ஜனாதிபதி முறைமை இல்லாது போனால் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாது போகும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடை முறையில் இல்லாது போனால் நாடு எதிர் கொள்ளும் பிரச்சினை களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஜயரட்ண, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கூடாதென்கிறார்கள். ஜனாதிபதி முறையிலன்றி சமூகத்திலேயே தவறு இருக்கின்றது எனத் தெரிவித்த பிரதமர், சமூகத்தின் எதிர்கால நிலைமையைக் கட்டுப்படுத்த தவறுவோமானால் நாடு அழிவுப்பாதைக்கே செல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி முறை இல்லாது போனால் இவற்றைக் கட்டுப்ப டுத்தவும் முடியாமல் போகும். ஜனாதிபதி முறைமை பற்றி பேசுபவர்கள் தேர்தலில் வாக்குகளை எதிர்பார்த்தே அதனைப் பேசுகின்றனர். இவர்களது அடிவருடிகளாக இருக்கும் சக்திகள் அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்சிக்கின்றன.
ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று கூறுபவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைக்கின்றன எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கண்டி தர்மராஜ கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், சமூகத்தின் முன்னேற்றத்துக்காக எந்தளவு செயற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது என்பது அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் தெரியவரும்.
எமக்குத் தேவைப்படுவதெல்லாம் இலங்கையை ஆசியாவின் ஒரு உன்னத நாடாக மாற்றுவதுதான். இந்தப் பயணத்தை நாம் தொடர்வதற்கு இளைஞர்களையும் அதில் இணைத்துக்கொள்வது முக்கியமாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும். நாடு பிளவுகளு க்கும் பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்கும் தறுவாயில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் மூலம் மாத்திரமே நாம் அதனை முறியடிக்க முடியும். அவ்வாறு இல்லையாயின் நாடு மிகவும் ஆபத்தான நிலையை சந்திக்க நேரும்.
இன்று சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையில்லையெனக் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் நாட்டின் பிரச்சினைகளின் தீர்வுக்குப் பதில் கூறவேண்டும்.
நாடு தற்போது அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்துறையில் துரித வளர்ச்சி கண்டு வருகிறது. இன்னோரன்ன அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. பாதைகள் பாலங்கள் எமக்கு எதற்கு. உண்பதற்கா? என கேள்விகேட்டுக்கொண்டே அந்தப் பாலத்தையும், பாதையையும் இவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
சீனாவுக்கு அடுத்ததாக தற்போது இலங்கையே அபிவிருத்தியில் முன்னேற்றம் காணும் நாடாக இருக்கிறது. இந்த நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் சகிக்க முடியாத, பிறந்த மண்ணை நேசிக்காதவர்களே விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் இதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. எதிர்வரும் காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக நாம் வழங்கும் கடன்களை வட்டியில்லாத கடனாக வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் சிந்தித்து வருகிறது. ஆதலால் இவை அனைத்துக்கும் தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மிக முக்கியமானதாகும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !