ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை சந்தித்தனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

கடந்த வாரம் தொல் பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த புகைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பொறியியல் பீட மாணவர்களுடைய பொற்றோர்கள் இவ்வாறு சந்தித்தனர்.

எதிர் வரும் 05 ஆம் திகதி வழக்கு  விசாரனைக்கு எடுத்துக்
கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சட்டரீதியான விபரங்களை  கேட்டறிந்ததோடு, இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக வாதாடுகிற சட்டத்தரிணியை தொடர்பு கொண்டு தன்னுடைய பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என சட்ட ஆலோசனையை கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பாக பொலிஸார் புராதன தொல் பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அந்த அறிக்கை ஆராய்ந்து தீர்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்பதாக சட்டத்தரணி மேலும்  குறிப்பிட்டார்.

மேலும் புராதன தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் "P.B மந்தவல" அவர்களை உடனடியாக  தொலைபேசியினுடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் இந்த மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்த விடயம் அல்ல தற்செயலாக இடம் பெற்ற விடயம் ஆகவே தாங்கள் மன்னிப்பு வழங்கி தங்களின் நீதிமன்ற  அறிக்கையை சாதகமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் எதிர்வரும் வாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

மேலும் அந்த மாணவர்களை சட்டரீதியான முறையில் அவர்களை விடுதலை செய்வதற்கு தான் முயற்சியையும், ஒத்துழைப்பையும்  வழங்குவதாகவும் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்அஸ்பர், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் ஆளுனர் இணைப்பு செயலாளர் றுஸ்வின் முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டனர்.

Muhammad Hamza

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி