ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்!

இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்!
மார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.
 -ஊடகப்பிரிவு-
 வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளதுஎதிர்வரும் மார்ச் மதம் 25 ஆம் திகதி இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்டசட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
 குறிப்பிட்ட இந்த  பாதையை பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு சூழலியல்வன பாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமைமீறல் வழக்கின் விவாதம் இன்று இடம்பெற்ற  போதுஇந்தப்  பாதையை  திறப்பதில் மனுதாரர்கள் ஓர்இணக்கப்பாட்டிற்கு வந்துமட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிட அவர்கள்விருப்பம் தெரிவித்ததை அடுத்தே ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 இந்த வழக்கின் பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் , சட்டமா அதிபர் , வீதிபோக்குவரத்து அதிகார சபை , மற்றும்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்இந்தவழக்கில் இடையீட்டு மனு தாரர்களாக மறிச்சிக்கட்டி , கரடிக்குழி,முசலி பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள்இருக்கின்றனர்.
 நான்காவது பிரதிவாதியான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் பொதுமக்கள் நலனுக்காக சிரேஷடசட்டத்தரணி ருஸ்தி ஹபீபும் இடையீட்டு மனு தாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வெலியமுனவும் ஆஜராகிபாதை திறக்க வேண்டியதன்  அவசியம் பற்றியும் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும்  நீதிமன்றத்தில்வாதிட்டனர்.
 உச்ச நீதிமன்ற நீதியரசர்களான தெஹிதெனிய ,சூரசேன ,துரைராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
 "சட்டமா அதிபர் சார்பில் இந்த வழக்கை சுமூகமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அதற்கான வழிமுறை காணப்படுவதாகவும்  கூறப்பட்டது .அதனடிப்படையில்மனுதாரர்களும் இதனை சுமூகமாக முடித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு இன்றைய தினம் தயாராகஇருந்தனர்.
 பொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தக்கூடிய வகையிலும்  வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத  விதமாகவும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்திஇந்த பாதையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதுதொடர்பாக எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இதனை நிறைவுசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதுஇதற்கிடையில் சட்டமா அதிபர் சார்பில் வனஜீவராசிகள்திணைக்களத்துடன் கலந்துரையாடிபொது மக்களும் இந்த பாதையை பாவிக்கின்ற விதத்தில் எந்தளவுக்குமட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பதையும்  உச்ச நீதி மன்றத்தில் அறிவிப்பு செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டது."என்று  சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மேலும் தெரிவித்தார் .

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி