இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர். - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்:  அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
என்னை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகங்களில் முறைப்பாடு செய்யும் படலம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் காப்பாற்றியவர்கள்தான் இந்தக் காட்டிக்கொடுப்பின் பின்னால் இருக்கின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாத பிரசாரம் செய்வதே இவர்களின் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றிரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;
தொலைக்காட்சியில் காட்டப்படும் இந்த செய்திகளின் பின்னாலிருப்பவர்கள் நாங்கள் காப்பாற்றியவர்கள்தான், இன்றும் எங்களால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். நாங்கள் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுவது குறித்து அலட்டிக்கொள்…

*றிஷாதின் காலில் மு.காவின் பிரதி தலைவர்..! மு.கா தன்மானம் இழக்குமா..?*" ரோசமற்றவன் ராசாவிலும் பெரியவனாம் " என்றதொரு பழமொழியுண்டு. ஒருவன் தனது சுய மரியாதையை இழக்க தயாராக இருந்தால், அவன் பல விடயங்களை மிக இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும். இருப்பினும் பலரும் அதனை விரும்புவதில்லை. தன் மானத்தை இழந்து காரியங்களை சாதித்துக்கொள்ளும் ஒருவராக யாருமே நஸீர் ஹாபிஸை எதிர்பாக்கவில்லை. அவரது தற்போதைய செயற்பாடொன்று, அவர் அந்த வகையை சார்ந்தவரே என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சில நாட்கள் முன்பு தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக பிரதமரால் நஸீர் ஹாபிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தொழிற்பயிற்சி அதிகார சபை அமைச்சர் றிஷாதின் கீழ் வந்துள்ளது. அமைச்சர் றிஷாத் அதன் அமைச்சராக வந்ததும் நஸீர் ஹாபிஸ் ஜென்டில் மேனாக (gentleman) இராஜினாமா செய்வார் என்றே பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இருந்தும் பலரதும் நம்பிக்கைக்கு மாற்றமாக அவர் அமைச்சர் றிஸாதின் கீழ் பணியாற்ற, தனக்கு எவ்வித கூச்சமுமில்லை என்ற வகையில் தனது செயற்பாட்டை அமைத்துள்ளார். இதன் பிறகு அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தாலும், அவர் ஏற்றுக்கொள்வார் என்பதையும் இவ்விடயம் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு நிறுவன தலைவரானவர் அதற்குரிய அமைச்சரால் நியமிக்கப்படுவார். அவர் அமைச்சரின் மகுடிக்கு ஆடியுமாக வேண்டும். அமைச்சர் றிஷாதின் போட்டிக்கட்சியான மு.காவின் பிரதி தலைவரான நஸீர் ஹாபிஸ் அமைச்சர் றிஷாதின் சொல் கேட்டு, அடி பணிந்து செயற்படுவது முதலில் அவருக்கு கேவலம். இரண்டாவது அவரின் கட்சியான மு.காவுக்கு பலத்த அவமானம். நஸீர் ஹாபிஸ் ஒரு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இதன் பிறகு அவர் அணிந்து கொள்ள வேண்டிய பதவிகள் அதற்கு சமனானதாக இருத்தல் வேண்டும். அதுவே அவர், தனது நிலையிலிருந்து சற்றும் கீழிறங்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்.

ஆனால், தற்போது அவருடைய நிலையானது, தான் அங்கம் வகிக்கும் கட்சியின் நேரடி எதிரி கட்சியான அ.இ.ம.கா தலைவரின் சொல் கேட்டு நடந்து பதவியொன்றின் மூலம் தனது கௌரவத்தை பேணிக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார். இது அவர் எந்தளவு பதவி ஆசையில் உள்ளார் என்ற விடயத்தை, பதவியில்லாமல் இருக்க முடியாது என்ற விடயத்தையும் துல்லியமாக்குகின்றது.

இவருடைய இப் பதவி நீடிப்பின் பின்னணியில் பிரதமரின் செல்வாக்கு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. யார், என்னதான் சொன்னாலும் அமைச்சர் றிஷாதின் கீழ் நஸீர் ஹாபிஸ் பணியாற்றுவது கேவலமானது தான். தனது பிரதி தலைவர் ஒருவரை அ.இ.ம.காவின் தலைவரின் கீழ் பணியாற்ற அனுமதித்திருப்பதானது, தனது கட்சியின் ஒரு சிறு பங்கை அமைச்சர் றிஷாதிடம் ஒப்படைத்தது போனெனலாம். இத்தனை பெரும் அமைச்சை வைத்துள்ள அமைச்சர் ஹக்கீமுக்கு, தன் அமைச்சின் கீழ் ஒரு தலைவர் பதவி வழங்க முடியாதா?

*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,*
*சம்மாந்துறை.*

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி