இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர். - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்:  அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
என்னை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகங்களில் முறைப்பாடு செய்யும் படலம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் காப்பாற்றியவர்கள்தான் இந்தக் காட்டிக்கொடுப்பின் பின்னால் இருக்கின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாத பிரசாரம் செய்வதே இவர்களின் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றிரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;
தொலைக்காட்சியில் காட்டப்படும் இந்த செய்திகளின் பின்னாலிருப்பவர்கள் நாங்கள் காப்பாற்றியவர்கள்தான், இன்றும் எங்களால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். நாங்கள் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுவது குறித்து அலட்டிக்கொள்…

உலமா கட்சித்தலைவரின் ஆய்வை உறுதி செய்யும் 45000 ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் மனிதர்கள் .


45000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை காடுகளில் வாழ்ந்த, ஹோமோ சேப்பியன்கள் எனப்படும் ஆதி மனிதர்கள் தொடர்பான பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேப்பியன்கள் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக அறிவுடன் வாழ்ந்தார்கள் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் Griffith பல்கலைகழக மாணவர்களும், கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த ஆய்வில் ஒக்ஸ்போட் மற்றும் குயின்ஸ்லாந்து மாணவர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேப்பியன்கள் குரங்குகளை வேட்டையாடி, உணவாக உட்கொண்டமைக்கான ஆதாரங்களும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.

இலங்கையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட பாஹியங்கலை காட்டு பகுதியில் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வேட்டையாடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட நூதனமான ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குரங்குகளின் வேகத்திற்கமைய அதனை வேட்டையாடுவது சாதாரண விடயமல்ல. எனினும் அதனை பிடித்து உணவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த காலத்தில் எதிர்பார்த்ததை விடவும் சேப்பியன்கள் அறிவுத்திறன் அதிகமாக இருந்தார்கள் எனன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் காணப்பட்ட காலநிலையின் அடிப்படையில் மலைக்காடுகளில் யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்ற நிலை காணப்பட்டது.

எனினும் புதிய ஆய்வின் மலைக்காடுகளின் ஆதி மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை ஆதி மனிதனும் முதல் முஸ்லிமுமான  ஆதம் இலங்கையிலேயே கால் பதித்ததாகவும் ஆதமின் வாhரிசுகளாக வாழ்ந்த வாழ்கின்ற  முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் என்பதையும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மிக நீண்ட காலமாக தொடர்ந்து கூறி வருகிறார். அவரது கருத்தோடு இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது அவரது கருத்து உண்மை என விளங்கிக்கொள்ள முடிகிறது.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி