Skip to main content

Posts

Showing posts from May, 2015

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

கொழும்பில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

படங்கள் இணைப்பு) (பட உதவி - Asim )  கொழும்பு - பொறள்ளயில் அமைந்துள்ள ஜாமியுல் அல்பார் பள்ளிவாசல் மீது இன்று இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், பள்ளிவாசலின் நிலைமைகளை பார்வையிட அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்காவின் வீதிக்கு இறங்குவோம் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்காவின் மக்களை அணிதிரட்டி வீதிக்கு இறங்குவோம். சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றுத்தின் செயலாளர்எஸ்.எம்.கலீல் -நேர்காணல் :- பி.எம்.எம்.ஏ.காதர்- சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் தேர்தல் வாக்குறுதியாகி விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் குறியாக இருக்கிறோம் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ் முஹம்மத் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக வேண்டும் என்கிற சிந்தனையை மக்கள் மயப்படுத்தி அதனை வலுவான கோரிக்கையாக மாற்றியமைத்து, கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்காக சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் எனும் சிவில் அமைப்பு போராடி வருகின்றது. அதன் செயலாளராக தென்கிழக்கு பல்கலைகழக கணக்காய்வு உதவியாளர் கலீல் எஸ் முஹம்மத் பணியாற்றி வருகின்றார். இன்று சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை மிகவும் கூர்மையடைந்து அரசாங்கத்தின் கதவை தட்டி நிற்கின்ற நிலையில் அவ்விவகாரம் தொடர்பில் அவர் எமக்கு வழங்கிய

அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம்

ஏ.எச்.எம் பூமுதீன் மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று காலை குறித்த கண்டனக் கடிதம் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ காரியாலயத்திலிருந்து மியன்மார் தூதுவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் உள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனையை அடைந்துள்ளனர். இலங்கையைப் போன்று மியன்மாரும் ஒரு பௌத்த நாடாகும். புத்த பெருமான் மற்றுமொரு சமுகத்தை கொடுமைப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதியை வழங்கியிருக்க வில்லை. இது விடயத்தில் மியன்மார் அரசு பௌத்த போதனையை பின்பற்றி உங்களது நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இனிமேலும் கடந்த கால துயரங்கள் இடம்பெறாமல் பாதுகாத்து சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாகவும் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதே

மியன்மார் - முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

மியன்மார் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வரக் கோரியுள்ளது என கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனச்சுத்திகரிப்பு படுகொலைகள், பொதுவாக உலக முஸ்லிம்களையும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களையும் மிகவும் மனவேதனைக்கு உட்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். இது சர்வதேச பிரச்சினைகளில் ஒன்றாக மாத்திரமன்றி, மியன்மார் (பர்மா) ரோஹிங்கியா மக்களின் மனிதாபிமான, வாழ்வாதார மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினையாகவும் அணுகப்பட வேண்டுமென்றும், அநீதி இழைக்கப்பட்ட அந்த மக்களை வெறும் பொருளாதார அகதிகளாக மட்டும் நோக்காமல், தமது இருப்பையும், உடைமைகளையும் இழந்த அரசியல் அகதிகளாகவும் பார்க்க வேண்டுமென்றும

குடியிருப்புக் காணிகள் வனப் பிரதேசமாக 2012 இல் பிரகடனம்

முசலி பிரதேச செயலக மக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு தமக்குரிய காணிகளை ஜி. பி. ஆர். எஸ். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி, முள்ளிபுரம் மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் வில்பத்து விளாந்திபுரம் இந்நாட்டு மக்களின் ஒருபெரும் சொத்து அது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்குரிய ஒரு சொத்து. இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு தெற்கிலுள்ள மக்களை விடவும் மரிச்சுக்கட்டி, பாலக்குழி, முள்ளிகுளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கே அதிகமுள்ளது. அவர்கள் தான் இவ்வனத்தை காலா காலமாகப் பாதுகாத்து வந்தார்கள். ஆனால் சமாதானம் ஏற்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து கொண்டு ஜ

வேட்பாளர்களிடமிருந்து சு. க. ஜூன் 05வரை விண்ணப்பம் ஏற்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் என்பவற்றிற்காக வேட்பாளர்களிட மிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விண்ணப்பம் கோரியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 5 வரை ஏற்கப்பட உள்ளதோடு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 10 வரை ஏற்கப்பட இருப்பதாக சு. க. செயலாளர் நாயகம் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ள அவர் எம்.பி.கள் அமைப்பாளர்கள் தவிர வேறு ஆர்வமுள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஆட்சியை கையளிக்குமாறு ஐ.ம.சு.மு கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.கவுக்கு ஆட்சியில் இருக்க முடியாது பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.க.வுக்கு ஆட்சியில் இருக்க அருகதை இல்லை. எனவே, தமது கட்சிக்கு ஆட்சி பொறுப்பை வழங்குமாறு கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் எடுத்த தீர்மானத்தின் படி நேரில் அதனை ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு செய்யப் பட்டதாகவும் ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், அடுத்த தேர்தலில் ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது குறித்தும் ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை மீளப்பெறுவது குறித்தும் ஜனாதிபதியு டனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சு நடத்த கடந்த வாரம் நடந்த ஐ.ம.சு.மு. கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. அதன்படி நேற்று ( 27) இன்றும் இந்த சந்திப்புகள் இடம் பெறுகின்றன.

20 ??

புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய அரசியலமைப்பின்  20ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் இன்று (27) இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதிய முறைமைக்கு அமைய தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுகளும் அரசியல் கட்சிகளிடையே நேற்று வரை ஏற்பட்டிருக்கவில்லை என அறிந்து கொள்ள முடிகிறது. குறித்த தேர்தல் முறைமைக்கு அமைய இரு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும், மற்றையதில் குறித்த எண்ணிக்கை 225க்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக இருக்கும் பட்சத்தில் அதில் 160 பேர் தொகுதிவாரி தேர்தல் முறைமை மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என சிலரும், 225 ஆக அமையும் பட்சத்தில் 125 பேர் தொகுதிவாரி தேர்தல் முறைமை மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டும் என சிலரும் பரிந்துரை செய்திருந்தன

ராஜபக்ஷவின் ஆட்சியில் இருந்தவர்களுக்கு இப்போதுதான் ஞானம் பிறக்கிறது

கல நிதி விடயங்களுக்கும் பொறுப்பு கூறும் நிறுவனம் பாராளுமன்றமே நிதி தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பு கூறும் நிறுவனமாக பாராளுமன்றமே திகழ்கின்றது என்பதை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரிவித்து வந்த போதும் தற்போதுதான் ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவர்களுக்கு இது தொடர்பில் தெளிவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன் றத்துக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டுமென்று முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன ஆகியோர் கூறுகிறார்கள். ஆனால், நான் ஒரு தசாப்தமாக இதனையே தெரிவித்து வந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒன்பது நூலாசிரியர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நூல்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தினால் எந்தவொரு அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவில்லை. பாராளுமன்றத்தை மதிக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறவில்லை. குறிப்பாக சீன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட போர்ட்சிட்டி திட்டம், மத்

வில்பத்து விவகாரம். மைத்திரியின் முகமூடி இப்போதுதான் ரிசாதுக்கு புரிகிறது

ஏ. எச்.எம்.பூமுதீன் வில்பத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளிப்பை தோற்றிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது 'வில்பத்து மற்றும் மன்னார் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமையை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று குறிப்பிட்டிருந்தார். மேற்படி கருத்தே முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளி;ப்பையும் ஆச்சரியத்தையுடம் தோற்றுவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் சமுகத்தினர் ஜனாதிபதியின் மேற்படி கருத்துக்கு கடும் தொனியில் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மகிந்த – மைத்திரி இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள்தான் என்றும் அந்த இருவரும் முஸ்லிம் சமுகத்தை மாற்றுக் கண் கொண்டு பார்ப்பவர்கள் தான் என்றும்இ நம்பவைத்து முஸ்லிம்களை மைத்திரி ஏமாற்றிவிட்டார் என்றும் கடுமையாக தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மகிந்த ஆட்சிக் காலத்தில் பொதுபலசேனா போன்ற ஒரு சில இனவாத குழக்களே வில்பத்து விவகாரத்தை தூக்கிப் பிடித்து இனவாதத்தை கக்கியது.  எனினும் வடபு

ஹக்கீமின் கன்னத்தில் மைத்திரி அறைந்தார்

Jaffna muslim -நஜீப் பின் கபூர்- ஒரேயடியாக ஹக்கீமின் கன்னத்தில் மைத்திரி அறைந்தார் என்று தலைப்பைப் போடாமல் சற்று மென்மைப்படுத்தி தலைப்பைக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் உண்மையில் ஹக்கீமின் கன்னத்தில் அறைந்தார் மைத்திரி. ஹக்கீம் மன்னிப்புக் கேட்டார் என்று தான் இந்தக் கதையை சொல்லி இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. மைத்திரி மென்மையான ஒரு மனிதனாகத்தான் இதுவரை பொதுவாகப் பார்க்கப்படுகின்றார். ஆனால் இந்த மைத்திரி பேயாக  மாறி நின்ற ஒரு சம்பவம்தான் நாங்கள் சொல்கின்ற அறையும் மன்னிப்பும் என்ற விவகாரம்-கதை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நகர அபிருத்தி அமைச்சின் ஏக அதிகாரங்களுக்கும் கோத்தாபே ராஜபக்ஷவே பொறுப்பாக இருந்தார். அவர் காலத்தில் பல சட்டச்சிக்கள் பிரச்சினைகள் இருந்தாலும் கொழும்பு நகர் நவீனமயப்படுத்தப்பட்டு அது கவர்ச்சிகரமாக உருமாற்றம் செய்யப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. அப்போது பாதுகாப்புப் படைத்தரப்பினர் நகரைச் சுத்தம் பண்ணுக்கின்ற பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் இந்தப் பொறுப்புக்களில் இருந்து இராணுவம் வாபஸ் வா

நூல் வெளியீட்டு விழா ஜூன் 6 கொழும்பில்

தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ~வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்| நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை (06.06.2015) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ராஜித சேனாரட்ன பங்கேற்கின்றார். விசே;ட விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி. ஆகியோர் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமுமான எம். எம். ஸ_ஹைர், இலங்கைத் தரக்கட்டளை நிறுவனத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். எஸ். அனீஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றுவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம

மஹிந்த பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

அரசியலில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது யாழ். மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு இந்நாட்டு சகல பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். இந்தசம்பவத்தை வைத்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அதிகாரத்தைக் கைப்பற்ற எதனையும் விற்பனை செய்ய மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கிறார். ராஜபக்ஷ ஆட்சியின் மீள்புரட்சியை தோற்கடிக்க வேண்டும். அவர்களை அரசியலில் மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது. அவர்களை முற்றாக ஒழிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களின் செயற் பாட்டாளர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், ராஜபக்ஷ ஏகாதிபத்திய ஆட்சியை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக வெற்றிபெறச் செய்வதற்கு சம

பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.முவிடம் அரசை கையளிக்க வேண்டும்

கட்சியின் ஏக தீர்மானம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிப்பு பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரி முன்னணியின் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது ஏகமனதான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு கடித மூலம் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைத்து பிரதமரையும் தெரிவு செய்த பின் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வழிவகை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர். நேற்றைய தினம் கொழும்பு அபயராமவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தெரி வித்தார். பிரதமரை நியமிப் பதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி க்குள் எந்தவித சிக்கல்களும் கிடை யாது என்பதையும் நாம் ஜனாதிபதி க்குத் தெரிவித்துள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கல்முனையில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கல்முனையில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய போது எடுத்த படம். வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி வழங்கக் கோரும் மகஜர் ஒன்றும் கல்முனைப் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

வில்ப‌த்து ச‌ம்ப‌ந்த‌மான‌ ஜ‌னாதிப‌தியின் உரை. அக‌தி முஸ்லிம்க‌ளுக்கு ஆப‌த்து.

வில்பத்து தொடர்பில் கடந்த அரசாங்கம், செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது - மைத்திரி வில்பத்து சரணாலயம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரிகளை இன்று சந்தித்தப் போதே ஜனாதிபதி இதனை கூறினார். வில்பத்து சரணாலயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரிகளை இன்று சந்தித்தப் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இலங்கை வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் சஞ்சிகைளின் 25 ஆவது பிரசூரம் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்ட்டது. இந்த நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வில்பத்து சரணாலயத்தில் மன்னார் பிரதேசத்தை மையப்படுத்தி கடந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை அனுமதிக்க போவதில்லை். சரணாலயத்தின் காணிகளையே மீள் குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எமத

கல்லொழுவை அல் அமீன் மாகா வித்தியாலயத்தின் அதிபர் - நேற்று நடைபெற்ற விழாவின் கூறிய தகவல் -

(அ~;ரப் .ஏ. சமத்) இந்தப் பாடசாலைக்கு நான் அதிபரக வந்து 3 மாதங்கள் ஆகின்றன. நேற்று முன்தினம் பாடசாலை வகுப்பரையில் மாணவகர்கள் தூள் (போதைப்பொருள்) பாவிப்பதனை அவதாணிக்க முடிந்தது. ஆகவே இவ் விழாவுக்கு வருகைதந்த மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்களே மேல் மாகாண முதலமைச்சரிடம் ஊடாக இவ்விடயத்தை கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இந்தப் பாடாசலையின் சகல வகுப்பறைகளையும்  ஏனைய பிரதேசங்களையும் அதிபர் அறையில் இருந்துகொண்டு அவதாணிதற்கக்  கூடியவாறு ஒரு சீ.சீ.டி கமராக்கள் பொருத்தி தாருங்கள். என இக் கல்லூரியின் அதிபர் ஹமீல் வேண்டுகோள் விடுத்தார். கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகளின் சங்கத்தினால் மினுவங்கொட கல்லொழுவ அல் அமீன் மாகாவித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு மற்றும் க.பொ.த.சாதாரண தரம் சித்தியெய்திய மாணவர்களுக்கு பரிசிதலும் சான்றிதழும் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் இக் கல்லூரியின் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் மேல்மாகண சபை உறுப்பிணர் எம். பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கம்பஹா மாவட்டட இஸ்லாமிய பாடசலைகளின் செயலாள

சரத் போன்சேக்காவுக்கு லேட் ஞானம். நல்லாட்சியில் நன்மை கிடைக்கவில்லை

ஜனவரி மாதம் 8 ஆம் திகதியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில்  எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. எனக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதியம் மட்டும் கிடைத்தது தவிர அரசால் எனக்கு எரிபொருள் கூட கிடைக்கவில்லை என ஜனநாயக கட்சியை சார்ந்த ஆதரவாளர்களின் எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அதனால் அரசிடம்  எமக்கு எந்தவொரு விருப்பும் இல்லை என ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட்மாஸ்டர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கேகாலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆட்சியாளரை விமர்சித்து தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தவில்லை. எமது கட்சிக்கு பொதுவான கொள்கை திட்டம் உள்ளது. எனது அரசியலுக்கு 5 வருடம் ஆகின்றது. அதில் இரண்டரை வருடம் சிறையில் கழித்தேன். சிறையிலிருந்து வெளியே வரும்போது புதிய அரசியலை முன்னெடுத்து செல்லும் கொள்கையில் வெளியே வந்த போது பசில் ராஜபக்ச சிறையில் உள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த போது எமது கட்சி கூட்டங்கள் நடத்த கூட இடம் வழங்கப்படவில்லை. இதற்கு முன்  கேகாலை நகரில் வாகனத்தின் மேல் ஏறி கூட்டம் நடத்தினோம். அந்நேரத்

ரணிலிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை - வாசுதேவ

கோபம் காரணமாக தவறுதலாக தாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கெட்டவார்த்தையால் ஏசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற அமர்வின் போது வாசுதேவ சிங்களத்தில் கெட்ட வார்த்தை பதத்தை ரணிலுக்கு எதிராக பயன்படுத்தினார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொற்பிரயோகம் தொடர்பில் சபாநாயகரும் அறிவுரை கூறினார். இந்தநிலையில் தாங்கமுடியாத கோபத்தின் போது கெட்டவார்த்தையை தாம் பயன்படுத்த நேர்ந்தது என்று வாசுதேவ குறிப்பிட்டுள்ளார். எனவே அதற்காக மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்

கொலன்னாவ குப்பை மேடு. மரிக்காரும் ஹிருணிக்காவும் உறக்கம்.

கொலன்னாவையில் உள்ள பொது மக்களின் சுகாதாராத்துக்கு கேடு விளைவிக்கும் குப்பை மேட்டை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு கணக்கில் எடுக்கவில்லை என ஐ தே க குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் இப்போது ஐ தே க அரசு ஆட்சி செய்கின்ற போதும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் கொலன்னாவை ஐ தே க அமைப்பாளராக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் உள்ளார். ஹிருணிக்காவும் கொலன்னாவையை பிரதிநிதித்துவ படுத்துபவரே. இவர்கள் ஏன் இது விடயத்தில் உறக்கம் என மக்கள் கேட்கின்றனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் TNL தொலைக்காட்சியில்

வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும் பொருட்டு TNL தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜனஹன்ட நேரடி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு குறித்த ஜனஹன்ட நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அந்த ரீதியில் நாளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றி சிங்கள சமுகத்தின் மத்தியில் உள்ள ஐயப்பாட்டுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்தவுள்ளார். இவ்வாறு இருக்கத்தக்கதாக மீண்டும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் இன்று புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளத்திற்கு சென்ற இனவாத பௌத்த அமைப்புக்கள் அங்கு மீள்குடியேறியுள்ள வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அம்மாவட்ட சிங்கள மக்கள் மத்தியில் சென்று இனவாதக் கருத்துக்களை கக்கி மீண்டும் சிங்கள முஸ்லிம் சமுகம் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த தூபமிட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது என்றும் வடக்கு முஸ்லிம்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் என்று இனவாத தோரணையில்

புலம்பெயர் இலங்கையர் உதவியைப் பெறும் வகையில் விசேட ஏற்பாடு

Nஜர்மனியில் மங்கள தெரிவிப்பு நல்லிணக்கம், அபிவிருத்தி: புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்த வேலைத்திட்டம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு புலம் பெயர்ந்துவாழ் அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்லவிருப்பதாக வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜேர்மனியில் தெரிவித்துள்ளார். ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ப்ராங்க் வோல்டர் ஸ்டெயின்மெர் உள்ளிட்ட முக்கியஸ்தர் களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலம் பெயர்ந்துவாழ் இலங்கையர்களை ஒன்றிணைப்பதற்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வர்த்தகம், கலை, இலக்கியம் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் திறமையுள்ள புலம்பெயர்ந்து வாழ் இலங்கையர்களை இணைத்து நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நகர்த்திச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். கடந்த 2

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை

முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று வித்தை  வெளிக்குமா? (மூஸா முஹம்மத்) சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் மாற்று அரசியல் சக்திகளை அணுகி அவர்களினூடாக இதனை பெற்றுக்கொள்ள சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுத்தந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது வெற்றிகொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மு கா வினால் முழுமையாக பொறுப்பெடுத்த விடயம் தற்போது தோல்வி அடைந்திருக்கும் நிலையில் இதனை அடைந்துகொள்வதற்கென மாற்று வழியினை கையாள சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி முடிவு செய்துள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக மாற்று கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அண்மையில் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரியவை மு கா தலைலவர் ஹக்கீம் தலைமையில் சந்தித்து இதனை வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்ற உறுதிமொழியினை 100 வீதம் நம்பிக்கொண்டிருந்த சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் உட்பட நம்பிக்கையாளர் சபையினை கடைசியில் கழுத்தறுப்பு செய்ய இருகின்ற நிலையினை உணர்ந்துகொண்ட அறிந்துகொண்ட சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி தலைமைய

இலங்கையை சிங்கள நாடு என கூறிவிட முடியாது

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருவதினால் சிங்கள நாடாகி விடாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நீதிமன்ற கல்வீச்சு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது இந்த சிங்கள நாட்டில் எனும் சொற்பிரயோகத்தை மேற்கொண்டமையின் காரணமாகவே நீதியமைச்சர் அவரை இவ்வாறு சாடியுள்ளார். இது இலங்கை எனும் நாடு. இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பல்லின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக காணப்படுவதினால் இலங்கையை சிங்கள நாடு என கூறிவிடவும் முடியாது, அவ்வாறு மாறவும் மாறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊடகவியலாளர் என்ற வகையில் தாங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், இனவாத கண்ணோட்டத்தில் கேள்விகள் எழுப்புவதை தவிர்க்குமாறும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஊடகவியலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

க‌ல்முனை அக்ற‌ம் பாம் ஹ‌வுஸ் அம்பாரை மாவ‌ட்ட‌த்திn முத‌லிட‌த்தில்.

பொலிகெமிக்ஸ் க‌ம்ப‌னியின் விவ‌சாய‌ பொருட்க‌ளுக்கான‌ விற்ப‌னையில் அம்பாறை மாவ‌ட்ட‌த்தில் க‌ல்முனை அக்ற‌ம் பாம் ஹ‌வுஸ் முத்லிட‌த்தை பிடித்துள்ள‌து. இத‌ற்கான‌ பண‌ப்ப‌ரிசும் ஐரோப்பிய‌ நாடுக‌ளுக்கான சுற்றுலாவுக்கான‌ விமான‌ ரிக்க‌ட்டும் இன்று ஒலுவிலில் ந்டைபெற்ற‌ விழ‌வில் வைத்து முஜாஹித் முபாற‌க்கிட‌ம் மேற்ப‌டி க‌ம்ப‌ணியால் வ‌ழ‌ங்கி வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதே போல் எனைய‌ இட‌ங்க‌ளைப்பிடித்த‌ வியாபாரிக‌ளுக்கும் ப‌ரிசில்க‌ள் வழ்ங்கி வைக்க‌ப்ப‌ட்ட‌ன. இந்த‌ நிக‌ழ்வில் அக்ற‌ம் பாம் ஹ‌வுஸ் உரிமையாள‌ர்க‌ளான‌ முஹ‌ம்ம‌த் ர‌பீக், அத்னான் அப்துல் ம‌ஜீத், உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர். 

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.