Monday, July 17, 2017

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள்

எம்.ஜே. முஹம்மத்-

1621 இல் நடந்த போர்த்துக்கீசருக்கு எதிரான சண்டையில் தோல்வியுற்ற, முஸ்லிம் அரசன் சேகு சிக்கந்தர் முஹம்மத் இஸ்மாயில் கொல்லப்பட்டதால் முஸ்லிம்கள் பலமிழந்து போயினர். அதனைத் தொடர்ந்து 800 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் படைவீரர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். 1200 பேர் தூக்கிலிடப்பட்டனர். முஸ்லிம்களுடன் இனைந்து நின்று போரிட்ட தமிழர்கள் ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. 

இதனால் அவனுடைய இளவரசர்கள் அக்காலத்தில் கொழும்பை ஆண்ட புவனேகபாகுவிடம் உதவி கேட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியும்  அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்ததால் முஸ்லிம்களை வன்னியில் குடியேறுமாறு புவனேகபாகு கூறினான். முஸ்லிம்கள் தங்கள் இளவரசன் சகிதம் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் தற்போதைய முத்தையன்கட்டு தண்ணீரரூற்று போன்ற பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர்.

போர்த்துக்கீசரின் அடாவடிகளுக்குள் மாட்டிக்கொண்ட தமிழர்களின் குடும்பங்கள் சிலதை காப்பாற்றிக் கொண்டு வந்த முஸ்லிம்கள் அவர்களை முள்ளியவளையில் குடியேற்றினர்.அவ்வாறு இடம்கொடுக்கப்பட்டவர்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளதுடன் அரசியல் ரீதியாகவும் பலமாக உள்ள நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபடும் போது அதைப்பார்த்துக் கொண்டு வாழாவிருக்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு ஏறக்குறைய 1200 குடும்பங்கள் முல்லைத்தீவு தண்ணீரூற்று போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் தொழிலாக விவசாயம் காணப்பட்டது. 1990 ஒக்டோபர்  பலவந்த அநியாய வெளியேற்றத்தின் பின்னர் இவர்கள் பல்வேறு ஊர்களிலும் குறிப்பாக புத்தளத்தில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தனர். தற்போது முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை பலகிப்பெருகியுள்ளது. தற்போது 3000 குடும்பங்களாக அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். 

இவர்கள் ஏற்கனவே இருந்த முல்லைத்தீவு தண்ணீரூற்று போன்ற ஊர்களில் இடமே இல்லாத காரணத்தால் இவர்களை காணியுள்ள இடங்களில் குடியேற்ற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. 

எனவே தான் இவர்களுடைய விவசாய தொழிலுடன் தொடர்புடைய குளாமுறிப்பு எனும் இடம் தெரிவுசெய்யப்பட்டு ஒரு சில குடும்பங்களை அங்கு குடியேற்றவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 

இந்நிலையில் தமது வாக்கு வங்கிகளில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவி இளைஞ்சர்களுக்கு நஞ்சுக் கருத்துகளை ஊட்டி அவர்களை முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவைத்து தமிழ் முஸ்லிம் உறவை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமிழர்களுக்கு இடம்கொடுத்ததால் கடந்த 400 ஆண்டுகளாக இப்பிரதேச தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியம் நிறைந்ததாகவே காணப்பட்டது. எல்ரிரிஈ போன்ற ஒரு சில அமைப்புகள் தான் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். தற்போது தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்பை பாதுகாக்க இவ்வாறான நச்சுக்கருத்துக்களை பரப்பிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இது சம்பந்தமாக நாம் தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்ட போது 1995 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த புலிகளின் அடிவருடிகள் தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தமக்கும் முஸ்லிம் எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர். 

அவ்வாறான அரசியல்வாதிகளை இவ்வாறான அரசியல் ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமெனக் கேட்டுக்கொள்வதுடன் அப்பாவி தமிழ் இளைஞ்சர்களுக்கு உசுப்பேற்றி அதில் குளிர்காய வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கின்றோம். 

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...