Skip to main content

Posts

Showing posts from June, 2015

இலங்கையின் முதலாவதுதமிழ் மொழி அல் குர்ஆன் விளக்கவுரைவெளியீடு

(அஷ்ரப் ஏ சமத்)


பேருவளைஜாமிஆநளீமிய்யாகலாபீடத்தின்முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,அக்குரணைஅல் குர்ஆன் திறந்தகல்லூரியின் ஸ்தாபகப் பணிப்பாளருமான உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மன்ஸ_ர் (நளீமி) “குர்ஆனியசிந்தனை”என்றபெயரில் எழுதியுள்ள அல் குர்ஆன் விளக்கவுரை (தப்ஸீர்) யின் முதலாம் பாகவெளியீட்டுவிழா02. 07. 2015 அன்றுமாலை இப்தாரைத்(6.15 மணிக்கு) தொடர்ந்துகொழும்பு– 10 டி. ஆர். விஜேவர்தனமாவத்தை இலக்கம் 310 இல் அமைந்துள்ளதபாலகத்தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஜாமிஆநளீமிய்யாகலாபீடஉதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க்; சி.. ஐயூப் அலி (நளீமி)தலைமையில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டுவிழாவில் ஜாமிஆநளீமிய்யாக் கலாபீடப்பணிப்பாளர் கலாநிதிஎம்.ஏ.எம். சுக்ரிபிரதமஅதிதியாகவும்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்எம். எம். ஏ.முபாரக் (மதனி) கௌரவஅதிதியாகவும்கலந்துகொள்ளவுள்ளனர்.
அல் குர்ஆன் விளக்கவுரையொன்றுகொண்டிருக்கவேண்டியஅனைத்துஅம்சங்களிலும் கவனம் செலுத்திதமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டஒருவரால்தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளமுதலாவதுதப்ஸீராக இதுவிளங்குகின்றது. அத்தோடு இலங்கையில் எழுதப்பட்…

மைத்ரியின் ர‌க‌சிய‌ க‌ணிப்பில் தேர்த‌லில் ம‌ஹிந்த‌ அணி இர‌ண்டாவ‌தாக வ‌ரும்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு இந்த இரகசிய கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது.
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் வெற்றிப்பெறும். இரண்டாம் இடத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணி பெறும். மூன்றாம் இடத்தை மைத்திரிபால சிறிசேனவின் அணி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையை தவிர்க்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று உயர்மட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி சிங்கப்பூரின் லீ குவான் யூ மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்டன் போன்றவர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உயர்நிலை முக்கியஸ்தர் என்ற தரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, நாமல் ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உதவி தலைவர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும்.
மூன்றாவதாக ராஜபக்சவினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதாகும்.
எனினும் இந்த ஆலோசனைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்தி…

ஹெல‌ உறும‌ய‌ ம‌ஹிந்த‌ இணைவு ???

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பு, ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பிளவடையாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவிற்கு ஆதரவான முக்கியஸ்தர் ஒருவரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முரண்பாடுகளை களைந்து இணைந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்சக்களை விரட்டியடிக்க இணைந்து செயற்பட்ட கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ச தரப்பு தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மஹிந்தவுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

முழு கிழ‌க்கையும் ஏமாற்றும் மு காவுக்கு சாய்ந்த‌ம‌ருது ஜுஜுபி

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாககொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்திருக்கும் விடயத்தை சாய்ந்தமருதுஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாகிகளிடம் ஏற்கனவே தெரிவிக்காமல் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டது ஏன்? என சாய்ந்தமருது மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது. இது மாத்திரமல்லாமல் மாகாண சபை கடிதத்தைக் காண்பித்து  சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாக சபையையும் அந்த ஊர் மக்களையும் ஏமாற்றியுள்ளார்களா? என்றும் அந்த ஊர் மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர்சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாக கேட்ட கேள்விக்கு    கொடுத்த பதிலில் தெரிவித்துள்ள விடயங்களை   சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி வாசல் நிர்வாகிகள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் அவர்களை நேரடியாகச் சந்தித்துகோரிக்கை விடுத்து உதவி கேட்டபோது அந்த நேரத்தில்    ஏன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கும் எல்லை நிர்ணயப் பிரச்சினை பற்றிய விடங்களை பே…

மைத்திரி, மஹிந்த இணைவார்கள் - பசில் நம்பிக்கை

இம்முறை பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாத வகையில் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கட்சி பிளவடைவதனை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இரு தரப்பிலும் சில உறுப்பினர்களுக்கும் கட்சியில் வேட்புரிமை வழங்குவது குறித்து இரு தரப்பிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.
எப்படியிருப்பினும் சிக்கல் ஏற்படாத வகையில் அதற்கு தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன். 
நான் இம் முறை பொது தேர்தலில் போட்டியிடவில்லை, தேசியப் பட்டியல் ஊடாகவும் வரப்போவதில்லை. 
இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.k

தேர்த‌ல் குண்டு. கிழக்கு மாகாணத்தில் தனியான நிர்வாக

போராட்டத்தை கைவிடவில்லை" - ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தனியான நிர்வாக அலகொன்றை பெற்றெடுக்கும் போராட்டத்தை கைவிடவில்லை எனவும் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனியான நிர்வாக அலகை ஏற்படுத்துவது தொடர்பான தமது யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொண்டு சென்றுள்ளதாகவும் உரிய நேரம் வரும் போது அது நிறைவேறும் எனவும் ஹக்கீம் கூறியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நிர்வாகத்தை பரவலாக்கும் போது, மொழி ரீதியாக மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மாவட்ட செயலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக பிரதேச மட்டத்தல் அனை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பிருக்க வேண்டும்.

இதனால், புதிய நிர்வாக அலகை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவசியமான நேரத்தில் அதனை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வேண்டாம்,

" அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைய முயற்சிப்பதாகவும், மஹிந்த ராஜபக்ச அதற்கு வாய்ப்பு வழக்க கூடதாதெனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதவி பேராசையில் ரத்ன தேரர்கள் உட்பட குழுவினர் இம்முயற்சியை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு செயற்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அவசியம் பிரதமர் பதவி அல்ல, நாட்டின் தலைவர் பதவியே என பெங்கமுவே நாலக தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்

சவுதி அரசு திட்டவட்டம் ***** ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று இந்த நிலையை மாற்றி ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதர்கு பல நாடுகள் முயர்ச்சித்து வருகின்றன இந்த நிலையில் இந்த இழி செயல்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள சவுதி அரேபியா இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படாமல் ஒத்து போகும் சர்வதேச சட்டங்களை மட்டுமே சவுதி அரேபியா மதிக்கும் என்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சவுதி அரேபியா அதே நேரத்தில் இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படும் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் புறகணிப்பதாகவும் எதிர்பதாகவும் தெரிவித்துள்ளது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்தை கேளி கிண்டல் செய்வதையும் இஸ்லாத்தை விமர்ச்சிப்பதையும் எந்த சூழலிலும் சவுதி அரேபிய பொறுத்து கொள்ளாது என்று கூறியுள்ள சவுதி அரேபியா மத உணர்வுகளை புண்படுத்துவது தான் கருத்து சுதந்திரம் என்றால் அந்த கருத்து சுதந்திரத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் காலில் போட்டு மிதிப்பதாகவும் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று …

20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக பைசர் முஸ்தபா உரை

கொழும்பு 7ல் உள்ள கதிர்காமர் ஆய்வு மன்றத்தில் 20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்; பைசர் முஸ்தபா உரையாற்றுவதையும் ஏனைய பேச்சாளர்களாக கலந்து கொண்ட பாராளுமன்ற பிரதி சபாநாயகர் சந்திமால் வீரக்கொடி, த. தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க மற்றும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரை படத்தில் காணலாம்.

ந‌யீமுல்லாவுக்கு தெரியாம‌ல் எவ்வாறு அமைச்சுக்குள் வைத்தே ஒருவ‌ர் போலியாக‌ ந‌டிக்க‌ முடியும்?

நீர் வழங்கல் சபையில் தொழில் தருவதாக கூறி மோசடி செய்த இருவர் மருதானையில் கைது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் விடுத்த எழுத்து மூல வேண்டுகோளையடுத்தே பொலீஸார் மேற்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புப் சபையில் 500 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதற்கான நியமனம் வழங்கும் விடயத்தில் பண மோசடி இடம்பெற்றுவருவதாக வதந்திகள் பரவத் தொடங்கின. இது குறித்து மிகவும் விழிப்பாக இருக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச் சேர்ந்த ஐ. க…

Sri lanka model united nations.

The press conference organized by SLMUN in Kadircamar hall today.

வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்கள்

வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும்,இலங்கைக்கான அமெரிக்க பதில் துதுவர் அன்று சீமானுக்கும் இடையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்
மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் – அதே வேளை இலங்கையின் நுகர்வு பொருட்களை அமெரிக்க கொள்வனவு செய்துவருகின்றது.இலங்கையின் அமெர்க்காவுக்கான ஏற்றுமதி 2 பில்லியன்களாகும்.அந்த வகையில் தைத்த ஆடைகளே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இன்னும் இலங்கையில் அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை செய்வதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என நம்புகின்றேன்.இலங்கையின் எழுத்தறிவு வீதம் ஆசியாவில் முன்னணியில் இருக்கின்றது.தொழிலாளர்களின் உழைக்கும் திறமை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய ஆறு தையல் தொழிற் பேட்டைகளை ஆர…

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பழி வாங்கல்கள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்- உலமா கட்சி

முஸ்லிம் காங்கிரஸ் மாற்றுக்கட்சியினரை இடமாற்றம் செய்வதன் மூலம் அரசியல் பழி வாங்கல்கள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது அண்மையில் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையில் கடமை புரியும் அக்கரைப்பற்றை சேர்ந்த 13 ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல் மூலம் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டனர். இவ்விடமாற்றத்தை ஆட்சேபித்து கல்முனையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் அவர்கள் முறைப்பாடு செய்தனர். பின்னர் நீ.வ.வ. சபை சங்கங்களின் ஒன்றான நிதா சேவகா சங்கமய ஊடாக இவ்வ+ழியர்கள் அனைவரும் சென்று பொது முகாமையாளரை சந்தித்து இவ்விடமாற்றம் இரத்து செய்யப்பட்டது. இதனை கேள்வியுற்ற இவ்விடமாற்றத்துக்கு காரணமான அக்கரைப்பற்று அரசியல் வாதியும் முஸ்லிம் காங்கிரஸில் புதிதாக இணைந்தவ ஒருவரால்; இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் அவர்களுக்கு தொலைபேசி மூலம்; இடமாற்றம் இரத்து செய்யப்பட்டதை இட்டு அக்கரைப்பற்றில் வெடில் கட்டு, பால் சோறு, இனிப்பு வழங்கப்படுகின்றது என அவரிடம் பொய் சொன்னதாகவும் அதனை தொடர்ந்து மீண்டும் அவ்விடமாற்றத்தை இரத்துச் செய்ததை இரத்து…

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் மேற்குலகின் திட்டம் சிக்கலில்........ - உப்புல் ஜோசஃப் பெர்னாண்டோ

. ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கும் திட்டத்தில் திரைமறைவாக நின்று செயற்பட்ட மேற்குலக நாடுகள், பாராளுமன்ற அதிகாரத்தையும் தமக்குப் பிடித்தவர்களின் கைகளில் கொடுக்கும் திட்டம் கைகூடாமல் திண்டாடுவதாக உப்புல் ஜோசஃப் பெர்னாண்டோ சிலோன் டுடே பத்திரிகையில் எழுதிய பத்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார். மாலைதீவுகளில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி கையூமை தோற்கடித்து, நஷீடை ஆட்சிபீடமேற்றிய மேற்குலக நாடுகளின் திட்டம், பின்னர் நஷீட்டின் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராஜினாமாச் செய்தபோது தவிடுபொடியானதுபோன்றதொரு நிலைமை, இலங்கையில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டும் மேற்குலகின் திட்டம் சிக்கலில் மாட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மூலம் ஜனாதிபதி சந்திரிகாவை அணுகி, அவரது உதவியுடன் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியாக ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்குவதில் மேற்குலக நாடுகள் பின்னணியில் தீவிரமாகச் செயற்பட்டிருந்தன. ஆனால், மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்ச…

ஜனாதிபதி - கூட்டமைப்பு நேற்று திடீர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடினார். நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டார். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா, செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக் கூடியதும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடை வதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது. வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதிலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பாக எடுக்க வெண்டிய உடனடி நடவடிக்கைகள், பழைய போராள…

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழியொன்றில் செல்ல நேரிடும் என ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மக்கள் கேட்கும் நபருடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைப்பதா? அல்லது ஐ.தே.கவுக்கு ஆட்சியை தாரைவார்ப்பதா என முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பயந்து பாராளுமன்றத்தை கலைப்பது வெட்கக் கேடான விடயம் என்றும் தெரிவித்தனர். ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் களான டளஸ் அலஹப் பெரும, திலும் அமுனுகம, ஜான வக்கும்புர, அருந்திக பெர்ணாந்து, ரஞ்சித் சொய்சா ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர். ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 6ம் திகதி விவாதிக்கப்பட உள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒழுங்குப் புத்தகத்தில் உள்ள நிலையில் அவற்றை நிறுத்த ஐ.தே.க. முயல்கிறது. எம்…

மகிந்தோதயஆய்வு கூட

மட்டக்குழியில் முகத்துவாரத்தில் உள்ள ஆனந்த மத்திய மகாவித்தியாலயத்தில் மகிந்தோதயஆய்வு கூடத்தினை மேல்மாகண சபை உறுப்பினர் மொஹமட் பாயிசின் அழைப்பின் பேரில் மேல்மாகன முதலமைச்சரும் கல்வியமைச்சருமான பிரசன்னரணதுங்க இவ் ஆய்வு கூடத்தைதிறந்துவைத்தார். கல்லூரிஅதிபர் எம். டபிள்யுதிசாநாயக்க,வலய கல்விப் பணிப்பாளர் ஜயந்தவிக்கிரமரத்தினவும் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா மீடியா பவுன்டேசனின் மாதாந்த செயற்குழு கூட்டம்

ஸ்ரீலங்கா மீடியா பவுன்டேசனின் மாதாந்த செயற்குழு கூட்டம் அதன் சிரேஷ்ட ஆலோசகர் அல்ஹாஜ் எம் பி எம் ஹ{சைன் பாறூக்கின் இல்லத்தில் நடைபெற்ற போது அவருடன்; சிரேஷ்ட ஊடகவியலாளர்களான நௌஷாட் முஹிடீன், ரஷீத் எம் ஹபீல், இஸ்மாயில் பின் மஆரிப், கே. ர்pஸ்வி மீடியா பவுன்டேசன் பொதுச் செயலாளர் முபாறக் அப்துல் மஜீத், காமிலா ஆகியோரை படத்தில் காணலாம்.
படம்:; மேற்கு பிராந்திய நிருபர்

வ‌ங்கிக்குள் பொதுப‌ல‌சேனா அட்ட‌காச‌ம். ந‌ல்லாட்சி ??

இலங்கையில் உணவு (ஹலால்) மூலம் அடிப்படை வாதத்தை புகுத்தியவர்கள் வங்கி முறைக்குள்ளும் அடிப்படை வாதத்தைப் புகுத்துக்கிறார்கள் என தெரிவித்து தற்போது புதிய தலைப்பைத் தூக்கிப் பிடித்து தமது செல்வாக்கை உயர்த்த பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளும் பொது பல சேனாவின் வழிகாட்டியான பயங்கரவாதி ஞானசாரவும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானக உட்பட்ட பரிவாரமும் மத்திய வங்கிக்கு விஜயம் செய்துள்ளது. அண்மையில் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வினா எழுப்பியிருந்த ஞானசார அங்கு நேரடியாக சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், ஹலால் உணவுக்கு அடுத்தபடியாக வங்கிகள் ஊடாக அடிப்படைவாதம் புகுத்தப்படுவதாகவும் இதையெல்லாம் பேச மறக்கும் சமூகம் கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளைத் தூக்கிப் பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவலிங்கம் சதீஸ்குமார் எழுதிய நூல்களின் தொகுதி இரா. சம்பந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது

சிரேஸ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஸ்குமார் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வெளியிட்ட ஐந்து நூல்களின் தொகுதி கடந்த திங்கட்கிழமை (22.06.2015) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பேராசிரியர் சோ . சந்திரசேகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு மேல் மாவட்ட 237 ஏ லயன்ஸ் கழகத்தின ்வருடாந்த மாநாடு

அஸ்ரப் ஏ சமத்

கொழும்பு  மேல் மாவட்ட 237 ஏ லயன்ஸ் கழகத்தின ்வருடாந்த மாநாடு அதன் தலைவா் லயன் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வு கொழும்பு கோல்ப் களப்பில் நடைபெற்றது. அடுத்த நிருவாகத் தெரிவில் புதிய தலைவராக லயன் ஆரிப் றிபாய்டின் தலைமைப் பொறுப்பை மாவட்ட லயன் கழகத்தின் ஆளுனா் நீல் செனவிரத்தின விடம் தலைமைப் பொறுபு்பை ஏற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் செயலாளாராக லயன்ஸ் இல்யாஸூம் உப தலைவராக அஸ்ரப் ஹூசைனும் தெரிபு செய்யப்பட்டனா்.

அமைச்சரவையில்; ஆமா சாமி. வெளியே வழக்கு சாமி.

20 திருத்த‌த்துக்கு அமைச்ச‌ர‌வையில் அனும‌திய‌ளித்துவிட்டு பார‌ளும‌ன்றில் அத‌னை தோற்க‌டிப்போம், நீதி ம‌ன்ற‌ம் போவோம் என்றெல்லாம் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் துள்ளிகுதிப்ப‌து முஸ்லிம் ச‌மூக‌த்தை ஏமாற்றும் அவ‌ர‌து வ‌ழ‌மையான‌ அர‌சிய‌லாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். 
க‌ல்முனையில் ந‌டைபெற்ற‌ க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு அவ‌ர் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, 
20 வ‌து தேர்த‌ல் திருத்த‌ச்ச‌ட்ட‌ம் சிறுபான்மை ம‌க்க‌ளை ஓர‌ம் க‌ட்ட‌ வேண்டும் என்ப‌த‌ட்காக‌வே கொண்டு வ‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. சிறு பான்மை க‌ட்சிக‌ளை கூட‌ வைத்துக்கொண்டே இத்திருத்த‌ம் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌தான‌து பேரின‌வாதிக‌ளுக்கு கிடைத்த‌ மிக‌ப்பெரிய‌ வெற்றியாகும். சிறு பான்மை க‌ட்சித்த‌லைவ‌ர்க்ளுக்கு கொடுப்ப‌தை கொடுத்க்ஹு விட்டால் அவ‌ர்க‌ள் அமைச்ச‌ர‌வையில்  ஆமா போட்டுவிட்டு ச‌மூக‌த்திட‌ம் சென்று வீராப்பு பேசி ஏமாற்றுவார்க‌ள் என்ப‌தும் இத்த‌கைய‌ ச‌மூக‌ துரோகிக‌ளை வைத்துக்கொண்டே த‌ம‌து பேரின‌ நிக‌ழ்ச்சி நிர‌லை நிறை வேற்ற‌ முடியும் என்ப‌தை ந‌ன்றாக‌ தெரிந்து வைத்து…

தடுமாறும் மைத்திரி. ஸ்ரீல.சு.க அரசை அமைப்பதே எமது நோக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்க மொன்றை அமைப்பதே எமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையக த்தில் கட்சியின் நாடளாவிய இளைஞர் பிரதிநிதிகள் மத்தியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, பொதுத் தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் அரசாங்கங்கள் அமைந்ததும் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்ததும் இடம்பெற்றுள்ளன, என குறிப்பிட்ட ஜனாதிபதி 2010ல் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த 127 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் அதன் பின்னர் கட்சித் தலைமையகத்தையும் கட்சியின் செயற்பாடுகளையும் அலட்சியம் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. “நாட்டை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்செல்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் நிமல்ச…

மைத்திரியை வெற்றிபெற செய்தமை முட்டாள்தனம்

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்தமை முட்டாள்தனமான செயல் என்பது தற்போது உறுதியாகி வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இளைஞர், யுவதிகளின் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தற்போது மீள முடியாத அளவுக்கு வீழ்ந்து போயுள்ளது. எனினும் ஜனாதிபதி அந்த முன்னணியை வெற்றியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வகையில் சவாலை ஏற்படுத்துவதாகும். நமக்கு நாமே குழியை வெட்டிக்கொண்ட போன்ற செயலே நடக்கும்.

மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து போகும் கும்பலுக்கு மீண்டும் மக்கள் ஆணையை பெற முடியாது. அவர்களை ஒன்றிணைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தால், அப்போதுதான் சிக்கல் தோன்றும்.

அவர்களை ஒன்றிணைக்கும் விடயத்தை காரணமாக கொண்டே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து வருகிறார். அதனை ஜனாதிபதி பகிரங்கமாக கூறியுள்ளதால், நாம் செய்த முட்டாள்தனம் உறுதியாகியுள்ளது என்றும் ஹரின் பெர்னாண்டோ கு…

நிதாவுல் ஹைர் = நோன்பை முன்னிட்டு உதவிப் பொருட்கள்

(ஏ.எஸ.எம்.ஜாவித்)   2015.06.21;
நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட தந்தையை இழந்த சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 400 அநாதைப் பிள்ளைகளுக்கு நிதாவுல் ஹைர் நிறுவனத்தினால் புனித நோன்பை முன்னிட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளரும் நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் செயலாளருமான எஸ்.எல்.நௌபர் மௌலவி தலைமையில் நேற்று (20) கொழும்பு அல்-ஹிதாய நவோதைய பாடசாலையில் இடம் பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக மற்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஸாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஸ் ஸெய்க் காலித் அல்-தாவுத் மற்றும் மேற்படிக் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் பொருள் உதவி வழங்கிய பரோபகாரியும் சவுதி அரேபியாவின் பிரபல சமுக சேவையாளருமான அபு பஹ்த் அல்-ஹன்னாஸ் அவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்..
இதன்போது நாடளாவிய ரீதியில் கணவன்மாரை இழந்த சுமார் 200 விதவைத் தாய்மார்களுக்கு வீட்டுச் செலவிற்கு நான்கு மாதங்களுக்குத் தேவையான நிதி உதவிகளும்  அவர்களின் ஒவ்வொரு பிள்…

பத்திரிகைகளின் தோற்றமும் செய்தி நிறுவனங்களும்

சர்வதேசமெங்கும் செய்தித் தாள்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் பண்பாடு, அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றிக்கு உறுதுணை புரிகின்ற செயற்பாடுகளில் பத்திரிகையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. சாதாரணமாக சமூக வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்ற அனைவரும் உலகப் போக்கை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. ஆதியில் பத்திரிகை அச்சிடுவதற்கு உண்டான சிக்கல்கள், பத்திரிகை வெளியிடுவதில் ஏற்படுகின்ற பங்கம், செய்தித் தாளின் தோற்றம் என்பவை பற்றி ஆராய்வது முக்கியம். உலகில் முதன் முதல் வெளிவந்த செய்தித்தாள் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் பிரசுரமானது. ஆறாம் நூற்றாண்டில் வெளிவந்த இதற்கு ‘ட்சிங் பவோ’ என்று பெயரிடப்பட்டது. இதற்கு பத்திரிகை சுதந்திரத்தை கண்டிப்பாக பேண வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதற்கு காரணம் இப்பத்திரிகை முற்று முழுதாக சீன அரசாங்கத்தினாலேயே அச்சிடப்பட்டமையே. இதனைத் தொடர்ந்து சர்வதேசமெங்கும் தனியார் நிறுவனங்கள் செய்தித் தாள்களை தினமும் பிரசுரித்து வாசகர்களைத் திருப்திப்படுத்தின. இதனால் அரசாங்கத்திற்கு பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. …

சிறு பான்மை கட்சிகள் ரணிலிடம் தஞ்சம்.

சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பின்றி 20 திருத்தம் * பல்கட்சி அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் பேணப்படும் * சிறுபான்மை கட்சித் தலைவர்களின் அலரிமாளிகை சந்திப்பில்; பிரதமர் உறுதி
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்தார். 20வது திருத்தம் குறித்த அதிருப்தி களை இச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதன் போதே தன்னை சந்தித்த சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடமே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்றுக் காலை அலரிமாளிகையில் ஐ.தே.க தலைவரும், பிரதம…

க‌ல்முனை தைக்கா வீதியின் மோச‌மான‌ நிலை. (போட்டோக்க‌ள்).

ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் ஆட்சியின் கீழுள்ள‌ ஒரேயொரு மாந‌க‌ர‌ச‌பையான‌ க‌ல்முனையின் முத‌லாவ‌து ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட ஜும்ஆ பள்ளிவாய‌ல் உள்ள‌ தைக்கா வீதியின் ப‌ரிதாப‌மான‌ நிலையே இது. இந்த‌ வீதி சுமார் 40 வ‌ருட‌ங்க‌ளாக‌ திருத்த‌ப்ப‌ட‌வில்லை. க‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல்க‌ளில் முஸ்லிம் காங்கிர‌சுக்கே இந்த‌ வீதியில் உள்ள‌ ம‌க்க‌ளில் 99.9 வீத‌மான‌ ம‌க்க‌ள் வாக்க‌ளித்துள்ள‌ன‌ர். ஆனாலும் ம‌க்க‌ள் ஏம‌ற்ற‌ப்ப‌ட்ட‌து த‌விர‌  வேறு இல்லை.
த‌ற்போதைய‌ க‌ல்முனை மேய‌ர் நிசாம் காரிய‌ப்ப‌ர் க‌ட‌ந்த‌ மாந‌க‌ர‌ தேர்த‌ல் நேர‌த்தில் இந்த‌ வீதியில் உள்ள‌ த‌வ்ஹீத் ப‌ள்ளிக்கு தொழ‌ வ‌ந்தார். அத‌ன் பின் இந்த‌ வீதிப்ப‌க்க‌மே த‌ல‌வைத்து ப‌டுக்க‌வில்லை என‌ ம‌க்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். முஸ்லிம் காங்கிர‌சுக்கு வாக்க‌ளிப்ப‌தில் அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌ட்ட‌ இந்த‌ வீதி ம‌க்க‌ள் தொட‌ர்ந்தும் ஏமாற்ற‌ப்ப‌ட்ட‌தே மிச்ச‌ம். இனியாவ‌து க‌ல்முனை த‌லைமையிலான‌ க‌ட்சியில் ஒன்று ப‌டுவார்களா?
-உல‌மா க‌ட்சி ஊட‌க‌ பிரிவு.