ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

குண்டுத் தாக்குலுடன் தொடர்புடைய இருவம் ஸ்ரீலங்கா பிரஜைகளா அல்லது வெளிநாட்டவர்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த முடியாதுள்ள நிலைசிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான சீனாவிற்கு சொந்தமான சங்கிரிலா நட்சத்திர விடுதி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.
பொலிசாரும், முப்படையினரும் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கிரிலா ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.
கொழும்பு காலிமுகத்திடலுக்கு எதிரில் அமைந்துள்ள சீனாவிற்கு சொந்தமான சங்கரிலா ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 25 வெளிநாட்டவர்கள் பலியாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மேலதிகமான குறித்த ஹோட்டலில் கடமையாற்றிய ஐந்து பணியாளர்களும் கொல்லப்படடதாக சங்கிரிலா ஹோட்டல் அறிவித்துள்ளது. இதேவேளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள், பணியாளர்கள் என பலரும் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கிரிலா நட்சத்திர ஹோட்டலின் அறையொன்றில் தங்கியிருந்த இருவரே அங்கு தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசேட அதிரடிப்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்களது உடலில் பொறுத்தியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய இருவரும் 20 ஆம் திகதியிலிருந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதோடு, ஹோட்டலில் முதலாவது தற்கொலைத் தாக்குதல் அந்த ஹோட்டல் உணவகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
சீ-4 என்ற மிகவு் சக்திவாய்த 25 கிலோ வெடிமருந்துகளே இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தாக்குலை நடத்தியவர்களின் அறையை விமானப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இதன்போதுஇந்த அறையிலிருந்து ஐபோன் சார்ஜர்களும், சாப்பிடாத உணவுப்பொதி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குலுடன் தொடர்புடைய இருவம் ஸ்ரீலங்கா பிரஜைகளா அல்லது வெளிநாட்டவர்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த முடியாதுள்ள நிலையில் இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சங்கிரி லா ஹோடடல் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவருக்கு சொந்தமான கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுளு்ளது.
அந்த தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள 9 பேர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் தொழில்புரியும் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த 9 பேரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த ஹோட்டல் வளாகம் முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மறு அறிவித்தல் வரும்வரையில் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சினமன் கிரேன்ட் ஹோட்டலில் பலியான ஊழியர்களின் விபரங்களை அந்த ஹோட்டல் நிர்வாகம் வௌியிட்டுள்ளது.
இதற்கமைய அந்த ஹோட்டலின் சமையலறையில் பணியாற்றிய ஜீ.எம்.டி.சஞ்சீவனி, உணவு விநியோகப்பிரிவில் பணியாற்றிய, சாந்த, இப்ராஹிம் மற்றும் நிஸ்தர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி