யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்! பைசர் முஸ்தபா!


முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்! பைசர் முஸ்தபா!

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
த‌மிழ் மொழி மூல‌ம் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுட‌ன் பேசிய‌ போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் த‌னிக்க‌ட்சிக‌ள் இருக்க‌லாம். ஆனால் அவை வ‌ட‌க்கு கிழ‌க்கில் ம‌ட்டும் இருப்ப‌தே முஸ்லிம்க‌ளுக்கு ந‌ல்ல‌து. எங்க‌ள‌து முஸ்லிம் ம‌க்க‌ளின் வாக்குக‌ள் பெற்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் பேர‌ம் பேசுகிறார்க‌ள். அவை எது ச‌ம்ப‌ந்த‌மான‌ பேர‌ம் என்ப‌தை ம‌க்க‌ள் அறிவ‌ர். இவ‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ அமைச்சு ப‌த‌விக‌ளையே பேர‌ம் பேசுகின்ற‌ன‌ர்.
ஒரு ஜ‌னாதிப‌தி வென்றால் ந‌ம்மால்த்தான் அந்த‌ ஜ‌னாதிப‌தி வென்றார் என‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் கூப்பாடு போடுவ‌தால் இவை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் துவேஷ‌த்தை ஏற்ப‌டுத்தி விட்ட‌ன‌.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று அவரது இல்லத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி