ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

உச்ச நீதிமன்று அதிகாரம் கிடையாது!

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய, உச்ச நீதிமன்று அதிகாரம் கிடையாது!

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேற்படி மனு இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில் கூறினார்.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அரசியலமைப்பின் 38 (2) உறுப்புரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

அந்த உறுப்புரைக்கமைய, ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணையை சமர்ப்பித்து, அதன் மூலம் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய, உச்ச நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான், உச்ச நீதிமன்றம் ஊடாக ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யபட்டு, அதன் இறுதி அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சட்டமா அதிபர் வலியுறுத்தினாரல்.

எனினும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்ய முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.(புதிது)

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி