திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெற்றிலை கொடுத்து வரவேற்பதையும் அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதி அமைச்சர் மொஹான்லால் கிரேரு ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்
தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா
திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெற்றிலை கொடுத்து வரவேற்பதையும் அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதி அமைச்சர் மொஹான்லால் கிரேரு ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்
பள்ளி சிறுமி துஷ்பிரயோகம்;15 வயதுச் சிறுவன் கைது
நாலரை வயது நிரம்பிய முன்பள்ளிச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 15 வயதுடைய சிறுவன் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே நேற்று முன்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே நேற்று முன்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜயவர்த்தனவின் மகன் ஐ.தே.க. சார்பில் கம்பஹாவில் போட்டி
மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் டாக்டர் கவிந்து ஜயவர்த்தன எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே டாக்டர் கவிந்து ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
எனது தந்தை இந்த நாட்டில் விட்டுச் சென்ற சேவையை தொடரவே நான் அரசியலுக்குள் வந்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற சேவையை நான் தொடர்வேன். அனைத்து இன மற்றும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன். எனது தந்தை டாக்டர் ஜயலத் வர்த்தன சகோதர இன மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். அதனை நான் தொடர்வேன். அத்துடன் அனைத்து இன மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என்றார்.
முஸ்லிம் காங்கிரசின் தலைவர் யார்? கொழும்பு வேட்பாளர் தடுமாற்றம்
முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் தனித்து போட்டியிடப்போவதாக சொல்கிறார்கள். இந்த போட்டோவில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தனது தலைவர்களாக ஹக்கீம், மஹிந்த, பிரசன்னவை போட்டுள்ளார். அப்படியென்றால் இவர்கள் தனித்து போட்டியிடப்போவதாக சொல்வதன் அர்த்தம் என்ன? எந்தளவுக்கு அவர்கள் சமூகத்தை ஏமாற்றுகிறார்கள் என்பதை இலகுவாக புரியலாம்.
பாலியல் குற்றம் குறித்த சர்ச்சையும! சல்மாவும்!
பாலியல் குற்றங்களை தடுக்க பெண்களிடம் சுயகட்டுப்பாடு தேவை எனும் மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷாவின் கருத்தால் நாடு முழுவதும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கும் நிலையில் தந்தி டிவியில் நேற்று இதுபற்றிய விவாதம் நடைபெற்றது.
றிஷாத் பதியுதீதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்;
றிஷாத் பதியுதீதீனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்; TNA எம்.பி.க்களும் பங்கேற்பு!
வவுனியாவில் இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீனைக் கண்டித்தும் இன்று (29) வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
அஸாத் சாலி கெஞ்சியதால்தான் நாம் சேர்த்தோம்!
தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக் கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறி விட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொழும்பு 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.
வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்க காரணமாக இருந்த உறுப்பினர்களும் குறித்த விசாரணை
கட்சியின் பணிப்புரைக்கு அமைய நடவாமல் 2014 ஆம் ஆண்டின் வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்க மூல காரணமாக இருந்த அனைத்து உறுப்பினர்களும் குறித்த விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழரசுக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்று, முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட, பிரதேச சபைகளின் சிலவற்றில் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கட்சியின் உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக கட்சி மத்திய குழு எடுத்திருக்கும் தீர்மானத்தை அறிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தலைமையில் ஆங்கில மொழி நிகழ்ச்சித் திட்டம்
ஐ. ஏ. காதிர் கான்
கொழும்பு மாவட்டத்திலுள்ள 1,500 மாணவர்களுக்கான ஆங்கில மொழி கற்கை நிகழ்ச்சித் திட்டம், எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு, கொழும்பு மியூஸியஸ் கல்லூரியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
அடிப்படை உரிமையை மறுக்கும் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல முயல்வது வேடிக்கை- சாத்தான் ஓதும் வேதம்
வவுனியா மருக்காரம்பலை பகுதியில் பழங்கால நாணயங்கள்
வவுனியா மருக்காரம்பலை பகுதியில் பழங்கால நாணயங்கள் அடங்கிய பானையொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கத்தில் திரிசூலம் சின்னத்தைக் கொண்ட 120 நாணயங்கள் பானையொன்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக்கட்சி அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சியினர் அரசுக்கெதிராக 'ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் மருதானையில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிர நிலையம் வரை சென்றது. அதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனையில் மனித நேயமற்ற அரசியல் நடக்கிறது
அப்து கபூர்
கல்முனை கரவாகு மேற்கு பழைய பொது நூலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவூக்கல் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பொது நூலகத்தில் பொறித்து வைக்கப்படாதது மனித நேயமற்றஇ அரசியல் நாகரிகமற்ற செயல்பாடாகும்.
தாய் தானமாக வழங்கிய கருப்பை
தனது தாய் தானமாக வழங்கிய கருப்பை மூலம் குழந்தை ஒன்றை பெறபோகும் முதல் பெண் என்ற பெருமையை சுவீடன் நாட்டு பெண்ணொருவர் பெறப்போகின்றார்.
சுவீடனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறவியிலேயே கருப்பை இல்லை. இதனையடுத்து குறித்தப் பெண் வளர்ந்து பெரிவளானதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார்.
சொத்து விபரங்களை வழங்காத வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படாது
வேட்பு மனுக்களுடன் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ
முக்கியஸ்தர்கள் காணப்படுகின்றனர்.
பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை
ஊழல் மோசடிமிக்க ஆட்சிக்கு எதிராக ஐ.தே.க, ஜே.வி.பி, ஜனநாயக கட்சி மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மருதானை, கொம்பனிதெரு, லிப்டன் சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு ஹைட் பார்க்கில் ஒன்றுகூடவுள்ளது என எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: சுரேஷ்
வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களுக்கு பின்னரும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்கின்றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா
தானம் நிலவுவதாக பாதுகாப்புச் செயலாளர் கூறுவதை நம்ப உலக நாடுகள் அதன் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
19 வகையான சுவையூட்டிகள் இலங்கை மக்களுக்கு ஹராம். அரசு அறிவிப்பு
உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய 19 வகையான உணவு சுவையூட்டிகளைத் தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் உணவு, பானங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சுவையூட்டிப் பதார்த்தங்களை இறக்குமதி செய்வது முற்றாகத் தடை செய்யப்படுகிறது.
கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா
பக்தாத் அறிஞருக்கு நிசாம் காரியப்பர் வரவேற்பு
கல்முனைக்கு விஜயம் செய்துள்ள பக்தாத் நகர இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அஸ்செய்யித் மன்சூருத்தீன் அல்ஜைலாணி அல்பக்தாதி அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெறுகின்ற மீலாதுன் நபி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு வருகை தந்துள்ள இந்த அறிஞர் மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் அழைப்பையேற்று இன்று மாலை மாநகர சபைக்கு விஜயம் செய்தார்கள்.
கல்முனை அபிவிருத்தித் திட்ட வரைவு கோதபாய ராஜபக்ஷவிடம்
கல்முனை மாநகரை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகள் அடங்கிய நகல் வரைபு, மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களினால் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - சீன பல்கலைக்கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பட்டப் பின் படிப்பு மாணவர்களுக்கு சீன விஞ்ஞானக் கல்வி பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
தேர்ச்சியை நிரூபிக்கத்தவறின் பதவி உயர்வுகள், சலுகைகள் ரத்து
இரண்டாம் மொழித் தேர்ச்சியை, நிரூபிப்பதற்காக அரச துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கருணாவை பிரித்து விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி யுத்தத்தை வெற்றி பெறுவதற்கு ஐ.தே.கட்சி அரசாங்கமே அடித்தளமிட்டது
கருணாவை பிரித்து விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி யுத்தத்தை வெற்றி
பெறுவதற்கு ஐ.தே.கட்சி அரசாங்கமே அடித்தளமிட்டது. என ஐ.தே.கட்சி குருநாகல் மாவட்ட எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் பதவிகளில் மாற்றங்கள்
அடுத்த வருடம் ஊவா, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கான தேர்தலை
நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹெட்லைட் பகல் நேரங்களிலும்
மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மோட்டார் சைக்கிளின் முன்விளக்கை (ஹெட்லைட்) பகல் நேரங்களிலும் கட்டாயம் ஒளிரவிட வேண்டும் என மேல்மாகணத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் 28ம் திகதி
2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய உறுதிமொழியின் படி விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக
ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன், அமைச்சர் ரிஷாட்
சிறுபாண்மை தமிழ். முஸ்லிம் மக்களுக்கு கைகொடுத்துக் காப்பாற்றுகின்றவர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ . அமைச்சர் பஷீல்
எமது நாட்டில் எத்தகைய தேசிய இனப்பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்து சிறுபாண்மை தமிழ். முஸ்லிம் மக்களுக்கு கைகொடுத்துக் காப்பாற்றுகின்றவர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும். அமைச்சர் பஷீல் ராஜபக்ஷ் அவர்களும் இருப்பது எமக்கு ஆறுதலாக இருக்கின்றது.
இவ்வாறு திகாமடுல்ல மாவட்டப்பாராளுமன்ற உறுபினரும் கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பௌத்த பிக்குவிற்கு குறைந்தது இரண்டு மனைவியர்
இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு
இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் அதிகமான மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேர களியாட்ட விடுதிப் பெண் சடலமாக மீட்பு - பொலிஸ் காஸ்டபிள் கைது
பிலியந்தலை, குடமாதுவ விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் தீக்காயங்கள்டன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிழக்கின் முதலாவது கைத்தொழில் பேட்டை?
தகவல் தொழில்நுட்பத்தில் ஏ.டி.எஸ்.எல் மற்றும் பைபர் ஒப்டிக்
"சதிக்கு நான் பலியாகி விட்டேன்'' என்று பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார்
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், ""சதிக்கு நான் பலியாகி விட்டேன்'' என்று பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் பேட்டியளித்துள்ளார்.

ஊடகத் துறையை அரசு நடத்துகின்ற விதம்
ஊடகத் துறையை இலங்கை அரசு நடத்துகின்ற விதம் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள்
என்ற பாகுபாடின்றி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகை விநியோகஸ்தர்களையும் கொன்றுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தென், மேல் மாகாண தேர்தலில் அரசை விரட்டியடிக்க அடித்தளமிடுவோம்! :திஸ்ஸ
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமல் சர்வாதிகார போக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்ப ஆட்சியாளர்களை விரட்டியடித்து மக்கள் நலன் காக்கும் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அடித்தளத்தினை எதிர்வரும் மார்ச் மாதம்
நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் உறுதிப்படுத்துவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
தமிழ்க் கூட்டமைப்புக்கு அமைச்சர் மைத்திரிபால அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தாம் இந்த அழைப்பினை விடுப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளு மன்றத் தெரிவுக் குழுவில் முன்வைக்கும் கருத்துகள் மூலம்
எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கு இடமளியோமம்
தெல்லிப்பழையில் புற்றுநோய் ஆஸ்பத்திரியை திறந்து வைத்து ஜனாதிபதி உரை
எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
யார் என்ன சொன்னாலும் வடக்கு மக்களின் சுபீட்சத்திற்காக மென்மேலும் உதவ தயாராகவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி,
புர்க்கான் பீ இப்திகார் எழுதிய “தெளிந்த முடிவு” என்ற நாவலுக்குத் தேசிய ரீதியான முதற்பரிசு
ஆசிரியை, தமிழ்கூறும் நல்லுலகறிந்த நாடகக் கலைஞர், வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அறிவிப்பாளர், எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட சகோதரி புர்க்கான் பீ
மேயர் முஸம்மில், தயா கமகே ஆகியோர் அரசாங்கத்தில்
கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மிலும் ஜ.தே.கட்சி தேசிய அமைப்பாளர் தயா கமகேயும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக
அரசாங்கம் கவனயீனமாக செயற்படின் எதிர்ப்பு ஏற்படும் :விக்கிரமபாகு
அரசாங்கம் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கவனயீனமாக செயற்படின் உலகளாவிய முதலாளித்துவ நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படும் நிலை ஏற்படுமென நவ
சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன எச்சரித்தார்.
முதலாளித்துவ நாடுகள் தேசிய பிரச்சினைகளில் தலையிடாவிடினும் சர்வாதிகார ஆட்சி மற்றும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடுகள் போன்று உலக முதலாளித்துவ நாடுகளும் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தெற்காசிய நீர் முகாமைத்துவத்திற்கான உயர் தொழில்நுட்ப தகவல்
கல்முனை மாநகர வரி அறவீட்டாளர்கள் சேவை இடைநிறுத்தம்
- கல்முனை மாநகர மக்கள் சோலை வரி செலுத்த வேண்டாம் என வேண்டுகோள்.
கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நடுக்கட்ட உத்தியோகத்தர்களின் (வரி அறவீடடாளர்கள்) சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதால்
கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நடுக்கட்ட உத்தியோகத்தர்களின் (வரி அறவீடடாளர்கள்) சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதால்
பெரிய வெங்காயத்துக்கு வருகிறது தடை
(பாலாவி நிருபர் ஏ ஏ முனாப்)
எதிர் வரும் 2015ம் ஆண்டு முதல் பெரிய வெங்காய இறக்குமதியை முற்று முழுதாக தடை செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
முஸ்லிம்கள் பிரச்சினை ஐ நாவுக்காம். அரசுக்கு ஜால்ரா அடிப்போர் கூடி முடிவு
முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அமைப்புகளின் வன்முறைகள் குறித்து ஜெனிவாவில்
உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு சர்வதேச வை.எம்.எம்.ஏ அமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஹிருணிகா நியமிக்கப்பட்டதை ஆட்சேபிக்கவில்லை:
தென், மேல் மாகாணசபைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் ஜன.30 முதல் பெப்.6 வரை
பெப்ரவரி 5 வரை கட்டுப்பணம் செலுத்தலாம்a
மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
அரசுடன் இருந்து கொண்டே அரசுடன் தேர்தல் கூட்டு இல்லை எனும் கூத்து
இம்முறை அரசுடன் கூட்டு இல்லை; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவு!
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் முடிவை இன்று எடுத்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று கூடிய கட்சியின் அதியுயர் பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.
நஸீர் அஹமதின் துஆ உறுப்பினனர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு!
-இர்ஷாத் றஹ்மத்துல்லா-
கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாகாண சபை தேர்தலில் ஜனநாயக ஜக்கிய முன்னணியில் (துஆ) போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவான முஹம்மத் பாயிஸ், மற்றும் அக்கட்சியில் போட்டியிட்ட அஜித் பெரேரா ஆகியோர் தலைமையிலான ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காபங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.
வரவு செலவு திட்டத்தால் தனது மகன் அக்கரைபற்றில் தோற்கடிக்கப்படலாம் என்ற அச்சம் அதாவுள்ளாவுக்கு
உள்ளூராட்சி சபைகளில் வரவு- செலவுத் திட்டம் இனிமேலும் தோற்கடிக்கப்பட முடியாத வகையில் புதிய சட்டத்தில் மீண்டும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இணையத்தளம் மூலம் வரிப்பணம் செலுத்தும் முறைமையை நேற்று கொழும்பு மாநகர சபையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்தானந்தவின் மனைவி மீண்டும் முறைப்பாடு
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது மனைவியான அம்பன் பொல ஆஷா விஜயந்தி பெரேரா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார்.
மேல் மாகாண சபை கலைப்பு
மேல்மாகாண சபையை கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படுமென மேல்மாகாண சபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மேல்மாகாண சபையின் முதலைமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
ஹலால் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்
ஹலால் அங்கீகார (உத்தரவாதமளிக்கப்பட்ட) நிறுவனத்தினூடாக (Halal accreditation (Guarantee) Ltd - HAC) இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு
Subscribe to:
Posts
(
Atom
)