கல்முனை அபிவிருத்தித் திட்ட வரைவு கோதபாய ராஜபக்ஷவிடம்kotha 1
கல்முனை மாநகரை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகள் அடங்கிய நகல் வரைபு, மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களினால் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரப் பிரதேசங்களை 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 10 வருட காலப்பகுதிக்குள் மக்கள் விரும்பும் வகையில் கல்முனை “20 – 25” எனும் தொனிப்பொருளில் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தி செய்யும் வகையில் இவ்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லெகூன் வியு ஹோட்டலில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடிய போதே கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் இதனைக் கையளித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.