-மப்றூக்-
சட்டத்துக்கு கருணையில்லை என்பார்கள். சட்டத்தின் வழியாக வழங்கப்படும் நீதியும் அப்படித்தான்.
ஆனால், நியாயம் – வேறு விதமானது. அது – மனச்சாட்சியின் அடிப்படையில் செயற்படும். நியாயத்துக்கு கருணையிருக்கின்றது. நீதி என்பது சட்டப் புத்தகத்துக்குள் மட்டுமே நின்று செயற்படும். நியாயத்தின் எல்லை விசாலமானது.
கல்முனை மநாகர சபை எல்லைக்குட்பட்ட வீதியொன்றுக்கு பெயர் சூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும், அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மிகச் சாதாரணமான, வீதி விவகாரமொன்று – அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம், நியாயத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய இந்த விடயத்தினை, சட்டம் – நீதியின் அடிப்படையில் கையாள நினைத்ததால், விவகாரம் – விகாரமடைந்திருக்கிறது.
மாநகரசபையொன்று – தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள எந்த வீதிக்கும் பெயர் சூட்டும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளது.
உதாரணமாக, குறித்த மாநகர சபையின் ஆதிக்கத்திலுள்ள பிரதேசத்தின் வீதியொன்றுக்கு பெயர் சூட்ட வேண்டுமாயின், அந்த மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் அமர்வில்,