BREAKING NEWS

நாட்டை ஆள்வது சம்பந்தனா? ஜனாதிபதியா? : பொதுபலசேனா


news
நாட்டை ஆள்வது சம்பந்தனா, ஜனாதிபதியா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. பௌத்த மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இருந்தும் கூட்டமைப்பை நாடுவது ஏன் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜபக்ச அரசின் தேவைகளையே பொலிஸார் நிறைவேற்றுகின்றனர்; நாட்டில் ஜனநாயகமே இல்லை என்கிறது அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் -

இலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமே இல்லை. ராஜபக்சவின் ஆட்சிக்குத் தேவையான வரையறுக்கப்பட்ட சட்டமே நாட்டில் செயற்படுத்தப்படுகின்றது. பொலிஸார், ராஜபக்ச அரசின் தேவைகளையே நிறைவேற்றி வருகின்றனர்.   இவ்வாறு

கல்முனை மாநகர சபை பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர்களுடன் சுமூக தீர்வு!


SLMC 30-12-2013 (3)
(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்து வாக்களிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று மாலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மு.கா.செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெற்றது.

கலாநிதி ரீ.பி.ஜhயா ஒரு யுகபுரு~ர்; ;நாளை அன்னாரின் ஜனன நினைவு தினம்


கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயா என்ற உயரிய நாமம் இந்நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் முத்திரை பதித்த நாமமாகும்.
ஐக்கிய இலங்கையையும் அதன் சுதந்திரப் பெருமையையும் யதார்த்தமாக்க இப் பெருமகனார் மகத்தான பணிகளைப் புரிந்தவர்.

ஊடகவியலாளர் கெளரவிப்பு

ஊடகவியலாளர் கெளரவிப்பும் தினகரன் வாரமஞ்சரி வாசகர் வட்ட அங்குரார்ப்பணமும் அல் ஹம்ரா மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றன. லேக்ஹவுஸ் ஆசிரியபீட பணிப்பாளர் சீலரத்ன செனரத் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நினைவுச் சின்னம் வழங்குவதையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். எம். அஸ்லம், மாகாண சபை உறுப்பினர் 
ஏ. எம். யூசுப் உட்பட முக்கியஸ்தர்களையும் காணலாம். 

கல்முனை மாநகர எல்லைக் குட்பட்ட கி.சே பிரிவு

அம்பாறை கச்சேரியில் உள்ள கல்முனை மாநகர எல்லைக் குட்பட்ட கி.சே பிரிவுகளின் வரைபடம் . Jowsi Abdul Jabbar

கல்முனை மாநகர பட்ஜட்டை காப்பாற்ற ஹக்கீம் மன்றாட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கள்கிழமை

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக ஊடக மாநாடு

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக தமது நிலைப்பாட்டை அறிவிக்கும்  ஊடக மாநாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) தனது கல்முனை காரியாலயத்தில் நடத்தியது.

கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரருடன் ஹரீஸ் சந்திப்பு!


km6
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக விடயம் தொடர்பாகவும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை

தெரிவுக்குழுவின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுப்பு


பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்து தெரிவிப்பதொன்றும் புதிய விடயமல்ல. கூட்டமைப்பு திட்டமிட்ட வகையில் தெரிவுக்குழு வுக்கெதிராக அறிவிப்புக்களை விடுப்பது வழக்கமான செயற்பாடாயிற்று. இவை குறித்து அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக்கொள்ள மாட்டாதென சபை முதல்வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவருமான நிமல்சிறிபால டி சில்வா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் அனர்த்த முகாமைத்துவ விழிப்பூட்டல் நிகழ்வும்

( 
சுனாமி இப்பிரதேசத்தை கபளீகரம் செய்து ஒன்பதாவது வருட நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் அனர்த்த முகாமைத்துவ விழிப்பூட்டல் நிகழ்வும், நேற்று வியாழக்கிழமை (26.12.2013) அன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.

அஷ்ரபின் தனிப்பட்ட வாழ்வை சில இணையங்கள் கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமாக இருந்த மறைந்த அஷ்ரபின் தனிப்பட்ட வாழ்வை சில இணைய ஊடகங்கள் கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது பற்றி முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்;ததாவது,

National Youth Services Council

National  Youth Services Council (NYSC) Maharagama distributed Sports equipments to the sports clubs held at the Stacepura Playgrounds, Grandpass, Colombo recently. Deputy Minister of Investment Promotion and Colombo Central SLFP Organizer  Faizer Musthapha distributed the sports goods to clubs along with Chairman and Director General of the (NYSC) Lalith Pium Perera, Western Provincial Councilor Jagath  Kumara , Kotte Municipal Council Deputy Mayor Madura Withanage and members of the council were also present

பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது


பெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபி தாவவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நற்போதனைகள்

நபி தாவூத் (அலை) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது தனது மகன் சுலைமான் (அலை) அவர்களை அருகே அழைத்து கூறிய அறிவுரைகளை ஹமீத் இப்றாஹீம் என்ற இயற்பெயர் பெற்றிருந்த வண்ணக் களஞ்சிய புலவர் தாம் இயற்றிய ‘இராஜ நாயகத்தில்’ தேனினுமினிய தீந்தமிழ்ப் பாக்களில் வழங்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தினம் நேற்று

தேசிய பாதுகாப்பு தினம் நேற்று களுத்துறையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் மாணவி ஒருவருக்கு சான்றிதழ்களை வழங்குகின்றார்.

மோசடி செய்த பௌத்த பிக்குவுக்கு எதிராக 172 முறைப்பாடுகள்


அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பௌத்த யாத்ரீகர்களை தம்பதிவ யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 50 இலட்ச ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ள முன்னாள் பௌத்த மத குரு ஒருவரை எதிர் வரும் ஜனவரி 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மௌலவி ரியாழின் வரலாற்றுப் பதிவுகள்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளராக 25 வருடங்கள் சேவை செய்த அல்ஹாஜ் எம்.ஜே.எம். ரியாழ் (கபூரி, B.A) அவர்கள் 10-12-2013 செவ்வாயன்று வபாத்தானார்கள். 1933 ஜனவரி மாதம் 23ம் திகதி கம்மல்துறையைச் சேர்ந்த

முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ இடங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

 கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ  இடங்களை பார்க்க  அனுமதிக்கப்படவில்லை.இதன் காரணமாக வெளியில் காத்திருந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

வெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

தெரிவுக்குழுவில் பங்;குகொள்ளாவிட்டால் கூட்டமைப்பு கருத்துக்களை தெரிவிக்கலாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை கொண்டிருக்காத போதிலும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் தங்களது நிலைப்பாட்டினை கருத்துக்களாக முன்வைக்கும் உரிமையை கொண்டுள்ளனரென நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது

உஜ்ஜையினி: பள்ளி மாணவியை கடத்தி 14 நாட்கள் உஜ்ஜையினி நகரில் 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று 14 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

தென்மாகாணத்தின் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமானமும்,முஸ்லீம் பட்டதாரிகளின் புறக்கணிப்பும்மகிந்த சிந்தையிதென்மாகாண கல்வி அமைச்சினால் கடந்த வருடம் (2012) இறுதிப்பகுதியில் 1200 பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடைவெளி காணப்படுவதாகவும் அதற்காக

இஸ்லாத்தை அவமதிக்கும் கேள்வி. மொழிபெயர்ப்பாளரில் பழி போட்டு தப்பிக்கும் கல்வி அமைச்சு.நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்  பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில்  கல்வி அமைச்சு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக தப்பித்துக்கொண்டது.

பௌத்த பீடத்தின் உதவியை நாடும் சஜித்(vi) ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவ சபை நன்­மை­யா­னதும் செயற்றிறன் மிக்­க­து­மென பௌத்த பீடம் ஏற்­றுக்­கொள்­ளு­மே­யானால் மாத்­தி­ரமே தலை­மைத்­துவ சபையில் இணைந்து செய­லாற்­றுவேன் என்று ஐ. தே. க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார். 
கட்சி ஆத­ர­வா­ளர்­களை சந்­தோ­ஷத்­திற்கு உள்­ளாக்கும் நோக்­குடன் போலி­யான மறு­சீ­ர­மைப்­புக்­களை செய்­வதால் கட்சி இன்னும் தோல்­வியை நோக்­கியே செல்லும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கல்முனை மாநகர மக்கள் + முஸ்லிம் காங்கிரஸ்

கல்முனை மாநகர மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு சேவை செய்ய வேண்டுமென்பதற்காக வாக்களித்து வெற்றி பெறச்செய்தார்கள் என்ற கருத்து பிழையானது.

உலமாக்களுக்கான மகாநாடு மல்வானை வடுவேகம பள்ளிவாயல் வளாகத்தில்

கம்பஹா மாவட்ட ஜம்இய்யத்துல்  உலமா கிளை, மல்வானை கிளையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த  உலமாக்களுக்கான மகாநாடு மல்வானை வடுவேகம பள்ளிவாயல் வளாகத்தில் அண்மையில் முழு நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.

செம்மண்ணோடைக் முஸ்லிம் கிராமத்தின் வரலாறும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் கறுவாக்கேணி சந்தியிலிருந்து இடப்பக்கமாக திரும்பும்; கறுவாக்கேணி - மீராவோடை வீதயின் சுமார்; 200 மீற்றர் தூரமும், மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சந்தியிலிருந்து இடப்பக்கமாக திரும்பும் ஆPஊளு வீதியின் ஊடாக சுமார் 300 மீற்றர் தூரமும்;; சென்றால் இக்கிராமத்தை அடைய முடியும்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் ஹஜர்ஜான் மன்சூருக்கு சமூகத் தலைவர்களின் தேசிய மட்ட விருது
ஐக்கிய நாடுகள் நண்பர்களின் இலங்கைக்கான அமைப்பு வழங்கிய தன்னார்வு சமூகத் தலைவர்களின் தேசிய மட்டத்திற்கான விருதினை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் பெற்றுக்கொண்டார்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய நிலவுசூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை, குறிப்பாக, நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

ரணில் கட்சியைப் பலப்படுத்திய பின்னர் அரசை கவிழ்ப்பது பற்றி சிந்திக்க வேண்டும்

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதுவும் பிரிட்டனின் வெஸ்ட் மினிஸ்டர் அடிப்படையில் இருகட்சி பாராளு மன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு நாடாகும். ஜனநாயகத்தை வெற்றிகரமாக ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அந்நாட்டில் மக்கள் செல்வாக்குமிக்க ஆளும் கட்சியும் அதே அளவு மக்கள் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும்.

கல்முனை மாநகர சபையில் அமளி துமளி. இதுதான் முஸ்லிம் காங்கிரசின் மாநகராட்சியா?

கல்முனை மாநகர சபையில் இன்று மாலை சமர்ப்பிக்கப்படவிருந்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை தோன்றியது.
மாநகர சபையின் இன்றைய பட்ஜெட் அமர்வு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேயர் நிஸாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர் ஒருவர் மேயரா கி விடுவார்

கடந்த கால தேர்தல்களில் கல்முனை முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர் ஒருவர் மேயராக வந்து கல்முனையை அபரித்து விடுவார் என்று முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தோர் பூச்சாண்டி காட்டி இனவாதம் பேசியே கல்முனை தேர்தல்களில் வென்று வந்தததன் காரணமாகவே இன்று தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன என

பள்ளிவாயல்களையும், கோயில்களையும் உடைத்து விட்டு தேசிய ஒற்றுமைக்கான மாநாடு நடாத்தப்போகிறார்களாம்.

இனங்களுக்கிடை யிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக தேசிய ஒற்றுமைக்கான மக்கள் மாநாடொன்றினை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இரா. சம்பந்தன் எம்.பி, எம். சுமந்திரன் எம்.பி ஆகியோருடன் ஜனாதிபதி


பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் அளிக்கப்பட்ட இரவு விருந்துபசாரம் கடந்த 20 ஆம் திகதி சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சபாநாயகர் வரவேற்பதையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி, எம். சுமந்திரன் எம்.பி ஆகியோருடன் ஜனாதிபதி உரையாடுவதையும் படங்களில் காணலாம்.

மனித உரிமைகள் சேவையாளர்களுக்கான விருது

மனித உரிமைகள் சேவையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு இன்று மாலை கொழும்பு டவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விருதுகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியும் கலந்து கொண்டார்.

கடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1962

கடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பொதுமக்களுக்கென 1962 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் இல்லாத பாராளுமன்ற தெரிவுக்குழு

எதிர்க்கட்சிகள் இல்லாத பாராளுமன்ற தெரிவுக்குழுவை நீடிப்பதால் எந்த பிரயோசனமும் இல்லையென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளதுடன்,  இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கையெடுப்பதாக உலகுக்கு காண்பிக்கவே நீடிக்கப்படுகின்றதெனவும் விமர்சித்துள்ளது. பாராளுமன்ற தெரிவுக்குழு நீடிக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்  பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். -

கட்சியின்றி பயணிக்க முயன்ற பலர் அழிக்கப்பட்டுள்ளமையே வரலாறு

தற்போது நாட்டின் சில பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளானது எவ்விதத்திலும் கட்சியின் பிரச்சினையல்ல. அவை அச்சபைகளில் காணப்படும் பதவிகள் தொடர்பில் எழுந்துள்ள தனிப்பட்ட பிரச்சினைகளாகும்.

கொழும்பு எஸ்.எச்.எம். இத்ரீஸ் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது

இவ்வருட அரச விருது விழாவில் இணுவில் சோமஸ்கந்த சர்மா நடேசசர்மா, கொழும்பு எஸ்.எச்.எம். இத்ரீஸ், கல்முனை பொன்னையா ஏகாம்பரம் ஆகியோர் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது எடுத்த படங்கள். 

யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்?

இந்த விடயத்துள் நான் நழைய விருப்பமின்றி இருந்தேன். ஆனாலும் தெரிந்த உண்மையை மறைப்பது பாவம் என்பதால் இங்கு பதில் சொல்கிறேன்.
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் இன்று சஊதி அரேபியா

இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக

நேற்று நடைபெற்ற க பொ த சாதாரண தர பரீட்சையின் குடியுரிமைக்கல்வி மற்றும் சமூக நிர்வாக கேள்விப்பத்திரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக என்று கேட்கப்பட்டுள்ளமை இஸ்லாத்தையும் முஸ்லிம்களை வேண்டுமென்றே அசிங்கப்படுத்தியுள்ளதாக முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி கல்;வி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். மேதிக விபரங்கள் பின்னர்.

கல்முனை மாநகர சபை தொடர்பான பொய்யான தகவல்கள்


பிரதி முதல்வர் அறை தொடர்பாக ஏற்கனவே ஆணையாளருக்கு எழுத்து மூலம் சகல வசதிகளையும் வழங்குமாறு பணித்துள்ளேன். இதன் பிரதியினை கட்சியின் தலைவர் கௌரவ நீதியமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் அனுப்பியதோடு பிரதி முதல்வருக்கும் தெரிவித்திருந்தேன். 

தொழில் பேட்டை ஊழியர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலான முக்கிய கலந்துரையாடலொன்று

இலங்கை முதலீட்டாளர் சபை முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி வர்த்தக வலயத்தில் கடமை புரியும் தொழில் பேட்டை ஊழியர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலான முக்கிய கலந்துரையாடலொன்று, கடந்த வியாழக்கிழமை (19.12.2013) அவிசாவளை – சீதாவக்க தொழில்பேட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள   முதலீட்டாளர் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று

எஸ் அஷ்ரப்கான்

தெகிவள, கடவத்த பள்ளிவாசல்கள் நள்ளிரவு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது

அம்பாரை சவளக்கடை பொலிஸ் பிரிவில் பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இல்லை!

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட மாட்டாதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

‘ஜப்னா முஸ்லிம்’ ஆசிரியர் நலம் பெற பிரார்த்திப்போம்!

கடந்த மூன்று வருடங்களாக யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை தனியொரு மனிதனாக நடாத்தி வந்த ஊடகவியலாளர் ஜனாப் முஹம்மத் அன்சீர் அவர்கள் தொடர்ச்சியான உடல், மன உளைச்சல் காரணமாக பாதிக்கப் பட்டு, மருத்துவமனைக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
jmயாழ்ப்பாணம் சொனகதேருவில் 1979 ஆம் ஆண்டு, ஒரு கற்ற குடும்பத்தில் பிறந்த அன்சீர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியிலும், உயர்கல்வியை நீர்கொழும்பு விஜயரட்னம் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.

சு. க. உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சொந்தமான உள்ளூராட்சி மன்றங்களின் 2014 வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக் கப்பட்ட வேளை யில் அதனைத் தோற்கடிக்க வாக்கைப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

சர்வதேச தலையீடுகளை ஏற்க முடியாது கத்தோலிக்க திருச்சபை முழுமையாக எதிர்ப்

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது. கத்தோலிக்க திருச்சபை அதனை முழுமையாக எதிர்க்கிறது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஆதிகாலத்தில் இலங்கை இந்து நாடாகவோ பௌத்த நாடாகவோ இல்லாமல் முஸ்லிம் நாடாகவே இருந்தது-முபாறக் மௌலவி

இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.

மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

தனித் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச் சிங்கள பிரதேசங் களில் சிங்கள மொழியிலும் கடமை யாற்றக்கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில்தெரிவித்தார்.

சுகாதாரத்துறைக்கு புதிதாக தாதியர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

சுகாதாரத்துறைக்கு புதிதாக தாதியர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடை பெற்றபோது தாதியொருவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியமனக் கடிதத்தைக் கையளிக்கின்றார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.

கிரிக்கட் நிறைவேற்றுக்குழுவுக்கு ஒமர் ஹாஜி சுலைமான்.
இலங்கை கிரிக்கட் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஒமர் ஹாஜி சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மோதல்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் வெடித்துள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார் உத்தரவு

கொழும்பிலுள்ள
மூன்று பள்ளிவாசல்களில்
தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார்
உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் றிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் தமிழ் பிரதேச சபையே வேண்டும் - சுரேஷ் எம்.பி

கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் வேண்டாம் அங்கு தமிழ் பிரதேச சபையே உருவாக்கப்பட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஜனாதிபதி ஆதரவுடன் தரமுயரும்

கல்முனை தமிழ் பிரதேச செயலகம்; தரமுயர்த்தப்பட வேண்டியது தேவையான ஒன்று என்றும் ஜனாதிபதி ஆதரவுடன் இது தரமுயர்த்தபடுமென பெது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரத்ன தமிழ் மக்கள் தரப்பிடம் வாக்குறுதியளித்துள்ளதாக

தொப்பி மற்றும் பெண்களின் முக்காடு போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும்

புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் முக்காடு போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும்

அரசின் பங்காளிக் கட்சியே நாம்

முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு மென அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நkர் அஹமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் தொப்பிக்கு இடம் கிடையாது

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஸி.எஸ். ஹமீத், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

முன்னாள் அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீத், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பினைக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பியுமான ஏ.எச்.எம். அஸ்வர் எழுதிய (Vallலீy oஜீ மிலீசீs) என்ற நூலின் பிரதியொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரின் மனைவி ஷமீமா ஹமீத் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் இன்று

தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று அவர் பிறந்த கிராமத்தில் நடைபெறுகிறது. கடந்த 5ம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல்--குறித்து கலந்துரையாடல்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சயின் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பாளர்கள் நேற்று (13) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சுகாதார அமைச்சர் வருவதை தடுத்தமை அரசியல்வாதிகளின் மோசமான நடவடிக்கையாகும்

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் வெள்ளிவிழாவுக்கு சுகாதார அமைச்சர் வருவதை தடுத்தமை கல்முனையை இருண்ட யுகத்தில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளின் மோசமான நடவடிக்கையாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடல்


13 வது திருத்தச் சட்டத்திற்கமை வாக மாகாண ஆளுநருக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையி லான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடை பெற்றது.

தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக நடவடிக்

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையா டிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் போக்குவரத்து அமை ச்சர் சி.பி. ரத்னாயக்க நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலை பஸ்களில் செல் லும் மாணவர்களின் பாதுகா ப்பை உறுதிப்படுத்தும் வகை யில் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனு ப்பும் முறையொன்றையும் புதிதாக நடைமுறைப்படுத்த வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மினுவாங்கொடை- கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து

மினுவாங்கொடை- கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து 2013- ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான எம். ஆர்.எப்.அஷ்பா(173), எம்.என்.எப்.நஹ்ஜா(166),கே.எம். அப்துல்லாஹ்(164), எம்.எப்.எப்.ஹாஜரா(165), எம்.ஆர். ரிஹாமா பேகம்(164), எம்.ஏ.எப். அஷ்பா(156) ஆகியோர், அதிபர் அஷ்ஷேஹ் எம்.எல்.அதாஉர் ரஹ்மான்(ஸஹ்ரி), பிரதி அதிபர் ஏ.ஏ.எம்.ரிஸ்வி, ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியர் எம்.எம்.எம்.ஜெலீல், வகுப்பாசிரியைகளான எம்.எஸ்.எஸ்.ஷரீபா, ஏ.எம்.எஸ். ஸாபிரா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படம்.

பிரான்சில் ஹலால் இறைச்சி சூப்பர்மார்க்கெட்டை தாக்க முயற்சி

 பிரான்சின் ரோபியாஹ் என்ற நகரில் அமைந்துள்ள சூப்பர்மார்கெட் ஒன்று இஸ்லாமிய முறைப்படி அறுக்கப் பட்ட இறைச்சி வகைகளை சந்தைப் படுத்தி வருகிறது.

அட்டாளைச்சேனை மகிழ்ச்சிப் பெருவிழா

 அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்திய மகிழ்ச்சிப் பெருவிழா இன்று(11) உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தலைமையில்  அட்டாளைச்சேனை பிரதேச வளாகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் மஹிந்தானந்த- மனைவி லடாய்;

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை அச்சுறுத்தி வருகிறார் என அவரது மனைவி ஆஷா போலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இனங்களுக்கிடையிலான விரிசலுக்கு இலங்கை, இந்திய ஒப்பந்தம் வழிகோலியது

1987 இல் ஆட்சியிலிருந்த அரசு ஒழுங்கான வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிக்காத நிலையிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது.
எனினும் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்கும் இடையே கைச்சாத்தான அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லு படியாகிறது என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல இந்திய இராணுவம் இலங்கைக்குள் வருவதற்கும் வழிவகுத்தது.
அதேபோன்று இந்திய இராணுவத்தினர் அதிகளவில் கொல்லப்பட்டது இலங்கையிலேயே என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar