பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச்சென்ற இடத்தில் பயங்கரவாதி சஹ்ரானும் இருந்தான் - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின்
குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

சில சிங்கள மொழி இலத்திரனியல் ஊடகங்களில் என்னையும் தீவிரவாதி ஸஹரானையும் தொடர்புபடுத்தி பழைய காணொளியொன்றை ஒளிபரப்பி, பொது மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தக்கூடிய விஷமத்தனமான செய்தியொன்று பரப்பப்பட்டது.

2015 ஓகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் போட்டிட்ட ஹிஸ்புல்லாஹ் படுதோல்வியடைந்தார். அதன்பின், பின்கதவால் சென்ற ஹிஸ்புல்லா…

முசலி பிரதேச செயலாளருக்கு முசலி பிரதேச சபையில் கடும் கண்டனம்


முசலிப் பிரதேசத்திலுள்ள காணிகள் தொடர்பான விவகாரத்தால் முசலி பிரதேச செயலாளருக்கு இன்றைய முசலிப் பிரதேச சபையின் 13 ஆவது அமர்வில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறை நகர் மத்தியில் மக்களுக்கான சந்தைத் தொகுதி, பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மலசல கூடம் அமைக்கக்கூட காணி இல்லாத அளவுக்கு காணி விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச செயலாளரின் செயல் கண்டிக்கப்பட்டுள்ளது.
முசலிப் பிரதேசத்தில் அரச காணிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து முசலி மக்கள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ள நிலையிலேயே இந்த விவகாரம் முசலி பிரதேச சபையில் இன்று எதிரொலித்தது.
அண்மையில் காணி விடயமொன்று தொடர்பாக முசலி பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக முசலி பிரதேச செயலாளர் பொலீசாரை பிழையாக வழிநடத்தி நீதிமன்றத்தில் கிறிமினல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டத்துக்குப் புறப்பானதாகும்.
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 20, 101, 128, 215 பிரிவுகளின் கீழ் அரச அல்லது தனியார் காணி தொடர்பாக தவிசாளருக்கு சட்ட ரீதியான அதிகாரங்கள் பல உள்ளன.
குறித்த சட்டத்தின் 217 பிரிவின்படி பிரதேச சபையின் கடமையைப் புரிய இடையூறு செய்யும் எவரும் குற்றவாளியாவார்.
இவ்விடயம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எ.எம்.றிசாத் 

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி