யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டால் மாற்று வழியொன்றை நாடுவோம்


பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டால் மாற்று வழியொன்றை நாடுவோம்
- பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

( மினுவாங்கொடை நிருபர் )

   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான தீர்மானம், ஒக்டோபர் 5 ஆம் திகதி கை கூடாது போனால், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாற்று வழியொன்றுக்குச் செல்ல நேரிடும். இந்தத் தீர்மானமிக்க மாற்று வழியை, ஒக்டோபர் 6 ஆம் திகதி தேர்ந்தெடுப்போம் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இந்த நாட்டில் மிகப் பிரபல்யமான ஒரு கட்சியாகும். இந்தக் கட்சி தொடர்பில் எவருக்கும் விமர்சனம் செய்ய முடியாது என்றும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, (02) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. 
   இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்று பலராலும் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. அண்மையில் ஜனாதிபதி குருநாகல் நகரில் நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பில் எதனைக் கூறினாரோ, அதனையே நானும் இன்று உங்கள் முன் நிலையில் கூறுகின்றேன். 
   பொதுஜன பெரமுனவுடன் இணைவதா... இல்லையா... என்பது தொடர்பில், தீர்மானமிக்க முடிவொன்றை எடுக்கவுள்ளோம். இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது எடுக்கப்படும். இக்கூட்டத்தில், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் சாத்தியப்படாத விடத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி இறுதித் தீர்மானமொன்றுக்கு வந்து, நாட்டு நலன் கருதி சிறந்த மாற்று வழி ஒன்றைத் தெரிவு செய்வோம். அத்துடன், கோதாபய ராஜபக்ஷ்வுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானாலும் கூட, சுதந்திரக் கட்சி சிந்தித்தே செயற்படும்.
   எமக்கு எவருடனும் எதிர்ப்போ, குரோதங்களோ கிடையாது. அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். ஜனாதிபதியினது கருத்தும் இதுவாகும்.
    எமது கட்சி அமைச்சர்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட கட்சியல்ல. அப்படியான நிலைப்பாடு எதுவும் எம்மிடமில்லை. 
   உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முதல் கட்சி அமைப்பாளர்கள் வரையிலான அனைவரும் எமது கட்சியின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றனர். இது எமக்கு பெருமையளிக்கின்றது என்றார்.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி