கு இங்கு முசுப்பாத்தி காட்டியிருப்பார்கள், இன்று காலையானதும் அமெரிக்கவில் முசுப்பாத்தி காட்டுவதாக அறிவோம். மாறாக நேற்றிரவு இலங்கையில் 12 மணி க்கு ஆரம்பித்த இன்றைய தினம் நாளைதான் அமெரிக்காவில் ஆரம்பிப்பதில்லை. மாறாக உலகம் முழுவதும் இன்றுதான் முதலாம் திகதி. இரவு பகல் என்பதுதான் வித்தியாசமே தவிர முழு நாளும் வித்தியாசப்படாது. ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் இன்று மக்காவில் அறபா நாள் நாளை இலங்கையில் அறபா நாள் என்பது கூத்தாக தெரியவில்லையா? அறபா என்பதே மக்காவில் உள்ள இடம்தான். அப்படியிருந்தும் நாட்டுக்கு நாடு அறபா நாளை உருவாக்குங்கள் என்று நபியவர்கள் சொல்லியுள்ளார்களா?
அது மட்டுமல்ல இதன் மூலம் இஸ்லாம் அரசாட்சி செய்ய முடியாத, நிர்வாகத்துக்கு உதவாத மார்க்கமாக நாம் அடையாளப்படுத்துகிறோம். உதாரணமாக முழு உலகமும் அல்லது பாதி உலகம் இஸ்லாமிய ஆட்சின் கீழ் ஒரே கலிபாவின் கீழ் இருந்தால் இந்தோனிசியாவில் உள்ள ஒருவரும் துல்ஹஜ் மாதம் எட்டாம் திகதி மரண தண்டனை நிறைவேற்றுங்கள் என கலீபா கட்டளை இட்டால் எந்த ஊர் எட்டாம் திகதி என்ற கேள்வி ஏற்படும். மக்காவின் படியான எட்டாம் திகதியா இந்தோனேசியாவின் படியான எட்டாம் திகதியா என்ற கேள்வி மூலம் இஸ்லாம் நடைமுறைச்சாத்தியமான மார்க்கம் இல்லை என்ற முடிவுதான் வரும்.

இதனை நான் தனிப்பட்ட வகையில் ஒரு மொழி பெயர்ப்பாளராக கண்டுள்ளேன். சஊதியிலிருந்து வரும் ஒருவர் அவரது விசா றபிஉல் அவ்வால் 15ம் திகதி முடிவுறும் என்றிருக்கும். அப்படியானால் எந்த ஊர் றபிஉல் அவ்வல் 15ந்திகதி என்று தேட வேண்டும். இலங்கையில் றபிஉல் அவ்வல் 15ந்திகதி என்பது மாhச் 20 ந்திகதியாக இருக்கும். சஊதியல் மார்ச் 21 அல்லது 19ந்திகதியாக இருக்கும். இதுவெல்லாம் என்ன? ஏன் நாம் இன்னும் புரியாமல் இருக்கிறோம்?
ஆக அறபா நாளை ஊருக்கு ஊர் வேறாக வைப்பது இஸ்லாம் இந்த உலகுக்கு பொருத்தமற்ற மதமாக காட்டும்  இஸ்லாம் விரோதிகளின் முயற்சியாகும். மாhறாக மக்காவில் துல்ஹஜ் பிறை காணப்பட்டு எப்போது அறபா என அறிவிக்கிறார்களோ அதுவே முஸ்லிம்களின் அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் படி உலக முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே அறபா நாளில் நோன்பு பிடிப்பதே சுன்னாவின் நேரடியான வழிகாட்டலாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
அகில இலங்கை உலமா கவுன்சில்
 

       
       


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்