ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன், ஓங்கி – ஓங்கி அடிப்பான்’ !என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். ‘இளகிய இரும்பு என்பது நன்றாக சூடாக்கிய, பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பாகும். அதனை வளைப்பது இலகுவானது. அதனால்தான் அவ்வாறான இரும்பில் கொல்லன் ஓங்கி அடிக்கத் தொடங்குகிறான்.

இதுவரையில் நாம் கண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதிகளில் மைத்திரிபால சிறிசேன – ‘இளகிய இரும்பாகவே’ தெரிகின்றார். அதனால்தான் ‘ஜனநாயகம்’ என்கிற சுத்தியலைக் கொண்டு, அவர் மீது நமது அரசியல்வாதிகள் ஓங்கி – ஓங்கி அடிக்கின்றனரோ என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதிவியை வழங்கி விட்டு, ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் இதனை அவர் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என, அண்மையில் சிலர் கூறியிருந்தனர். ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் காலம் முதல், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் கூறியதில்லை.

அப்படி சொல்லியிருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்ப்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள்” என்று ஜனாதிபதி மைத்திரி தனதுரையில் கூறியிருந்தார். அந்த உரைக்கு அர்த்தம்ளூ நாம் மேலே கூறியதுதான். ‘நான் இளகிய இரும்பு என்பதால்தான், என்மீது ஓங்கியடிக்கிறீர்கள்’ என்பதைத்தான் மைத்திரி அப்படி சொல்லியிருந்தார். அதில் உண்மை இல்லாமலுமில்லை.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடந்த ஒரு விடயத்தை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்போது பிரதம நீதியரசராக இருந்த ஷிரானி பண்டாரநாக்கவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நினைவிருக்கின்றதா? திவிநெகும சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்.

ஆனால், அவ்வாறானதொரு சட்டம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்று, அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தீர்ப்பளித்தார். அதற்காக பிரதம நீதியரசர் ஷிரானிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி, அவரை அந்தப் பதவியிருந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தூக்கி எறிந்தார். அது – வரலாற்றில் கறைபடிந்த சம்பவமாகும்.

‘பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நியாயத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது’ என்று, அப்போது உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அதனை அப்போதைய ஆட்சியாளர் மஹிந்த கணக்கில் எடுக்கவில்லை.

இதில் பேராச்சரியம் என்னவென்றால், இப்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாநாயகத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக கடுமையாகப் போராடி வருகின்ற, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான், அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானிக்கு, அவ்வாறாதொரு அநீதி இழைக்கப்பட்ட போது நீதியமைச்சராகப் பதவி வகித்தார். ஷிரானிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதி, நியாயம், ஜனநாயகம் என்பதெல்லாம் அப்போது ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷிரானிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பக்கமாகவே ஹக்கம் சாய்ந்திருந்தார்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்திருந்தால், முகங்கொடுக்க நேரும் ‘துர்ப்பாக்கிய சம்பவங்கள்’ குறித்து ஹக்கீம் அறிந்திருந்தார். அதனால்தான், அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானிக்கு மறுக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஹக்கீம் போராடத் துணியவில்லை.

பலவீனமானவர்களிடம்தான் நம்மில் அதிகமானோர் நமது பலத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மையாகும். அதைத்தான் ஜனாதிபதி மைத்திரியும்; “கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என்று, எனக்கு கூறியதை, முன்பிருந்த ஜனாதிபதிகளுக்கு கூறியிருந்தால், துர்ப்பாக்கிய சம்பவங்கள்தான் நேர்ந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.

அப்படியென்றால், ஜனாதிபதி ஒரு ‘இளகிய இரும்பு’ என்று தெரிந்ததால்தான், அதன் மீது ‘ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராளிகள்’ இந்தளவு தாறுமாறாக அடிக்கின்றனரா என்கிற கேள்விகளும் எழாமலில்லை.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகப் போராடிய சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள், தம்மை நியாயப்படுத்துவதற்காகக் கையில் எடுத்த கோஷத்தை இங்கு நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ‘நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாளப் போராடவில்லை. மறுக்கப்பட்ட ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே போராடுகிறோம்’ என்று, ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் ரா. சம்பந்தன் உள்ளிடோர் கூறினார்கள்.

அப்படியென்றால், மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றெடுப்பதற்கும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்குத் தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், இதே வீச்சிலான ஜனநாயகப் போராட்டம் ஒன்றினை, இந்தச் சிறுபான்மைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதி மைத்திரி இந்தளவு கோபம் கொள்வதற்கும், ரணிலுக்கு எதிராக இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் கூறப்பட்ட காரணங்களில் மிக முக்கியமானது, மத்திய வங்கிக் கொள்ளையாகும். இந்தக் கொள்ளையினை ரணிலும் அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும் இணைந்தே செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கிக் கொள்ளைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலும், மத்திய வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும், நமது சிறுபான்மைத் தலைவர்கள் போராட முன்வருவார்களா? அதற்காக ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பார்களா? என்கிற கேள்விகளுக்கு, அவர்கள் பதிலிறுக்க வேண்டியுள்ளது.
(புதிது)

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி