Saturday, August 25, 2018

ஹஸ்புல்லாஹ்வின்மறைவு ஆழ்ந்த கவலைதருகின்றது.


சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின்மறைவு ஆழ்ந்த கவலைதருகின்றது.

முஸ்லிம் சமூகஆய்வாளரும்சிறந்தசிந்தனாவாதியும்பன்னூலாசிரியருமானபேராசிரியர்ஹஸ்புல்லாஹ்வின்மறைவு ஆழ்ந்த கவலைதருதாக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் அனுதாபம்வெளியிட்டுள்ளார்.

கல்வித்துறையிலும்,சமூக ஆய்விலும்அன்னாரதுஅனுபவங்களின்
 பங்களிப்புஅபரிமிதமானது

எருக்கலம்பிட்டியைப்பிறப்பிடமாகக் கொண்டபேராசிரியர்ஹஸ்புல்லாஹ்மன்னார்மண்ணுக்கு பெருமைதேடித் தந்த ஒருகல்விமான்இவர் பன்முகஆளுமை படைத்தவர்

1990 ஆம் ஆண்டுவடக்கிலிருந்தமுஸ்லிம்கள்வெளியேற்றப்பட்ட போதுவடக்கு முஸ்லிம்களின்உரிமைக்கான அமைப்புஒன்றை தொடங்குவதில்முக்கிய காரணகர்த்தாவாக இருந்து,பின்னர் இந்தஅமைப்பின் ஊடாகஉள்நாட்டிலும்வெளிநாட்டிலும் அகதிமுஸ்லிம்களின்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தஅரும்பாடுபட்டவர்.இடம்பெயர்ந்த வடக்குமுஸ்லிம்களின்மீள்குடியேற்றம் மற்றும்இன்னோரன்னபிரச்சினைகளை நூல்வடிவில் கொண்டுவந்தவர்.

வில்பத்துப் பிரச்சினைவிஸ்வரூபமெடுத்துமுஸ்லிம்களின் இருப்புகேள்விக்குறியாக்கப்பட்டபோதுஅது தொடர்பில்நூலொன்றைவெளியிட்டு உண்மைநிலையை பிறசமூகத்திற்கு தெளிவுபடுத்துவதில் பகீரதபிரயத்தனம் செய்தார்.

தேசிய மீலாத் விழாதொடர்பானநூலொன்றை ஆக்கும்பணியை அவரிடமேஒப்படைத்திருந்தோம்.இறுதியாக முஸ்லிம் சமயகலாச்சாரத்திணைக்களத்தில் நானும்முஸ்லிம் சமூகஆர்வலர்கள் சிலரும்அவரைச் சந்தித்தவேளைஅந்த நூலின்ஆரம்ப வேலைகளைத்தொடங்கியுள்ளதாகவும்இந்தப் பணியைதிறம்படச் செய்துதருவேனென்றும்எம்மிடம் தெரிவித்தார்.

மாகாண எல்லை நிர்ணயஆணைக்குழுவில்உறுப்பினராக இருந்துமுஸ்லிம் சமூகத்தின்இருப்பைப் பேண அவர்காட்டிய அக்கறையையும்தொடர்ச்சியானஉழைப்பையும் இந்தகவலையானசந்தர்ப்பத்தில்நினைத்துப்பார்க்கிறோம்.அதுமட்டுமன்றி எல்லைநிர்ணயம் தொடர்பில்தனியான அறிக்கைஒன்றையும் சமர்ப்பித்துமுஸ்லிம் சமூகத்தின்பிரதிநிதித்துவத்திற்காககுரல் கொடுத்தவர்

அன்னாரதுகுடும்பத்திற்கு எனதுஆழ்ந்த கவலையைதெரிவிப்பதோடு அவரதுமறுமை வாழ்வுக்காகபிரார்த்திக்கின்றோம்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...