பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச்சென்ற இடத்தில் பயங்கரவாதி சஹ்ரானும் இருந்தான் - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின்
குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

சில சிங்கள மொழி இலத்திரனியல் ஊடகங்களில் என்னையும் தீவிரவாதி ஸஹரானையும் தொடர்புபடுத்தி பழைய காணொளியொன்றை ஒளிபரப்பி, பொது மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தக்கூடிய விஷமத்தனமான செய்தியொன்று பரப்பப்பட்டது.

2015 ஓகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் போட்டிட்ட ஹிஸ்புல்லாஹ் படுதோல்வியடைந்தார். அதன்பின், பின்கதவால் சென்ற ஹிஸ்புல்லா…

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!ஊடகப்பிரிவு

'இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது.

டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் இலங்கையின் மைக்ரோசிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியினை இந்த  சிங்கப்பூரின்  பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. இத்தகைய முயற்சியானதுதென்னாசியாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் மீதான டிஜிட்டல்மயமான முயற்சிக்கு சமமாக நமது சிறிய மற்றும் நடுத்தர தொழில்  துறை கொண்டு வரப்படுகிறதுஎன கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.;

நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பக செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்

இந்  நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

:'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பொருளாதார தொலை நோக்குடன்தேசிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை மீதான கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனமான தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினரின் வழிகாட்டலின் கீழ்இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையின் மைக்ரோசிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியினை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. இந்த தகவல்- வர்த்தக டிஜிட்டல் தளமானதுஇலங்கையில்முதன் முறையாக மைக்ரோசிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைக்கும் மற்றும் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கும். தெற்காசிய பிராந்தியத்தில் இதேபோன்ற வரவிருக்கும் டிஜிட்டல் தரவுத்தளங்களை போன்று இந்த முன்முயற்சி காணப்படுகின்றது. ஆகையால்,இத்தகைய முயற்சியானதுதென்னாசியாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் மீதான டிஜிட்டல்மயமான முயற்சிக்கு சமமாக நமது சிறிய மற்றும் நடுத்தர தொழில்  துறை கொண்டு வரப்படுகிறது.

தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை  மீதான  சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் கொள்கையானதுஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான,உலகளாவிய போட்டித்திறன்மாற்றம்புதுமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இயக்கப்படும் நிலையான சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளை உருவாக்குகிறது. தொழில்நுட்ப வளங்களினது தகவல்களை பரப்புதல்  சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின்  எதிர்கொள்ளும் ஒரு சவாலாக காணப்படுவதால் அத்துறையின் நவீன தொழில் நுட்பத்தையும்  அங்கிகரிப்புக்களை மேம்படுத்துவதற்காகசிறப்பு தொழில்நுட்ப பரிமாற்றத்தை கொள்கை கட்டமைப்பை அடையாளம் காட்டுகிறது. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முன்னேற்றம் அடைய அவற்றின் தொழில்நுட்ப அங்கிகரிப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.

2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தால் இலங்கையின் மிகப்பெரிய தொழில்முனைவோர்க்கான தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை நிறுவப்பட்டது.   இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அபிவிருத்திவிரிவாக்கம் ஆகியவற்றை தூண்டுகிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை ஊடுருவக்கூடிய திறனுள்ள உள்நாட்டு நிறுவனங்களை சர்வதேசமயமாக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களினை இலங்கைக்கு வெளியே நடைமுறைப்படுத்தல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை இச்சபை ஊக்குவிக்கிறது என்றார் அமைச்சர்

இந்நிகழ்வில் தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின்   தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான  தட்சிதா போகொல்லாகம,   சிங்கப்பூர் ரெஸ் குரூப்பின் நிறைவேற்று அதிகாரி   திருமதி ட்ரினா சாவேஜ்மற்றும் சர்வதேச தொழில் நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங்மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.தாஜுடீன் உட்பட பல முக்கியஸ்ர்கள் கலந்துகொண்டனர்.

புதிய தரவுத்தளமானது   “NEDA-Enterprise Management System” என பெயரிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரியின்   தரவுத்தள மென்பொருள் நிறுவனமும் தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து டிஜிட்டல் தள தரவுகளை  பதிவேற்ற பயன்படுத்துவதற்காக  தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் 250மேம்பாட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி