Skip to main content

Posts

Showing posts from January, 2013

உலமா சபையும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும்

இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தை பகிரங்கமாக கொண்டாடும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளமையை உலமா கட்சி வரவேற்பதோடு உலமா சபையும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மணிமேகலை பிரசுரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 நூல்களின் வெளியீட்டு விழா

சென்னை நந்தனம் வை. எம். சி. ஏ மைதானத்தில் மணிமேகலை பிரசுரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய சமூக ஜோதி எம். ஏ. றபீக், விழா ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும், புரவலர் ஹாஷிம் உமர், மற்றும் அறிவிப்பாளர் ஜெயஸ்ரீ சுந்தர் உட்பட பலரையும் காணலாம்.

பிற நாட்டுக்கு சென்றால் அந்நாட்டின் சட்டங்களை மதிப்பதற்கான நாகரிகத்தை மதிப்புக்குரிய பாராளுமன்ற உறப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்

இலங்கைப்பெண்கள் வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடைசெய்ய வேண்டும் என்ற ஜாதிக்க ஹெல உறுமய பாராளுமன்ற உறப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் கருத்தை முஸ்லிம் உலமா கட்சி வரவேற்கும் அதே வேளை புத்தர் சிலையொன்றை வைத்திருந்தால் கையை வெட்டும் காட்டு மிராண்டித்தனமான சட்டம் சஊதியில் நிலவுவதாக கூறியிருப்பது

www. aljazeeralanka.com

எமது இணையமான அல்ஜஸீறா லங்கா இணையச்சேவை புளக்ஸ்பொட்டிலிருந்து டொட் கொம்முக்கு மாறியுள்ள நற்செய்தியை வாசகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம். இனி எவரும் மிக இலகுவாக கூகிள்ளுக்கு சென்று aljazeeralanka.com என டைப்செய்து எமது இணையத்தை மிக இலகுவாக பார்வையிடலாம். அது பற்றிய தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை aljazeeralanka@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பலாம். இது பற்றி தங்கள் நண்பர்களுக்கும் ஷெயார் பண்ணுங்கள்.

பாராளுமன்ற சர்வ கட்சிக்குழு என்பது முஸ்லிம்கள் மத்தியிலுள்ள இயக்கங்களை தடைசெய்வதில்தான் கொண்டு போய் முடியுமே தவிர முஸ்லிம் மக்களுக்கெதிரான பேரினவாதத்தை அடக்கியதாக முடியாது

மத அடிப்படைவாதங்கள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதியின் பாராளுமன்ற சர்வ கட்சிக்குழு என்பது முஸ்லிம்கள் மத்தியிலுள்ள இயக்கங்களை தடைசெய்வதில்தான் கொண்டு போய் முடியுமே தவிர முஸ்லிம் மக்களுக்கெதிரான பேரினவாதத்தை அடக்கியதாக முடியாது  என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

யானையை பார்த்த குருடர்கள் போன்று இன்று பலர் இஸ்லாத்தை பார்க்கிறார்கள்

யானையை பார்த்த குருடர்கள் போன்று இன்று பலர் இஸ்லாத்தை பார்க்கிறார்கள். குருடர்களிடம் யானையை கொண்டு வந்து நிறுத்தியபோது தும்பிக்கையை தொட்டுப்பார்த்த ஒருவன் யானை என்றால் நீளமான றப்பர் என்றான். இன்னொருவன் காலை தொட்டுப்பார்த்து யானை என்றால் மரம் என்றான், இன்னொருவன் வாலை தொட்டு விட்டு யானை என்றால் குஞ்சம் உள்ள கயிறு என்றான். வயிற்றை தடவிப்பார்த்த ஒருவன் யானை என்றால் பெரிய கிணறு என்றான். அது போன்றே இன்று இஸ்லாத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து விட்டு சிலர் இஸ்லாம் என்றால் தப்லீக்தான், இஸ்லாம் என்றால் தவ்ஹீத்தான், இஸ்லாம் என்றால் ஜமாஅத் இஸ்லாம்தான், இஸ்லாம் என்றால் சுன்னத் ஜமாஅத்தான், வாலை மட்டும் தொட்டவன் போல் இஸ்லாம் என்றால் ஜமாஅதுல் முஸ்லிமீன்தான் என்று கூறுகின்ற குருடர்களை காணலாம்.
இஸ்லாத்தை முழுமையாக பார்ப்பவன் இஸ்லாம் என்றால் இஸ்லாம்தான் என்றே கூறுவான். இஸ்லாத்தை ஏற்ற அனைவரும் முஸ்லிம்கள்தான் என்றே கூறுவான்.
மௌலவிமார் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால்

எமது கட்சியைச் சேர்ந்த மௌலவிமார் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சமகால பிரச்சினைகளான ஷரீயா சட்டம், பௌத்த மதகுருமாரின் இனவாத பேச்சுக்கள் போன்றவற்றுக்கு சரியான பதில் தர முடியாத இன்றைய இழிவு நிலை சமூகத்துக்கு ஏட்பட்டிருக்காது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவத்தார்.

அல்கைதா, தலிபான் உறுப்பினர்களை கைது செய்யு முன்பாக பொதுபல சேனா, ஹெல உறுமய போன்றவற்றை முதலில் அரசு தடை செய்ய வேண்டும்

நாட்டில் இருப்பதாக உறுதி செய்யப்படாத அல்கைதா, தலிபான் உறுப்பினர்களை கைது செய்யு முன்பாக இனங்களுக்கிடையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயலும் பொதுபல சேனா, ஹெல உறுமய போன்றவற்றை முதலில் அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

அதிகாரத்தை பகிர்ந்தளித்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான

அதிகாரத்தை பகிர்ந்தளித்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான அமைப்பினால் நடாத்தப்பட்;ட ஊடக மாநாட்டின் போது கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஆசாத் சாலி உரையாற்றுவதையும், நவ சமசமாஜக்கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீ;த் உட்பட ஏனைய கட்சித்தலைவர்களையும் காணலாம்.

ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கான தீர்மானத்தை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றியுள்ளமை குழந்தைத்தனமான அரசியலாகும்

இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை மகஜர் மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கான தீர்மானத்தை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றியுள்ளமை குழந்தைத்தனமான அரசியலாகும் என உலமா கட்சி குறிப்பிட்டுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது

றிசானா நபீக்கின் மரணத்துக்கான முழு பொறுப்பையும் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவுமே ஏற்பதுடன் இதற்கு பரிகாரமாக அவரின் வீட்டை புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டுமென உலமா கட்சி தெரிவித்துள்ளது.

றிசானா நபீக்கின் மரணத்துக்கான முழு பொறுப்பையும் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவுமே ஏற்பதுடன் இதற்கு பரிகாரமாக அவரின் வீட்டை புதிதாக கட்டிக்கொடுக்க  வேண்டுமென உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைகளின் அதிகாரங்களை அபகரிக்கும் திவிநெகும சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவளித்து மீண்டும் ஒரு முறை தமிழ் பேசும் மக்களுக்கு துரோகம் செய்யத்தான் போகிறது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் அதன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றில் திவிநெகும சட்டமூலம் நிறைவேறும் என உலமா கட்சித்தலவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச ஆய்வு மாநாட்டுக்காக ஆய்வுகள் கோரப்படுகின்றன

சர்வதேச ஆய்வு மாநாட்டுக்காக ஆய்வுகள் கோரப்படுகின்றன
தகவல்: எம்.எல்.எம். அஸ்ஹர்
‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு’- கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்கள்  என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத் துறையுடன் இணைந்து இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி நடத்தும் சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2013.03.02 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.