ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்தகேரத் இன்று ஆணைக்குழுவுக்கு கருத்து

அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 12 அரச நிறுவணங்களின் இலஞ்சம் மற்றும் முறைகேடுகள்,அரச பொதுசொத்துக்கள் நிதிமுறைகேடாக தேர்தல் காலத்தில் சொத்துக்களை பாவித்தமை பற்றிய முறைப்பாட்டை ஜே.வி.பி. கட்சியினர் கொழும்பு 7 இல் உள்ள
இலஞ்சஆணைக்குழுவுக்குஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர்.
இன்று இவ் விசர்ரனையை ஆணையாளரினால் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. முறைப்பாட்டாளர்களான ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்தகேரத் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதில் சமுர்த்தி திவிநகும், பாதுகாப்பு நகர அபிவிருத்த pசுற்றாடல்துறை அமைச்சு ,விமாண போக்குவரத்து இலங்கை அரச வங்கிகள், மத்தியவங்கிகள்  போன்றவற்றின் கோடிக்கணக்கான ஊழல்கள் இடம்பெற்றுள்ள்ன.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத் மேற்படி திணைக்களங்களின் சகலதகவல்களும் நாங்கள் சேகரித்துவைத்துள்ளோம். அவற்றுக்கு முன் இலஞ்ச ஆணையாளர் பொலிஸ் மற்றும் அதிகாரிகள் இவற்றை விசாரணை செய்து ஆகக் குறை;ந்தளவு இவர்கள் சேகரித்துவைத்துள்ள சகல சொத்துக்களையும் அரச உடைமையாக்கும் கடமையாவது இந்ததிணைக்களம் செய்தல் வேண்டும். என கருத்து தெரிவித்தார்.  

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்