Tuesday, December 4, 2018

பாதுகாப்புதொடர்பில்சபாநாயகரிடம்சுட்டிக்காட்டுவதுதவறா?


பாதுகாப்புதொடர்பில்சபாநாயகரிடம்சுட்டிக்காட்டுவதுதவறா?
-    எம்என்எம்பர்விஸ்
பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள பாராளுமன்றஉறுப்பினர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும்கடமையும் சபாநாயகருக்கும்உள்ளது.
இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான சகல பாதுகாப்புஏற்பாடுகளையும் சபாநாயகரே செய்ய வேண்டும்.இந்த நியதிக்கு உட்பட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் சபையில்விடுத்த கோரிக்கையை எவரும் சவாலுக்கு உட்படுத்தவோமலினப்படுத்தவோ முடியாது.தனிப்பட்ட, அரசியல் கோபதாபங்களின் பின்னணிகளிலன்றி பெறுமதியான உயிரைக் காக்கும் மனிதாபிமானமாகவே இதைக்கருதவேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபாயராஜபக்ஷ ஆகியோரின் கொலைசதி முயற்சிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நாமல்குமார என்பவரேமக்கள்காங்கிரஸ்தலைவர் ரிஷாத்பதியுதீனைக் கொலை செய்வதற்கான முயற்சிகளையும் அம்பலப் படுத்தினார். அவரதுகுரல்பதிவில்இந்தசதிமுயற்சிதெளிவாகத்தெரிகின்றது.
இக்கொலை முயற்சிகள் அம்பலமான மறுகணமே ஜனாதிபதியினதும்,கோட்டாபாயவினதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.ஆனால்தனது பாதுகாப்புஏற்பாடுகள்எதுவும்செய்யப்படவில்லை என்பதனையே அவர்சபையில்சபாநாயகரிடம்சுட்டிக்காட்டினார். விசேட ஏற்பாடுகளை செய்யாவிட்டாலும் உள்ள பாதுகாப்புக்களை விலக்கிக் கொண்டது ஏன்? விசேட அதிரடிப்படையினருடன் முப்பது பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய அவரை இப்போது வெறும் இரண்டு பொலிஸாரே பாதுகாக்கின்றனர். இந்தவிடயத்தைஅவர்சபையில்சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஆண்டவனுக்கு அடுத்ததே ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது அவர்களது நம்பிக்கை.இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி ரிஷாட் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இவ்விடயத்தில் செலுத்தப்பட்ட பாரபட்சமே அவரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பிரமுகர்களின் உயிர்கள் படுகொலைகளால் பலாத்காரமாகப் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகவே பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.
நாமல்குமாரவின் தகவல்களில் உண்மை இருந்ததாலேயேஜனாதிபதி,முன்னாள்பாதுகாப்புசெயலாளர்கோட்டாவின் பாதுகாப்புகள் உடனடியாக அதிகரிக்கப்பட்டன.அதே நாமல்குமாரவே ரிஷாதுக்குள்ள அச்சுறுத்தல்களையும் அம்பலப்படுத்தினார்.
இந்த நியாயம், தர்மம், மனிதாபிமானங்களுக்கு உட்பட்டுத்தான் முகநூல் பதிவாளர்கள் தமது நிலைப்பாடுகளையும்கருத்துக்களையும் பதிவிட வேண்டும். தாங்கள்நினைத்ததையெல்லாம்பதிவிட்டுசமுதாயத்தைகுழப்பத்தில்ஆழ்த்தக்கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு. 

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...