ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

புதிய‌ அர‌சிய‌ல் யாப்புத்திருத்த‌ம் இப்போதைக்கு தேவையில்லை


புதிய‌ அர‌சிய‌ல் திருத்த‌த்தின் மூல‌ம் வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் மிக‌ இல‌குவாக‌ இணைக்க‌ முடியும் என்ப‌தால் அங்குள்ள‌ சிங்க‌ள‌, ம‌ற்றும் முஸ்லிம் ம‌க்க‌ள் அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ள் என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி குறிப்பிட்டார்.

புதிய‌ யாப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌ட்சி உய‌ர் பீட‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு தெளிவு ப‌டுத்தும் கூட்ட‌த்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து,

சும‌ந்திர‌னால் முன் வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் புதிய‌ அர‌சிய‌ல் யாப்பு ந‌க‌லின் ப‌டி இரு மாகாண‌ங்க‌ளின் முத‌ல‌மைச்ச‌ர்க‌ள் விரும்பினால் இரு மாகாண‌ங்க‌ளையும் இணைக்க‌ முடியும் என்ப‌தாகும்.
இது பாராளும‌ன்றில் ஏற்க‌ப்ப‌ட்டு புதிய‌ அர‌சிய‌ல‌மைப்பு உருவாக்க‌ப்ப‌ட்டால் மாகாண‌ ச‌பைக‌ளை இணைக்கும் ப‌ழைய‌ ஏற்பாடுக‌ள் காலாவ‌தியாகி விடும். அதாவ‌து இரு மாகாண‌ங்க‌ளையும் இணைக்கும் பாராளும‌ன்றில் மூன்றில் இர‌ண்டு, ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்ப‌வை தேவைய‌ற்ற‌தாகி விடும்.

புதிய‌ யாப்பு வ‌ந்தாலும் ப‌ழைய‌ முறைப்ப‌டியான‌ மேற்சொன்ன‌வை இருக்கும் என்று நினைத்தால் ஜ‌னாதிப‌தியின் அதிகார‌ங்க‌ள் 19வ‌து திருத்த‌த்தில் நேர‌டியாக‌ நீக்க‌ப்ப‌டாம‌லேயே புதிய‌ ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்த‌தால் ஜ‌னாதிப‌தியால் பாராளும‌ன்ற‌த்தை க‌லைக்க‌ முடியாம‌ல் போன‌து போன்றே ந‌டை பெறும்.

இர‌ண்டு மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் விரும்பினால் அவ்விரு மாகாண‌ங்க‌ளையும் இணைக்கும் போது மூன்றில் இர‌ண்டு, ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என‌ முஸ்லிம்க‌ளோ சிங்க‌ள‌வ‌ர்க‌ளோ நீதி ம‌ன்ற‌த்துக்கு போனால் புதிய‌ திருத்த‌ப்ப‌டி அது செல்லுப‌டியாகும் என்றே நீதி சொல்லும்.

சில‌ர் கேட்க‌லாம் அவ்வாறு இர‌ண்டு மாகாண‌ங்க‌ளின் முத‌ல‌மைச்ச‌ர்க‌ள் உதார‌ண‌மாக‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு முத‌ல்வ‌ர்க‌ள் இணைக்க‌ உட‌ன்ப‌டுவார்க‌ளா என? இது அர‌சிய‌ல் ய‌தார்த்த‌ம் தெரியாதோரின் கேள்வியாகும். கிழ‌க்கை பொறுத்த‌ச‌ரை முஸ்லிம் காங்கிர‌ஸ் ப‌ல‌வீன‌ம‌டைந்தாலும் இன்ன‌மும் ம‌க்க‌ள் செல்வாக்கு அக்க‌ட்சிக்கு உள்ள‌து. அக்க‌ட்சியில் உள்ள‌ அனைவ‌ருமே சுய‌ந‌ல‌த்துக்காக‌ ச‌மூக‌த்தை விற்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை வ‌ர‌லாற்றில் க‌ண்டுள்ளோம்.

அத்துட‌ன் ர‌வூப் ஹ‌க்கீம் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரின் செல்ல‌ப்பிள்ளையாக‌ இருக்கின்றார். வ‌ட‌க்கு கிழ‌க்கு இணையும் என்ப‌து வ‌த‌ந்தி என்று சொல்கிறாரே த‌விர‌ வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் இட‌ன‌ளிக்காது என‌ இன்று வ‌ரை நேர‌டியாக‌ சொல்ல‌வில்லை. இத‌ன் மூல‌ம் அவ‌ர் ட‌ய‌ஸ்போராக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இய‌ங்குகிறார் என்ப‌து தெரிந்த‌ விட‌ய‌ம்.

இந்த‌ நிலையில் கிழ‌க்கு மாகாண‌ ச‌பையின் முத‌ல‌மைச்ச‌ராக‌ முஸ்லிம் காங்கிர‌சை சேர்ந்த‌ அல்ல‌து ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியை சேர்ந்த‌ ஒருவ‌ர் இருந்தால் அவ‌ரை விலை கொடுத்து வாங்குவ‌து க‌ஷ்ட‌மான‌த‌ல்ல‌.  அப்போது புதிய‌ யாப்பின்ப‌டி கிழ‌க்கு வ‌ட‌க்குட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டு கிழ‌க்கில் உள்ள‌ முஸ்லிம்க‌ளும் சிங்க‌ள‌வ‌ரும் அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌ர். ப‌ல‌ரும் வெளியேற்ற‌ப்ப‌ட‌வும் கூடும்.

பின்ன‌ர் இன்னும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் சென்ற‌தும் இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் சுயாட்சி கோர‌ப்ப‌டும். தென் சூடான் போன்றும் நிக‌ழ‌ இட‌முண்டு.

ஆக‌வே புதிய‌ அர‌சிய‌ல் யாப்புத்திருத்த‌ம் இப்போதைக்கு தேவையில்லை என்ப‌தே உல‌மா க‌ட்சியின் உறுதியான‌ நிலைப்பாடாகும்.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி