Posts

சஜித் பிரேமதாசவைப் பார்த்து கண்ணீர் மல்கி, அனுதாபம் கூறிய மக்கள்

Image
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -21-  முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மக்கள் வரிசையாக வந்தபடி சஜித் பிரேமதாசவை பார்த்து கண்ணீர் மல்கியபடி தமது அனுதாபத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது முகநூல் பக்கத்தில் கருத்தொன்றினை பதிவிட்டுள்ளார்.
2
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக்கொள்ள முடியாத இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
புத்தல பகுதியை சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் மிகவும் மனவருத்தத்தில் இருந்த அவர் இனி வாழ்ந்து பிரயோசனம் இல்லை என கூறியுள்ளார்.
சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள வீதியில் தனது சைக்கிளை விற்பனை செய்துவிட்டு அதில் கிடைத்த பணத்தில் விஷப்போத்தல் ஒன்றை கொள்வனவு செய்து பருகியுள்ளார்.
அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முட…

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இம்ரான்கான் வாழ்த்து. ஜனாதிபதி பிரதமர் இருவரையும் பாகிஸ்தான் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள்.

Image
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். 
மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்தார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Image
பாரத பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட தாம் எதிர்பார்ப்பதாகவும் பாரத பிரதமர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனூடாக எதிர்காலத்தில் வலுவான பிணைப்பை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Image
சிலாபம் கடற்படை முகாமிற்கும் மற்றும் பொலிஸ் நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ள கடற்கரையில் இருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்க வந்த நபர் ஒருவரின் அறிவிப்பின் பேரில் குறித்த கைக்குண்டு இன்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டு கடற்கரையில் சிறிய பொதியொன்றின் மீது காணப்பட்டுள்ள நிலையில், கடற்கரையை சுத்தம் செய்யும் போது மீனவர்களால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸாரால் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்பிரிவின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபர்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் கடுமையான சட்டம் - பாதுகாப்பு அமைச்சு

Image
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் பாதுகாப்புக் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு   அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், மற்றும்  அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புடன் இருக்குமாறும்,  அந்தந்தப் பகுதிகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தூர நோக்கிற்கு அமைய இன, மத மற்றும் அரசியல் வேறுபாடுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கும் வகையில் நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் எவ்வ…

மாவடிப்பள்ளியில் முதலைகள் அதிகரிப்பு; மாடுகள் இரையாகும் நிலை

Image
வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் புல் மேயும் மாடுகள் முதலைகளினால்
இரைக்குள்ளாகின்றது.

அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் .ருமருங்கிலும்  அதிகளவிலான முதலைகள் நடமாடுவதனால் தினமும் இச்சம்பவம் இடம்பெறுவதாக  மக்கள்  தெரிவித்தனர்.

 அண்மையில் பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவ் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அதிகமான  சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள்  நடமாடுவதாக  மக்கள் தெரிவிக்கினறனர்.
.
மேற்படி  பகுதிகளில்  முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்  இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

-பாருக் ஷிஹான்


மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

Image
சற்றுமுன் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில்  பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
A J M Muzammil - North Western province வடமேல் மாகாணம்!

Tikiri Kobbekaduwa - Sabaragamuwa province சப்ரகமுவ மாகாணம்.


Seetha Arambepola - Western province மேல்மாகாணம்.


Lalith U Gamage- Central மத்திய மாகாணம்.

சஜித் பிரேமதாசவின் தோல்விற்கு சஹ்ரானும் ரிஷாத்துமே பிரதான காரணம் - மனோ கணேசன்

Image
ஏன் பின்னடைவு? பின்னர் நிறைய சொல்லலாம். இப்போது கொஞ்சம் சுருக்கமாக...>
1) சின்னம் ஒரு பிரச்சினை அல்ல. இதற்கு முன்னும் “அன்னம்” சின்னம் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. சிலருக்கு தனிப்பட்ட காரணங்களால், சின்னம் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்படியான நபர்கள் எப்போதும் இருப்பார்கள். சின்னத்தையும் ஒரு காரணமாக சொல்வது தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பதாகும் என நினைக்கிறேன்.
2) முதல் கோணல், வேட்பாளர் அறிவிப்பின் தாமதம். இதற்குள் நாடு முழுக்க சுமார் ஆறாயிரம் விகாரைகளுக்கு சென்று, ஒரு சிங்கள-பெளத்த வலை பின்னலை ஏற்படுத்த எஸ்எல்பிபி கட்சிக்கு சாவகாசமான அவகாசம் கிடைத்தது.
3) தேர்தலுக்கு நிதி இல்லை. அரசாங்கமானாலும் தேர்தல் நிதி இல்லை. அப்படியானால், இது “நல்லவரா? கெட்டவரா?” (நல்ல அரசாங்கமா? கெட்ட அரசாங்கமா?) என்ற கேள்விக்கு ஒப்பானதாகும். நிதி இல்லாமல் களத்தில் குதித்து விட்டார்கள். இதுதான் உண்மை.
4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார்…

அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி அதில் எடுக்கப்படும் தீர்மானத்தை மக்களுக்கு அறிவிப்பேன்- இரா சம்பந்தன்

Image
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், தமிழர் நலன் சார்ந்த எமது செயற்பாடுகளின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் பேசுவேன். அந்தப் பேச்சில் எடுக்கப்படும் தீர்மானத்தை மக்களுக்கு நான் அறிவிப்பேன்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது “வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்கின்றார்கள் என்பதையும், அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்றார்கள் என்பதையும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளன.
எமது கோரிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சஜித…

புதிய அமைச்சரவையுடன் பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்‌ஷ

Image
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்து இருந்ததும், ரனில் விக்கிரமசிங்க அலரிமாளிகை பிரதமர் காரியாலயத்தில் இருந்து வெளியேறியதும் அறிந்ததே.
இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக நியமிக்க தெரிவு செய்து பெயரிடப் பட்டுள்ளதாக Afp உட்பட  செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளை புதிய அமைச்சரவையுடன் தனது பிரதமர் பதவியை ஏற்கிறார்.