ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம்


புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ற‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் க‌ருத்தை ல‌பீஸ் ஷ‌ஹீத் என்ப‌வ‌ர் கிண்ட‌ல‌டித்த‌துட‌ன் இந்த‌ கால‌த்தில் சொல்ல‌க்கூடாத‌ க‌ருத்து என‌வும் த‌ன் கோழைத்த‌ன‌த்தை காட்டியிருந்தார்.
அத‌ற்கு அவ‌ருடைய‌ க‌ருத்தின் கீழ் ர‌மீஸ் ர‌ஸ்ஸாக் என்ப‌வ‌ர் ல‌பீசுக்கு ச‌வுக்க‌டி கொடுத்திருந்தார். அத‌னை கீழே த‌ருகிறோம்.

முபாரக் அப்துல் மஜீத்
துல் கிப்ல்-கிப்லு காரர் என்ற சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு கபிலவஸ்துவைச் சேர்ந்தவர் புத்தர் என்றும் அவர்தான் அந்த நபி என்று வாதிட முடியாது. 
ஆனால் திரிபிடகவின் பல வசனங்கள் ஓரிறைக் கொள்கையையும் இறுதிநபியையும்( மைத்ரி புத்தர்) பற்றிப் பேசுகின்றன.

புத்தர் என்ற பாளி மொழிச் சொல்லிற்கு தூதர் என்றே அர்த்தமாகும்.
"எனக்குப் பிறகு இன்னும் பல புத்தர்கள் வருவர்" என திரிபிடகவில் கௌதம புத்தர் சொன்ன ஒரு வசனம் உண்டு.

புத்தர் என்ற பாளி மொழிச் சொல்லிற்கு தூதர் என்றே அர்த்தமாகும்.
"எனக்குப் பிறகு இன்னும் பல புத்தர்கள் வருவர்" என திரிபிடகவில் கௌதம புத்தர் சொன்ன ஒரு வசனம் உண்டு.

என்னையும் உங்களையும் வரிசையில் வைத்து இறைவன் விசாரிப்பான் என்று புத்தர் தமது சீடர்களுக்குக் கூறினார்.

நாட்டு நிலைப்பாடுகளுக்குப் பயந்து ஒரு உண்மையை அதுவும் இஸ்லாத்தின் தூதை எத்திவைக்காமலிருப்பது என்பது நயவஞ்சகமானது. இது லபீஸ் போன்ற பின் நவீனர்களின் போக்கு. அப்படியென்றால் பல நபிமார்கள் ஏன் கொல்லப்பட்டாராகள்?? சில நபிமார்களின் சீடர்கள் பெண்களோடு குழந்தைகளோடு நாடு கடத்தப்பட்டது நெருப்பில் போடப்பட்டது ஏன்???
லபீஸை விட அந்த நபிமார்களும் உத்தம முஸ்லிம்களும் அறிவிலும் புத்தியிலும் குறைந்திருந்தனரா??

முபாரக் அப்துல் மஜீதின் வாதம் ஆதாரம்கொண்டது எனின் அதனை மக்கள் மன்றத்தில் முன்வைப்பது ஒரு உண்மையான விசுவாசியின் கடமை. கால சூழல் நிலைமை பார்ப்பவர்கள் அப்பிராணிகள்.
Rameez Razzack

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி