Posts

Showing posts from April, 2015

மைத்திரியை ஆதரிக்க ஹக்கீமுக்கு லஞ்சம். முறைப்பாட்டுக்கு முஸ்லிம் காங்கிரஸ் பதில் என்ன?

Image
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மஹிந்த ராஜபக்ச அமைச்சுப் பதவி வழங்குவதை லஞ்சமாகக் கருத்திற்கொண்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிப்பதாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தேர்தல் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய ‘டீல்’ தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என தெரிவித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டவருமான பா.உ ரஜீவ விஜேசிங்க. பொது எதிரணியில் இணைந்து கொள்வதற்காக ரவுப் ஹக்கீம் தன்னிடம் பெருந்தொகைப் பணம் கோருவதாக ரணில் விக்கிரமசிங்க தன்னிடமே நேரடியாகத் தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ள ரஜீவ விஜேசிங்க, அதேபோன்று ரிசாத் பதியுதீனுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதும் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவே என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து திஸ்ஸவுக்குப் பதவி வழங்கியது லஞ்சம் என்றால் ஜனாதிபதி மைத்ரிபால ரணிலுக்குப் பதவி வழங்கியதும் லஞ்சம் அல்லவா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பியிருந்தமையும் அதற்குப் பதிலளித்த

வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி சபையில் பிரதமர்

நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியு ள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமூலம் நாட்டில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஐ.தே.க அரசு கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டது. இறுதியில் தேர்தலுக்கு செல்ல நேரிட்டது. வேறுபட்ட இரு கட்சிகள் ஒன்றாக செயற்பட்டது. இதுவே முதல் தடவையாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் யுத்தத்தை செய்வதற்காக நிறைவேற்று அதிகாரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் அதிகாரங்

அதாவுள்ளா, ஹிஸ்புள்ளா போன்ற எதிர் கட்சி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு காரணமாக 19 வெற்றி

Image
னாதிபதி - பிரதமர் அர்ப்பணிப்பு 19  ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம் ஆதரவு 212 எதிர் - 01 நடுநிலை - 01 சமுகமளிக்காதோர் - 10 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டதோடு, ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காதிருந்தனர். 19ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி உள்ளிட்ட சகல கட்சிகளும் வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித் தார். சுயாதீன எம்பி அஜித் குமார வாக்களிப்பை புற

பள்ளி உடைக்கும் தீமானம் நிறைவேறும் வரை ஹரிஸ் எம் பி எதுவும் தெரியாதவராக இருந்தாரா?

Image
மைத்திரி ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்து அமைச்சு பதவிகளையும் வேறு பதவிகளையும் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரசின் அதாவது ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் அவர்கள் கூரகல பள்ளிவாயலை இடிப்பதற்கான தீர்மானத்தை எதிர்த்துள்ளமை அவரதும் அவரது கட்சிக்காரர்களினதும் இதுவரையான உறக்க நிலையை தெளிவாக்கியுள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது பலாங்கொட பள்ளிவாயலை உடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்து நிறுத்தினார். என்pனும் அப்பள்ளிவாயலை உடைக்க முற்பட்டோரை கைது செய்யாமை என்பது அவரது அரசின் தவறாகும். இதனை அவருடன் அமைச்சரவையில் இருந்த ஹக்கீம் கட்சியினரோ ரிசாத் கட்சியினரோ கணக்கில் எடுக்காமல் பாராளுமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்தனர். பின்னர் ஜனாதிபதி மாற்றப்பட்டு மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி பள்ளிவாயலை உடைக்க வந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்யும் படி ஹரீசோ அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரசோ அ. இ. மக்கள் காங்கிரசோ அரசிடம் கோரிக்கை விடவில்லை, இது பற்றி பாராளுமன்றத்தி

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சிங்களவர்களுடைய மரணத்திற்கான பிடியாணை

Image
சத்தியாகிரகம் செய்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், அது சிங்களவர்கள் மரணத்திற்கான பிடியாணையை நிறைவேற்றிக்கொண்டது போலாகும் என ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவேனாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எவருடைய தேவைக்காக மாதுளுவாவே சோபித தேரர் உள்ளிட்டவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன துரோக, தேசத்துரோகமான இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எவரும் கை உயர்த்தக் கூடாது. அவர்கள் இதற்கு ஆதரவாக கை உயர்த்தினால் மக்கள் அவர்களை பார்த்து கொள்வார்கள் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர், கோம்பத்தல தமித்த தேரர், மெரகல்லாகம உபரத்ன தேரர் , தேச

மைத்திரி சிறிசேன இழிவான நபர், ரணில் பிக்பொக்கட் அடித்தவர் - பேராசிரியர் நளின் டி சில்வா

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பில்லாதவர்கள் இருப்பதாகவும் அந்த கட்சியை சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று 27.04.2015  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த திருத்தச் சட்டம் ஜனநாயக போர்வையில் கொண்டு வரப்படும் சிங்கள விரோத சர்வாதிகார திருத்தமாகும். 19வது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவுபடும். அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி அதன் தலைவராக மாறுவார். பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றார். நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும் என அவர் தற்போது கூறி வருகின்றார். மைத்திரிபால சிறிசேன இழிவான நபர். இவரை போன்று மேற்குலகத்திற்கு தேவையான வகையில் செயற்படும் வேறு நபர்

மைத்திரிக்கு வாழ்வா, சாவா போராட்டம்..!

Image
0 முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று 28.04.2015 இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் நடத்துவதற்கு இதற்கு முன்னர் மூன்று தடவைகள் திகதி குறிப்பிடப்பட்டபோதும் எதிர்த்தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து விவாதம் தள்ளிப்போடப்பட்டது. இறுதியாக 27ஆம் 28ஆம் திகதிகளில் விவாதம் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டத

சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் உரை

Image
உண்மையான ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த 19வது திருத்தம் வழிவகுக்கும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தைப் பெற சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு தன்னளவுக்கு எவரும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களில் 2 திருத்தங்கள் தவிர ஏனையவை ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள் ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆட்சிசெய்த முன்னாள் பிரதமர்களான டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஆக

ல்விமான் எஸ்.எ;ச.எம். ஜெமீல் 1940 ஆண்டு வயது 75 இன்று காலை தெஹிவளையில் காலமாணார்.

Image
சாய்ந்தமருதுரை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான்  எஸ்.எ;ச.எம். ஜெமீல் 1940 ஆண்டு வயது 75 இன்று காலை  தெஹிவளையில் காலமாணார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன். ஒரு அறிவு நூலகம் மூடப் பட்டு விட்டது; ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் நின்றுவிட்டது; ஒரு வரலாற்று சுவடிக்கூடம் முடங்கிவிட்டது; ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது; ஒரு நல்ல உள்ளம் உறங்கிவிட்டது! இவரைப்போன்ற கல்விமான்கள் இனியும் உருவாகவேண்டும். கல்முனை பாத்திமாக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி பழைய மாணவரவார். ஆங்கில மொழி முலம் கல்விகற்ற எஸ்.எச்.எம் ஜெமீல் பேராதாணைப் பல்கலைக்கழகத்தில பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றார்.  பின்னர் கொழும்பு பல்கலைககழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தினையும் பெற்றார். ஜக்கிய இராச்சியம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்றைசார் மற்றும் பல்கலைகழக நிருவாகம் தொடர்பான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். பேராதனைப் பல்கலைககழகத்தின் ஆங்கில போதானாசிரியர். கல்லூரி ஆசிரியர், அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், கல்வித்திணைக்களத்தில் உயர் அதிகாரி, பரீட்

பொதுபல சேனா மைத்திரியுடன் இணையும்?

ஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டைக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக மஹிந்தவின் சகோதரரான சமல் ராஜபக்சவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார். அத்துடன் மஹிந்தவுடன்; இணைந்து செயற்பட போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு மஹிந்தவும் மைத்திரியும் இணையும் போது கூடவே கோத்தாபய ராஜபக்சவும் மைத்திரியுடன் இணைவார் என்பதை மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு கோத்தாபய ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தால் பொதுபல சேனா மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து விடும் என்பதை சாதாரண அரசியல் உள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பொது பல சேனா இந்த அரசுடன் இணைந்தால்  இலங்கை முஸ்லிம்களினது நிலை எப்படி இருக்கும்? மைத்திரி ரணில் அரசை எதிர்ப்பார்களா? அதே போல் முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகள் நிச்சயம் இதற்கொரு சாட்;டு சொல்லி சமூகத்தை சமாளிப்பார்களா, அல்லது அரசிலிருந்து வெளியேறுவார்களா?

பிறந்த தினத்தில் சிறைச்சாலையிலிருந்து, பாராளுமன்றத்திற்கு, பஸில்

Image
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளார். நிதிமோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து பசில் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். சிறைச்சாலை வாகனத்தில் பசில் ராஜபக்ஷ அழைத்துச் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது. 19ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விவாதத்தை ஆரம்பிக்கவுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் பசில் ராஜபக்ஷ அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த பசிர் ராஜபக்ஷவை, எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிறந்த தினமாகும

நாளை பிற்பகல் வாக்கெடுப்பு

19 இன்றும் நாளையும் சபையில் விவாதம் அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஸ்ரீல. சு. க., ஐ. ம. சு. முவின் எதிர்ப்பே இதற்கு காரணமாக இருந்தது. என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு 19ஆவது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 19 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 150 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் ஐ. ம. சு. முவில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோர் இதனை எதிர்க்

மலையகத்தில் பசுமை புரட்சி , கிழக்கில் வரட்சி

Image
100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தில் பசுமை புரட்சி ; அனைவருக்கும் காணியுரிமை கணவன், மனைவிக்கு சம பங்கில் காணிகள் உரித்து புதிய அரசின் நூறு நாள் திட்டத்தில் பெருந்தோட்ட தொழில்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டு நாட்டின் ஏனைய சமூகத்தினரோடு போட்டி அடிப்படையில் காணியுரிமையை பெறும் நிலை மலையகத்தில் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார். பசுமை பூமி பத்திரங்கள் கையளிக்கும் வைபவத்திலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பண்டாரவளை மாநகர சபை மண்படத்தில் (25) ஆயிரம் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான காணி உரிமை வழங்குவதற்கான “பசுமை பூமி” பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட சிலருக்கு “பசுமை பூமி” காணி உரிமை வழங்குவதற்கான பத்திரங்களை வழங்கினார். பதுளை மாவட்டத்தின் அடாவத்தை, சோலன்ஸ். பட்டவத்தை, மாதோலை, தெல்பத்தை, நயாபெத்தை, கசாகொல்லை. தங்கமலை, நிவ்பேக் ஆகிய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கே மேற்படி காணிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து தமது உரையில் 1993 ஆம்

ம‌ஹிந்த‌ அர‌சில் இடிக்க‌ப்ப‌டாத‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள் மைத்ரி ர‌ணில் ஆட்சியில் இடிக்க‌ப்ப‌டுகிற‌தா?

ம‌ஹிந்த‌ அர‌சில் சில ப‌ள்ளிவாய‌ல்க‌ள் மீது க‌ல்லெறிய‌ப்ப‌ட்ட‌து. எந்த‌வொரு ப‌ள்ளிவாய‌லும் இடித்து த‌ரை ம‌ட்ட‌மாக்க‌ப்ப‌ட‌வில்லை. த‌ம்புள்ள‌ ப‌ள்ளிவாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறு இட‌த்துக்கு மாற்ற‌ நட‌வ‌டிக்கை எடுத்த‌ போது இத‌ற்கு ஹ‌க்கீம் ரிசாத் போன்றோர் ஆமாம் போட்ட‌ போது உல‌மா க‌ட்சி அத‌னை க‌டுமையாக‌ நிராக‌ரித்த‌து. ப‌ள்ளியை இட‌ம் மாற்றுவ‌து எதிர் கால்த்தில் ப‌ல‌ பள்ளிவாய‌ல்க‌ள் உடைக்கப்ப‌ட்டு இட‌மாற்ற‌ம் செய்ய‌ இச்செய‌ல் வ‌ர‌லாற்று ஆதார‌மாக‌ ஆகி விடும் என‌ க‌டுமையாக‌ எதிர்த்தோம். இத‌னை முன்னாள் ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ஏற்றுக்கொண்ட‌துட‌ன் அது விட‌ய‌த்தை கிட‌ப்பில் போட்டார். அத‌ன் கார‌ண்மாக‌ இன்று வ‌ரை த‌ம்புள்ள ப‌ள்ளிவாய‌ல் அதே இட‌த்தில் உள்ள‌து. ஆனால் ப‌லாங்கொடை கூர‌க‌ல‌ ப‌ள்ளி வாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறு இட‌த்துக்கு மாற்ற‌ முடிவெடுத்துள்ள‌தாக‌ கூறும் க‌லாச்சார‌ அமைச்ச‌ர் நந்த‌ மித்ர‌ ஏக‌நாய‌க்க‌வின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில் கூட‌ நடை பெறாத‌ இவ்வாறான‌ விட‌ய‌ம் த‌மிழ் முஸ்லிம் ம‌க்க‌ளின் வாக்குக‌ளால் தெரிவான‌ மைத்திரி அர‌சில் இட‌ம்

அமைச்ச‌ர‌வையை க‌லைத்து புதிய‌ பிர‌த‌ம‌ரை பார‌ளும‌ன்ற‌ பெரும்பான்மையில் தெரிவு செய்யும்ப‌டி உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தியிட‌ம் கோரிக்கை

ஜ‌னாதிப‌திய‌வ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌த்தை க‌லைக்காம‌ல் அம‌ச்ச‌ர‌வையை உட‌ன‌டியாக‌ க‌லைத்து பிர‌த‌ம‌ரை பாராளும‌ன்ற‌த்தில் உள்ள‌ உறுப்பின‌ர்க‌ளின் பெரும்பான்மை வாக்குக‌ளால் தெரிவு செய்யும்ப‌டி உலாமா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து. அவ்வாறு செய்து விட்டு 19வ‌து திருத்த‌த்தை இல‌குவாக‌ நிறை வேற்றிக்கொள்ள‌ முடியும். இது ஒன்றுதான் பார‌ளும‌ன்ற‌ம் ம‌ற்றும் ஆட்சியில் உள்ள முர‌ண்பாடுக‌ளையும் த‌மாஷ்க‌ளையும் நீக்கி ந்ல்லாட்சியை கொண்டு செல்ல‌  உத‌வும். த‌ற்போதிருக்கும் நிலையில் பார‌ளும‌ன்ற‌த்தை க‌லைத்து தேர்த‌ல் நட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நிலையான‌ ஆட்சியை கொண்டு வ‌ருவ‌து சாத்திய‌மில்லை. அத்துட‌ன் தேர்த‌லின் பெய‌ரால் நாட்டின் பொருளாதார‌ம் பாதிக்க‌ப்ப‌டும். ஆக‌வே நாம் சொன்ன‌து போன்று அமைச்ச‌ர‌வை உட‌ன‌டியாக‌ க‌லைத்து புதிய‌ பிரத‌ம‌ர் தெரிவுக்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை அனும‌திக்கும்ப‌டி கேட்கின்றோம்.  

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி சாகிர் மௌலானா கள்ளன் , மோசடிக்காரன் என நகர சபை உறுப்பினரான ஆசாத் கூச்சல்

Image
ஏறாவூர் நகர சபையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் நகர சபையின் தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினருமான அலி சாகிர் மௌலானா ஐ சபையோர் முன்னிலையில் கள்ளன் , மோசடிக்காரன் என நகர சபையின் உறுப்பினரான ஆசாத் அழைத்து கூச்சல் இட்டதாகவும் இதனால் ஆத்திரம் உற்ற மௌலானாவின் ஆதரவாளர்கள் அவருடன் முரண்பட்டதாகவும் இதனால் இதனால் நகர சபை வளாகத்துக்குள் பெரும் அமளி துமளி ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் தலையிட ்டு நிலைமைகளை சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்து . அதனை அடுத்து தான் சிலரால் தாக்கப்பட்டதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஆசாத் செய்த பொலிஸ் முறைப்பாட்டை அடுத்து ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றும் ஊழியர் பைசல் என்பவரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது - மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்குள் அலி சாகிர் மௌலானா மீது பெரும்பான்மையானோருக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருப்பதுடன் அவர் ஒரு மோசடி , களவுகளில் ஈடுபடாத நேர்மையானவர் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது

பசில் ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

Image
அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் ஆதரவானசமுர்த்திதொழிற்சங்கம் இன்றுபத்தரமுல்லைசெத்சிரிபாயவில் ;முன்றல் ஆர்ப்பாட்டம். சமுர்ததிவீடமைப்புஅமைச்சர் சஜித் பிரேமதாசாவின் உருவபொம்மையும் ;அங்குகொண்டுவரப்பட்டது.   இருதியாகவீடமைப்புசமுர்த்திஅமைச்சின் செயலாளர்  செத்சிரிப்பாயவின் முன் வசாலுக்குவரவளைக்கப்பட்டுஆர்ப்பாட்டக் காரர்களினால்  மனுகையளிக்கப்பட்டதன் பின் கலைந்துசென்றனர். பாரளுமன்றஉறுப்பிணர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான இளம் 8 பாராளுமன்றஉறுப்பிணர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில்பங்கெடுத்துக் கொண்டனர்.   இன்றுகாலை 10 -12 மணிவரைபத்தரமுல்லைமெயின் வீதிமுடப்பட்டிருந்தது. செத்சிரிபாயவில்உள்ளசகலமுன் வாயல்கள் கேட்டுக்களும்பொலிசாரினால் ப+ட்டப்பட்டுபாதுகாப்பு ;வழங்கப்பட்டது.செத்சிரியாயமுன்றலில் சமுர்த்திதொழிற்சங்கஊழியர்கள் நடுவீதியில் உற்காந்திருந்துஅமைச்சர் சஜித் பிரேமாதாசவுக்குஎதிராககோசமிட்டனர். இப் ஆர்ப்பாட்டமசமுர்த்திஉத்தியோகாத்த்ர்தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாணசபைஉறுப்பிணருமான ஜகத் குமாரதலைமையில் நடைபெற்றது. இப் ஆர்ப்பாட்டத்தின்போதுபின்வரும் கோசங்க

'அண்ணா கூறியதை, நிராகரித்த தம்பி''

Image
இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று 23 நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது பசில் ராஜபக்சவை சிறையில் வைத்துள்ளனர். எனது செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சமூர்த்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தான் அரசாங்கத்தின் நல்லாட்சி. இலங்கைக்கு வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு கூறினேன். மஹிந்த அண்ணா நான் குற்றம் செய்யவில்லை அதனால் நான் வருவேன் என அவர் கூறினார் பசிலுக்கு அமெரிக்காவில் பதுங்கியிருந்திருக்க முடியும்

பஷில் ராஜபக்ஷவுக்கு நல்ல பக்கம் ஒன்றுமுள்ளது - UNP யின் பிரதியமைச்சர் கூறுகிறார்

Image
0 நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன் என பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன கேள்வியெழுப்பினார். தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகையோர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இனங்காணப்படுள்ளதாலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதற்கிணங்கவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக ‘திவிநெகும’ நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில தகவல்களும் கிடைத்துள்ளன. மேலும் தகவல்கள் விசாரணைகளின் முடிவில் கிடைக்கும். சட்டத்திற்கு சகலரும் அடிபணிய வேண்டும். குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது உறுதி. பஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை நல்ல பக்கம் ஒன்றும

255 எம்.பிக்களை தெரிவு செய்யும் கலப்பு தேர்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Image
238 எம். பிக்களை தெரிவு செய்யும் முறையொன்றுக்கும் யோசனை முன்வைப்பு தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 255 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறை யொன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்.பி தெரிவாகும். 238 எம்.பிக்கள் கொண்ட தேர்தல் முறையொன்று குறித்த யோசனை யொன்றுக்கும் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு முன்வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இரு யோசனைகளில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதி த்துவத்தைப் பேணும் சகலருக்கும் ஏற்கக்கூடிய யோசனையை மக்கள் கருத்துக்களையும் பெற்று முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், தற்பொழுதுள்ள 160 தேர்தல் தொகுதியை 13 பல் தொகுதிகள் அடங்கல

19வது திருத்தத்திற்கு ஆதரவாக 225பேரும் வாக்களிக்க வேண்டும்

Image
* தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்து ஒருபோதும் செயற்படப் போவதில்லை * வாக்குறுதிகள் அனைத்தும் °ஓர் அணுவும் பிசகாமல் நிறைவேற்றப்படும் ஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் நிறைவுநாளான நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, 19ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்து தாம் ஒருபோதும் செயற்படவு மில்லை யென்றும், இனி அவ்வாறு செயற்படப்போவதுமில்லையென்றும் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கான அனைத்து வாக்குறுதிகளையும் ஒரு அணுவும் பிச காமல் நிறைவேற்றுவதே தமது நோக்கம் என்றும் கூறினார். அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் எதனைச் சாதித்துள்ளது என்றும், என்னை ஆளுமையற்ற ஒருவன், செயற்பட முடியாத ஒருவன் என

சாய்ந்தமருது பிரதேச சபை கிடைத்தால் உலமா கட்சிக்கும் அதாவுள்ளாவுக்கும் வெற்றி.

Image
m];ug; V rkj; சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன , பொதுநிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய , அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை ( 22/04/2015) பிற்பகல் தம்மைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவினரிடம் உறுதியளித்தார். 9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும் , 17 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கான நியாயங்களை அமைச்சர் ஹக்கீம் , அமைச்சர் கரு ஜயசூரியவிடம் விளக்கிக் கூறினார். இச்சந்திப்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி , கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத் , பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் , பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் , எச்.எம்.எம்.ஹரீஸ் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பிர்தௌஸ் , பஷீர் , நிசார்தீன் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன குழுத் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளவ