BREAKING NEWS

கல்முனை தைக்கா வீதியின் பெயரால் 80 லட்சம் மோசடி

கல்முனை தைக்கா வீதி 80 லட்ச ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக கல்முனை மேயர் சிராஸ் ஊடகங்களுக்கு பொய் கூறியுள்ளதன் முழு நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளதோடு பாரிய ஊழல் மோசடியும் இடம் பெற்றுள்ளது.


அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த கல்முனை மேயர் “கடந்த இரண்டு வருடங்களில் 14 கோடி ரூபா செலவிலான 60 அபிவிருத்தித்திட்டங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் உள்ளதாகவும் அவற்றுள் 80 லட்சம் ரூபாவிலான கல்முனை தைக்கா வீதியும் அடங்குவதாக” குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி தைக்கா வீதி கடந்த 40 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படவில்லை என்பதை எமது கட்சி அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளது.  இந்த வீதியில் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ஜும்ஆ பள்ளி இருப்பதையும் அப்பள்ளியை சேர்ந்தோரில் 95 வீதமானோர் கடந்த கால தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து ஏமாந்த அப்பாவிகள் என்பதையும் சுட்டிக்காட்டி இது காலவரை அக்கட்சிக்கு வாக்களித்தமைக்காகவாவது இவ்வீதியை முறையான வடிகாண்கள் அமைத்து புனரமைக்கும்படி எமது கட்சி மட்டுமே தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றது. மேற்படி வீதியை இம்மக்களால் பாராளுமன்றவர் சென்றவரோ கல்முனை மேயர்களோ இது வரை எதுவித புனரமைப்பும் செய்யவில்லை.

இந்த நிலையில் மேற்படி வீதி 80 லட்ச ரூபா செலவில் புனரமைப்பக்கப்பட்டு பூரணமடைந்துள்ளதாக கல்முனை மேயர் கூறியுள்ளமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் இவ்வீதி இன்னமும் எது வித புனரமைப்பையும் காண முடியாத நிலையில் கல்முனைக்குடி மக்கள் தவிர நாட்டு மக்கள் ஏதோ கல்முனை சிங்கப்பூராக மாறி வருவதாக ஊடக செய்திகள் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். இது நாட்டு மக்களை முழுமையாக ஏமாற்றி விட்டு கல்முனை மக்களை காட்டி மிகப்பெரிய கொள்ளையே நடக்கிறது என்பதையே தெளிவாக காட்டுகிறது.
இந்த வீதி இன்னமும் எத்தகைய அபிவிருத்தியையும் காணவில்லை என்பதை நாம் பகிரங்கமான சவாலுக்கு உட்படுத்துவதோடு ஊடகவியலாளர்கள் மேற்படி வீதிக்கு சென்று பார்த்து இதன் உண்மைத்தன்மையை உலகுக்கு வெளிக்காட்டுமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை நகர் ஆகிய பெரும் ஊர்களைக்கொண்ட கல்முனை மக்கள் இயற்கையாகவே வியாபாரத்தில் ஈடுபாடு கொண்ட, திறமைமிக்கவர்கள் என்பதால் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகள் காரணமாக கல்முனையின் கட்டடங்கள் தலை நிமிர்ந்து கல்முனைக்கு மெருகூற்றுகின்றனவே தவிர அதனை ஆளும் அரசியல்வாதிகள் அம்மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து அவர்களின் கோடிக்கணக்கான வரிகளை ஏப்பமிடுவதோடு இவ்வாறான பொய் தகவல்களை ஊடகங்களுக்கு  வழங்கி  மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர்.

இவ்வாறு கல்முனை மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதற்கும், அவர்களைக்காட்டி ஊழல் மற்றும் கொள்ளையடிப்புக்கள் நடைபெறுவதற்கும் பிரதான காரணம்; தலை முதல் நுணி வரை சுயநலம் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கல்முனை மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பதாகும். தங்களுக்கான பணம் பதவி தவிர வேறு எதையும் சிந்திக்காத இக்கட்சியை கல்முனை மக்கள் ஒன்றிணைந்து குப்பையில் தூக்கிப்போடாதவரை கல்முனை மாநகரை இத்தகைய சுயநல கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற முடியாது.
; மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar