Thursday, July 6, 2017

அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பு...


( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

ஜூலை 6ம்,7ம் திகதிகளில்  இளைஞர் பாராளுமன்றதின் 3வது அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் கலந்து கொள்ளாது அமர்வினை பகிஷ்கரிப்பு செய்ய உள்ளார். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் சாய்ந்தமருதில் உள்ள சொந்த கட்டிடத்தில் இருந்து குறித்த மாகாண பணிப்பாளரின்  அதிகாரத்தை பயன்படுத்தி அம்பாறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அம்பாறையில் வாடகை கட்டடத்திற்கு   இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து   அமர்வினை பகிஷ்கரிப்பு செய்ய உள்ளார்.   

சொந்தக் கட்டிடத்தில் பல வருடங்களாக இயங்கிவந்த மாகாண காரியாலயத்தை இடமாற்றம் செய்து வாடகைக் கட்டிடத்தில் நடத்திச் செல்வதானது அரச நிதியை வீணடிக்கும் செயல் என்பது மட்டுமல்லாது பொதுமக்களின் வரிப் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடாகும். கடந்த அரசாங்க காலங்களில் பெருமளவிலான அரச நிதிகள் வீணடிக்கப்பட்மையை இந்த நல்லாட்சி அரசாங்கம் வெளிக்கொணர்ந்து குற்றம் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துவரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சாய்ந்தமருதில் இயங்கிவந்த கிழக்கு மாகாண காரியாலயமானது மூவின மக்களுக்கும் இனப்பாகுபாடின்றி பல அளப்பரிய சேவைகளை செய்துவந்த ஒரு நிறுவனமாகும். அது மட்டுமல்லாது இளைஞர்களுக்கு தேவையான பல்வேறு வகையான சிறப்பான சேவைகளை மிகவும் வினைத்திறனான முறையிலும் அக்காரியாலயம் தொடர்பில் எவ்வித குறைபாடுகளுமின்றி மேற்கொண்டு வந்தது. அம்பாறை மாவட்டத்தின் இளைஞர்களின் பிரதிநிதி என்ற வகையில் அவர்களது வேண்டுகோள்களுக்கு செவிசாய்த்தவனாகவும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்தவனாகவும் இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன்.

மேலும் குறித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலய இடமாற்றம் தொடர்பாக பிரதமர்  செயலகத்திலிருந்து  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாருக்கு அம்பாறைக்கு இடமாற்றம் செய்வதை நிறுத்துமாறு பிரதமரின் மேலதிக செயலாளரினால் குறித்த அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. 

பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தையும் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து அம்பாறையில் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றது. இதனால் அம்பாறை   மாவட்டத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் மத்தியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினை  வெறுப்புடனும் சந்தேகக் கண்கொண்டும் நோக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 

இந்த காரியாலயம் தொடர்ந்தும் வாடகைக் கட்டிடத்தில் இயக்கப்பட்டு வருமேயானால் அரச நிதியை வீணடித்தமைக்காக இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கெதிராகவும் நிதி குற்ற புலானாய்வுப் பிரிவில் (FCID) இவர்களுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்வதற்கும் நான் தயாராகி வருகின்றேன். மேலும், இந்த நாட்டின் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமரிடம் இது குறித்து முறைப்பாடு செய்வதற்கும் நான்  தயாராகி வருகின்றேன்.

எனவே காரியலாம்  சாய்ந்தமருதில் அமைத்துள்ள சொந்த கட்டிடத்தில் மீளவும் இடமாற்றம் செய்யப்படக் கோரி பாராளுமன்ற அமர்வினை  பகிஷ்கரிப்பு செய்வதாக அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...