Thursday, August 3, 2017

ஐயூப் அஸ்மீனை நீக்குவது குறித்து..

தலைவலிக்கு தீர்வு தலையனை யை மாற்றுவதல்ல
ஐயூப் அஸ்மீனை நீக்குவது குறித்து..

அஸ்மி அப்துல் கபூர்

நல்லாட்சிகான மக்கள் முண்ணனி அரசியல் கட்சியாக அங்கீகாரம் அடைந்து சமுகத்தில் மாற்று சிந்தனை கொண்ட அமைப்பாக சிலர் அங்கலாய்த்து கொண்டாலும்
சமீப காலமாக நல்லாட்சி கான மக்கள் முண்னணியின் வட மாகாண உறுப்பினர் ஐயூப் அஸ்மீன் சில கருத்துக்களை தெரிவித்தார் அதில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்கின்ற அவரது கருத்து பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.
இன்னும் அவரது சமுக வலைத்தள பதிவுகள் சில அதிர்வுகளையும் ஏற்படுத்தியது
ஆனால் அவரை சுழற்சி முறையில் பதவி விலக கட்சி கோரிய போதும் அவர் மறுத்து விட்டார்.
அந்த கட்சியானது அவரை நீக்கவுள்ளதாக அறிவித்தல் விடுத்திருக்கிறது
இந்த நிலையில் எம்மிடம் உள்ள சில நியாயமான கேள்வி களாக நாம் கருதுகின்றவற்றை குறிப்பிடலாம் என நினைக்கிறோம்.

வட மாகாண சபை தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கிய நல்லாட்சி கான மக்கள் முண்னணி அதனூடாக பெற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்புரிமை எனும் பதவியை தவிர வேறென்ன நன்மையை முஸ்லீம் சமுகத்துக்கு பெற்று தந்தது?

த.தே.கூ நாம் முஸ்லீம் பிரதிநிதி யை வழங்கி இருக்கிறோம் என சர்வதேசத்துக்கு காட்டவும் எமது பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க அடிக்கடி அவரை அவர்களுக்கு சாதகமாக பேச வைத்திருக்கிறது..
இதற்கான தீர்வு ஐயூப் அஸ்மீனை மாற்றுவதா? அல்லது நீங்கள் இணைந்த கூட்டை தவறென்பதா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியோடு  கூட்டினைந்தமைக்கான காரணம் கட்சி தவிசாளரை பா.உ பதவியை அலங்கரிக்க வைப்பதை வேறு ஏதும் சமுகம் சார் காரணிகள் இருக்கிறதா?

அம்பாரை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் முஸ்லீம் விரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடிய போதெல்லாம் மெளனமாக இருந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மதுபானசாலை அமைப்பது தொடர்பில் வீதிக்கிறங்கிய காரணம் என்ன?

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நற் பெயரை தக்க வைத்து கொள்ள வேண்டும் எனும் தேவை இருப்பதாலா?

நல்லாட்சிக்கான மக்கள் முண்னணி முதல் முதலாக நல்லாட்சிகாக முதலில் இணைந்து ஒப்பந்தம் ஒன்றையும் கைசாத்திட்டனர் ஆனால் இதுவரையில் எந்த விடயம் உங்களின் ஒப்பந்தத்தில் நல்லாட்சி அரசு நிறைவேற்றி இருக்கிறது...
நல்லாட்சி அரசில் முஸ்லீம்களுக்கெதிரான நிலைப்பாடுகளை நல்லாட்சி கான மக்கள் முண்னணி கண்டு கொள்ளாமைக்கான காரணம் என்ன?

சில அரசியல் விமர்சகர்கள் தங்களை டயஸ் போரா அமைப்பின் ஏஜன்டுகளாக உங்களின் செயற்பாட்டை வைத்து குறிப்பிடுவை தொடர்பில் தர்க்க ரீதியாக உங்களால் மறுத்துரைக்க முடியுமா?

எனவே ஐயூப் அஸ்மீனை நீக்குவதால் நல்லாட்சிகான மக்கள் முண்னணி எதையும் சாதித்து காட்டி விட முடியாது
தங்களின் அரசியல் கூட்டுகளை துறந்து அவர்கள் வேறு நிலைப்பாடுகளை பெற வேண்டும்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...