Sunday, August 6, 2017

இலங்கை ஷீயாக்கள், " நஹ்ஜுள் பலாகா

இலங்கை ஷீயாக்கள், " நஹ்ஜுள் பலாகா "(نهج البلاغة) என்ற பொய்யான நூலை சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளனர் . அதை முன்னிட்டு இந்த எனது ஆய்வு பதிவேற்றம் செய்யப்படுகின்றது .                             நஹ்ஜுல் பலாகா'
தேவவாக்கியமா?
அல்லது
இலக்கியப் படைப்பா?
நூல் விமர்சனம் :
கலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.D.Al-Azhar)

இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு படுகொலைகள் இஸ்லாமிய சிந்தனையில் பல உட்பிரிவுகள் தோன்ற வழிவகுத்தன . அவைகள், கலீபா உஸ்மான் (றழி) அவர்கள் புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டதும், ஹுஸைன் (றழி) அவர்கள் உமையா ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதும் ஆகும்.

அந்த உட்பிரிவுகளில் ஷீஆ' பிரிவினர் பிரதானமானவர்களாகும். இப்பிரிவினர் அலி (றழி)அவர்களின் நேசம், நபியவர்களின் குடும்பத்தினர் மீது அன்பு என்ற கொடியைத் தூக்கிப் பிடித்தனர். 'ஷீஆ' வாதம் அலி (றழி) அவர்களை  நேசிப்பதாக ஆரம்பித்து, பின்பு உஸ்மான் (றழி) அவர்களைவிட அலி (றழி) அவர்கள் சிறந்தவர் என பரிணாமம் பெற்று, காலவோட்டத்தில் அலி (றழி) அவர்கள், அபூபக்ர் (றழி), உமர் (றழி) ஆகியோர்களை விடச் சிறந்தவர் என்ற நிலைக்கு ஷீஆ சிந்தனை விகாரமடைந்தது.

அலி (றழி) அவர்களும், முஆவியா )றழி) அவர்களுக்குமிடையில், உஸ்மான் (றழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டது. முஆவியா அவர்கள், முதலில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட வேண்டும், பின்பு இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். ஆனால், உஸ்மான் (றழி) அவர்களை கொலை செய்த கிளர்ச்சியாளர்களால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அலி அவர்கள், தன்னை முதலில் ஜனாதிபதியாக அங்கீகரிக்குமாறும், பின்பு கொலையாளிகளை இனங்கண்டு தண்டிப்பதாகவும் கூறினார்கள்.

இம்முரண்பாடு, உள்நாட்டு யுத்தமாகவெடித்தது. இஸ்லாமிய சாம்ராஜ்ய விஸ்தரிப்பை முடக்கியது, ஷீஆக்கள் இவ்வரசியல் சர்ச்சையை ஈமானிய சர்ச்சையாக மாற்றி, அலி அவர்களின் எதிரணியில் இணைந்த ஸஹாபாக்களை 'காபிர்கள்' என்ற படுபயங்கர தீர்ப்பை வழங்கி 'இமாமத்' சிந்தனையை ஈமானின் அடிப்படையாக பிரகடனப்படுத்தினார்கள்.

ஷீஆக்கள் அவர்களின் அதிதீவிர போக்கின் ஒரு கட்டமாக ஷீஆக்களுக்கு அலி அவர்களின் மீதுள்ள வெறி, அவர்களுக்கு (العصمة) இஸ்மத் (தவறு செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்) என்ற அந்தஸ்த்தை வழங்கினார்கள். இதனால் அவர்களின் வார்த்தைகளுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கினார்கள்.

தங்களது வழிகேடுகளை நியாயப்படுத்த அலி அவர்கள் மீது பொய்யான ஹதீஸ்களை இட்டுக் கட்டினார்கள். தனது கொள்கையை நியாயப்படுத்த பொய்யை கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பது ஷீஆக்களின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை 'தகிய்யா'  (التقية)என அழைக்கின்றனர். பொய்த் தகவல்களைப் பரப்பும் ஒரு அங்கமாக, 'நஹ்ஜுல் பலாகா' என்ற நூலை எழுதினார்கள்.

நஹ்ஜுல் பலாஹா நூல் அறிமுகம்

பக்தாதைச் சேர்ந்த, ஹிஜ்ரி 436இல் மரணித்த 'முர்தழா' என்பவர் 'நஹ்ஜுல் பலாஹா' என்ற நூலைத் தொகுத்தார். இதில் அலி (றழி) அவர்களின் வாய்மொழிகளை ஒன்றுதிரட்டியுள்ளார். இந்நூலை ஷீஆக்கள் தங்களது அடிப்படை நூலாகக் கணிக்கின்றனர். ஆயத்துல்லாஹ் குமைனி, இதை வாசிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். ஷீஆ கொள்கையுடையவரான இவர் 'முஃதஸிலா' என்ற இஸ்லாமிய பகுத்தறிவுவாதிகளின் சிந்தனையாலும் கவரப்பட்டிருந்தார். ஷீஆ சிந்தனை 218இல் மரணித்த ஹிஷாம் பின் அல்-ஹகம் என்பவரின் 'இறைவனுக்கு சடம் உண்டு' என்ற வழிகேட்டை ஏற்றுக் கொண்டு காலவோட்டத்தில் முஃதஸிலாக்களின் சிந்தனைக்கு அடிமையாகிவிட்டது. எனவே, முர்தழா முஃதஸிலா கொள்கையுடையவர் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
முர்தழா, அவரது நுலை மூன்று அத்தியாயங்களாக பிரித்தார். அவை,

முதலாவது அத்தியாயம்  : அலி (றழி) அவர்களின் பேருரைகள், போதனைகள்.
இரண்டாவது அத்தியாயம்  : மடல்கள், கடிதங்கள்
மூன்றாவது அத்தியாயம் : தத்துவங்கள், பொன்மொழிகள்.

இந்நூலுக்கு ஹிஜ்ரி 656இல் மரணித்த முஃதஸிலா கொள்கையாளராகிய இப்னு அபில் ஹதீத் ( ابن أبي الحديد) என்பவர் விரிவான விரிவுரை ஒன்றை எழுதியுள்ளார்.

நஹ்ஜுல் பலாஹா நம்பகத் தன்மை அற்றது என்பதற்குரிய நியாயங்கள்

அலி (றழி) அவர்களின் வாய்மொழிகளை ஒன்று சேர்த்துள்ள நஹ்ஜுல் பலாஹா என்ற நூல் நம்பகத் தன்மை அற்றது, அவைகளில் பெரும்பாலனவை பொய் என்பத ற்குரிய நியாயங்கள் பின்வருமாறு:
1. இந்நூலில் காணப்படும் அறிவிப்புகளுக்கு அறிவிப்பாளர் தொடர் ( الإسناد) குறிப்பிடப்படவில்லை. நூலாசிரியர் முர்தழா அவர்களுக்கும், அலி (றழி)அவர்களுக்கும் இடையில் குறைந்தது 7 அறிவிப்பாளர்கள் காணப்பட வேண்டும். ஆனால் முர்தழா எவ்வித அறிவிப்பாளர் தொடரையும் முன்வைக்கவில்லை. அறிவிப்பாளர் தொடர் அற்ற நபி மொழியையோ அல்லது ஸஹாபியின் கூற்றையோ ஒரு காலமும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
2. இந்நூலில் காணப்படும் அலி அவர்களின் மொழிகள், இதற்கு முன்புள்ள அறிவிப்பாளர் தொடருள்ள கிரந்தங்களில் காணக்கிடைக்கவில்லை. இது மேற்படி அலிமொழிகள் இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதற்கு ஒரு சான்றாகும்.
3. நூலாசிரியர் 'முர்தழா' ஹதீஸ்கலை அறிஞர் அல்லர். மாறாக அவர் தனது நூலில் தானாகவே பொய்க் கதைகளை கட்டிவிட்டார் எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்..(மீஸானுல் இஃதிதால்)
4. முர்தழா, வேறு அறிஞர்களின் பொன்மொழிகளை அலி அவர்கள் கூறியதாக திரித்து எழுதியுள்ளார்.
5. நஹ்ஜுல் பலாஹாவில் அலி அவர்கள் மூத்த ஸஹாபாக்களை திட்டி ஏசியிருப்தாக கூறப்பட்டுள்ளது. ஒரு காலமும் அவர் இப்பாவ காரியத்தை செய்திருக்க முடியாது. சாதாரண முஸ்லிமுக்குக் கூட பொருத்தமில்லாத இச் செயலை ஒரு மூத்த ஸஹாபி செய்திருக்க முடியாது.
6. ஜாஹில் ( الحاحظ) என்ற இலக்கியவாதி அல்பயான் வத்தப்யீன் (البيان والتبيين )என்ற நூலில் காணப்பட்ட பொன்மொழிகளை, முர்தழா, அவைகளை அலி அவர்கள் கூறியதாக திரிவுபடுத்தியுள்ளார்.
7. நஹ்ஜுல் பலாகாவில் காணப்படும் அலி அவர்களின் வாக்கியங்களின் மொழி நடை குறைஷ் வம்சத்தினரின் மொழி நடையை விட்டும் வேறுபட்டிருக்கின்றது. அவை பிற்காலத்தில் தோன்றிய மொழி நடையையே ஒத்திருக்கின்றன. இவை புனையப்பட்ட பொன் மொழிகள் என்பதை நிரூபிக்கின்றன.
8. இந்நூலில் முன்னுக்குப் பின் முரணான வார்த்தைகள் காணப்படுகின்றன.
9. இறைவனின் தன்மைகள் பற்றிய முஃதஸிலாக்களின் நிலைப்பாட்டை, அலி அவர்களின் நிலைப்பாடாக இந்நூலில் முர்தழா மாற்றி அமைத்துள்ளார். இதுவும் நஹ்ஜுல் பலாஹா 'போலி' நூல் என்பதற்குச் சான்றாகும்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...