Skip to main content

Posts

Showing posts from October, 2012

பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள்

13வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென அரச தரப்பை சேர்ந்த சிலர் கோருவதன் மூலம் அவர்கள் பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள் என அகில இலங்கை உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

திருடர்களை விசாரிக்க திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட தலைவரே தலைமை வகிப்பது

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விசாரிக்கவென அதன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளமை குற்றத்துக்கு  உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும்  விசித்திரம் நடை பெறுகிறது  என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் பள்ளிவாயல் மதுரசாவை தாக்கி அதன் கூரைகள், காற்றாடிகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென உலமா கட்சி

அநுராதபுரம் மல்வத்துஓய பெரிய பள்ளி வாயலுடன் இணைந்திருந்த குர்ஆன் மதுரசா  தீயிடப்பட்டமையை அகில இலங்கை உலமா கட்சி வண்மையாக கண்டிப்பதுடன் இதனை புரிந்தவர்கள் சட்’டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  கேட்டுக்கொண்டுள்ளது.

ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி

தியாகப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு இறைவனின் அருளும், அவனது அன்பும் கிடைக்க வேண்டுமென பிராhத்திப்பதுடன் குர்ஆன் ஹதீத் ஒளியில் ஒற்றுமைப்பட்ட சமூகமாய் வாழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமெனவும் அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்துகிறது.
ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது

பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் அஸ்வர்

மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை பயக்கும் என ஏ. எச். ஏம். அஸ்வர் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது என்பதால் இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.

அஸ்வரின் இக்கருத்து சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

ஹாஜிகள் ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து மக்கா சென்று மினாவில் தரிக்காமல் தமது ஹஜ்ஜையும், பணத்தையும் வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதானது உண்மையில் மிகப்பெரிய துரதிஷ்டமாகும்.

இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்றுள்ள ஹாஜிகளுக்கு மினாவில் தங்குமிடம் ஒதுக்காமைக்கு முகவர்களும் ஹாஜிகள்; விடயத்தில் அக்கறை செலுத்தாத இலங்கை அரசின் நிர்வாக குறைபாடுமே காரணமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. மினாவில் ஹாஜிகளுக்கு இடங்கிடைக்கவில்லை என்பது பற்றிய உலமா கட்சியின் கருத்தை ஊடகவியலார் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இவ்வாறு தெரிவித்தர். அவர் மேலும் கூறியதாவது

ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாணத்தை மையமாகக்கொண்டு ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி விரைவில் பிரகடனப்படுத்தப்படவள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாண மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது பாரிய அதிருப்தியுற்றிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் பதவிகளை அலங்கரிக்காத முஸ்லிம் கட்சியின் அவசியம் உணரப்பட்டு வருககிறது. குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் உறுப்பினர்களும் கட்சிக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் உணர்கிறார்கள். இதன் காரணமாக ப+னைக்கு யார் மணி கட்டுவது என்ற மக்களின் எதிர் பார்ப்புக்கிணங்க ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.  
 கல்முனையை முகவரியாகக்கொண்டு இயங்கப்போகும் இக்கட்சி முதலில் கல்முனையிலும் பின்னர் அம்பாரை மாவட்டம், கிழக்கு மாகாணம் என பரவலாக்கப்பட்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் உண்மையான, நேர்iமாயான குரலாக செயற்படவுள்ளதோடு வெளிப்படைத்தன்மை கொண்ட யாப்பைக்கொண்டதாக செயற்படவுள்ளது. இதில் அங்கத்தவர்களாக இணைய விரும்புவோர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் எ…

கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிக்கும் போதாவது நடவடிக்கை எடுக்காமல் பதவிகளுக்காக சரணடைந்து விட்டு இப்போது தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக்கொண்டவன் போல் சுனாமி மக்கள் பற்றி பேசுவது வெட்கங்கெட்ட செயலாகும்.

அரசாங்கத்துடன் இணையும் போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக்கூட நிபந்தனையாக முன்வைக்காத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சுனாமியால் இன்னமும் வீடுகள் கிடைக்காத கல்முனை மக்கள் பற்றிப்பேசுவது அவரின் அடுத்த கட்ட ஏமாற்று நடவடிக்கையாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பங்களாதேஷ் அரசாங்கம் தமது நாட்டில் பௌத்த ஆலயங்களை தாக்கியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது - உலமா கட்சி

இலங்கையில் பௌத்த தீவிரவாதிகளால் பள்ளிகள் தாக்கப்பட்ட போதும், மியான்மாரில் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் மௌனமாக இருந்த பங்களாதேஷ் அரசாங்கம் தமது நாட்டில் பௌத்த ஆலயங்களை தாக்கியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

திவிநெகும சட்ட மூலம்: சகல நிதியையும் தாமே கையாள்வதற்கான இன்னொரு முயற்சி ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன்

ஏற்கெனவே நிதி அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நகர அபிவிருத்தி என்பவற்றின் ஊடாக பெரும்பாலான நிதியைக் கையாளும் அரசாங்கம் இத்திட்டத்தினூடாக மீதி நிதியையும் கையாளும் அதிகாரத்தைக் குடும்பத்துக்கு வழங்கியுள்ளனர் என ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் தெரிவித்தார்

அல்ஆலிம் பரீட்சைகளுக்கான பிரமாணங்களும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களும் சம்பந்தமான கை நூலில் பல முரண்பாடுகள்

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அல்ஆலிம் பரீட்சைகளுக்கான பிரமாணங்களும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களும் சம்பந்தமான கை நூலில் பல முரண்பாடுகளும், அறபுக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு பாரிய அநீதிகளும் எற்படுத்தப்பட்டுள்ளன என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவரினால்

அமைச்சர்களின் தலைமையிலான முஸ்லிம், தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வருவார்கள் என நினைப்பதும் அழைப்பதும் யதார்த்தமாகாது

தமிழ் பேசும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அடிப்படைக்கொள்கைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்  அவர்களின் கருத்து வரவேற்புக்குரியதாக இருப்பினும் அமைச்சர்களின் தலைமையிலான முஸ்லிம், தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வருவார்கள் என நினைப்பதும் அழைப்பதும் யதார்த்தமாகாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவத்துள்ளதாவது,

அல்ஆலிம் பரீட்சைகள் க. பொ. தவுக்கு சமமானவை என்பதை கல்வி அமைச்சை ஏற்றுக்கொள்ள வேண்டும்

எமது நீண்ட கால கோரிக்கையான அல்ஆலிம் பரீட்சைகளுக்கான பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதை உலமா கட்சி வரவேற்பதுடன் அவை க. பொ. த. பரீட்சைக்கு சமமானது என்பதை கல்வி அமைச்சு ஏற்காத வரை அப்பரீட்சைகளை நடாத்துவது அர்த்தமற்றதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

தலைவர் எவ்வழியோ அவ்வழியை பின் பற்றி உறுப்பினர்களும் தம்பாட்டுக்கு சமூகத்தை ஏலம் போட்டு விட்டார்கள்.

திவி நெகும திட்டத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமூகத்தை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.