மருதமுனைப் பிரதேசத்தின் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய முதுபெரும் கல்விமான் அபுல்கலாம் பளீல் மௌலானாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான செனட்டர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.
கிழக்கிலங்கையின் மூத்த கல்விமான்களுள் ஒருவரும் மார்க்க அறிஞரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பளீல் மௌலானா திங்கட்கிழமை (25) காலமானார்.