இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர். - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்:  அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
என்னை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகங்களில் முறைப்பாடு செய்யும் படலம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் காப்பாற்றியவர்கள்தான் இந்தக் காட்டிக்கொடுப்பின் பின்னால் இருக்கின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாத பிரசாரம் செய்வதே இவர்களின் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றிரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;
தொலைக்காட்சியில் காட்டப்படும் இந்த செய்திகளின் பின்னாலிருப்பவர்கள் நாங்கள் காப்பாற்றியவர்கள்தான், இன்றும் எங்களால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். நாங்கள் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுவது குறித்து அலட்டிக்கொள்…

பைஸர் முஸ்தபா அமைச்சர் ஹலீமிடம் அவசர வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தங்கள் வரைபை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும்
-  பைஸர் முஸ்தபா அமைச்சர் ஹலீமிடம் அவசர  வேண்டுகோள்

( மினுவாங்கொடை நிருபர் )

   முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்களுக்கான சட்ட வரைபு, பாராளுமன்றத்தில் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆவன செய்ய முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா,  அமைச்சர் ஹலீமிடம் கடிதம் மூலம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
   இது தொடர்பில்,  பைஸர் முஸ்தபா எம்.பி.,  அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
   ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் அல்­லது டிசம்பர் மாத ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளதால், அதற்கு முன்பு உடன­டி­யாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்தங்களுக்­கான சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். தவறும் பட்­சத்தில், நாம் கூட்­டாக மேற்கொண்ட முயற்­சிகள் அனைத்தும்  தேவைப்­ப­டாத ஒன்­றா­க ஆகிவிடும். 
   முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் பல சந்­தர்ப்­பங்­களில் நான் உங்­க­ளது கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளேன். எனது கோரிக்­கைகள் பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் உல­மாக்கள் மத்தியில் கருத்­தொற்­று­மையை உரு­வாக்­கின. 
   பின்பு, முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யாக தீர்மான­மொன்­றுக்கு வந்­தனர். நானும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்­தானும் எதிர்க்­கட்­சியில் இருந்­தாலும் கூட, நாங்கள் முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இது தொடர்பில் ஒத்­து­ழைப்பு வழங்­கினோம்.
   அகில இலங்கை ஜம்­ இய்­யத்துல் உல­மா­ சபை, முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்கள், முஸ்லிம் பெண்கள் பிர­தி­நி­தித்­துவம் பெறும் அமைப்பு­க்க­ளுடன் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக பேச்சுவார்த்தைகளை  நடத்­தினோம். கருத்­தொற்­றுமை அனைத்து விடயங்­க­ளிலும் எட்­டப்­ப­ட­வில்­லை­. எனினும்,  பெரும்­பா­லான விடயங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.
   பின்பு, நீதி­ய­மைச்சும் உங்­க­ளது அமைச்சும் இணைந்தே அமைச்சரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வை­யினால் அது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், தற்­போது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    இக்கடி­தத்தின் பிர­திகள், அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன்,  கபீர் ஹாசி­ம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி