Tuesday, May 15, 2018

அல் மினா பாலர் பாடசாலை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை

ஹோறாபொல அல் மினா பாலர் பாடசாலை  முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் (15) இன்று  காலை ஹோறாபொல அல் மினா பாலர் முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்பள்ளிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இந்த சிறுவர் சந்தையும் உட்படுத்தப் படுகின்றது.
முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் நேர்மையான கொடுக்கல் வாங்கல் பற்றிய தெளிவுகளை ஏற்படுத்தல்கணிதம் தொடர்பான ஆரம்ப அறிவினை புகுத்துதல் மற்றும் பழ வகைகள் மரக்கறி வகைகளை தெரிந்து கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு படிப்பினைகளை இத்தகைய சிறுவர் சந்தைகள் தோற்றுவிக்கின்றன.
அஸீம் கிலாதீன்  

No comments:

Post a Comment