Skip to main content

Posts

Showing posts from February, 2015

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

பௌத்த பிக்குகள் அனுபவிக்கின்ற சுகபோகத்தை பாருங்கள்

அஸ்ரப் ஏ சமத் நேற்று முன்தினமான  சிங்கள நாளிதாலான “மவ்பிம” பத்திரிகை முழுப் பக்கத்தில் பௌத்த பிக்குகள் அனுபவிக்கின்ற சுகபோகத்தை பாருங்கள்” என படத்துடன் வெளியீட்டுள்ளது. இந் நிகழ்வு சுவர்ணவாகினி, செர்னமாகல் கம்பணியின் 40 வருட நிகழ்வில் சோம எதிரிசிங்க 150க்கும் மேற்பட்ட பௌத்த குருக்கள் அன்னதானம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பண்றி இறைச்சி, கோழிஇறைச்சி, மாட்டுறைச்சி, ஆட்டிறைச்சி, நன்று இறால் அதுமட்டுமா பீயர், மலர் சொப்பணத்தில்  வர்ணிக்கப்பட்ட தோரணம், இளம்  பெண்கள் உணவு பரிமாறல.; அத்துடன் சோம எதிரிசிங்கவின் தங்க முலாம் ப+சப்பட்ட புத்தர் சிலை அன்பளிப்புகள் என முழுபக்கத்தில் வெளியீட்டுள்ளது. மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும். அதற்காக ஒரு பௌத்த குருவே தற்கொலையே செய்து கொண்டார். ஊறுக்கு உபதேசம் மட்டும்தானா?.

அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில்

அஸ்ரப் ஏ சமத் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாண கச்சேரிக்கும் 9ஆம் திகதி திருகோணமலைக்கும் மாவட்டங்களது  அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடை பெறவுள்ளது. கடந்த ஜனாதிதபதித் தேர்தலின்போது 70 வீதமான வடகிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்திருந்ததாகவும் அரசின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார். வட கிழக்குபிரதேசங்களில் வாழும் மக்களது தனியார்   காணிகளை அங்கு நிலை கொண்டுள்ள படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும் இந்த மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் ஜனாதிபதி  கலந்துரையாடுவார். இந் நிகழ்வில் இம் மாகாணங்களது முதலமைச்சர்கள் மற்றும் பிரதேச  அரசியல் பிரநிதிகள்  அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்

விமலும் மனைவியும் பிறந்த தினங்களை மாற்றியிருப்பது ஊர்ஜpதம்

நீதிமன்றில் சி.ஐ.டியினர் தெரிவிப்பு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல் வீரவன்சவும் அவரது மனைவி சசி வீரவன்சவும் தமது பிறந்த தினங்களையும் பெயரையும் மாற்றியிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

மக்காவில் சர்வதேச மாநாடு இன்று

மக்காவில் உள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் எற்பாட்டில் இஸ்லாமும் பயங்கரவாத ஒழிப்பும் என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு இன்று சஊதி அரேபியா நேரத்தின் படி

முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் சந்தேகம். – உலமா கட்சி

முஸ்லிம் சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்காமல் முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உலமா கட்சித்தலைவர் கலாநிதி மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

முஸ்லிம்கள் தமது எதிரிகளை நோக்கி தூக்கிய ஆயுதங்கள்

முஸ்லிம்கள் தமது எதிரிகளை நோக்கி தூக்கிய ஆயுதங்கள் நாளடைவில் முஸ்லிம்கள் தமக்கு மத்தியிலேயே அவற்றை பயன்படுத்தியமை வரலாற்று தவறாகும். ஆப்கானிஸ்தானில் கம்யூனிச தலையீடுக்கு எதிராக

அகர ஆயுதம் நடத்தும் தொடர் இலக்கியச் சந்திப்பும் கவியரங்கமும்

Ashraff.A.Samad அகர ஆயுதம் நடத்தும் தொடர் இலக்கியச் சந்திப்பும் கவியரங்கமும் 28 ஆம் திகதி சாய்ந்தமருதில்... அகர ஆயுதம் நடத்தும் தொடர் இலக்கியச் சந்திப்பும் கவியரங்கமும் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் சாய்ந்தமருது கமு/ மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

front Line சஞ்சிகையை விடுவிக்க சுங்க திணைக்களத்துக்கு பிரதமர் ரணில் உத்தரவு

சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘புரொன்ட்லைன்’ சஞ்சிகையை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். ‘front Line’ சஞ்சிகையின் 30 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள

அமைச்சரவை அனுமதி இல்லாமலேயே கொழும்பு துறைமுக நகர் முன்னெடுப்பு

தவறுகள் இருந்தால் கடும் நடவடிக்கை -  சபையில் பிரதமர் அமைச்சரவை அனுமதி பெறப்படாமல் வெளிப்படைத் தன்மையின்றியே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டத்திற்கு முரணாக ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டிருந்தாலோ அல்லது மோசடிகளோ நாட்டிற்கு பாதகமான நிபந்தனைகளோ இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக

எம்முடன் கல்முனை மாநகர மக்கள் ஒன்றுபட்டால் இறைவனுதவியால் பாரியளவில் சாதிக்க முடியும்

ஒருவர் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டபின் அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் தானாய் ஒதுங்குவது ஜென்டில்மேன் டைப். மாறாக மக்கள் பிரதிநிதியாக இருந்துவிட்டு தேர்தலில் தோல்வியடைவது மிகப்பெரிய அவமானம். ஆனால்  எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை என்பதற்காக ஒருவர் அரசியலில் இருந்து ஒதுங்குவது கோழைத்தனமான செயலாகும்.

நீலப்படையணி கலைப்பு

பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தலைமையில் செயற்பட்டு வந்த ‘நில்பலகாய’ (நீலப்படையணி) கலைக்கப்பட்டு ள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் தலைவராக

தமிழ் கூட்டமைப்புடன் முரண்பாடுகளை உருவாக்கிவிட்டு முரண்பாடு தீர ஆசைப்படும் முதலமைச்சர்

பல்வேறு முரண்பாடுகள் களையப்பட்டு அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதால் கிழக்குமாகாண சபையின் அமைச்சரவை அடுத்த வாரத்துக்குள் உருவாக்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் நேற்று தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவுடன் கிழக்குமாகாண சபையின்

பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது சு.க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்பொழுதிலிருந்தே அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய உபதலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களை

கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் கட்டிடங்கள் அமைக்க அனுமதி இல்லை

கடற்கரைகளுக்கு அருகாமையில் வானுயர்ந்த ஹோட்டல்கள் நிர்மாணிக்க இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காலி பிரதேசத்திற்கு நேற்று

யாழ் வலிகாமம் மக்களது குடிநீருக்காக வெள்ளவத்தையில் காலிவீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

(அஸ்ரப் ஏ சமத்) யாழ் வலிகாமம் மக்களது குடிநீருக்காக இன்று (15)ஆம் திகதி காலை வெள்ளவத்தையில் காலிவீதியில் சமுக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் அமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டம். மகஜரில் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமர் நீர்விநியோக அமைச்சர், வடக்கு மாகணசபை முதலமைச்சருக்க கடிதம் அனுப்பி வைப்பு.

மஹிந்த கைது செய்யப்படலாம்?

குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து? சட்டத்துறை வல்லுநர்கள் ஆரூடம் (எம்.கே.முபாரக் அலி) ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான இரவன்று அலரிமாளிகை யில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சி யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பதாக எவ்விதத்திலாவது உறுதிப்படுத்தப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நுரைச்சோலை வீடுகள்- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

புதிய அரசு உருவாகி முப்பது நாட்கள் தாண்டியும், முஸ்லிம் கட்சிகளுக்கு அமைச்சர்களும் கிழக்கு முதலமைச்சரும் கிடைத்தும்  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நுரைச்சோலை வீடுகள் இன்னமும் கிடைக்காமை பாதிக்கப்பட்ட

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்த தகவல், ஊடகத்துறை அமைச்சர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்த தகவல், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தமிழ் சிங்கள கலைஞர்கள், பாடகர்களுக்கு புலமை சொத்துரிமை வரியை வழங்கினார்.

தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக சபை- ஜம்மியத்துல் உலமா

கடந்த காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக சபையைத் தெரிபு செய்து முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு

பைசர் முஸ்தபா மீண்டும் அமைச்சு பதவியை பெறவேண்டும் என சுதந்திர கட்சி முஸ்லிம் பிரிவு கோரிக்கை

அஸ்ரப் ஏ சமத் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் யுனிட்   இன்று கொழும்பு ஹோட்டல் ரமதாவில் ஊடகவியலாயளர் மாநாடு இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபாவை மீண்டும்

துருக்கி சா்வதேச பாடசாலை

அஸ்ரப் ஏ சமத் துருக்கி நாட்டவா்களால் ராஜகிரியவில் அத்துல் கோட்டையிலும்  வாட்பிலேசிலும்  லேணியம் சா்வதேச பாடசாலை கடந்த 5 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது.  இப் பாடசாலையில் முவினங்களையும்

மசூர் மௌலானாவை ஸ்ரீலங்கா மீடியா கவுன்சில் சுகம் விசாரிப்பு

சுகயீனமுற்றிருக்கும் முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவை

பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்ரியா பாடசாலையில் மூன்று நிகழ்வுகள்

அஸ்ரப் ஏ சமத் பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்ரியா பாடசாலையில் மூன்று நிகழ்வுகள் நேற்று கல்லூரி அதிபர் பேரின்பநாயகம் தலைமையில்  

சமூகத்தையும் கட்சியையும் வளர்க்க முதலமைச்சர் பதவியைபயன்படுத்துவோம் எஹ்யாகான் தெரிவிப்பு

உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியே எமது கட்சியின் சார்பாக கிடைத்த முதலமைச்சர் பதவி இதற்கு காரணமாக அமைந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிக்கு

ஸ்ரீலங்கா மீடியா கவுன்சில்

இனங்களுக்கு இடையில் தேசிய ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்கினை வலியுறுத்தும் வகையில் புதிய ஊடக அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

அல்-கைடா அமைப்புக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையே தொடர்பு இருக்கலாமென சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. நாட்டில் இயங்கும் சூறா சபை, ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்பு மற்றும் மத்ரஸாக்கள் தொடர்பாகவும் ஆராய வேண்டுமெனவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது. 

மைத்திரி ஆட்சியிலும் தீர்வு இல்லையா?

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், காணாமல் போனவர்களை தேடித் தருமாறும் கோரி நேற்று கொழும்பு கோட்டை

கிழக்கு முதல்வர் கடமையேற்பு

மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை

கொழும்பு 07 நெளும் பொக்குன (தாமரைத் தடாக) வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மஹிந்தவின் ஆட்சியை கவிழ்க்க ஜே.வி.பியே அடித்தளமிட்டது

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி பாரிய பங்களிப்பினை செய்தது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தங்காலை நகரில் (8) இடம்பெற்ற

நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பம் - பொலன்னறுவையில் ஜனாதிபதி

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவின் யஹ பாலனயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பற பாலன!

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர்.

ஹக்கீம காலில் விழுந்தார் ஜமீல். மன்னிப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனத்துக்கு எதிராக நடந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜமீல் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எவ்விதமான சிறு எதிர்ப்புமின்றி இந்தியா செல்லும் இலங்கைத் தலைவர் எனும் பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறுகிறார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக ஊடகங்களிலும் பாரியதொரு மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. இதுவரை காலமும் இலங்கைத் தமிழருக்காக எனக் குரல் கொடுத்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த

முஸ்லிம் காங்கிரஸ் தனது பெயரை முனாபிக் காங்கிரஸ் என மாற்ற வேண்டும் -கலாபூசனம் லியாவுல் பன்னான் அல்ஹாஜ் எம் பி எம் ஹ{சைன் பாறூக்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரச்சினை போன்ற விடயங்களில் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடுகள் குறித்து அல்ஜஸீறா லங்கா பொது மக்கள் கருத்துக்களை கேட்டு வருகிறது.

கோட்டாபயவினால் முன்னெடுக்கப்பட்ட சந்தையை ஹக்கீம் திறப்பு

அஸ்ரப் ஏ சமத் கல்கிசை டெம்பலஸ் வீதிக்கும் அத்தடிய வீதியைத் தொடும் சந்தியில் வாராந்த சந்தைக் கட்டிடத்தை  இன்று அமைச்சகளான  நகர அபவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம்,

அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில்

 மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா அரச அதிகாரிகள் மக்கள் தொடர்பிலும்.மக்களின் பிரதி நிதிகள் தொடர்பிலும் பொறுப்பற்ற முறையில் நடப்பதாக பொதுமக்கள் தம்மிடம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்

முதலமைச்சர் விவகாரம். சித்தீக் காரியப்பர் பிழையாக எழுதியுள்ளார்.

அம்பாரை மாவட்டத்துக்கு முதலமைச்சர் கிடைக்காமைக்கு காரணம் அக்கரைப்பற்று மாகாண சபை உறுப்பினர் அதாவது தவமும் இன்னொரு மாகாண சபை உறப்பினரும் என்பதாக

மஹிந்த அரசின் வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்தே இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.

முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்தே இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது. இவற்றில் குறிப் பிடப்பட்டுள்ள நிவாரணங்களு க்காக போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சர் விவகாரம்: இன்னும் உடன்பாடு காணப்படவில்லை

கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் முடிவுக்கு வர இருப்பதாகவும் இந்த வார இறுதிக்குள் புதிய முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (4) இறுதி முடிவு எடுக்கப்பட இருந்ததாக அறிய வருகிறது.

உமாஓயா திட்டத்தை இடைநிறுத்த மகஜர்

  உமாஓயா திட்டத்தால் சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதால் முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை திட்டத்தை இடை நிறுத்தவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார். உமாஓயா திட்டத்தால் பண்டாரவளைப் பிரதேசத்தில் வீடுகள்

முப்படையினரையும் அனைத்து மாவட்டங்களிலும் சட்டமொழுங்கை நிலைநாட்டுவதற்கு அழைப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் விசேடபணியினை மேற்கொள்வதற்காக முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு  பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. திங்கட்கிழை வெளியாகியுள்ள விசேடவர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முப்படையினரையும் தலைநகர் கொழும்பு, வடகிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டமொழுங்கை நிலைநாட்டுவதற்கு உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு. கா, ம.கா ஆகிய இரண்டு கட்சிகளும் விச பாம்பின் இரு தலைகளாகும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற இரு கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் சுயநல கூட்டத்தின் இரு கண்கள். ரஊப் ஹக்கீம் தலைமையேற்று இந்த 14 வருடங்களுள் சமூகம் பெற்ற நன்மை எதுவும் இல்லை என்பது சகலரும் அறிந்த விடயம். அதே போல்

முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசுவது இனங்களுக்கிடையில் குழப்பும் நோக்கத்திலாகும்

கிழக்கு மாகாண சபையில் தமக்கான முதலமைச்சர் பதவியை மத்திய அரசில் அமைச்சுப்பதவிக்காக கைவிட்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்த  முஸ்லிம் காங்கிரஸ் தற்போது

வாசஸ்தலத்தை சஜித் பிரேமதாச செயலாளாருக்கு பொறுப்பளித்தார்.

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் பேரியல் ;அஸ்ரப் காலம் சென்ற அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் ஆகியோர்கள் கபினட் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வாழ்ந்த கொழும்பு 7

ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் மாதாந்த கூட்டம்

ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் மாதாந்த கூட்டம் இம்மாதம் 10ந்திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில்

தலவாக்கலையில் ரயில் மறியல் போராட்டம்

தலவாக்கலை நகரில் நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

தேசிய வைபவங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது

* அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத