Monday, September 18, 2017

விவாக பதிவாளராக மௌலவி அப்துல் ரஹ்மான் நியமனம்


கம்பஹா மாவட்டத்தின் மாபோல வத்தளை பிரதேசத்திற்கான விவாக பதிவாளராக ஊடகவியலாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான மௌலவி மௌசூக் அப்துல் ரஹ்மான் (ஹ{ஸைனி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அலரி மாளிகையில் வைத்து நியமனம் பெற்றுக்கொண்டார். 
கம்பஹா மாவட்டத்தின் மாபோல வத்தளை பிரதோசத்தில் நீண்ட காலம் நிலவி வந்த முஸ்லிம் விவாக பதிவாளர் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே அப்துல் ரஹ்மானுக்கு கடந்த வியாழக்கிழமையன்று  அலரிமாளிகையில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் நிலவிய   நூற்றுக்கு அதிகமான விவாக பதிவாளர் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கி 
வைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு - அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு  வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். வவுனிய...