பள்ளி உடைக்கும் தீமானம் நிறைவேறும் வரை ஹரிஸ் எம் பி எதுவும் தெரியாதவராக இருந்தாரா?

மைத்திரி ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்து அமைச்சு பதவிகளையும் வேறு பதவிகளையும் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரசின் அதாவது ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் அவர்கள் கூரகல பள்ளிவாயலை இடிப்பதற்கான தீர்மானத்தை எதிர்த்துள்ளமை அவரதும் அவரது கட்சிக்காரர்களினதும் இதுவரையான உறக்க நிலையை தெளிவாக்கியுள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது பலாங்கொட பள்ளிவாயலை உடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்து நிறுத்தினார். என்pனும் அப்பள்ளிவாயலை உடைக்க முற்பட்டோரை கைது செய்யாமை என்பது அவரது அரசின் தவறாகும். இதனை அவருடன் அமைச்சரவையில் இருந்த ஹக்கீம் கட்சியினரோ ரிசாத் கட்சியினரோ கணக்கில் எடுக்காமல் பாராளுமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

பின்னர் ஜனாதிபதி மாற்றப்பட்டு மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி பள்ளிவாயலை உடைக்க வந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்யும் படி ஹரீசோ அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரசோ அ. இ. மக்கள் காங்கிரசோ அரசிடம் கோரிக்கை விடவில்லை, இது பற்றி பாராளுமன்றத்திலும் பேசவில்லை.  இறுதியாக இது சம்பந்தமாக முஸ்லிம் கலாச்சார திணைக்கள பணிப்பாளரும் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து பள்ளியை இடித்து வேறிடம் மாற்றுவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் அரசால் எடுக்கப்படும் போது முஸ்லிம் காங்கிரசிடம் இதுபற்றி கலந்தாலோசிக்கப்படவில்லையா? அல்லது அக்கட்சி  இது பற்றி தெரியாத அப்பாவியாக உறங்கிக்கொண்டிருந்ததா? அப்படியாயின் முஸ்லிம்களின் உரிமைக்குரல் என சொல்லிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசும் அதன் உறுப்பினரான ஹரீசும் இந்த அரசில் எதனை பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்? என நாம் கேட்க வேண்டியுள்ளது.

ஒரு பள்ளிவாயலை உடைப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுத்து முடியும் வரை உறங்கு நிலையில் சும்மா இருந்து விட்டு இது விடயமாக உலமா கட்சி காரசாரமான கண்டனத்தை வெளியிட்ட பின்னரே முழித்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இப்போது இதனை அனுமதிக்க மாட்டோம் என கூறுவதன் மூலம் அவர் ஆளுந்தரப்பில் இருக்கிறாரா அல்லது எதிர் கட்சியில் இருக்கிறாரா? தினமும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அருகில் இருக்கும் இவர்கள்; இதனை அவர்களிடம் பேசி தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து மேற்படி பள்ளி உடைப்பு தீர்மானத்தை வாபஸ் பெற முயற்சி செய்யாமல்  பாராளுமன்றத்தில் இல்லாத கட்சி போன்று பொதுமக்களிடம் அறிக்கை விடுவதன் மூலம் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.

ஆகவே கூரகல பள்ளி உடைப்பு தீர்மானத்தை வாபஸ் வாங்க முஸ்லிம் காங்கிரஸ் எம்பீக்கள் உடனடியாக அரசுடன் பேச வேண்டும். இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் உறக்க மாத்திரையும் வெளியில் வந்தால் பயில்வான் லேகியம் சாப்பிட்டவர்கள் போன்றும் இருக்கும் ஹக்கீம், ரிசாத் முஸ்லிம் கட்சிகளுக்கெதிராக முஸ்லிம்கள் தமது ஜனநாயக ரீதியலான எதிர்ப்பை காட்ட முன்வர வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය