Skip to main content

Posts

Showing posts from July, 2012

இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து

  இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து –  அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக

ரணில் விக்ரமசிங்க முஸ்லிம்களி;டம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை

முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், குர்ஆன் ஹதீதை விட்டு விட்டு மஹிந்த சிந்தனையை கட்டிப்பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் என்ற ஐ தே க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்று குர்ஆனை எந்த வகையிலும் இழிவு படுத்தாது என்பதால் அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டிய அவசியம் இல்லை என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

அரசாங்கத்தின் புறோக்கரே முஸ்லிம் காங்கிரஸ்

அரசாங்கத்தின் தரகராக – புறோக்கராக – கிழக்கு மாகாண தேர்தலில் தனித்து களமிறங்கியிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் பள்ளிவாயல்களை தாக்கும் இனவாதிகளுக்கெதிரான செய்தியை நாம் சொல்ல முடியுமா என்பதை முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மன்னாரில் நடைபெற்ற சம்பவங்கள் அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேணடும் - உலமா கட்சி

மன்னாரில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற சம்பவங்கள் மீள் குடியேறும் விடயத்தில் அரசாங்கம் காட்டிய அசமந்தத்தினால் ஏற்பட்டவை என்பதால் அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேணடும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய அநீதி; சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது சர்வதேச இளைஞர் பாராளுமன்றம்!

- இர்ஷாத் றஹ்மத்துல்லா - மீள்குடியேற்றம் தொடர்பில் வட மாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாரிய அநீதி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்று அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன்  தெரிவித்தார்.

உலமா கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது

மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை உலமா கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இது பற்றிய பேச்சுவார்த்தைகள் ஐ தே க தலைவர் திரு. ரணில் விக்ரமசங்கவுடன் நடத்தப்பட்ட போது. 

அதாவுள்ளாவிடம் தோற்றுப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

குறுநில மன்னரான அதாவுள்ளாவிடம் தோற்றுப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் அமைச்சுப்பதவியில் ஒட்டியிருப்பது வெட்கங்கெட்ட செயலகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.  அம்பாரை மாவட்டத்துக்கான தமது கட்சி வேட்பாளர் பட்டியலை ஒப்படைத்த பின்னரான ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்;பு, வாழைத்தோட்ட அல்ஹிக்மா கல்லூரியல் நடைபெற்ற தரம் ஐந்து பரீட்சை முன்னோடி கருத்தரங்கு

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிசும், கல்வி அபிவிருத்தி போரமும் இணைந்து ஏற்பாடு செய்த தரம் ஐந்து பரீட்சை முன்னோடி கருத்தரங்கு கொழும்;பு, வாழைத்தோட்ட அல்ஹிக்மா கல்லூரியல் நடைபெற்ற போது இதற்கு அனுசரணை வழங்கிய உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்கள் மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குவதையும் அருகே கல்லூரி அதிபரையும் காணலாம்

அறுவைக்கு கொண்டு செல்லும் ஆட்டுக்கு அகத்திக்கீரையை காட்டுவது போன்று இவர்களுக்கு சில பதவிகளை காட்டி முஸ்லிம் சமூகம் அறுவைக்கு கொண்டு செல்ல தயார்படுத்தப்படுகிறது.

முடிவு எடுத்த பின் உயர்பீடத்தை கூட்டி அதில் முடிவு உடுக்கப்பட்டதாக காட்டும் வழமையான ஏமாற்றுவேலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து காட்டியுள்ளது என உலமா கட்சியின் தலைவரும் முஸ்லிம் விடுதலை முன்னணியின் செயலாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைக்கமையவே போட்டியிடும் என்பது மு. காவின் வழமையான ஏமாற்று

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இ ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் நிபந்தனைகளுடன் மாத்திரமே போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதில் கல்முனை மாநகர சபையின் கெடுபிடிகள். உலமா கட்சி கடிதம

வியாபார நிறுவனம் ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக கொழும்பில் கூட இல்லாத நடைமுறைகளை கல்முனை மாநகரசபை கடைப்பிடிப்பதன் மூலம் வியாபாரிகளை நசுக்க முனைவதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.  கல்முனை மாநகர மேயருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது

ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் போன்றவை முன்வருவதன் மூலம் மட்டுமே கிழக்கில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும்

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இனவாத சவால்களுக்கு ஜனநாயக ரீதியலான தேர்தல் மூலம் நல்ல பதிலை வழங்கும் வகையில்; உலமா கட்சியுடன் கூட்டணி சேர்த்து தேர்தலுக்கு முகம் கொடுக்க  ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் போன்றவை முன்வருவதன் மூலம் மட்டுமே கிழக்கில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் nரிவித்துள்ளதாவது,

ஒரு சுறாங்கை பேரீச்சம்பழம்

அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய ஒரு சுறாங்கை பேரீச்சம்பழம் சிறுகதைத்தொகுதியின் சிறப்பு பிரதியை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் பெறுவதைக்காணலாம் .

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச