எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
மத்திய மாகாண சபை தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான மஹிந்த அபேகோனுக்கு கண்டி மாவட்ட மேல் நீதிமன்றம் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2001 பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தி திருட்டு வாக்கு அளிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பஹதஹோவாஹெட்ட தோட்ட முகாமையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தியமை தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் நிலையத்திற்கு அருகில் சட்ட விரோதமாக ஒன்றுகூடல், வாக்குச் சீட்டை ஒத்த வேறு கடதாசியை வாக்குப் பெட்டிக்குள் இட முயன்றமை மற்றும் அதற்காக ஆட்களை ஒன்றுதிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. இதில் முதலாவது குற்றச்சாட்டிற்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டு களுக்கு தலா ஒரு வருடம் வீதம் கடூழிய சிறைத் தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது. இதேவேளை குற்றவாளி சார்பில்