ஈரான் போர் கப்பல்கள் வளைகுடாவில். பதட்டம்

இரு ஈரானிய போர்க் கப்பல்கள் எகிப்திய சுயஸ் கால்வாயூடாக மத்திய தரைக் கடலில் பிரவேசித்ததையடுத்து பிராந்தியத்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது

நாசகாரி கப்பலான ஷஹித் கான்டியும் விநியோக கப்பலான கார்க்குமே மத்திய தரைக்கடல் பிராந்தியத்துக்குள் பிரவேசித்துள்ளன.ஆனால் அவற்றின் பயண இலக்கு எதுவென்பது அறியப்படவில்லை.

இதற்கு முன் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஈரானிய போர்க் கப்பல்கள் சுயஸ் கால்வாயை கடந்து சென்றன.

1979ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்குப் பின்னர் சுயஸ் கால்வாயை ஈரானிய போர் கப்பல்கள் கடப்பது இது இரண்டாவது தடவையாகும்.

இந்தக் கப்பல்களின் பயணமானது பலத்தை காண்பிப்பதுடன் சமாதானத்துக்கான செய்தி ஒன்றாக உள்ளது என அந்நாட்டு கடற்படைத் தலைவர் அட்மிரல் ஹபிபுல்லாஹ் சயாரி தெரிவித்தார்.

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !