Sunday, April 28, 2019

மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள்


இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்  மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு  உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள்.

சாய்ந்தமருது, கல்முனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின்
இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாய்ந்தமருது வெலிவோரியன் வீட்டுத்திட்ட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களிடம் பொலிஸார் நேற்றைய சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பொதுமக்களிடம் நலன்களை விசாரித்து தனது ஆறுதலை தெரிவித்ததுடன்  அவர் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மேலும் குண்டுத் தாக்குதலில் அச்சமடைந்துள்ள பொதுமக்களினதும் பிரதேசத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுதத்துடன் மக்களின் இயல்வு வாழ்வை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், ஏ.றபீக், ஏ.எம்.பஸ்மீர், எம்.ஜஃபர் ஆகியோரும் விஜயம் செய்து அச்சமடைந்த மக்களுக்கு  ஆறுதல் கூறினார்.

இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தவைருமான எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றக்கீப் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

No comments:

Post a Comment

முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌ம் ம‌ஹிந்த‌ ஆட்சிக்கால‌த்திலேயே ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌தா?

முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌ம் ம‌ஹிந்த‌ ஆட்சிக்கால‌த்திலேயே ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ ப‌ல‌ அறிவிலிக‌ள் சொல்வ‌துண்டு. இதோ வ‌ர‌லாறு. 1896 ...