Posts

Showing posts from June, 2014

பாதாள கோஷ்டியுடன் முஸ்லிம் அமைச்சருக்கு தொடர்பு; அம்பாறை, திருமலையிலும் பாதாளக் குழுக்கள் உள்ளதாம்!

Image
‘பண்டா குரூப்” எனப்படும் பாதாள உலக குழுவுடன் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை புலனாய்வு சேவையில் கடமையாற்றிய முஸ்லிம் நபர் ஒருவர் ‘இலங்கை இஸ்லாமிய போராளிகள்” என்ற பெயரில் அமெரிக்க இராஜங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே இத்தகவலை குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகத்திலே சிறந்ததொரு மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும். -கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி அதிபர் கேணல் திசாநாயக்க

(அஷ்ரப் ஏ சமத்)

உலகத்திலே சிறந்ததொரு மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும். முகம்மத் நபி (ஸல்)அவர்கள் இந்த உலகில் மனிதன் சீராக வாழ்வதற்கு ஒரு சீரிய வாழ்க்கைமுறையை காட்டித் தந்துள்ளார்கள்.. இஸ்லாம் மார்க்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. என கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி அதிபர் கேணல் திசாநாயக்க மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அடித்து விட்டு அணைக்கிறார்கள். அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்

முற்கட்டமாக ரூ.200 மில்லியன் ஒதுக்கீடு * கட்டுமானப் பணிகள் இராணுவத்திடம் * நீர், மின்சாரத்தை இலவசமாக வழங்குமாறு அமைச்சர் பணிப்பு
அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற வன் செயல் சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகளை மீள் புனரமைக்கும் பணிகள் இன்று 27ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக உருவாகினால் இனவாத அரசை கட்டுப்படுத்தலாம்

Image
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட்டு ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக உருவாகினால்த்தான் இனவாத அரசை கட்டுப்படுத்தலாம் என முஸ்லிம்கள் தரப்பில் நினைப்பது யதார்தத்தை ஏற்காமல் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.  கடந்த கால நிகழ்வுகளை நாம் கட்சி வெறிக்கப்பால் நின்று பார்க்கும் போது ஆட்சியை தீர்மாணித்தல் என்பது எத்தகைய பலனை முஸ்லிம் சமூகத்துக்கு பெற்றுத்தந்துள்ளது என்பதற்கான விடையை  அறியலாம்.

சிப்லி பாறூக் எடுத்துக் கொண்ட முயற்சி. 1990ம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டவர்களின் உடல்கள் தோண்டப்படவுள்ளன.

Image
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் எடுத்துக் கொண்ட  முயற்சியினால் 1990ம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டவர்களின் உடல்கள்தோண்டப்படவுள்ளன.

இனவெறி அரசுக்கு முட்டு கொடுத்துக்கொண்டே முஸ்லிம்கள் மீதான இன வெறித் தாக்குதல்களுக்கு கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம்!

Image
அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ எம். பி. பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் பேருவலையில்

Image
நாமல் ராஜபக்ஷ எம். பி. பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் பேருவலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் குறைகள் கேட்டறிந்தார்.

உயிருக்கு அஞ்சும் கோழைகள் முஸ்லிம் சமூகத்தின் தலைமைப்பதவிக்கு அருகதையற்றவர்கள்.

Image
அமைச்சுப்பதவியில் இருப்பதன் மூலமே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற முஸ்லிம் அமைச்சர்களின் கருத்துக்களை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இக்கூற்று இறைவன் மீதான அவநம்பிக்கையையும், முஸ்லிம்  அமைச்சர்களின் கோழைத்தனத்தையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் அல்லாமா, மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஹக்கீம், அதா, ரிசாதுக்கு விசாரணை இல்லை, முஜிபுர் ரஹ்மான் மீது விசாரணை; சி.ஐ.டி. அழைப்பு!

Image
மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மத்தி இணை அமைப்பாளருமான முஜீபுர் ரஹ்மானை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  புதன்கிழமை காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அவர் கேற்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வுத்துறை தொடர்பில் பாரிய காட்டிக்கொடுப்பு முயற்சி

Image
நாட்டின் தேசிய புலனாய்வு துறையினர் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டு பாரிய அசெளகரியத்தையும் அனர்த்தத்தையும் ஏற்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள் ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

பிரதி அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அன்பளிப்புகளை வழங்கினார்.

Image
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அளுத்கம, தர்கா நகர், பேருவல பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நான்காவது

தயா கமகே தர்கா டவுன் மக்களுக்கு ரூபா 10 லட்சம் வழங்குவதாக உறுதி

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தர்கா டவுன் மக்களுக்கு வீடு அமைத்துக்கொடுக்க தனது சொந்த நிதியத்திலிருந்து ரூபா 10 லட்சம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அரசுக்கு

Aluthgama. Different Story.

(அஸ்ரப் ஏ சமத்)
அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவத்திற்காக ஒரு ஆதாரமாக இடதுசாரி பத்திரிகையான “அத்த” என்ற சிங்கள வாரயிறுதி பத்திரிகை

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் தடையோ? இனக்குரோதம், குழப்பம் ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை

Image
* மக்களைத் தூண்டிவிடும் வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது குற்றம்
* ஊர்வலம் நடத்த குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு முன்னராவது அனுமதி பெறுவது அவசியம்

நாட்டில் இன, மத, மொழிகளுக்கிடையே குழப்பம், குரோதம் மற்றும் அசாதாரண நிலைமையை

எத்தனை நாளாகத்தான் இந்த வார்த்தை.- எந்தவொரு குழுவும் சட்டத்தை கையிலெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்

Image
பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி பணிப்பு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு ஸ்திரநிலையை அனுபவித்துவரும் சூழ்நிலையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்டி ருக்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையிலான முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.

அளுத்கம, பேருவல தாக்குதலை பௌத்த சிங்கள பயங்கரவாதிகளே மேற்கொண்டனர்

அளுத்கம, பேருவல தாக்குதலை பௌத்த சிங்கள பெயரைக்கொண்ட பயங்கரவாதிகளே மேற்கொண்டனர் என அமைச்சர் வாசு தேவவ நானயக்கார தெரிவித்தார்.

கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்

Image
(அப்துல் கரீம்)  அளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால்நேற்று 21.06.2014.இல்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா விமான சேவைகளை புறக்கணிக்க தீர்மானம்

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத- குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் முடிவு செய்துள்ளன.

முஸ்லிம்களின் அரசியல் பிற்போக்கு- கல்முனை தாசன்

சமூகம் எதிர் நோக்கும் இந்தப்பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் அரச அடிமைத்தன அரசியல்தான் காரணம் என்பதை  உலமா கட்சித்தலைவர் அடிக்கடி சொல்லி வருகிறார். இவற்றுக்கான தீர்வுகளையும் தெளிவாக சொல்லியும் மீண்டும் சில முட்டாள்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்களிடம் என்ன தீர்வு என கேட்கிறானுகள். இதோ அவரது கருத்துக்களிலிருந்து நான் பெற்றவை:

போலிச்சாயம் வெளுக்கிறது. அமைச்சரவையில் ரிசாத் ஜனாதிபதி வாக்குவாததம் பொய்யாம்.

Image
அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அரசியல் அந்தஸ்தை தக்க வைக்க போலிப் பிரசாரம் என்கிறது ஜனாதிபதி தரப்பு! நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்போக்குடன் நடந்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று அறிவிக்கப்படுகிறது. முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மக்கள் மத்தியில் அரசியல் அந்தஸ்தை தக்க வைத்து கொள்வதற்காக இவ்வாறான போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சாத்தான் வேதம் ஓதுகிறது. - தேசிய ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் தடையேற்பட மதவாதமாக செயற்படும் சிறு குழுவினரே காரணம்

இடமளிக்க முடியாது - பொதுபலசேனா முன்னாள் தலைவர் அளுத்கம சம்பவமே இறுதியானதாக இருக்க வேண்டும். நாட்டில் இதுபோன்ற இனியொரு சம்பவம் இடம்பெற அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது. இத்தகைய சம்பவங்கள் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியவாதிகள் எமது நாட்டின் மீது அழுத்தம் செலுத்து வதற்கே துணையாக அமையுமென தெஹிவளை - நெதிமால பெளத்த கலாசார நிலையத்தின் அதிபர் கிரம விமலஜோதி தேரர் கூறியுள்ளார்

ஜனாதிபதி பேச்சு. சுயநல ஏமாற்று முஸ்லிம் அமைச்சர்கள் விடவில்லை மூச்சு.: முஸ்லிம் மக்களுடன் ஆழ்ந்த நட்பும், பாசமும் கொண்டவன் நான்"

நாட்டில் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் பேசுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

Damage of Baruwala

Mohammed Aslam, SLMC MP presented the following at the parliament yesterday with regard to the losses of the recent violence in Aluthgama No. of persons killed - 8
No. of persons injured - 170
Total loss due to damaged properties - 580 crores
No. of houses damaged -150
No. of persons displaced - 2450
No. of mosques attacked - 17
Loss of livelihood -1000
No. of animals killed - 272
No. of cases of looting - 86

முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி சந்திப்பில் பேசிய விடயங்கள்:

முஸ்லிம் அமைச்சர்களின் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது பற்றி இதுவரை எதுவும் வெளியானதை காணவில்லை. அதிலிருந்து ஒன்று புரிகிறது. அதாவது இந்த அமைச்சர்கள் தமது சமூகத்தை சமாளிக்கப்போகிறார்கள் என்று.

அமைச்சர் ரிசாத் ஜோக் அடிக்கிறார்.: நடவடிக்கை எடுக்காவிடின் பாரிய விளைவுகளை அரசு சந்திக்க வேண்டிவரும்!

Image
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தாக்குதல்கள் தொடர்பில் இது வரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நோலிமிட் தாக்கப்பட்டதை பார்வையிட அங்கு விஜயம் செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் கருத்து தெரிவிகையிலே இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்;

முற்றாக எரிந்து நாசாமாகும் நோலிமிட்!

Image
முற்றாக எரிந்து நாசாமாகும் நோலிமிட்!

ஒரு இனத்தை காட்டிக்கொடுக்க, அடிமைப்படுத்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது

*கறுப்பு ஜ_லை, புலிப்பயங்கரவாதம் என்பவற்றின் விளைவுகளை எவரும் மறந்துவிடக்கூடாது
மனித உரிமை பற்றிப் பேசிக்கொண்டு பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசத்தின் செயற்பாடுகளில் நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு தனது நன்றியை தெரிவித்துள்ளது.

Image
அளுத்கம, பேருவலவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு தனது நன்றியை தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அளுத்கமை, பேருவலையில்

Image
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அளுத்கமை, பேருவலைக்குச்சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் அளவளாவுவதையும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிவதையும் படத்தில் காணலாம்.

முஸ்லிம் காங்கிரசின் அடுத்த ஏமாற்று நாடகம் கிழக்கு மாகாண சபையில் ஆரம்பம்.

Image
பிரேரணைக்கு அனுமதி மறுப்பு; கிழக்கு மாகாண சபையில் அமளி துமளி; மு.கா.விடம் செங்கோல்!
(அஸ்லம் எஸ்.மௌலானா) அளுத்கம முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொது பல சேனா இயக்கத்தையும் அரசாங்கத்தையும் கண்டித்து இன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீலினால் சமர்ப்பிக்கப்பட்ட அவசர விசேட பிரேரணை தவிசாளரினால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டதுடன் மு.கா. உறுப்பினர்களால் செங்கோலும் தூக்கிச் செல்லப்பட்டது.

தாமும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர் என்பதை மறந்து இவர் சொல்கிறார். பொலிஸ் திணைக்களம், STF ஆகியவற்றின் ஒத்துழைப்புடனே திட்டமிட்டு நடந்துள்ளது!

Image
அளுத்கம தர்காநகர் பேருவளை பிரதேசங்களில் நடைபெற்ற அடாவடித் தனங்களுக்கும் வன்முறைகளுக்கும் பொலிஸ்மா அதிபரே பொருப்புக் கூறவேண்டும். அவர் உடனடியாக பதவி விலகல் வேண்டும்.  100 கோடிக்கும் மேற்பட்ட  சொத்துக்களுக்கும் 7 உயிர்களுக்கும் 80க்கும் மேற்பட்ட காயப்பட்டவர்களுக்கும் அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்து நஸ்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

சொல்லி ரெண்டு நாளாச்சு. என்ன நடவடிக்கை எடுத்தார்களாம்? மக்களை பாதுகாக்கும் கடமையில் அரசாங்கம் தவறிவிட்டது; இன்னும் ஓரிரு தினங்களில் அதிரடி நடவடிக்கை!

Image
முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமைகள் விடயத்தில் யாருக்கும் சோரம் போகாது மக்களை ஓரணியில் திரட்டி போராடுவேன். அளுத்கம தாக்குதல் சம்பவங்களின் கொடுமைகளை விபரிக்கக் கூட வார்த்தைகள் இல்லை என திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்;.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்

Image
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவின் பின்னர் அசம்பாவிதம் இடம்பெற்ற பேருவளை அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடியபோது எடுத்த படம்.

சிறு சம்பவங்களை பெரிதாக்காதீர் அரசு வேண்டுகோள்

ஊடகங்களுக்கு சமூக பொறுப்பு அவசியம்
நாட்டின் சமாதானம் மற்றும் மக்கள் மத்தியிலான நல்லிணக்கம், ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வெட்கங்கெட்ட அமைச்சர் கூறுகிறார்.மகிந்த அரசை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை!

Image
ஞானசாரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்!
மகிந்த அரசை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை! ஞானசாரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததார்.

أعمال عنف عرقية ضد الأقلية المسلمين في سري لانك பேருவலை நிலவரம் பற்றி அறபியில். மொழி பெயர்ப்பு முபாறக் அப்துல் மஜீத்

التقرير الحالي وقد شهدت أعمال عنف عرقية ضد الأقلية المسلمين في سري لانكا مرة أخرى

முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத், அதா முட்டுக்கொடுக்கும் அரசாங்கத்தின் சாதனை, ஊரடங்கு நேரத்திலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்.

Image
அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் பல பேரின வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிவாசல் ஒன்றின் மீதும்

சிங்கள இனவாதிகளுக்கு உதவும் அரசின் பிரதமர் கலவரத்தை தடுக்க முயன்றாராம்?

Image
காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் நகரில் முஸ்லிம்களுக்குரிய கடைகளை இன்று உடைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறி விட்டு தொலைபேசி அழைப்பினை துண்டித்துக் கொண்டனர்.

In Osaka Minister Faiszer Musthapaha Addresses

Image
In Osaka Minister Faiszer Musthapaha Addresses

the Main Businessmen in the World A Japan Sri Lanka Investment Forum was held Toady (13/6/
2014) in Osaka City Plaza Hotel in Japan. The following pictures show that Hon.Faiszer Musthapha is

பொசன் விழா கொண்டாடுகிறார் ரஊப் ஹக்கீம்

Image
மூவின மக்களின் ஒற்றுமைக்கு முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக மத்தியமுகாம் நகரத்தை பார்க்கின்றேன். கடந்த யுத்தகாலத்தில் கூட இப்பிரதேசத்தில் வாழும் இனங்களிடையே எந்தவித பிரச்சினைகளும் வந்ததாக நான் அறியவில்லை.

ஐ. நா. குழு இலங்கை வருவதை தடுப்பதிலேயே கூடுதல் அக்கறை

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணைக் குழு இலங்கை வருவதனை தடுப்பதிலேயே அரசாங்கம் தற்போது கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றதென சபை முதல்வரும் நீர்ப்பாசனத்துறைய மைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்களில் சிறப்பாக செயற்படுவோர் விபரம்

Image
( இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மு.காவுக்கு ஓட்டுப்போட்டு ஏமாந்த கல்முனை மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

Image
-எம்.வை.அமீர்- சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியை மண்ணிட்டு நிரப்பி வீடுகளை அமைப்பதற்கு அனுமதி கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது

Image
nஜனீவா பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவிருக்கும் விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வக்பு சபை

Image
அனைத்து மதஸ்தலங்களிலும் ஒலி பெருக்கி பாவனை தடை என்றிருக்கும் போது அதனை செயற்படுத்த அரசை வலியுறுத்தாமல் பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கிகளை மட்டும் கட்டுப்படுத்த எடுக்கும் வக்பு சபையின் அநீதியான நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் முட்டையிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தன் பெயரை இழந்து விட்டது.

Image
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டதாலேயே பாராளுமன்றத்தில் தனியான கட்சியாக அடையாளப்படுத்தப்படவில்லை என அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு

Image
15ஆம் திகதி கொழும்பில்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.

தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் திரும்பியதற்கு கூட்டமைப்பின் ஆணவமே காரணம்

தமிழினத்திற்கு சாபக்கேடு த.தே.கூட்டமைப்புதான். இராமாயணத்தில் கூனியாகவும் பாரதத்தில் சகுனியாகவும் இயங்கும் இவர்களால் தமிழினம் விடிவுகாணுமா? திருமண வீட்டிற்குச் சென்று தாசிகளைப் பாராட்டும் த.தே.கூ. நல்லவைகளைப் பாராட்டும் என்று எதிர்பார்க்க முடியாதென பியசேன எம்.பி. தெரிவித்தார்.

இந்திய கலாசார நிலையம்

Image
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய கலாசார நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிய போது எடுத்தபடம்.

இடி, மின்னல் தாக்கம் அவதானமாக இருக்க வேண்டுகோள்

Image
மத்திய மலையகப் பகுதிகளில் இடியு டன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் எனவும் பொது மக்கள் இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

11 பெண்களை திருமணம் செய்தவர் கைது

Image
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபரொருவரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் அந்நபர் சட்டவிரோதமான முறையில் பதினொரு பெண்களை திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மனிதம்” வெளியீடு; “இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள்” அறிமுகம்; திறமைக்கான கௌரவிப்பு; ஒரே அரங்கில் முப்பெரும் விழா!

Image
(செயிட் ஆஷிப், எம்.பைசால் இஸ்மாயில்) லக்ஸ்டோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழா இன்று சனிக்கிழமை மாலை கல்முனை சாஹிராக் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கல்வி, கலாசார, கலை, இலக்கிய மற்றும் ஊடகப் பங்களிப்புக்கான கௌரவிப்பு வைபவம், “மனிதம்” குறுந்திரைப்பட இறுவெட்டு வெளியீடு, “இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள்” நூல் அறிமுக நிகழ்வு என்பன இடம்பெற்றன.

பீர் முஹம்மத் எழுதிய விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீட்டு விழா

Image
பிரபல எழுத்தாளர் பீர் முஹம்மத் எழுதிய விபுலாநந்த அடிகளும்

தம்புள்ள பள்ளி விடயத்தில் மாற்றுக்காணி பெற்று பள்ளிவாயலை அகற்றுவது மேலும் பல பள்ளிவாயல்கள் அகற்றப்படுவதற்குரிய மோசமான உதாரணமாக கொள்ளப்படும்- உலமா கட்சித்தலைவர்

தம்புள்ள பள்ளி விடயத்தில் மாற்றுக்காணி பெற்று பள்ளிவாயலை அகற்றுவது மேலும் பல பள்ளிவாயல்கள் அகற்றப்படுவதற்குரிய மோசமான உதாரணமாக கொள்ளப்படும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில்தான் இளைஞர்களை ஞாபகத்திற்கு வருகின்றது.

Image
சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில்தான் இளைஞர்களை ஞாபகத்திற்கு வருகின்றது. இன்னும் சில அரசியல் வாதிகளுக்கு நாட்டையும் சமூகத்தையும் குழப்பவே இளைஞர்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால், இளைஞர்களை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தி உலகுக்கு ஏற்றவாறு உருவாக்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணய குழு அறிக்கை?

Image
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த சிறுகுழுவினர் யாரென தனக்கே தெரியாதென்கிறார் அமைச்சர் ஹக்கீம்!

Image
முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு திடீரென தலைதூக்கிய ஒரு குறிப்பிட்ட குழுவினர் முற்றிலும் இரகசியமாகவும், வெளிப்படைத் தன்மையற்ற விதத்திலும் தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவது சம்பந்தமாக ரங்கிரி தம்புளு ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கலத் தேரருடன் உடன்பாட்டுக்கு வந்திருப்பதாக நேற்றைய ‘டேய்லிமிரர்’ஆங்கில பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் கவலையையும், பரப்பரப்பையும் தோற்றுவித்திருக்கின்றது.

சுயாதீன தொலைக் காட்சி சேவைக்கு 35 வருடங்கள்

Image
சுயாதீன தொலைக் காட்சி சேவைக்கு 35 வருடங்கள் பூர்த்தியாவதை
முன்னிட்டு, கொழும்பு - இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி மண்டபத்தில்,
நேற்று (04) புதன்கிழமை மாலை, துஆப் பிராத்தனை வைபவம் ஒன்று
இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் பைஸர்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம்

Image
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் 10 உள்ளூராட்சி சபைகளுக்கு நீர் பவுசர்கள் வழங்கப்பட்டன. அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா வாகனத்திற்கான ஆவணத்தைக் கையளிப்ப தையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அருகில் நிற்பதையும் காணலாம்.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகங்களுடன் சந்திப்பு

Image
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் பிரதான ஊடகங்களுடனான சந்திப்பொன்று நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. பகல் nபுhசனத்துடனான இச்சந்திப்பில்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது'

Image
இலங்கையின் நிலைப்பாடு இந்திய பிரதமருக்கு தெளிவாக எடுத்துரைப்பு

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்குத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று

ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்தில் ஒரு கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுப்பு!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்தில் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள பிரதி சபாநாயகர் மறுத்துள்ளார்.

புத்தளம் மக்களின் வருடாந்த பொதுக் கூட்டம்

Image
( கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா )

வாழுகின்ற போது நாம் எமது சமூகத்திற்கு எதை செய்யலாம்

என்ற பதத்தின் வெளிப்பாடாக பல்வேறு செயற்பாடுகளை நாம்

காணமுடிகின்றது.மனிதன் பிறந்தது

பிரதி அமைச்சரை பொது மக்கள் புதன், வெள்ளிக் கிழமைகளில் சந்திக்கலாம்

Image
               (ஐ. ஏ. காதிர் கான்)
கொழும்பு மற்றும் கொழும்பு மத்திய தொகுதியுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில்,

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குத்தான் இன்னமும் புரியாமல் மாலையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Image
அரசாங்கம் முஸ்லிம்களை ஓரம் கட்டுகிறது என ஒப்பாரி வைத்துக்கொண்டே அரசாங்கம் சிறந்தது என பாராளுமன்றத்தில் வாக்களித்ததன் மூலம் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்படுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

அடைமழை காரணமாக மினுவாங்கொடை வெள்ளத்தில்

Image
இன்று பெய்த அடைமழை காரணமாக மினுவாங்கொடையின் பல பகுதிகள்

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கணித பாட கருத்தரங்கொன்று

Image
2014 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கொன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில், FAST (Focus of Applied Studies and Technology) அமைப்பினரால் இன்று (06.01.2014) காலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரச அதிருப்தி எம்.பி.க்கள் ஜே.வி.பி.யுடன் பேச்சு

Image
அரசின் போக்கு குறித்து விரக்தியுற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் எம்பி.க்கள் சிலர் புதிய கூட்டணியொன்றை அமைக்க ஜே.வி.பி.யுடன் பேச்சு நடத்தி வருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்பி   தெரிவித்தார்.

சவூதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் தொழிலமைச்சு அறிவிப்பு

* வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்க தவறினால் 5000 ரியால் அபராதம்
* 9 மணிநேர ஓய்வு; வாரத்தில் ஒரு விடுமுறை
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் சம்பளம் வழங்க தவறும் தொழில் வழங்குனர்களுக்கு 5000 சவூதி ரியால்களுக்கு மேல் (1,73. 000 ரூபாய்) அபராதம் விதிக்க அந்நாட்டு தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் மாநகர சபையால் இழுத்தடிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கல்முனை மாநகர சபை முதல்வரை கண்டு பேசியதன் பலனாக கல்முனை  தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயல்வதாக கல்முனை மேயர் சொல்லியிருப்பதன் மூலம் இது வரையான காலப்பகுதியில் கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் மாநகர சபையால் இழுத்தடிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

மாவனல்லை, கெரமினிய பள்ளியை மூடிவிடவேண்டும்!

மாவனல்லை கெரமினிய தாருல் ஹிக்மா பள்ளிவாயலுக்கு இன்று மாலை 5.30 மணியளவில் திடீரென பிரவேசித்த இரு பௌத்த பிக்குகள் பள்ளிவாயலை மூடிவிடும் படி உத்தரவிட்டதாக அப்பள்ளிவாயலின் செயலாளரும் ஆசிரியருமான ஹிஸ்மத் எமது டெய்லி ஸிலோனுக்குத் தெரிவித்தார்.